மான்ட்ரீல் உலகப் பட விழாவில் மஜித் மஜிதியின் 'முகமது' திரைப்படம்: இசை ஏ.ஆர்.ரஹ்மான்!

மான்ட்ரீல் நகரில் நடக்கும் புகழ்பெற்ற உலகப் பட விழாவில் மஜித் மஜிதி இயக்கியுள்ள முகமது படம் திரையிடப்படுகிறது. அன்றே உலகின் பல நாடுகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் வெளியாகும் புதிய படம் முகமது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Majid Majidi’s 'Muhammad' premiere at Montreal Film Fest

கிட்டத்தட்ட ரூ 320 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ஈரான் திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் படம் இது.

190 நிமிடம் ஓடும் இந்தப் படம், நபிகளின் இளமைப் பருவ வாழ்க்கையைச் சொல்கிறது. இதன் அடுத்த இரு பாகங்களும் வரும் ஆண்டுகளில் தயாராக உள்ளன.

படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான்.

ஆகஸ்ட் 27 ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7-ம் தேதி வரை மான்ட்ரீல் திரைப்பட விழா நடக்கிறது. இதில் முதல் நாளே முகமது படத்தின் பிரிமியர் காட்சி நடக்கிறது.

 

பாகுபலி கதை எம்ஜிஆரின் அடிமைப்பெண் சாயலில் இருப்பது பெருமைதானே!- பிரபாஸ்

பாகுபலி படத்தின் கதை, அமரர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் சாயலில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம் என்றார் பாகுபலி நாயகன் பிரபாஸ்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களை அழைத்து பகிர்ந்து கொண்டனர் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமிழில் வெளியிட்ட ஞானவேல் ராஜா ஆகியோர்.

Comparing Bahubali story with MGR's Adimaipen is a pride, says Prabas

அப்போது பாகுபலி படத்தின் கதை அப்படியே எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதை போலவே உள்ளதே? அடிமைப் பெண் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று பிரபாஸிடம் கேட்கப்பட்டது.

அடிமைப் பெண் படத்தைப் பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.

பக்கத்திலிருந்த ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டபோது, அடிமைப் பெண் படத்தைத் தான் பார்த்திருப்பதாகவும், பாகுபலி கதை அந்த சாயலில் இருந்ததை உணர்ந்ததாகவும் கூறினார்.

பின்னர் பிரபாஸ் பேசுகையில், "எம்ஜிஆர் மிகப் பெரிய சாதனையாளர். பாகுபலி கதை அவரது அடிமைப் பெண் சாயலில் அமைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம்," என்றார்.

 

கமர்ஷியல் நெடி இல்லாத அழகிய மதுர நாரங்கா

சென்னை: தமிழ் சினிமா கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கும் போது நமது அண்டை மாநிலமான மலையாள சினிமா தற்போது தான் லட்சங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

உலகத் தரத்திலான பல திரைப்படங்களை மலையாள சினிமா உருவாக்கியுள்ளது, கமர்ஷியல் நெடி எதுவும் இல்லாமல் வெளிவரும் மலையாள சினிமாக்கள் கேரள மக்களிடம் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Madhura Naranga Movie

அதற்கு சமீபத்திய உதாரணம் திரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் மதுர நாரங்கா படத்தைப் பார்க்கலாம். படம் அரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் எப்படி சூழ்நிலைக்கைதியாக மாறிப் போகிறார்கள் என்பதை வலியுடன் பதிவு செய்திருக்கிறது படம்.

ஷார்ஜாவில் கால்டாக்ஸி டிரைவராக நாயகன்

மதுர நாரங்கா படத்தின் நாயகன் குஞ்சாக்கோ போபன் ஷார்ஜா நாட்டில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார், தனது நண்பர்களுடன் அறை எடுத்து ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.

