அடுத்த சுற்றுக்கு தயாராகும் லிட்டில் மாஸ்டர்ஸ்!

Little Masters Returns Jaya Tv Season 4

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `லிட்டில் மாஸ்டர்ஸ்' நடன நிகழ்ச்சி, சீசன் நான்கு ஒளிபரப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டி நடன கலைஞர்கள் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகின்றனர்.

லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4 நடன நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திறமையான குட்டி கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான அடுத்த சுற்று போட்டி தயாராகிவிட்டது. இந்த நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகர்கள் ராகவ், பிருத்விராஜ் ஆகியோருடன் பிரபல நடன இயக்குநர் ஜானியும் இணைந்து லிட்டில் மாஸ்டரை தேர்ந்தெடுக்கிறார். இந்த சுற்றில் `டாப் 40 குட்டி நடனப் புயல்கள்` நிகழ்ச்சியின் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். லிட்டில் மாஸ்டர் சீசன் 4 ஐ வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.

முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கால்பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத்து'!

7 Heroes Koothu

அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர்.

அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது.

'26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக வனப்பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று 160 கிமீ பயணித்து காட்சிகளைப் படமாக்கினார்களாம்.

கேரள காடுகளில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

 

சூர்யாவின் மாற்றான் ... அக்டோபர் 12-ம் தேதி பிரமாண்ட ரிலீஸ்!

Maattrraan Hit Screens On Oct 12th Official   

சென்னை: சூர்யா நடிக்கும் மாற்றான் படம் வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா இதுவரை நடித்ததில் பெரிய பட்ஜெட், பெரிய வியாபாரம் ஆகியிருக்கும் படம் என்றால் அது மாற்றான்தான்.

ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.

பாடல் காட்சிகள் நார்வே நாட்டில் இதுவரை யாரும் படமாக்காத அழகிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தின் பாடல்களை சமீபத்தில் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இப்போது பட வெளியீட்டுத் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

ராஜ் டிவியில் இருந்து வின் டிவிக்கு தாவிய நிஜந்தன்!

Raj Tv Nijanthan Joined Win Tv

சென்னை: ராஜ் டிவியின் செய்தி தயாரிப்பாளராக இருந்த நிஜந்தன், வின் டிவிக்கு தாவி உள்ளார். வின் டிவியின் புதிய தலைமை நிர்வாகியாக நிஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வின் டிவியின் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சன், ஜெயா, மக்கள், விஜய், ராஜ், தமிழன், கலைஞர், இமயம், மெகா, இசைஅருவி, ஜீ தமிழ், வசந்த், கே, எஸ்.எஸ்.மியூசிக், புதிய தலைமுறை, வின் என்று பல டிவி சேனல்கள் நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றன.

ஒவ்வொரு சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, நேயர்களை கவர்ந்து வருகின்றன. இதனால் டிவி சேனல்களுக்கு இடையே யார் சிறந்த டிவி சேனல் என்ற போட்டி நிலவுகிறது. செய்தி ஒளிப்பரப்பில் அதிக நேயர்களுடன் முதலிடத்தில் இருந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளி, தற்போது புதிய தலைமுறை டிவி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேபோல ஒவ்வொரு டிவி சேனல்களும், புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி நேயர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் ராஜ் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி தயாரிப்பாளராக இருந்த நிஜந்தனை தற்போது வின் டிவிக்கு தாவி உள்ளார்.

வின் டிவியின் புதிய தலைமை நிர்வாகியாக நிஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் வின் டிவியின் செய்திப் பிரிவில் தேவையான மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது டிவி சேனல்களுக்கு இடையிலான போட்டியில், வின் டிவியும் இணைந்துள்ளது.

 

ஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்!

Hansika Vs Tamanna Tollywood Fight    | ஹன்ஸிகா  

ஹைதராபாத்: வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.

ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது.

இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம்.

தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.

2012-08-25

 

'பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' - தடை நீட்டிப்பு

Interim Stay On Pandi Oliperukki Nilayam Extended   

சென்னை: பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்துக்கு எதிரான தடையை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சென்னை பெருநகர 8-வது உரிமையியல் நீதிமன்றத்தில் பைனான்சியர் எஸ். சிவகுமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், 'சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராசுமதுரவன் என்பவர், `பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' என்ற தலைப்பில் தமிழ் சினிமா படம் தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்தை தயாரிக்க, என்னிடம் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, படம் ரிலீசாவதற்கு 30 நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி தந்து விடுவதாக ராசுமதுரவன் கூறினார். ஆனால் பணத்தை திருப்பித்தராமல், படத்தை 17-ந் தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளார். எனவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி, 'படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து' கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி கலியமூர்த்தி, அதுவரை `பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் - மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Manorama Hospitalised

சென்னை: மூச்சுத் திணறல் காரணமாக நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மாடிப்படியில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.

டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி à®"ய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன், கிட்டத்தட்ட à®'ரு மாதம் வரை மருத்துவமனையில் இருந்தவர், பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். புதிய படம் à®'ன்றில் நடிக்கவும் அவர் à®'ப்பந்தமாகியிருந்த நிலையில் இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

ஆகஸ்ட் 29 முதல் கேப்டன் செய்திச் சேனல் தொடக்கம்!

Vijaykant Captain News Launch 29th August

கேப்டன் மீடியா நிறுவனத்தில் இருந்து 24 மணி நேர செய்திச் சேனல் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் à®'ளிபரப்பாக உள்ளது. இதற்கான சோதனை à®'ளிபரப்பு பணிகள் முடிவடைந்துள்ளதை அடுத்து முழுநேர செய்திச்சேனல் à®'ளிபரப்பினை தொடங்க உள்ளதாக கேப்டன் மீடியா நிறுவன இயக்குநர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் பிறந்த நாளான இன்றுதான் செய்திச் சேனலை தொடங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். இப்போது நான்கு தினங்கள் தள்ளி ஆரம்பிக்கின்றனர்.

தமிழில் ஏற்கனவே சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ், ராஜ் செய்திகள், புதிய தலைமுறை, சத்தியம், ஜி நியூஸ் போன்ற செய்திச்சேனல்கள் à®'ளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் இப்பொழுது கேப்டன் செய்திகளும் இணைகிறது.

அவரவர் நிலைப்பாட்டுக்கேற்ப செய்திகளைச் சொல்லும் சேனல்களாகவே இவற்றில் பெரும்பாலானவை உள்ளன.

செய்திகளை உண்மையா தெரிஞ்சிக்க à®'ரு சேனல் எப்போ வருமோ என்பதுதான் பார்வையாளர் கேள்வி!!

 

விஜய்யின் துப்பாக்கி தலைப்புக்கு ஆறாவது முறையாக தடை நீட்டிப்பு!!

Interim Stay On Thuppakki Extended Till Sep 20

சென்னை: விஜய் நடித்துவரும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு ஆறாவது முறையாக நீதிமன்றம் தடையை நீட்டித்துள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. ஆரம்பத்தில் இந்தப் படம் தலைப்பில்லாமல்தான் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில்தான் துப்பாக்கி என்ற தலைப்பும், அதன் டிஸைனும் வெளியிடப்பட்டது.

இந்த தலைப்புக்கும் டிசைனுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்துவரும் நார்த் இஸ்ட் பிலிம் à®"ர்க்ஸ் நிறுவனம் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் 2-ல் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தடை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து வழக்கை செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கும் என உத்தரவிட்டார்.

தொடரும் தடை காரணமாக, துப்பாக்கி படத்தின் டிசைன்கள் மற்றும் பாடல் வெளியீடு தாமதமாகி வருகிறது.

 

தேசத்தின் பெருமை சொல்லும் ‘யே மேரா இந்தியா’!

Animal Planet Special Program Yeh Mera India

இந்தியாவின் பெருமை, இன்னும் நம்மவர்களால் முழுமையாக உணரப்படாத இயற்கை வளம்... நாட்டின் பனிபடர்ந்த மலைகள், அரிய வனவிலங்குகள், பெருமை மிக்க ஆறுகள் போன்றவற்றின் அழகைப் படம்பிடிக்கும் ‘யே மேரா இந்தியா' (இது எனது இந்தியா) என்ற நிகழ்ச்சி அனிமல் ப்ளானட் தொலைக்காட்சியில் புதிதாக à®'ளிபரப்பாகி வருகிறது.

ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 66 வது சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட பாடலில் இமயம் தொடங்கி குமரி வரை வனவளமும், விலங்குகளின் உயிரோட்டமான வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மயில்களின் ஆட்டம், மான்களின் துள்ளல், சுந்தரவன காடுகளின் எழில் என à®'ரு புதிய அனுபவத்தைத் தரும் படப்பிடிப்பு. இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிரம்பி வழியும் வளங்களை இந்த நிகழ்ச்சி நம் வீட்டுக்குள் கொண்டுவருகிறது. இந்த பாடல் 3 நிமிடம் à®'ளிபரப்பாகிறது. இந்தி, தமிழ், பெங்காலி கலந்து மூன்று மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழ் பகுதியை பிரபல பாடகி மாதங்கி பாடியுள்ளார்.

"வன விலங்குகளின் மீது இயற்கையின் மீதும் அதிக ஆர்வம் உண்டு. எனவே தான் இந்த பாடலை அதிக ஆர்வத்துடன் பாடினேன்," என்கிறார் மாதங்கி.

இந்த முன்னோட்ட பாடலைக் காணும்போதே இந்த நிகழ்ச்சியை முழுதாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் அளவுக்கு நாட்டின் காமிரா படாத பல இடங்களில் உள்ள அரிய வனவிலங்குகள், அவைகளின் வாழ்க்கைச்சூழலைப் பற்றி படம்பிடித்துள்ளனர்.

இந்திய வனப்பகுதிகளில் வசிக்கும் காண்டாமிருகம், புலி, மயில் என à®'வ்வொரு விலங்கிற்கும், பறவைக்கும் à®'ரு தனித்தன்மை உண்டு. இந்த நிகழ்ச்சியில் அது தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தினசரி இரவு 8 மணிக்கு அனிமல் பிளானட் நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உண்மையிலேயே 'யே மேரா இந்தியா' என பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள் இந்தியக் குடிமகன் à®'வ்வொருவரும்!

 

இந்திய உணவகத்தில் மூக்குமுட்ட சாப்பிட்ட டாம் குரூஸ்: டிப்ஸ் மட்டும் ரூ. 6,991

Tom Cruise Enjoying Indian Curry Meals

வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் இந்திய உணவான சிக்கன் டிக்கா மசாலாவை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸிடம் இருந்து அவரது மனைவியும், நடிகையுமான கேட்டி ஹோல்ம்ஸ் அண்மையில் விவாகரத்து வாங்கினர். இந்நிலையில் புதிய படங்களில் நடிக்கும் டாம் குரூஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு ஹாலிவுட்டில் உள்ள மேடியோஸ் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். 2 நாட்கள் கழித்து லண்டன், புனித அல்பான்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய உணவான சிக்கன் டிக்கா மசாலாவை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு புனித பீட்டர் தெருவில் உள்ள இந்திய உணவகமான வீர் தாரா உணவகத்திற்கு அவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். டாம் குரூஸ் திடீர் என்று வந்ததில் அந்த உணவகத்தார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவர்கள் மீன், சிக்கன் டிக்கா மசாலா, சாதம், மட்டன், லாப்ஸ்டர் ஆகியவற்றை சாப்பிட்டனர். ரூ. 19,411.29க்கு சாப்பிட்ட அவர்கள் ரூ. 6,991 டிப்ஸ் வைத்துள்ளனர்.

 

2000 வது அத்தியாயத்தை எட்டும் ஆதவனின் அமுத கானம்!

Mega Tv Amuda Ganam Crosses 2000 Episodes

மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் அமுத கானம் நிகழ்ச்சி 2000 மாவது எபிசோடை எட்டியுள்ளது. நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக இதனை தொகுத்து வழங்கும் இயக்குநர் ஆதவனின் தொகுப்புரை பல தரப்பட்ட ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்கு பெற்றுத்தந்துள்ளது (சமயத்தில் கொஞ்சம் ஓவராகப் போனாலும்...!).

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற, காலத்தால் அழியாத, மெல்லிசைப் பாடல்களின் தொகுப்புதான். இந்த நிகழ்ச்சி மெகா டிவியில் தினமும் காலை 8 மணிமுதல் 9 மணி வரைக்கும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இரவிலும் மறு ஒளிபரப்பாகிறது.

