ரஜினிகாந்த்: தி டெபனிட்டிவ் பயோகிராபி

Rajinikanth Biography Hit The Stores This Month

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு குறித்து நமன் ராமச்சந்திரன் என்பவர் ரஜினிகாந்த்: தி டெபனிட்டிவ் பயோகிராபி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதை எழுதுவாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது கெரியர் மற்றும் சொந்த வாழ்க்கை விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவலாக உள்ளது.

இந்நிலையி்ல் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து நமன் ராமச்சந்திரன் என்பவர் ரஜினிகாந்த்: தி டெபனிட்டிவ் பயோகிராபி என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

அதற்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுக்க விரும்புவர்கள் பிலிப்கார்ட் இணையதளத்திற்கு சென்று ரூ.699 மதிப்புள்ள அந்த புத்தகத்தை 30 சதவிகித தள்ளுபடியில் ரூ.489க்கு பெறலாம். இந்த புத்தகத்தில் ரஜினி முதன் முதலாக நடித்த அபூர்வ ராகங்கள் முதல் எந்திரன் வரை அவரது திரையுலகப் பயணத்தை விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்க வரும் முன்பு சிவாஜி ராவாக இருக்கையில் பட்ட கஷ்டங்கள் முதல் சூப்பர் ஸ்டார் ஆனது வரை நமன் விவரித்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை வாங்க

 

ஒரே வீட்டுக்குள் வசித்தும் பேசாத தம்பதியர்…. பேச வைத்த நிர்மலா பெரியசாமி!

Solvathellam Unmai Bridges Couple Who Were Not Talking

"எட்டுமாசமா என்னோட மனைவி என்கூட பேசுறது இல்லை. ஒரே வீட்லதான் இருக்கோம். எதனால அவ பேச மாட்டேங்கிறான்னு தெரியலையே என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் புகார் தெரிவித்தார் கணவர்.

இதைக் கேட்ட நிர்மலா பெரியசாமி, புகார் சொன்ன கணவரிடம் ஃப்ளாஸ்பேக் கேட்டார். தங்களுடையது காதல் திருமணம் என்றும், தனக்கும் தன் மனைவிக்கும் 13 வயது வித்தியசம் என்றும் கூறினார். தன்னுடைய மனைவி தனக்கு அத்தை மகள் முறை வேண்டும் என்பதால் 10 வகுப்பு பரிட்சை எழுதி முடித்த உடனே பள்ளிக்குச் சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிரவைத்தார்.

தன் மீது விழுந்த கொலைப்பழியினால் திருமணமான சிறிதுநாட்களிலேயே சிறைக்கு சென்றுவிட்டேன் என்று கூறிய அவர், சிறையில் இருந்தவாரே தன்னுடைய மனைவியை பி.ஏ. பிஎல் படிக்க வைத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகி மனைவியுடன் சந்தோசமாக சேர்ந்து வாழத் தொடங்கினோம் என்று கூறிய அவர், தான் சிகரெட் குடிப்பது தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் தினசரி சண்டை வருகிறது. இப்போது இருவரும் பேசி எட்டு மாதங்கள் ஆகிறது என்றும் நிர்மலா பெரியசாமியிடம் கூறினார்.

உடனே மனைவியை அழைத்த நிர்மலா பெரியசாமி, கணவரிடம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டார். குழந்தை இருப்பதால் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. குடித்துவிட்டு வந்து திட்டுகிறார். அவர்தான் தன்னுடன் பேசுவதில்லை என்று கூறினார் மனைவி பாலாமணி.

இதன்பின்னர் இருவரையும் சமாதானம் செய்துவைத்து பேசவைத்தார் நிர்மலா பெரியசாமி. ஒரே வீட்டிற்குள் இருந்தும் 8 மாதங்கள் பேசாமல் இருந்துவிட்டு டிவி நிகழ்ச்சியின் மூலம் சந்தோசமாக பேசினர் தம்பதியர்.

கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற நிலையிலும் கணவன் நிச்சயம் திரும்பி வருவான் என்று காத்திருந்து வக்கீலுக்கும் படித்து முடித்துள்ளார் அந்தப் பெண். இனிமேல் நான் சிகரெட் குடிக்கமாட்டேன். மது அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்ததோடு தன் அம்மாவிற்கு ஒரு வீடும், தன் மனைவிக்கு ஒரு வீடும் கட்டப் போவதாக கூறினார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரலாற்றிலேயே கணவன் மனைவி பஞ்சாயத்து என்று வந்து யாரும், யாரையும் திட்டாமல், அடிக்காமல், அழுகையின்றி சந்தோசமாக முடிந்தது நேற்றைய நிகழ்ச்சிதான் என்று கூறவேண்டும்.

 

நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை: குஷ்பு, ஜீவா, பிரேம்ஜி வாழ்த்து

Sangeetha Krish Blessed With Baby Girl

சென்னை: பாடகர் க்ரிஷை மணந்த நடிகை சங்கீதாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

உயிர், பிதாமகன் போன்ற படங்களால் பிரபலமானவர் நடிகை சங்கீதா. அவர் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி பாடகர் க்ரிஷை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சங்கீதா கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் அறிந்த நடிகர்கள் ஜீவா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் சங்கீதா, க்ரிஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவீட்: பாடகர் க்ரிஷ் மற்றும் சனுவுக்கு குட்டி தேவதையின் வரவுக்காக வாழ்த்துக்கள். குழந்தைக்கும், தாய்க்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

வெங்கட் பிரபுவின் புதிய ஐடியா

New idea for Venkat prabhu வேட்டை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர் வெங்கட் பிரபு தாம் இயக்கம் புதிய படத்தில் ஆர்யா, விஷால், ஜெயம் ரவி மற்றும் ஜீவா ஆகிய நான்கு ஹீரோக்களையும் வைத்து இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது ஒரு நிகழ்ச்சியின் போது பிரபுவின் கூற்றை அவருக்கு நினைவு படுத்தினார். அப்போது வெங்கட் பிரபு, அவ்வாறு படம் இயக்குவதற்கு மிகப்பெரிய கால்ஷீட் தேவைப்படும், இந்த நான்கு நாயகர்களின் கால்ஷீட்டையும் ஒரு சேர பெறவேண்டும் போன்ற காரணங்கள் உள்ளதால் தாமதமாவதாக கூறினார்.

சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், உங்களது அடுத்த படம் எவ்வாறு இருக்கும் என்று கேட்டார். அப்போது வெங்கட் பிரபு, தாம் இயக்க உள்ள அடுத்த படம் மங்காத்தா மற்றும் கோவா ஆகிய இரண்டு படங்களையும் கலந்து மிக அருமையான படம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

பெண் குழந்தைக்குத் தாயானார் சங்கீதா

 Baby girl for popular actress and singe நடிகை சங்கீதாவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பிதாமகன் மற்றும் மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை சங்கீதா. இவர் நடிகர் மற்றும் பாடகரான க்ரிஷ்யை காதலித்து மணந்தார். கர்ப்பிணியாக இருந்த சங்கீதா இன்று பெண் குழந்தைக்குத் தாயானார். க்ரிஷ் மற்றும் சங்கீதா இருவரும் தங்கள் குடும்பத்திற்கு புதிய வரவாக வந்துள்ள பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

சங்கீதாவின் நெருங்கிய தோழரான ஜீவா தமது முதல் வாழ்த்துக்களை தம்பதிகளுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
 

ரஜினி பட தலைப்பு விஜய்க்கு கிடைக்குமா?

Vijay's image to get the title?  ரஜினி நடித்த 'தங்கமகன் பட டைட்டிலில் நடிக்க விரும்புகிறார் விஜய். பட டைட்டிலுக்கு அனுமதி கிடைக்குமா என்பது பற்றி விரைவில் தெரியும். 'கிரீடம் விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதன் தொடக்க விழா நடந்தது. மும்பையில் ஷூட்டிங் நடக்கிறது. இதற்கிடையில் இப்படத்துக்கு டைட்டில் வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டுடன் 20 வருடம் ஆகிறது. இதையடுத்து அதற்கு பொருத்தமாக பட டைட்டில் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கருதினார். ரஜினி நடித்த 'தங்கமகன் டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த தலைப்புக்கு அனுமதி கிடைக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏற்கனவே மலையாள 'பாடிகாட் ரீமேக்கில் விஜய் நடித்தபோது, அதற்கு எம்ஜிஆர் நடித்த 'காவல்காரன் பட பெயரை வைக்க திட்டமிடப்பட்டது. காவல்காரன் படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இதையடுத்து காவலன் என்று டைட்டில் வைத்து ரிலீஸ் செய்தனர். இப்போது விஜய் தனது புது படத்துக்கு 'தங்கமகன் என தலைப்பு வைக்க விரும்புகிறார். ஏதேச்சையாக இதுவும் சத்யா மூவிஸ் தயாரிப்புதான். ஏற்கனவே விஜய்க்கு எம்ஜிஆர் பட தலைப்பு தர அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்நிலையில் ரஜினி பட தலைப்பை விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

கிசு கிசு - நைட் பார்ட்டி வாரிசு கிளாமருக்கு தடை

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

அருந்ததி படத்துக்கு பிறகு கவர்ச்சியில் கலக்கின அனுஷ நடிகை மறுபடியும் கிளாமர் வேஷங்களுக்கு தடை போட்டிருக்காராம்... இருக்காராம்... சரித்திர பின்னணியான ஒரு கதையில் மறுபடியும் வீரமும், ஹோம்லியாவும் நடிக்க உள்ளாராம். இதுக்காக அரை வருஷத்துக்கான கால்ஷீட்டை ஒதுக்கிட்டாராம். இந்த நாட்கள்ல அசைவ உணவைகூட சாப்பிடாமல் விரதமிருக்கவும் முடிவு செஞ்சிருக்காராம்... இருக்காராம்...

அலைகள் ஓயாத நடிகர், பெல் இயக்கத்தோட படத்துல தன்னோட வாரிசு நடிக்க¤றதால எந்த கவலையும் இல்லாம இருந்தாராம்... இருந்தாராம்... ஷூட்டிங்குக்கு எங்க போனே, எப்போ வந்தேன்னும் கேக்குறதில்லையாம். எல்லாத்துக்கும் காரணம் பெல் இயக்கத்து மேல வச்சிருக்கற நம்பிக்கைதானாம்... நம்பிக்கைதானாம்... ஆனா அதை பயன்படுத்தி, நைட் பார்ட்டிகள்ல வாரிசு அதிகம் வலம் வர்றாராம்... வர்றாராம்...

லவ் இயக்கம் இயக்கிய வழக்கு படத்துல நடிச்ச மனிஷ நடிகைக்கு பெரிசா வாய்ப்பில்லையாம்... இல்லையாம்... காத்திருந்து பாத்த நடிகை ரொம்பவே வெசனத்துல இருந்தாராம். அந்த நேரம்பாத்து மாயண்ட பேம¤லி இயக்கம் நடிகைய கூப்பிட்டனுப்பினாராம். குஷியோட ஷூட்டிங்போன நடிகைக்கு ஒரே அழுகாச்சி வேடமாம். தொடர்ச்சியா அழுதுகிட்ட இருந்த நடிகை இனிமே என்னால அழமுடியாது. பப்ளியான கேரக்டர் இருந்தா சொல்லுங்கன்னு எஸ்கேப் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...
 

சிவாஜி 3டி படம் ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசு: ரஜினி பேச்சு

My birthday gift for his 3-D movie for my fans: Rajini வரும் 12ம் தேதி ரிலீசாகும் 'சிவாஜி' 3டி படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக அமையும் என்று ரஜினி பேசினார்.

2007ல் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம், 'சிவாஜி'. ரஜினி, ஸ்ரேயா நடித்தனர். இப்போது அப்படத்தை 3டியில் மாற்றி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், வரும் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியிட உள்ளனர். இதன் அறிமுக விழா நேற்று நடந்தது.

அப்போது வீடியோவில் தோன்றிய ரஜினி பேசியதாவது: நான் ஊரில் இல்லாததால், இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. 'சிவாஜி' படம் எவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு, எவ்வளவு பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது என்று ரசிகர்களுக்குத் தெரியும்.

இப்போது அந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிட உள்ளனர். பிரமாண்டத்துக்கு பிரமாண்டமாக 3டியில் மாற்ற அதிக செலவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய பிரமாண்டத்துக்கு ஆன செலவை வைத்து, புதிதாக 2 படங்களை தயாரித்திருக்க முடியும்.

ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் 'சிவாஜி' 3டி படத்தை நூறு மடங்கு பிரமாண்டமாக உருவாக்கி, அதை வரும் 12ம் தேதி வெளியிடுகின்றனர். இது ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக அமையும் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஏ.வி.எம் நிறுவனத்தாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, இப்படம் மிகப் பெரிய வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன், டைரக்டர்கள் ஷங்கர், எஸ்.பி.முத்துராமன்,  கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து, சுமன், ஜெயேந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

இந்தி நடிகையை ஓரம்கட்ட காஜல் அகர்வால் தீவிர முயற்சி

Kajal Agarwal serious effort to defeat Hindi actress   Chennai: முருகதாஸ் இந்தியில் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடிக்க காஜல், பிரணிதிக்கு இடையே போட்டி நிலவுகிறது. விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'துப்பாக்கி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தை இந்தியில் இயக்க உள்ளார் முருகதாஸ். அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க பிரணிதி சோப்ராவிடம் தயாரிப்பாளர்கள் பேசி வந்தனர். ஆனால் தமிழில் நடித்த காஜல் அகர்வால் இந்தி ரீமேக்கிலும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முருகதாஸ் எண்ணினார். நிஷா என்ற பாத்திரத்தில் மிகையில்லாமல் காஜல் நடித்திருந்ததால் இந்தியிலும் அவரை நடிக்க அவர் தரப்பில் பேசப்பட்டது.

ஏற்கனவே அக்ஷய் குமாருடன் இந்தி படத்தில் காஜல் ஜோடியாக நடித்திருக்கிறார். இதுவும் அவருக்கு பிளஸ் ஆக உள்ளது. இது பற்றி காஜல் தரப்பில் கேட்டபோது, 'இயக்குனர் முருகதாஸிடம் இந்தியில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குள் இதுபற்றி முடிவாகும். அப்படி உறுதியானால் இந்தியில் காஜல் நடிக்கும் அடுத்த பெரிய படமாக இது இருக்கும் என்றனர். பிரணிதியை ஓரம்கட்டிவிட்டு இப்பட வாய்ப்பை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம் காஜல். இதற்கிடையில் ஷாஹித் கபூர் நடிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க காஜலிடம் பேச்சு நடக்கிறது. இதிலும் நடிக்க முடிவானால் அவரது முழுகவனமும் பாலிவுட் பக்கம் திரும்பும் என்று தெரிகிறது.
 

சுவாதி படத்துக்கு பிரச்னை : வழக்கு தொடர திடீர் முடிவு

Problem for Swathi : sudden decision to proceed with the case சுவாதி நடிக்கும் மலையாள படத்துக்கு பிரச்னை எழுந்துள்ளது. அப்படம் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 'சுப்ரமணியபுரம், 'போராளி படங்களில் நடித்தவர் சுவாதி. இவர் மலையாளத்தில் 'ஆமெனÕ என்ற படத்தில் நடித்துள்ளார். லிஜோ ஜோஸ் இயக்குகிறார். இப்படம் மீது மலையாள கதாசிரியர் தேவசிகுட்டி வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர் பிரதீப் மேனன் என்பவர் என்னை அணுகி நான் எழுதிய அலதாரபூக்கள் என்ற நாவலை படமாக்க வேண்டும் என்றார்.

பின்னர் அந்த பேச்சுவார்த்தை தொடரவில்லை. சமீபத்தில்தான் 'ஆமென் என்ற படம் நான் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்பதை அறிந்தேன். சர்ச் பின்னணியில் நான் அமைத்த அதே கதாபாத்திரங்களின் சாயலில் இப்பட கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது என்னுடைய நாவலை தழுவிய படம்தான். ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றி எனது வக்கீலிடம் பேசி வருகிறேன்.