ஈழத்துப் பெண்ணாக நாயகி

ஈழத்து பெண்ணான நாயகி (பார்வதி ரத்தீஷ்) விபசாரத்தில் தள்ளப் பார்க்கும் தனது முதலாளியிடம் இருந்து, தப்பித்து ஷார்ஜாவிற்கு வருகிறார். வரும் இடத்தில் நாயகன் அடைக்கலம் கொடுக்கிறார்.

காதலில் விழுதல்

பார்வதிக்கு வேறு ஒரு பாஸ்போர்ட் ரெடி செய்து அனுப்பி வைக்க நினைக்கும் நாயகன், அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபடும்போது நாயகி மீது காதல் கொள்கிறார்.காதலுக்கு அடையாளாமாக பார்வதியின் வயிற்றில் குழந்தை வளர்கிறது. குஞ்சாக்கோ போபன் தனது நண்பர்கள் முன்னிலையில் பார்வதியைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது.

நாயகன் - நாயகி- குழந்தையைப் பிரிக்கும் விதி

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் விதி இவர்களின் வாழ்வில் விளையாடுகிறது. குஞ்சாக்கோ போபன் விபத்தில் சிக்கி பலத்த காயமடைகிறார், அதே நேரம் பார்வதியைக் கைது செய்யும் போலீசார் அவளைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். குஞ்சாக்கோ போபனுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அவரது மாமா அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விடுகிறார். அனாதையாகிப் போன குழந்தை ஷார்ஜாவின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

மூவரும் ஒன்று சேர்கிறார்களா?

நாயகன் இந்தியாவில், நாயகி இலங்கையில், குழந்தை ஷார்ஜா நாட்டில். இம்மூவரையும் வாழ்க்கையில் ஒன்று சேர்த்ததா விதி என்பதை அழுத்தமான காட்சிகளுடன் கிளைமாக்ஸில் கூறியிருக்கிறார் இயக்குநர் சுகீத்.( ஆர்டினரி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் சுகீத்தின் 2 வது படம் இது).

வெளிநாடுகளில் வேலை செய்யப்போகும் இந்தியர்கள் படும் அவலங்களை எடுத்துக் கூறியிருக்கிறது படம், எதார்த்த சினிமாக்களை வாழ்வியலோடு ரசிப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

 

ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் இசை வெளியீடு!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘சகலகலா வல்லவன் - அப்பாடக்கர் இசை இன்று வெளியானது.

முதலில் இப்படத்திற்கு ‘அப்பாடக்கர்' என்றுதான் பெயர் வைத்திருந்தனர். தற்போது, ‘சகலகலா வல்லவன்' என்று மாற்றியுள்ளனர். கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த படத்தின் தலைப்பு இது. ஏவிஎம் நிறுவனத்தின் அனுமதியோடு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Sakalakala Vallavan audio launched

மருதமலை, படிக்காதவன் படங்களை இயக்கிய சுராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

Sakalakala Vallavan audio launched

இப்படத்தின் பாடல்கள் பிரபல பண்பலை வானொலியில் இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குநர் சுராஜ், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sakalakala Vallavan audio launched

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்' பட பாடல்களைப் போல சகலகலா வல்லவன் பட பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Sakalakala Vallavan audio launched

இப்படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தவே என்னுள்ளே எம்எஸ்வி நிகழ்ச்சி! - இளையராஜா பேட்டி

வரும் ஜூலை 27-ம் தேதி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்எஸ்வி என்ற இசையஞ்சலி நிகழ்ச்சி, வெறும் பாட்டுக்கச்சேரியாக மட்டுமல்லாமல், எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை விளக்கும் நிகழ்ச்சியாக நடக்கப் போகிறது.

ஒவ்வொரு பாடலையும் எம்எஸ்வி உருவாக்கிய விதம், அந்த இசையின் நுணுக்கங்கள் போன்றவற்றை தன் இசைக் குழு மூலம் வாசித்து விளக்கப் போகிறார் இளையராஜா.

