'ஆபாச காட்சி, அறுவறுப்பான வசனங்கள்...': 52 வெட்டுக்களுடன் ஆரண்ய காண்டத்துக்கு அனுமதி!

Tags:



சிலர் நெகடிவ் பப்ளிசிட்டியை மட்டுமே நம்பி படமெடுப்பார்கள். சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆவதும் உண்டு. சில நேரங்களில் முதலுக்கும் சேர்த்து மோசம் வைப்பதும் உண்டு. ஆரண்ய காண்டம் அப்படியொரு படம்தான் போலிருக்கிறது.

சென்ன 28 தவிர, உருப்படியாக ஒரு படமும் தராத எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜாகிஷெராஃப் நடித்துள்ளார். குமாரசாமி தியாகராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் படம் பார்க்கத் தகுந்ததாக இல்லை என்று தணிக்கைக் குழு கருதியதால் அனுமதி தர மறுத்துவிட்டது.

யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான ஆபாச காட்சிகள், அறுவறுப்பான வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு அனுமதி தரமுடியாது என தணிக்கைக் குழு பகிரங்கமாகவே கூறிவிட்டது.

மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தை தூசு தட்டி மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை மிகவும் மோசம் என்று கூறியதோடு, 52 இடங்களில் கத்தரி போட்டு, அரைப் படத்தை ஏ சான்றிதழுடன் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு மோசம் என கருதப்படும் ஒரு படத்தை வெளியிட்டே தீர வேண்டிய கட்டாயம் என்ன? என்ற கேள்வியோடுதான் இந்த சான்றிதழையே அவர்கள் அளித்துள்ளனர்.

‘இந்தியில் இதைவிட மோசமாக படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறார்கள். இங்குமட்டும் அனுமதிக்க மறுக்கிறார்களே”, என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சரண்.

ஆக மோசமான படம் என்று தெரிந்தேதான் இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்!!

 

இந்தி படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

Tags:

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

5/24/2011 12:06:12 PM

தமிழில் ஹிட்டான காக்க..காக்க தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. ஆனால் படத்தை இயக்க போவது கௌதம் மேனன் அல்ல, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்கிறார். ஜோதிகா வேடத்தில் ஜெனிலியா நடிக்கிறார். முன்னதாக காக்க..காக்க.. படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்படி ஆசைப்பட்ட கௌதம் மேனனுக்கு இந்தி ‌‌ரீமேக் வாய்க்கவில்லை. ஆனால் காக்க..காக்க.. படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்தி ரீமேக்கிற்கும் இசையமைக்க போகிறார்.




 

ரஜினியை சந்திக்க வடிவேலுக்கு அனுமதி மறுப்பு?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியை சந்திக்க வடிவேலுக்கு அனுமதி மறுப்பு?

5/24/2011 12:03:12 PM

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினியை காண சாதரண மக்கள் முதல் வி.ஐ.பி, வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் கூடி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் நலம் குறித்து நேரில் விசாரிக்க ராமசந்திரா மருத்துவமனைக்கு நடிகர் வடிவேலு சென்றதாக தெரிகிறது. ஆனால் ர‌ஜினியை சந்திக்க நடிகர் வேலுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ர‌ஜினியின் குடும்பத்தாரும் வடிவேலுவை சந்திக்கவில்லையாம். இதனால் ரஜினியை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வடிவேலு திரும்பி சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.




 

ரீமேக் படத்தை தமிழில் இயக்கும் பிரகாஷ் ராஜ்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரீமேக் படத்தை தமிழில் இயக்கும் பிரகாஷ் ராஜ்!

5/24/2011 12:03:58 PM

அபியும் நானும் படத்தை கன்னடத்தில் இயக்கியதன் மூலம் அனுபவமிக்க இயக்குனராக மாறியுள்ளார் பிரகாஷ் ராஜ். அபியும் நானும் படத்தை கன்னடத்தில் இயக்கிய பிரகாஷ்ரா‌ஜ் அடுத்து தமிழப் படம் ஒன்றை இயக்குகிறார். இதுவும் ஒரு ‌‌ரீமேக். இது மராத்தி படம். மராத்தியில் வெளியான ஸ்வரூபா என்ற படத்தின் கன்னட மற்றும் தமிழ் ‌ரீமேக் உ‌ரிமையை பிரகாஷ்ரா‌ஜ் வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தை அவரே இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.




