திருமணம் எனும் நிக்கா -ஜெய் ஜோடியாக ஹெப்பா!

Hebbah Another New Beauty Enters Kollywood

திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஹெப்பா எனும் புதுமுகம் நடிக்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டம், லோகநாதனின் ஒளிபதிவு, புதுமுக இயக்குனர் அனீசின் கதை, திரைக்கதை அமைப்பு, கிப்ரானின் மெய் மறக்க வைக்கும் இசை, வனிதா ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான ஆடை அலங்காரம் என எல்லாமாக சேர்ந்து இந்தப் படத்தை எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாற்றியுள்ளது.

படத்தின் நாயகன் ஜெய்க்கு இரண்டு அழகான கதாநாயகிகள். ஒருவர் நசிரியா. தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நடிக்கும் அதே நசிரியாதான். இன்னொருவர் ஹெப்பா. இவரும் புதுமுகம்தான். அசப்பில் அந்தக் கால அமலாவைப் பார்த்த உணர்வு. இயக்குநர் அனீஸும் அதையே வழிமொழிகிறார்.

ஜெய் - ஹெப்பா சம்பத்தப்பட்ட பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

 

அந்தாளை நான் லவ் பண்ணல...இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன்! - ஆன்ட்ரியா

Andrea Denies Love Affair With Bahat   

பிரபல இயக்குநர் பாஸில் மகன் பகத்தை நான் காதலிக்கவும் இல்லை... இனி அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.

நடிகை ஆன்ட்ரியாவும், நானும் காதலிக்கிறோம் என்று மலையாள நடிகர் பகத்பாசில் சமீபத்தில் அறிவித்திருந்தார். இருவரும் அன்னயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இதில் ஆன்ட்ரியாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றும் பகத் பாசில் கூறினார். இதற்கு ஆன்ட்ரியா கண்டனம் தெரிவித்ததோடு, அவர் காதலையும் ஏற்க மறுத்து விட்டார்.

'ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சா காதல் வந்திடுமா.. என்ன இது சின்ன புள்ளத்தனம்', என பகத் பாசிலுக்கு போன் போட்டு திட்டியும் விட்டாராம்.

இதன் பிறகு, இருவரையும் இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அந்த படத்திலிருந்தும் ஆன்ட்ரியா விலகி விட்டார். இனி அந்த ஆள் கூட சேர்ந்து நடிக்க மாட்டேன்... படமே வேண்டாம், என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

 

என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது: ஹரியிடம் கார்த்தி 'அடம்'

Karthi Doesn T Want Santhanam His Movie

சென்னை: தனது படத்தில் சந்தானத்தை காமெடியனாக போட வேண்டாம் என்று இயக்குனர் ஹரியிடம் கார்த்தி கராராக கூறிவிட்டாராம்.

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு கார்த்தியை வைத்து அருவா படத்தை இயக்குகிறார். கார்த்தி, ஹரி முதன் முதலாக சேர்ந்து பணியாற்றவிருக்கின்றனர். அருவா படத்தில் காமெடியனாக கார்த்தியுடன் சேர்ந்து ஏற்கனவே சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தானத்தை நடிக்க வைக்க ஹரி முடிவு செய்திருந்தார்.

ஆனால் இது குறித்து அறிந்த கார்த்தி என் படத்தில் சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். கார்த்திக்கு சந்தானம் மீது அப்படியென்ன கோபம் என்று கேட்டால், கோபமெல்லாம் இல்லையாம். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக நடிப்பதால் அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகத் தெரியும் என்பதால் வேண்டாம் என்று கன்டிஷன் போட்டுள்ளாராம் கார்த்தி.

அதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஹரி.

 

குட்டிப்புலியை வாங்கியது சன் பிக்சர்ஸ்!

Sun Pictures Release Kutti Puli   

சசிகுமார் நடித்துள்ள குட்டிப்புலி படத்தின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சசிகுமார் - லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை முத்தையா எனும் புதியவர் இயக்கியுள்ளார். இவர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை வாகை சூட வா படத்தைத் தயாரித்த முருகானந்தம் தனது வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில் குட்டிப் புலியின் தமிழக வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் பெற்றுள்ளது.