Ilaiyaraaja speaks on Ennulle MSV concert

இந்த நிகழ்ச்சியை ஜீவா இளையராஜா அறக்கட்டளை நடத்துகிறது.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெறுமனே அண்ணன் எம்எஸ்வியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்துவது அல்ல. எம்எஸ்வி என்ற மாமேதை தந்த இசையின் நுணுக்கங்களை ரசிப்பது.

அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன்.

இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.

அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அண்ணனின் உடல் மறைந்த 13வது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்," என்றார்.

இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில்லை. ஒரு இசையமைப்பாளர் இறந்தால், இசைக் குழுக்கள் சில இப்படி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரும் இசையமைப்பாளர் யாரும் அப்படி நடத்தியதில்லை. இளையராஜாதான் முதல் முறையாக எம்எஸ்விக்கு இப்படி இசையஞ்சலி நடத்துகிறார்.

 

பாக்ஸ் ஆபீசில் பாகுபலி போலவே பட்டையை கிளப்பும் சல்மான்கானின் பஜ்ரங்கி! காரணம் தெரியுமா?

மும்பை: இந்தியாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும், இயக்குநர் ராஜமவுலியும் அவர் தந்தை விஜயேந்திர பிரசாத்தும்தான் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்கள் போலும்.

எப்படி என்கிறீர்களா.. பாகுபலி திரைப்படத்தின் மகா வெற்றியும், அதன் வசூல் நிலவரமும் உங்களுக்கு தெரிந்ததே. அதற்கு கடும் போட்டி தரும் வகையில், பாலிவுட்டில் இப்போது ஒரு படம் பட்டையை கிளப்பி வருகிறது. சல்மான் கான் நடித்து கடந்த 17ம் தேதி வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம்தான் அப்படி ஒரு புழுதி கிளப்பி வருகிறது.

Rajamouli's father Vijayendra Prasad set box office on fire with 'Baahubali', 'Bajrangi Bhaijaan'

இவ்விரு மெகா ஹிட் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு படங்களுக்குமே கதை எழுதியது ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இயக்குநர்கள்தான் வேறு. சல்மான் படங்களில் கதை என்று பெரிதாக ஒரு ஐட்டமே இருக்காது. ஆனால், இப்படத்தில் கதைதான் முக்கிய அம்சமாம். ரசிகர்கள் கொண்டாடுவதும் கதைக்காகத்தான். இதனால்தான் கதாசிரியர் விஜயேந்திராவும் கொண்டாடப்படுகிறார்.

தனது இரு கதைகளில் உருவான படங்களும் மோதிக்கொண்டு, வசூலில் கடும் போட்டிபோடுவதை அமைதியாக ரசித்து வருகிறார் விஜயேந்திரா.

 

விஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கனவுக்கன்னிகளாக இருந்து மார்க்கெட் சரிந்து அம்மா நடிகைகளாகும் ஹீரோயின்களுக்கு மத்தியில் கவர்ச்சி நடிகை சோனா தான் பெரிய ஹீரோக்களுக்கு முக்கியமாக விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படுவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

"மிருகம்", "குசேலன்", "ரௌத்திரம்" ஆகிய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சோனாதான் இவர் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் வலம்வந்த சோனா, கனிமொழி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

actress Sona like to act as mother to vijay

இந்நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விழா ஒன்றில் பேசிய சோனா, விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏங்க இப்படி ஆசைப்படுகிறீங்க என்று கேட்டால், அப்போதுதானே அவரைக் கட்டிபிடித்து நடிக்க முடியும் என்றும் கேலியாக தெரிவித்துள்ளார் (தாய்மைக்கு இப்படி ஒரு புது அர்த்தமா.. வெளங்கும்)

இவரது விருப்பத்தை விஜய்யும், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களும் நிறைவேற்றுவார்களா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதுக்கும் பார்த்து யோசிச்சு செய்யுங்கப்பா எதைச் செய்தாலும்.