 

மூன்றாவது ஷெட்யூல் "ஒரு கல் ஒரு கண்ணாடி"!

Tags: quot, quot quot

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மூன்றாவது ஷெட்யூல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'!

5/24/2011 12:05:14 PM

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாவது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. மூன்றாவது ஷெட்யூல் எப்போது என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் இயக்குனர் ராஜேஷ். ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர்.




 

தள்ளிப்போன எத்தன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தள்ளிப்போன எத்தன்

5/24/2011 12:07:29 PM

விமல் நடித்திருக்கும் எத்தன் படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. அறிமுக இயக்குனர் சுரேஷின் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் படம் எத்தன். சனுஜா விமலின் ஜோடி. களவாணியை தயா‌ரித்த நசீ‌ரின் இரண்டாவது படைப்பு இது. இந்த மாதம் 20ஆம் தேதி எத்தன் திரைக்கு வருவதாக விளம்பரங்கள் செய்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரவில்லை. ஃபைனான்ஸ் பிரச்சனை மற்றும் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் 20ஆம் தேதிக்குப் பதில் 27ஆம் தேதி படம் திரைக்கு வரவிருப்பதாக தயா‌ரிப்பாளர் தரப்பில் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.




 

இந்தியில் காதல்

Tags:

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தியில் காதல்

5/24/2011 12:40:42 PM

சிறு முதலீட்டுப் படங்களுக்கும், யதார்த்தப் படங்களுக்கும் உத்வேகமாக இருந்த பாலா‌ஜி சக்திவேலின் காதல் இந்தியில் ‌ரீமேக் செய்யப்படுகிறது. ஏக்தா கபூர் இந்தியில் காதலை தயா‌ரிக்கிறார். மதுரை பின்னணியில் யதார்த்தமான மனிதர்களை வைத்து சக்திவேல் படைத்த காவியம் என்று சொல்லலாம் காதலை. மொழிகளைத் தாண்டி அனைவரையும் வசீக‌ரிக்கும் படைப்பு. இதனை உடான் படத்தை இயக்கிய விக்ரமாதித்ய மோத்வானி இந்தியில் இயக்குகிறார். இளம் நடிகர் பிரதீக் பப்பர் அனேகமாக பரத்தின் வேடத்தில் நடிக்கக் கூடும். காதல் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.




 

அப்பா விதித்த தடையை மீறினார் பூஜா!

Tags:

 

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Tags:


சென்னை: ரஜினியின் உடல் நிலை நன்கு முன்னேற் வருகிறது. அவருக்கான சிகிச்சை குறித்து இதுவரை வீடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவிலிருந்து ஆலோசனைகள் கூறி வந்த டாக்டர்கள் குழு, நேற்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே வந்தது.

ரஜினியின் உடல்நிலை பற்றி நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் சிகிச்சைகளைச் செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தான் நலமாக உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றி பேசும் வீடியோ, விரைவில் வெளிவர உள்ளது.

மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினி பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர் விஷமிகள். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் மருத்துவமனை எதிரில் திரண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.

கூட்டுப் பிரார்த்தனை

நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் வருகை

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்காக வெளிவருகிறது 'ரஜினி வீடியோ'!

இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ரஜினியே தோன்றிப் பேசும் வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த வீடியோ வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 

செல்வராகவன் அதிரடி நீக்கம்: விஸ்வரூபத்தை கமல் ஹாஸனே இயக்குகிறார்!!

Tags:


கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.

ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.

விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!

டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?

கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.

காத்திருக்க முடியாது...

அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.

லண்டனில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.

கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
 

ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்!

Tags:


சென்னை: நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.

மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள்.

மகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

ஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.

முன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை.
 

தயாரிப்பாளர் சங்க மோசடிகளை 5 பேர் குழு சரிபார்க்க அனுமதி!

Tags:


ராம நாராயணன் தலைவராக இருந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகள், மோசடிகள் குறித்து அறிய கணக்கு வழக்குகளை கேயார் தலைமையிலான 5 பேர் குழு சரிபார்க்க, தற்காலிக தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. இச்சங்கத்தில் ஏற்கனவே பல கோடிகள் மோசடி நடந்துள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சங்க கணக்கு வழக்குகள் மற்றும் உறுப்பினர் பட்டியலை தயாரிப்பாளர் கே.ஆர். தலைமையிலான 5 பேர் குழு சரிபார்க்க செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதிருப்தியாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Tags:


மும்பை: நான் ஒரு குடும்பப் பெண். நிர்வாணமாக நடிக்க மாட்டேன். அதைவிட சினிமாவை விட்டே விலகிவிடுவேன், என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

மதுர் பண்டார்கர் இயக்கும் ஹீரோயின் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிகை ஐஸ்வர்யாராய் நிர்வாணமாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும் இதற்கு அவர் கணவரும் ஒப்புக் கொண்டதாகவும் மும்பை டி.வி.சேனல் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

அவர் கூறுகையில், "நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன்.