பாடல்களை மட்டுமே ஒளிபரப்பாமல், அந்த பாடல் பற்றி சுவையான செய்திகளையும், விளக்கங்களையும் தொகுத்து வழங்குகிறார் இயக்குநர் ஆதவன்.

ஒவ்வொரு பாடல் பற்றியும் இவர் விவரிக்கும்போது அந்த பாடலுக்கான பின்னணி, அதைப் பாடியவர்கள், பாடலை எழுதியவர், படத்தின் எந்த சூழலுக்காக அந்தப் பாடல் எழுதப்பட்டது, அந்த காலகட்டத்தில் அந்தப் பாடல் ஏற்படுத்திய இசைத்திருப்பம் என அத்தனையையும் விலாவாரியாக ஆதவன் விவரிப்பதால், அந்த பாடல் பற்றிய முழு தகவலும் நேயர்களின் மனதில் இடம் பிடிப்பதோடு பாடலையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து 2000 எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது!

 

ரூ.85 லட்சம் மோசடி செய்ததாக பிரபல கதாநாயகி கைது!

Popular Actress Bhuvana Arrested Cheating Case

சென்னை: படம் தயாரிக்க சினிமா பைனான்சியரிடம் ரூ.85 லட்சம் பணத்தை வாங்கி, திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறி, 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு' படத்தின் கதாநாயகி நடிகை புவனா என்கிற புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

சென்னை விருகம்பாக்கம் வேம்புலிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 42). சினிமா பைனான்ஸ் தொழில் செய்யும் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "நான் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, சம்பூர்ணம் அம்மாள் என்பவர் தான் 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு' என்ற சினிமாப்படம் தயாரித்து வருவதாகவும், அதற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும், என்னிடம் கூறினார். அவர் சொன்ன வாக்குறுதியின் பேரில் ரூ.85.50 லட்சம் கொடுத்தேன்.

ஆனால் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்தார்கள். வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது. அந்த பணத்தைத் தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார்.

சம்பூர்ணம் அம்மாளின் மகள் புவனா என்கிற புவனேஸ்வரிதான், அந்த படத்தின் கதாநாயகியாக நடித்தார். அங்காடித்தெரு படத்தின் நாயகன் மகேஷ்தான், இந்த படத்திலும் கதாநாயகன் வேடத்தில் நடித்தார். படம் வெளியாகி நன்றாக ஓடியது. ஆனால் சம்பூர்ணம் அம்மாள் தான் சொன்ன வாக்குறுதிப்படி, அந்த படத்தின் லாபத்தில் கூட பங்குதரவில்லை.

சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புழலுக்குப் போன புவனா

நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

"சினிமா தயாரிப்பு செலவுக்காக, குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார். படம் சரியாக ஓடாததால், அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை," என்று தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஷ்வரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே சிறைக்குச் சென்றார்.

புவனா ஏற்கெனவே கார்த்திக் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

 

விஸ்வரூபம்: செப்டம்பரில் இசை... அக்டோபரில் படம் ரிலீஸ்?

சென்னை: vishwaroopam hit screens october   

Close
 
ஹாலிவுட் தயாரிப்பாளரையே அசரடித்த படம் என்பதால், தமிழ் ரசிகர்களும் அந்தப் படம் குறித்து ஆர்வம் காட்டுவது இயற்கைதானே.

ஆனால் கமலோ, இன்னும் பட வெளியீடு குறித்து எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறார். ரம்ஜான் ஸ்பெஷலாக இந்தப் படம் வரும் என்று கூறப்பட்டது.

ஆனால் ரம்ஜான் கடந்த நிலையிலும் அதுபற்றிய செய்தியில்லை.

இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

பூஜாகுமார், ஆன்ட்ரியா உள்பட மூன்று நாயகிகள் நடித்துள்ள இந்தப் படம் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த ஜூலையில் ட்ரைலர் வெளியானபோதே படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்கள். அதற்கேற்ப இரு சர்வதேச திரை விழாக்களிலும் படத்தின் முக்கிய காட்சிகள் காட்டப்பட்டன.

வரும் அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்று இப்போது தெரியவந்துள்ளது.