யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம்.

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார்.

யாழ்...  இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.ஆனந்தே படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது.

யாழ்...  இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

இதில் இந்திய தமிழர் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே. இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத் தமிழில் இருப்பதும், பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கை தமிழில்தான் இருக்கும்.

யாழ் என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக்கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும்,தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பினார்கள்.

யாழ்...  இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

யாழ்ப்பாணம் என்ற ஊருக்கு பெயர் வந்ததே அதனால்தான். யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின் போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம். இதுவரை உலக சினிமாவிலே சொல்லப் படாத திரைக்கதை இதில் பார்ப்பீர்கள்," என்றார்

 

வாங்கிய சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமலின் விசால மனசு!

பேசிய சம்பளத்துக்கு மேல் எவ்வளவு கறக்க முடியும் என்றுதான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் யோசிப்பார்கள்.

ஆனால் வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்? விமலுக்கு அப்படி ஒரு மனசு.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம்.

வாங்கிய சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமலின் விசால மனசு!

இந்தப் படத்தை கடைசிநேரத்தில் வெளியிட முடியாமல் தவித்தார்கள் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட விமல், உடனடியாக ரூ 65 லட்சம் புரட்டிக் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் அப்போது கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தார். அதுவும் போதவில்லை தயாரிப்பாளருக்கு. பின்னர் தனது நண்பர்களிடம் சொல்லி மேலும் ரூ 20 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார்.

பத்து தையல் மிஷின், ஆடு, மாடு கொடுத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள விளம்பரத்தை சக நடிகர்கள் பெற்று வரும் இன்றைய சூழலில், தான் இப்படி ஒரு பேருதவியைச் செய்ததைக் கூட வெளியில் சொல்லவில்லை விமல்.

கடைசியில் புலிவால் படத்தின் பிரஸ் மீட்டில் சக நடிகரான பிரசன்னா சொல்லித்தான் இது வெளியில் தெரிந்தது.

இதுகுறித்து பேசிய பிரசன்னா, "நானாக இருந்தால் கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டேன். கிட்டத்தட்ட ‘ஜன்னல் ஓரம்' படத்தில் அவர் இலவசமாக நடித்தார் என்றுதான் சொல்ல முடியும். சினிமாவில் விமல் எனக்கு ஜுனியர் என்றாலும் அவரிடம் நான் நிறைய நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன்," என்ற பிரசன்னா கூடவே, "அவருக்கு நிறைய சம்பளம் கொடுக்குறாங்க... அவர் திருப்பிக் கொடுகிறார். எனக்கு எங்க அவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க," என்று புலம்பவும் தவறவில்லை.

 

உதய்கிரண் தற்கொலையில் மர்மம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை

சென்னை: நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதயகிரணின் மனைவியிடமும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டது போன்றவற்றினாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் உதய்கிரண் தற்கொலையில் மேலும் பல மர்மங்கள் புதைந்து கிடப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகளுக்கும்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரம் அது ரத்தானது. அதன் பிறகு விசிதாவை மணந்தார். இவர் பேஸ்புக் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறார். உதயகிரண் தற்கொலை செய்து கொண்ட போது அவரது மனைவி வீட்டில் இல்லை.

உதய்கிரண் தற்கொலையில் மர்மம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை

உதய்கிரண் குடியிருந்த வீட்டின் காவலாளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உதய்கிரணுக்கும், அவரது மனைவி விசிதாவுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்றும் குடும்ப வாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் போலீஸ் பார்வை விசிதா பக்கம் திரும்பி உள்ளது.

தற்கொலை செய்த அன்று இரவு உதய்கிரண் மனைவி விசிதா இரவு விருந்துக்கு சென்றுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ தினத்தன்று கணவனை வீட்டில் இருக்க வைத்து விட்டு இவர் மட்டும் விருந்துக்கு தனியாக போனது ஏன் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசிதாவுடன் பணியாற்றும் சக ஊழியர் ரோஹித் என்பவர் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்க சென்றதாக விசிதா கூறியுள்ளார். கணவனையும் ஏன் உடன் அழைத்து செல்லவில்லை. நள்ளிரவு வரை நடந்த அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் யார் யார் போன்ற விவரங்களையயும் போலீசார் சேகரிக்கின்றனர்.

இதனிடையே உதய்கிரண் உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றது. திரைப்படத்துறை அமைச்சர் அருணா அஞ்சலி செலுத்தினார்.

உதய்கிரண் தற்கொலை வழக்கில் இன்னும் சில தினங்களில் பல அதிரடி திருப்பங்கள் வெளியாகும் என்கின்றனர்.

 

விஜய்க்கு எதிராக ஒரு சதி..? வீரம் விநியோகஸ்தரிடம் 'விலை போன' ஜில்லா விநியோகஸ்தர்!!

தலைவாவுக்குப் பிறகு விஜய் படம் என்றாலே இப்போது யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்துக்கு எதிராக சத்தமில்லாமல் ஒரு சதி அரங்கேறுவதாக தகவல் பரவியுள்ளது.

விஜய்க்கு எதிராக ஒரு சதி..?  வீரம் விநியோகஸ்தரிடம் 'விலை போன' ஜில்லா விநியோகஸ்தர்!!

ஜில்லா படத்தின் மதுரை, ராம நாதபுரம் வெளியீட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர், வேண்டுமென்றே விலையை ஏற்றி வைத்து, வீரம் படத்துக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதனால் ஜில்லாவுக்கு கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் கிடைக்காமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள விநியோகஸ்தர் பெயர் மணிகண்டன். நெல்லையைச் சேர்ந்தவர். வழக்கமாக மதுரை - ராமநாதபுரம் விநியோக உரிமையை மதுரையைச் சேர்ந்த அன்பு, அழகர், தங்கரீகல் ரமேஷ் போன்றவர்கள்கள்தான் பெறுவது வழக்கம்.