 

'என்னுள்ளே எம்எஸ்வி'... இளையராஜாவின் இசையஞ்சலி!

என்னுள்ளே எம்எஸ்வி.. இந்தத் தலைப்பில் ஒரு இசை அஞ்சலி நடத்தவிருக்கிறார் இளையராஜா. வரும் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

மறைந்த எம்எஸ் விஸ்வநாதன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. எம்எஸ்வி என் ரத்தத்தில் இசையாக இருக்கிறார் என இரங்கல் அறிக்கை வெளியிட்ட அவர், அதையே தலைப்பாக்கி இப்போது இசையஞ்சலி செலுத்துகிறார்.

Ennulle MSV - Ilaiyaraaja's musical tribute

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்களை, அவர் பாடிய பாடல்களை இளையராஜா தன் குழுவினருடன் மேடையில் பாடப் போகிறார். உடன் எஸ் பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் அனைவரும் பங்கேற்கவிருக்கின்றனர்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான 20 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இசைப்பதற்கான ஒத்திகை இப்போது பிரசாத் லேபில் நடந்து வருகிறது.

வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடல்களை இளையராஜா வாசிப்பதும் பாடுவதும் இதுவே முதல் முறை என்பதால், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜூலை 27-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த இசையஞ்சலி நிகழ்ச்சி தொடங்குகிறது.

 

பாட்ஷா 2ல் அஜீத்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்து அஜித் நடித்த பில்லா படம் சூப்பர்ஹிட் ஆனது, தற்போது ரஜினியின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தின் 2 ம் பாகத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெற்றி பெற்ற படங்களின் தொடர்ச்சியான பாகங்களை எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்டினரிடம் அதிகம் உண்டு, அந்த பழக்கம் தற்போது தமிழ் சினிமாவிலும் ஆரம்பித்து விட்டது. 30 வருடங்களுக்கு முன்பு வந்த படங்களை எல்லாம் தூசு தட்டி 2ம் பாகம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Ajith in Baasha 2?

பாட்ஷா படத்தின் 2 ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை சுரேஷ் கிருஷ்ணாவிற்கும் வந்தது, இது தொடர்பாக ரஜினியை அணுகியபோது அந்த மாதிரி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று மறுத்து விட்டாராம்.

ரஜினியின் பில்லா படத்தில் ஏற்கனவே அஜீத் நடித்து படம் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே, எனவே பாட்ஷா 2 படத்தின் கதையை அஜீத்திடம் கூறியிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

அஜீத்திற்கு பாட்ஷா 2 கதை மிகவும் பிடித்துப் போய் விட்டதாம், விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.

 

நமக்கு காதல் கல்யாணம் தான் பாஸ் – ஆர்யா

சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் மன்னன் ஆர்யா, காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இணைந்து நடிக்கும் அத்தனை நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகர் ஆர்யாவாகத்தான் இருப்பார்.

அவருக்கு தற்போது அவரது வீட்டினர் மும்முரமாக பெண் தேடிக் கொண்டிருக்கின்றனர், இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "எனது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாகத் தான் இருக்கும்.

Arya Open Talk about His Marriage

திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக எல்லாம் திருமணம் செய்ய முடியாது, மனதுக்கு பிடித்தப் பெண்ணை தேடிப் பிடித்து திருமணம் செய்து கொள்வேன். மனதுக்குப் பிடித்த பெண் அமைந்து விட்டால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

முதலில் அவரைக் காதலித்து அதன் பிறகே திருமணம் செய்து கொள்வேன்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா.

 

திருமணத்திற்குப் பிறகும் லிப் லாக் பண்ணலாமே, தப்பில்லையே... அனுஷ்கா சர்மா

மும்பை: திருமணத்திற்குப் பின் நடிகைகள் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதில் தவறொன்றும் இல்லை என்று விராட் கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது " சில நடிகைகள் திருமணத்திற்குப் பின் முத்தக் காட்சிகளில் நடிக்கத் தயங்குகிறார்கள், அதுவும் லிப் லாக் காட்சிகள் எனில் அதனை மறுத்து விடுகிறார்கள்.

Why Some Heroines Avoid Lip-Lock Scenes after Marriage – Anushka Sharma

பெரும்பாலான கதைகளில் காட்சிக்கு என்ன தேவையோ அதனையே கொடுக்க வேண்டும், நடிப்பது ஒரு தொழில் எனும்போது அதன் ஒரு பகுதியான முத்தக் காட்சிகளில் நடிப்பதில் என்ன தவறு" என்று கேட்டிருக்கிறார்.

அனுஷ்கா சர்மா நாயகியாக நடித்து தயாரிக்கவும் செய்த திரைப்படம் NH 10, அந்தப் படத்தில் உடன் நடித்த நடிகருடன் லிப் லாக் காட்சிகளில் அனுஷ்கா சர்மா நடித்தது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் இந்தக் கருத்துக்கு விராட் கோலியின் பதில் என்னவாக இருக்கும்?

 

காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களைத் தேர்வு செய்து விருது வழங்கும் தைவான் அரசு!

குற்றம் கடிதல், காக்கா முட்டை ஆகிய படங்களைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது தைவான் அரசு.

படம் வெளியாவதற்கு முன்பே தேசிய விருது பெற்ற படங்கள் ‘காக்கா முட்டை' மற்றும் ‘குற்றம் கடிதல்'.

காக்கா முட்டை படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தேசிய விருதை தவிர பல விருதுகளை பெற்றுள்ளது.

Taiwan govt selects Kutram Kadithal, Kaakka Muttai

இந்நிலையில் இவ்விரு படங்களும் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தைவான் திரைப்பட விழாவின் தூதர் சங் குவாங் டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘தைவான் அரசு சிறந்த படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளை வழங்கி கவுரப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழில் ‘குற்றம் கடிதல்', ‘காக்கா முட்டை' படங்களை தேர்வு செய்திருக்கிறோம். மேலும் பிற மொழிகளில் வெளியான சிறந்த படங்களையும் தேர்வு செய்திருக்கிறோம். தைவானில் படப்பிடிப்பு நடத்த தைவான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது,'' என்றார்.

 

கமல் ஹாஸனை மோசமாக பேசினார் ராதாரவி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு! - விஷால்

கமல் ஹாஸனை மோசமாகப் பேசினார் நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி. அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது, என்று குற்றம்சாட்டியுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் சங்க தேர்தல், சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் விஷாலும் அவரது ஆதரவாளர்களும்.

Radharavi bad mouthed on Kamal - Vishal

நடிகர் சங்கத்துக்கு புதிய தேர்தல் நடக்கும்போது, அதில் இப்போதுள்ள நிர்வாகிகள் யாரும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் விஷால் அணியினர்.

தங்கள் அணிக்காக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் நடிகர் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றியும் சொல்லி வருகிறார்.

விஷால் அணிக்கு நாடக நடிகர்கள் மத்தியிலும் ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிகர்களுடன் விஷால் அணியினர் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய விஷால், "நடிகர் சங்க தேர்தலில் பதவி நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஊர் ஊராக செல்லவில்லை. சினிமா எனது குடும்பம். அதில் நாடகக் கலைஞர்களும் அங்கம். அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கிறேன்.

நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர் சங்கம் பற்றி விஷால் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் இனி கேள்வி கேட்பார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது. நடிகர் சங்க தேர்தலில் மூத்த சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக்கும்படி கேட்போம்.

கமலஹாசன் பற்றி ராதாரவி மோசமாகப் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். கமலஹாசன் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. கமல் ஹாஸன் போன்ற சிறந்த கலைஞர்களையே அவமதிக்கிறார்கள் என்பதற்காக சொல்கிறேன்," என்றார்.