சென்னை: ஊதா கலரு ரிப்பனுக்கும் அவரது அக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாதாம்.
ஊதா கலரு ரிப்பன் சின்னத் திரையில் இருந்து வந்து பெரிய திரையில் அசுர வேகத்தில் வளர்ந்துள்ள சிவமான நடிகரின் படம் மூலம் பிரபலம் ஆனார். தற்போது இளம் இசையமைப்பாளர் ஒருவருடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவரைத் தேடி வரும் பட வாய்ப்புகளுக்கும் ஒன்றும் குறைவில்லை. அம்மணி கோலிவுட்டில் நடித்த முதல் படம் வன மல்லி. அந்த படம் இன்னும் ரிலீஸாகவே இல்லை. இந்த படத்தில் முதலில் ஊதா கலரு ரிப்பனின் அக்காவான ரம்யமான நடிகையை தான் ஒப்பந்தம் செய்தார்களாம். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை ஊதா கலரு ரிப்பனை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துவிட்டார்கள்.
தான் ஒப்பந்தமான படத்தில் ஊதா கலரு ரிப்பன் நடித்ததால் அக்காவுக்கும், தங்கைக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையாம்.