என் மாமியார் வீட்டுக்கென கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டுதான் திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இதுவே பெரிய விஷயம்.

இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன்," என்றார்.

ஐஸ்வர்யா இதைச் சொல்ல வேண்டியது மீடியாவிடம் அல்ல... தகவல் உபயம் தந்த இயக்குநர் மதுர் பண்டார்கரிடம்!
 

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Tags:


வடிவேலுவை ஒப்பந்தம் செய்வதில்லை என்று கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

இப்போது வடிவேலுவுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருப்பவர் கஞ்சா கருப்பு. தேர்தல் முடிவுக்குப் பிறகு, இப்படி கஞ்சா வசம் போன படங்களின் எண்ணிக்கை மூன்று.

அதில் முக்கியமான படம் மன்னார் வளைகுடா. இந்தப் படத்தில் ஹீரோ கம் காமெடியன் வேடம். இயக்குபவர் மாதேஷின் முன்னாள் உதவியாளர் தனசேகரன். மீனவர்கள் பிரச்சினையைப் பேசும் நகைச்சுவைப் படம் இது. ஆரம்பத்தில் வடிவேலுதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தாராம். யோகா என்ற பெங்களூர் மாடல்தான் இதில் ஹீரோயின்.

தேர்தல் முடிவுக்கு முன்பே, வடிவேலு தூக்கப்பட்ட படம் ராணா. இதில் அவருக்கு தரப்பட்ட வேடத்தை கஞ்சா கருப்புவுக்கு கொடுத்துள்ளனர்.

இன்னும் சில படங்களிலும் வடிவேலுவுக்கு எழுதி வைத்த ட்ராக்கில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வடிவேலுவுக்கு பதில் ஒப்பந்தம் செய்வதெல்லாம் சரி... அவரளவுக்கு காமெடியில் கலக்கி புதிய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா கஞ்சா கருப்பு என்பதுதான் இப்போதைய கேள்வி!
 

'அசின் அலும்பு தாங்கல!': சலித்துக்கொள்ளும் பாலிவுட்

Tags:


மும்பை: பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பவில்லை என்றால் அசினுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது.

பாலிவுட் மீடியாக்கள் அசினை தாக்குதவது அதிகரித்து வருவதாக அசின் தரப்பு கூறுகிறது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை. அந்த ஹீரோ கூட நடிக்க மாட்டேன், இந்த டைரக்டர் படத்தில் நடிக்க மாட்டேன் என இவர் போடும் கண்டிஷன்கள் பந்தாக்களோடு ஒப்பிடுகையில், வருகிற செய்திகள் ரொம்ப குறைவுதானாம்.

இப்போது வாரத்துக்கு ஒரு மேக்கப்மேன் என மாற்ற ஆரம்பித்துள்ளாராம். காரணம், பாலிவுட் மேக்கப்மேன்களுக்கு தன் முகவெட்டுக்கு ஏற்றமாதிரி மேக்கப் போடத் தெரியவில்லை என்கிறாராம் அசின்.

இதுவரை 4 மேக்கப்மேன்களுக்கு பேக்கப் சொல்லிவிட்டாராம். இவர் விரட்டிய மேக்கப்மேன்களில் ஒருவர் பல ஆண்டுகளாக அமிதாப் பச்சனுக்கு மேக்கப் போடுபவர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். இந்த விவகாரத்தை பாலிவுட் மீடியாக்கள் பெரிதாக்க முயல, சட்டென்று பம்மிவிட்டாராம் அசின்.

பாலிவுட்டில் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் சத்தம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் ஒன்று அல்லது 2 படத்தை வைத்துக் கொண்டு அசின் பண்ற அலும்பு தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்கிறார்கள் பாலிவுட்டில்.

அப்படியும் அசின் பின்னால் ஒரு கூட்டம் ஏதாவது பரபரப்பு கிடைக்குமா என சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது!