இன்றைய பெண்களுக்கு அவர்கள் வெற்றிபெற பல்வேறு தடைகள் உள்ளன. தடைகளை தாண்டி வெற்றி பெற்ற பெண்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகின்றனர் நியூஸ் 7 தொலைக்காட்சியில்.
ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் கடினமான ஒன்று. அதுவும் பெண்கள் என்றால் மிகக் கடினம் ஏனெனில் குடும்பம், சமூகம் என பல காரணிகள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது அதையும் மீறி வெற்றி பெற்ற, பெறுகிற பெண்களை நோக்கிய பயணம்தான் "ஃபினிக்ஸ் பெண்கள் நிகழ்ச்சி".
அந்த வகையில் ஆசியாவின் முதல் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியை முதல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தோம், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த கீதா அவர்களை இரண்டாவது நிகழ்ச்சியிலும், மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் கீதா அவர்களை இந்த வார நிகழ்ச்சியிலும் அறிமுகம் செய்ய உள்ளனர். இவர்களைப் போலவே சுவாரசியமான பெண்கள் பலரை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்கின்றனராம்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கும் ,மறுஒளிபரப்பு செவ்வாய்கிழமை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.