ஆனால் ஜில்லாவை நெல்லையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு விற்றிருக்கிறார்கள். விஷயம் தெரிந்த அஜீத் ரசிகர்கள் (முன்னாள் நிர்வாகிகள்) சிலர், மதுரை - ராமநாதபுரம் ஏரியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் ஜில்லா படமே வெளியாகக் கூடாது என கேட்டுக்கொண்டு, அதற்கான இழப்பீட்டையும் தருவதாகக் கூறியுள்ளார்களாம்.

இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள அரங்குகள் ஜில்லாவை திரையிட கேட்டபோது மிக அதிக விலை சொன்னாராம் மணிகண்டன். இதனால் பல ஊர்களில் உள்ள அரங்குகளில் வீரம் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜில்லா கன்பர்ம் ஆகவில்லை!

தேவகோட்டையில் அருணா, லட்சுமி என இரு அரங்குகள் உள்ளன. இவற்றில் லட்சுமியில் வீரம் வெளியாகிறது. அருணாவில் ஜில்லாவை வெளியிட முயன்று, விலை கட்டுப்படியாகாததால், அதையும் வீரம் அல்லது கலவரம் படத்துக்குத் தர முடிவு செய்துள்ளார்களாம்.

மானாமதுரையிலும் இரு அரங்குகள்தான். இங்கு சீனிவாசா அரங்கில் வீரம் வெளியாகிறது. பரிமளாவில் ஜில்லா வெளியாகவில்லை. மேலே சொன்ன அதே காரணம்தான்.

சின்னமனூரில் உள்ள வெங்கடேஸ்வராவில் வீரம் வெளியாகிறது. ஜில்லா வெளியாக வேண்டிய பாரத் அரங்கம், வெறிச்சோடிக் கிடக்கிறது.

வத்தலகுண்டுவில் கோவிந்தசாமி, பரிமளம் என இரு அரங்குகள். இவற்றில் கோவிந்தசாமியிவ் வீரம் வெளியாகிறது. இன்று பிற்பகலுக்குள் ஜில்லாவை தராவிட்டால் பரிமளத்திலும் வீரம் அல்லது கலவரம் வெளியாகும் என அறிவித்துவிட்டார்கள்.

இப்படி பல நகரங்களிலும் ஜில்லாவுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் வீரம் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர், மதுரை போன்ற பெரிய நகரங்களில் அதிக அரங்குகளை வீரம் படத்துக்குப் பிடித்து வைத்துள்ளார்களாம். ஜில்லா வெளியாக வேண்டிய அரங்குகளையும் வீரம் படத்துக்கே ரிசர்வ் செய்துள்ளனர்.

வழக்கமாக தங்களுக்கு வரவேண்டிய ஜில்லா உரிமை, நெல்லை பகுதிக்காரருக்குப் போன கோபத்தில் அவர்கள் இப்படிச் செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தலைவாவுக்குப் பிரச்சினை தலையாய இடத்திலிருந்து வந்தது. ஆனால் ஜில்லாவுக்குப் பிரச்சினை, ஜில்லா லெவலிலேயே கிளம்பி இப்போது படத்தின் வசூலுக்கே வேட்டு வைக்கும் போலிருக்கிறது!

 

நடிகை திரிஷாவிற்கு கோர்ட் பிடிவாரண்ட்!

நடிகை திரிஷாவிற்கு கோர்ட் பிடிவாரண்ட்!

சென்னை: நடிகை திரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது. அதனை ஒரு வார பத்திரிக்கை படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு ஜனவரி 7ம் தேதி செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போதும், திரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது உமா கிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கைது வாரண்டு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 

'இதான் மாஸ்!'- ஜில்லா ட்ரைலர் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்

ஜில்லா ட்ரைலர் நேற்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. ரிலீஸுக்கு ஜஸ்ட் இரண்டு நாட்கள் இருக்கும்போது வெளியானதே என்ற குறையைத் தவிர, ரசிகர்களுக்கு பெரும் பரவசத்தைத் தந்துள்ளது ஜில்லா ட்ரைலர்.

1.47 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலர் மிக விறுவிறுப்பாகவும் கலர்புல்லாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

'இதான் மாஸ்!'- ஜில்லா ட்ரைலர் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்

பொதுவாக ரிலீசுக்கு சில வாரங்கள் இருக்கும்போதுதான் ட்ரைலர் வெளியிடுவார்கள். ஏனோ ஜில்லாவுக்கு கடைசி நிமிடத்தில் ட்ரைலர் கட் பண்ணியிருக்கிறார்கள்.

(ஜில்லா - டிரைலர்)

'இதான் மாஸ்!'- ஜில்லா ட்ரைலர் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்

ஆனால் அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் பரபரவென ஓடி முடிகிறது ட்ரைலர். மோகன்லால் பெயர்தான் ட்ரைலர் டைட்டிலில் முதலில் வருகிறது. அவரும் விஜய்யும் இணைந்து வரும் காட்சிகள் 'மாஸ்' ஆக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'இதான் மாஸ்!'- ஜில்லா ட்ரைலர் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்

ஆக்ஷன், காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் அனைத்தும் நிறைந்த படம் என்பதை உணர்த்துவது போல இந்த ட்ரைலரை உருவாக்கியிருக்கிறார் நேசன். அதற்கேற்ற வரவேற்பு கிடைத்துள்ளது, வெளியான சில மணி நேரங்களிலேயே.