பிரியாணியை மாற்றியதால் விலகினாராம் ரிச்சா

பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.

சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.

richa on briyani confusion   
Close
 
ஆனால் தன்னிடம் சொன்ன கதையில் இயக்குநர் மாற்றம் செய்ததால்தான் அதிருப்தியடைந்து அவராகவே வெளியேறி விட்டாராம் ரிச்சா. இதை அவரே தனது ட்விட்டரில் சொல்லியுள்ளார்.

இதுகுறித்து ரிச்சா கூறுகையில், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், எனது கதாப்பாத்திரத்தின் அழுத்தம் குறைந்துவிட்டது. இதனால்தான் இந்த படத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். இதனை இயக்குநர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரிச்சா..

இருந்தாலும் எதிர்காலத்தில் தன்னை வெங்கட் பிரபு தனது புதிய படத்தில் நடிக்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரிச்சா.

 

பின்னணி பாடகியாக மாறிய காவ்யா மாதவன்!

Kavya Madhavan Turns Singer   

மலையாளப் படங்களில் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் காவ்யா மாதவன்.

மலையாளத்தில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் காவ்யா மாதவன். தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டால் என சில படங்களில் நடித்துள்ளார்.

2009-ல் அவருக்கு திருமணம் நடந்தது. இரண்டு வருடங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து விட்டார்.

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார். மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளப் படம் ஒன்றில் பின்னணி பாடகியாகவும் காவ்யா மாதவன் அறிமுகமாகிறார். இந்தப் பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவிப்பதால், தொடர்ந்து படங்களில் பாட முடிவு செய்துள்ளார்.

 

கோலிவுட்டில் அறிமுகமாகும் பாலிவுட் மாடல் அழகி

Bollywood model's debut in Kollywood

சென்னை: 'பார்வை ஒன்றே போதுமே, 'பேசாத கண்ணும் பேசுமே, 'பலம் ஆகிய படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கும் படம் 'துட்டுÕ. இது பற்றி அவர் கூறியதாவது: பலரது வாழ்வில் கந்துவட்டியின் கொடுமை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. ஏழ்மையை சமாளிக்க கந்து வட்டிக்கு பணம் வாங்கி அதை கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்கள் பலர். அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன், காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியன் ராஜேஷ் ஹீரோ. மும்பை மாடல் அழகி சோனா சோப்ரா ஹீரோயின். சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்குவதோடு பாடல் எழுதி இசை அமைக்கிறேன். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவிலும் ஷூட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு கோபால்ஜி. ஒளிப்பதிவு ராஜராஜன். இவ்வாறு முரளி கிருஷ்ணா கூறினார்.
 

கந்துவட்டி கொடுமை படம் துட்டு

Horrible film usury, money

ஸ்ரீசாய் சினி சர்க்யூட் சார்பில் கோபால்ஜி தயாரிக்கும் படம் 'துட்டு'. ஆர்யன் ராஜேஷ், சோனா சோப்ரா ஜோடி. ஒளிப்பதிவு, ராஜராஜன். இசையமைத்து முரளி கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தின் பாடல் சி.டி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது படம் குறித்து முரளி கிருஷ்ணா கூறியதாவது:

தற்போது நம் நாட்டில் அதிகம் வெளியில் தெரியாத ஒரே பிரச்னை, கந்துவட்டி. இங்குதான் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்கிறது. பணக்காரர்கள், மக்களின் பணத்தை வங்கிக் கடனாக வாங்கி திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். அதே பணக்காரர்களும், தாதாக்களும் ஏழைகளுக்கு அவசர செலவுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையையே நாசமாக்குகின்றனர். கந்துவட்டிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களும் செயல்படவில்லை. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கந்துவட்டி தொழிலிலுள்ள ரகசியங்கள், அந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் பின்னணியை நேரில் சென்று ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கந்துவட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருந்தாலும், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
 

