மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அத்தனை நாயகிகளும் ஆஜர்!

Surya S Heroines Attend Maatran

சென்னை: நடிகர் சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இதுவரை அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து நாயகிகளும் கலந்து கொள்கின்றனர்.

அயன் படத்துக்குப் பிறகு கே.வி. ஆனந்த் - சூர்யா இணைந்துள்ள படம் மாற்றான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளதால் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழா வருகிற 9-ந் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. மிக பிரமாண்ட நிகழ்ச்சாயாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

எனவே விழாவில் பங்கேற்கும்படி இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கே.வி.ஆனந்த் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் நயன்தாரா, திரிஷா, அசின், ஸ்ருதிஹாசன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். மாற்றான் படத்தில் ஜோடியாக நடிக்கும் காஜர் அகர்வாலும் கலந்து கொள்கிறார். சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் இதில் கலந்து கொள்கிறார்.

அனைவரும் மேடையில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் லைவாக இசை கச்சேரியை நடத்துகிறார்.

முன்னணியில் உள்ள பாடகர்கள் பலரும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.

 

லிங்குசாமியுடன் மீண்டும் இணைகிறார் அஜீத்?

Ajith Join With Lingusamy Again

இயக்குநர் லிங்குசாமி தன் படங்கள் குறித்து எப்போது பத்திரிகையாளர்களிடம் பேசினாலும், ஒரு படத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார். அந்தப் படம் அஜீத் நடித்த ஜீ!

2005-ல் அஜீத் - த்ரிஷா நடிப்பில் உருவான இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் நல்ல பாடல் கூட உண்டு. ஆனால் படம் படு சுமாராகப் போனதால், ஹீரோ அஜீத்தும் சரி, இயக்குநர் லிங்குசாமியும் சரி.. இந்தப் படத்தை மறக்க விரும்புவது இயல்புதான்.

ஆனால் இப்போது இந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இயக்குநர் லிங்குசாமி இதுபற்றிக் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைதான். ஆனால் அதற்கு நல்ல ஸ்க்ரிப்ட் வேண்டும். அஜீத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இப்போது சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.

 

உபியில் தனது உறவினர்களின் 22 வீடுகளை வாங்கிய அமீர்கான்!

Aamir Khan Buys 22 Houses His Ances

மும்பை: இந்தியின் முன்னணி நடிகரான அமீர்கான், சமீபத்தில் ஒரே நேரத்தில் 22 வீடுகளை வாங்கியுள்ளார்.

மெகா படங்களில் ஹீரோ, சொந்தப் படத் தயாரிப்பு என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து எக்கச்சக்கமாக சம்பாதிப்பவர் அமீர்கான்.

ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கும் மேல் பல வழிகளில் அவருக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அமீர்கான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.

தற்போது 22 வீடுகளை அவர் ஒரே நேரத்தில் விலைக்கு வாங்கியுள்ளாராம்.

இந்த வீடுகள் உத்தரபிரதேச மாநிலம் சகாபாத்தில் அமைந்துள்ளன. இந்த வீடுகள் அமீர்கானின் உறவினர்களுக்கு சொந்தமானவை. வீட்டை விற்க அவர்கள் முடிவு செய்து புரோக்கர்கள் வைத்து ஆள் தேடினார்கள்.

இந்த விவரம் அமீர்கானுக்கு தெரியவந்ததும் அவரே 22 வீடுகளையும் வாங்கி, தனது சகோதரர் மற்றும் சகோதரி பெயரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அமீர்கான் கூறும்போது எனது உறவினர்களின் பாரம்பரிய வீடுகள் என்பதால் அவைகளை விற்க முடிவு செய்ததும் நானே வாங்கினேன். நியாயமாக சம்பாதித்து நியாயமாக வாங்கி முறைப்படி வரி செலுத்தி பதிவு செய்துள்ளேன், என்றார்.

அமீர்கானின் உறவினரும் மறைந்த பிரபல பட அதிபருமான நாசிர் உசேன் மற்றும் இன்னொரு உறவினர் வைத்திருந்த வீடுகள் இவை.

 

ஜப்பான் ரசிகர்களுக்காக அந்நாட்டு மொழி கற்கும் ரஜினி!

Superstar Rajinikanth Learning Japanese

தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.

கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

தனது இந்தப் பயணத்தின்போது ஜப்பானிய ரசிகர்களையும் ரஜினி சந்தித்து பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ரஜினி தற்போது ஜப்பான் மொழி கற்று வருகிறார். ஆசிரியரை வைத்து அந்த மொழியை கற்கிறார்.

ரஜினிக்கு ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் மராட்டி மொழிகள் தெரியும். இப்போது கூடுதலாக ஜப்பான் மொழியும் கற்கிறார்.