இந்த மாதம் 17-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே இப்போதிலிருந்தே தங்களது அதிரடியான விளம்பரங்களை ஆரம்பித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

 

அமெரிக்கா எனக்கு ரொம்ப வசதியா இருக்கு:ஏ.=?UTF-8?B?4K6G4K6w4K+N?=.ரஹ்மான்

Us Is Comfortable Me Ar Rahman

சென்னை: ஒரு வருடத்தில் பாதி நாட்கள் தான் அமெரிக்காவில் இருப்பதற்கான காரணத்தை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் அமெரிக்காவில் செட்டிலாகப் போவதாக செய்திகள் வருகின்றன. நான் இங்கு செய்யும் வேலையைத் தான் அங்கும் செய்கிறேன். அமெரிக்காவில் எனக்கு சொந்தமாக ஒரு வீடு, ஸ்டுடியோ இருக்கிறது. அமெரிக்கா எனக்கு வசதியாக இருக்கிறது. அங்கு நான் சாலையில் ஃப்ரீயாக நடக்கலாம், சாலையோரம் இருக்கும் கடைகளில் காபி சாப்பிடலாம். என்னை யாரும் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அது தான் வேண்டும். அதனால் தான் ஒரு வஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவிலேயே இருக்கிறேன். மற்றபடி வேறு காரணம் எதுவும் கிடையாது.

நான் மலையாளப் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இருக்கின்ற வேலையைப் பார்க்கவே நேரம் இல்லை. இதில் எங்க போய் நடிக்க என்றார்.

 

மூன்று பேர் மூன்று காதல் -விமர்சனம்

Rating:
2.5/5

நடிப்பு: அர்ஜூன், சேரன், விமல், பானு, சுர்வின், லாசினி, தம்பி ராமையா
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்
தயாரிப்பு: பாரத்குமார், மகேந்திரன், மஹா அஜய் பிரசாத்
இயக்கம்: எஸ்எம் வசந்த்

மீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த். மூன்று ஜோடிகளின் காதல்களை ஒரு தொகுப்பாக, கிட்டத்தட்ட நாவல் மாதிரி தந்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக அவரால் தர முடியாமல் போனதுதான் படத்தின் பிரச்சினை!

மலையும் மலை சார்ந்த இடமுமான ஊட்டியில் சாப்ட்வேர் பணியிலிருக்கும் விமல், சக பணியாளர் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் கடைசியில் காதலிலிருந்து விலகிக் கொள்கிறார். அது ஏன் என்ற கேள்விக்கு, தான் சந்தித்த இரண்டு ப்ளாஷ்பேக் காதல்களைச் சொல்கிறார்.

அதில் ஒன்று 'கடலும் கடல் சார்ந்த இடமுமான' நாகர்கோயிலில் வசிக்கும் என்ஜிஓ சேரன் - பிஸியோதெரபிஸ்ட் பானு காதல் கதை.

அடுத்தது, 'நிலமும் நிலம் சார்ந்த இடமுமான' சென்னையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அர்ஜூன் - வீராங்கனை சுர்வின் காதல். இந்த மூன்று காதல்களையும் ஒரு நாவலாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சியில், அந்த காதல்களின் க்ளைமாக்ஸை சொல்கிறார் விமல். அதை மூன்று மணிநேர கொட்டாவிகளைச் சகித்துக் கொண்டு தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு காதலுக்கும் நீள நீளமான வர்ணனைகள்... காட்சியமைப்புகள். அவை சுவாரஸ்யமாக இருந்தாலாவது பார்க்கலாம். வசனங்களுக்கும் சில சீரியஸ் காட்சிகளுக்கும் கண்டமேனிக்கு சிரித்து வைக்கிறார்கள் பார்வையாளர்கள்.

உதாரணம்... இரவில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் பயிற்சிக்குப் போகும் சுர்வின் காட்சியமைப்பு.

இந்த மூன்று காதல்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு பக்குவமாக அமைந்திருப்பது சேரன் - பானு கதைதான். முதல் முறையாக அளவோடு நடித்திருக்கிறார் சேரன். பானுவின் தோற்றம், நடிப்பு இரண்டுமே அழகு!

அர்ஜூன் - சுர்வின் காதலில் ஈர்ப்பே இல்லை. 110 மீட்டர் 51 செகன்ட்ஸ் என்ற அர்ஜூனின் இலக்குதானே அவர்கள் காதலுக்கு வில்லனாகிறது?

விமல் - லாசினி காதல்... ப்ச்... அட, நடிகர்களாகக் கூட அந்த இருவரும் தேறவில்லை.

moondru per moondru kadhal review

இந்தப் படத்தின் பெரும் பலம் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் மற்றும் சுண்டியிழுக்கும் பின்னணி இசை. காதலுக்கு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கிறார் பாருங்கள்... ஆஹா!

அடுத்தது, போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு. சமீப கால படங்களில் ரசிக்க வைத்த காட்சிப் பதிவு இதுதான்.

இயக்குநர் வசந்த் வித்தியாசமாக சினிமா எடுக்க பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆமை வேகம், சுவாரஸ்யம் குறைந்த காட்சியமைப்புகள் அவரது முயற்சியை பலிகொண்டுவிட்டன!

-எஸ்எஸ்