தேவைப்பட்டால்  'ஆமென் படத்தின் காப்பி ரைட்டை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றார். இது பற்றி படத்தின் கதாசிரியர் ரபீக் கூறும்போது, ஆமென் டைரக்டர் லிஜோவுக்கு மலையாளம் படிக்கத் தெரியாது. அவர் எப்படி நாவலை படித்திருப்பார். 3 வருடத்துக்கு முன்பே இக்கதை பற்றி என்னிடம் லிஜோ ஆலோசித்தார். அப்போதிருந்தே இதை படமாக்குவதற்கான பணியை தொடங்கிவிட்டோம். தேவசிகுட்டி பற்றியோ அவர் எழுதிய நாவலைப்பற்றியோ நான் கேள்விப்பட்டதே கிடையாது என்றார்.
 

கலாநிதிமாறன் மீது இயக்குனர் சக்தி சிதம்பரம் ரூ.10 கோடி மோசடி புகார்

Director Sakthi Chidambaram Gives Complaint

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் மீது இயக்குனர் சக்தி சிதம்பரம் ரூ.10 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த காவலன் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை நான் பெற்றேன். அதில் செங்கல்பட்டு ஏரியா உரிமையை சன் குழுமத்தினர் வாங்கினர். இந்த வகையில் சன் குழுமத்தினர் எனக்கு தர வேண்டிய ஆறே முக்கால் கோடி ரூபாயை தர வேண்டும். ஆனால் தரவில்லை.

உரிமம் பெற்ற வகையில் எனக்கு சன் குழுமத்தினர் ஆறே முக்கால் கோடி ரூபாய் தர வேண்டும். வட்டியுடன் சேர்த்து ரூ.10 கோடி தர வேண்டும். அவர்களால் எனது தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய்விட்டன.

இதற்கு காரணமான சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதிமாறன், கண்ணன், ஆர்.எம்.ரமேஷ், செந்தில் ஆகியோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சன் குழுமம் திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இவர்களால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சன் தொலைக்காட்சிக்கு மட்டும் உரிமம் பெற்றுவிட்டு அவர்களது அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் என் படத்தை ஒளிபரப்பி வருகின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

சிவாஜி 3 டி... ரசிகர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசு! - சூப்பர் ஸ்டார்

Sivaji 3 D Is My Birthday Gift My Fans Says Superstar

சிவாஜியை விட 100 மடங்கு பிரமாண்டத்துடன் சிவாஜி 3 டி தயாராகியுள்ளது. இந்தப் படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக வருகிற 12-ந் தேதி வெளிவருகிறது, என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வெளிவந்த மிகப் பெரிய வெற்றிப் படம், ‘சிவாஜி.'

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் வெளியானது. இப்போது இந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் சேர்ந்து, பல கோடி ரூபாய் செலவில், ‘3டி டால்பி அட்மாஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள். டால்பி அட்மோஸ் ஒலியுடன் வெளியாகும் இந்தியாவின் முதல் படம் இது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12-12-2012 அன்று படம் வெளிவர இருக்கிறது.

வீடியோவில் தோன்றிய சூப்பர் ஸ்டார்

‘சிவாஜி 3டி' படத்தின் 2 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை சென்னை சத்யம் தியேட்டரில், செய்தியாளர்களுக்காக நேற்று இரவு திரையிட்டு காண்பித்தார்கள்.

முன்னதாக, வீடியோவில் ரஜினிகாந்த் தோன்றிப் பேசினார்.

அதில், ‘‘நான் இப்போது ஊரில் இல்லை. வெளியூரில் இருக்கிறேன். ‘சிவாஜி' படத்தை ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது.

இப்போது அந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் இணைந்து பிரமாண்டமாக செலவு செய்து 3டி படமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த செலவில், 3 புதிய படங்களே எடுத்து விடலாம். ‘சிவாஜி 3டி' படத்தை நான் பார்த்தேன். பிரமாதமாக இருக்கிறது. சிவாஜியை விட 100 மடங்கு பிரமாண்டம் இதில் தெரிகிறது. இதை என் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அளிக்கிறது. அதற்காக, ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.

 

சின்னத்திரையில் மீண்டும் சூர்யா

Surya on TV again நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.

சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.

இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்!