 

மும்பையில் சந்தித்த பிரபுதேவா - விஜய் - அசின்: மீண்டும் கைகோர்க்கிறதா போக்கிரி டீம்?

Pokkiri Team Met Mumbai

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது தனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் என்பார் அடிக்கடி பிரபு தேவா.

இருவரும் இணைந்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தையும், வில்லு என்ற சுமார் படத்தையும் தந்துள்ளனர். மீண்டும் இணைவார்களா என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிரபு தேவாவின் இந்திப் படம் ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி கலக்கினார் விஜய்.

இந்த நிலையில் மும்பையில் திடீரென விஜய்யும் அசினும் பிரபு தேவாவைச் சந்தித்தனர்.

'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்றிருந்த விஜய், அருகில்தான் பிரபுதேவா வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்றார்.

விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று கூறப்படுகிறது!

 

மிரட்டல் - சினிமா விமர்சனம்

Mirattal Cinema Review

நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத்
பிஆர்ஓ: நிகில்
இசை: பிரவீண் மணி
ஒளிப்பதிவு: டி கண்ணன்
இயக்கம்; மாதேஷ்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல்


கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில் 'மிரட்டல்' என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ். ஆனால் மிரட்டலாக ஒன்றுமில்லை!

அரசாங்கம் என்ற ஆக்ஷன் படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் தந்துள்ள படம் இது.

சாப்ட்வேர் இளைஞன் மாதிரி வேடங்களில் பார்த்துப் பழகிய வினய், இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மனதில் பதிகிற மாதிரி எதையும் அவர் செய்யவில்லை.

தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார, ஆனால் மெகா தாதா பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார்.

இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும் பொறுப்பேற்ற வினய்யுடன் காதலாகிறார் சர்மிளா. காதல் தீ கொழுந்துவிட்டெறிய ஆரம்பிக்கிறது.

பிரபுவைப் பார்க்கும்போது மட்டும் அதை அடக்கிக் கொள்கிறார்கள். சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயல, ஒரு நாள் ஓடிப் போய் பழனியில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும் உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின் எதிரிகள் சர்மிளாவை போட்டுத் தள்ளப் பார்க்க, அதிலிருந்து காப்பாற்றுகிறார் வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.

உடனே திருமணத்தை மறைத்து, யதேச்சையாக காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது.

தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா... இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

படத்தில் ஹீரோ வினய்யை விட அதிக முக்கியத்துவம் பிரபுவுக்குதான். அவர் தோற்றம், தாதா கெத்துடன் அவரது நடை, தங்கை மீதான கண்மூடித்தனமான பாசம், அறியாமை என அனைத்திலும் கலக்குகிறார் பிரபு.

வினய்யை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மற்றபடி ரொமான்ஸ், டான்ஸ், பிரபுவை ஏமாற்றும் குறும்புத்தனம் என கலகலப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஸ்பெஷல் பார்க்க ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும் நாயகி சர்மிளாதான். அவரும் வினய்யும் லண்டன் வீதிகளில் போடும் ரேடியோ பாடல் கேட்கவும் பார்க்கவும் இதம்!

சந்தானத்தை இன்னும்கூட நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் வருகிற காட்சிகளில் சிரிப்புக்குப் பஞ்சம் வைக்கவில்லை மனிதர்!

பிரவீண் மணியின் இசை பரவாயில்லை. இந்த மாதிரி படங்களில் பின்னணி இசைக்கு பெரிய வேலை இல்லாததால், அவர் தப்பித்துவிட்டார். கண்ணனின் ஒளிப்பதிவு அருமை.

இத்தனை இருந்தாலும், திரைக்கதை என்ற விஷயத்தில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார் மாதேஷ். காமெடி, கதாநாயகி போன்ற விஷயங்களுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம் ரகம் இந்த மிரட்டல்!

-எஸ்எஸ்

 

தொழிலதிபரை விட்டுவிட்டு இந்தி நடிகருடன் நிலா காதல்!

Nila S Affair With Bollywood Actor

பெயரை மீரா சோப்ரா என மாற்றிக் கொண்ட நடிகை நிலா, அடுத்து தன் காதலரையும் மாற்றிவிட்டாராம்.

அன்பே ஆருயிரே' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிலா.

நிலாவும், ஆர்யாவும் காதலிப்பதாக முதலில் கிசுகிசுத்தனர். பின்னர் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் தீவிர காதலில் இருப்பதாக நிலா குறித்து செய்திகள் வந்தன.

ஒருநாள் அந்த தொழில் அதிபர் மனைவி திடீரென மரணம் அடைய, அதற்கு நிலாதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. போலீசாரும் நிலாவிடம் விசாரணை நடத்தினர்.

இப்போது மீரா சோப்ரா என பெயர் மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நிலா.

மேலும் தொழிலதிபருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளாராம்.

இப்போது இந்தி நடிகர் அர்ஜன் பாஜ்வாவை நிலா காதலிப்பதாக புது தகவல் பரவியுள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிலா நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அர்ஜன் பாஜ்வாவும் தவறாமல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர்கள் அருண்விஜய், ஸ்ரீகாந்த் மோதும் கேம்ஷோ

Arunvijay Vs Srikanth Game Show

விஜய் டிவியின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் நடிகர்கள் அருண்விஜய், ஸ்ரீகாந்த் பங்கேற்று விளையாட உள்ளனர்.

ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற புதுமையான கேம் ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. தீபக் - திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு ஜோடிகள் பங்கேற்று விளையாட்டில் வெற்றிபெறவேண்டும். ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றி பெறுப்பவர்களுக்கு பணம் பரிசாக வழங்கப்படும்.

சனிக்கிழமை இரவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் இந்த நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்று வந்தனர். இன்றைய தினம் நடிகர்கள் அருண்விஜய்யும் ஸ்ரீகாந்தும் பங்கேற்கின்றனர். விறுவிறுப்பான இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் முன்னோட்டமே நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஆவலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

 

சின்னத்திரை சினிமா: கலைஞர் தொலைக்காட்சியில் திகில் தொடர்

Chinna Thirai Cinima Rajesh Kumar

பிரபல கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் திகில் கதைகள் சின்னத்திரை சினிமாவாக இன்றுமுதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

கிரைம் கதைகளைப் படிப்பதற்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருக்கும். அதேபோல் திரில்லர் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். கிரைம் கதைகளை விரும்புபவர்களுக்காக சின்னத்திரையில் பிரம்மாண்டமான முறையில் ராஜேஸ்குமாரின் நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை தோறும் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த திகில் சினிமாவில் இன்றைக்கு கோகிலாவின் கொலை வழக்கு ஒளிபரப்பாகிறது. மர்மமான முறையில் இறந்துபோன கோகிலாவின் மரணத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த திகில் கதை, நாவலாக வந்த நேரத்தில் பரபரப்பாக விற்பனையானது. இந்த தொடரில் தேவ், ராம்கி, சுருளி மனோகர், கராத்தே கார்த்திக், பஞ்சாட்டி, நீலிமா ஆகியோர் நடித்துள்ளனர்.

திக் திக் காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த ராஜேஸ்குமாரின் கதையை கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளதாக இயக்குநர் பிரேம்நாத் கூறியுள்ளார்.

 

'அன்னக்கொடியும் கொடிவீரனும்'... பாரதிராஜா அறிமுகப்படுத்தும் சுபிக்ஷா!

Bharathiraja Introduces Subhiksha A

சென்னை: அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இரண்டாவது நாயகியாக சுபிக்ஷாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் பாரதிராஜா.

கடந்த ஆண்டு தேனியில் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். தமிழ் திரையுலகமே தேனி அல்லிநகரத்தின் மலையடிவாரத்துக்கு திரண்டு வந்து இந்த விழாவில் பங்கேற்றது.

அமீர், இனியா, கார்த்திகாவுடன் படப்பிடிப்பு நடந்த நிலையில், பெப்சி - தயாரிப்பாளர் சங்க மோதல் காரணமாக திடீரென இந்தப் படம் நின்றுபோனது.

பின்னர், படத்திலிருந்து அமீரும் இனியாவும் படத்தில் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் பாரதிராஜா.

இனியாவின் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் பெயர் சுபிக்ஷா.

சமீபத்தில் சுபிக்ஷாவுக்கு போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படங்களை எடுத்தார்கள்.

சுபிக்ஷாவுடன் இப்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் பாரதிராஜா.

 

நடிகர்கள் அருண்விஜய், ஸ்ரீகாந்த் மோதும் கேம்ஷோ

Arunvijay Vs Srikanth Game Show

விஜய் டிவியின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் நடிகர்கள் அருண்விஜய், ஸ்ரீகாந்த் பங்கேற்று விளையாட உள்ளனர்.

ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற புதுமையான கேம் ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. தீபக் - திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு ஜோடிகள் பங்கேற்று விளையாட்டில் வெற்றிபெறவேண்டும். ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றி பெறுப்பவர்களுக்கு பணம் பரிசாக வழங்கப்படும்.

சனிக்கிழமை இரவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் இந்த நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்று வந்தனர். இன்றைய தினம் நடிகர்கள் அருண்விஜய்யும் ஸ்ரீகாந்தும் பங்கேற்கின்றனர். விறுவிறுப்பான இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் முன்னோட்டமே நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஆவலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.