கிசு கிசு - கோடம்பாக்கம் கோடங்கி

Kodambakkam kodangi

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

ஹீரோவா நடிச்சப்போ நவரச ஆக்டர் இயக்கத்துக்கும், தயாரிப்புக்கும் நெறய தண்ணி காட்டினாராம்... காட்டினாராம்... இப்ப அவரது வாரிசு படத்துல அறிமுகமாகுறாரு. 'டாடி மாதிரி லந்து பண்ணாம இருந்தா நீ பெரிய நடிகரா ஆயிடலாம்னு சிலர் அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம். அவரும் அத காதுல வாங்கி மனசுல வச்சிக்கிட்டாராம். இதுக்கிடைல வாரிசோட கால்ஷீட் கேட்டு நெறய தயாரிப்புங்க டாடிய ரவுண்டு கட்றாங்களாம். 'கண்டிப்பா பண்ணிடுவோம், கால்ஷீட் கொடுத்திடுவோம்னு எல்லார்கிட்டேயும் டாடி சொல்றாராம். வாரிசை கொஞ்சம் பாக்குறோமேன்னு தயாரிப்புங்க கேட்டா, பெல் இயக்கம் தடை போட்டு இருக்கிறதால வாரிசை பார்க்கவிடாம டாடி நடிகரு தடுக்குறாராம்... தடுக்குறாராம்...

அனுஷ்கமான ஹீரோயின் வழக்கமா ஷூட்டிங் முடிஞ்சதும் கூட ஒர்க் பண்ணின மேக்கப் மேன் உள்ளிட்டவங்களுக்கு கிப்ட் தருவாராம்... தருவாராம்... சமீபத்துல மேக்கப் மேன் விவகாரத்துல  சங்கத்துக்காரங்க பிரச்னை பண்ணதால மனசொடிஞ்சிட்டாராம். செல்வ இயக்கம் படத்துல நடிச்சி முடிச்சப்ப¤றகு வழக்கமா தர்ற கிப்ட் யாருக்கும் வாங்கி தரலயாம். இதால மேக்கப் மேன் உள்ளிட்ட ஊழியருங்க ஏமாந்துட்டாங்களாம்... ஏமாந்துட்டாங்களாம்...

விரல் நடிகர், த்ரி நடிகர்னு போட்டி நடிகர்கள்கூட ஜோடி போட்ட ரிச்சான ஹீரோயின் எதிர்பார்ப்பு டமாலாயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... வாய்ப்பு வர்ற மாதிரி வந்து வேற ஹீரோயினுக்கு மாறிடுதாம். கோலிவுட்ல் டமாலானாலும் டோலிவுட் கைகொடுக்குதாம். அத டவலப் பண்ண கிளாமர் கோதாவுல இறங்கிட்டாராம். இதனால தன்னோட மார்க்கெட் நிலவரம் டாப்புக்கு போகும்னு நம்பிட்டிருக்காராம்... இருக்காராம்...
 

மாதவனும் மலர்விழியும்

Malarvizhi with Madhavan

கிரிஜா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கும் படம், 'மாதவனும் மலர்விழியும்'. அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, நித்யா. இசை, வசந்தமணி. பாடல்கள், ரவீந்திரன். எழுதி, இயக்கும் மாசில் கூறும்போது, 'காதலில் வென்று வாழ்க்கையில் இணைந்த பரத நாட்டிய தம்பதிகள், எதிர்பாராவிதமாக பிரிகின்றனர். பரதமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் அவள், ஆண் துணையில்லாமல் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறாள்? அதிலிருந்து அவள் மீண்டாளா என்பது கதை' என்றார்.
 

மலையாள படங்களில் நடிக்க மறுத்தேன் : சுவாதி பேட்டி

Refused to act in Malayalam films: Swathi interview

சென்னை: 'மலையாள படங்களில் நடிக்க மறுத்தது உண்மைதான் என்றார் சுவாதி. இது பற்றி 'சுப்ரமணியபுரம் பட ஹீரோயின் சுவாதி கூறியதாவது: சுப்பிரமணியபுரம் படத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் மொழி தெரியாத காரணத்தால் ஏற்கவில்லை. ஆனால் இயக்குனர் லிஜோ 'ஆமென் படத்தில் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை. மலையாள கிறிஸ்தவ பெண்ணாக இதில் நடிப்பது ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.  முண்டு கட்டி நடிப்பது புது அனுபவம். இந்த வார்த்தையை சரியாக சொல்வதற்கே எனக்கு ஒரு நாள் ஆனது. தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

'சிட்டி ஆப் காட் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒரு வருடத்துக்கு முன்பே என்னிடம் லிஜோ கேட்டிருந்தார். ஆனால் 'சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த அதே வேடம் போல் இருந்ததால் நடிக்கவில்லை. 'ஆமென் படத்தில் நடிக்க கேட்டு என்னிடம் இயக்குனர் அணுகியபோது இதுவரை நான் ஏற்காத பாத்திரம் என்பதை தெளிவாக குறிப்பிட்டார். அவர் கொடுத்த ஊக்கத்தின்பேரில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மலையாள கலாசாரம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ளவர்கள் கடின உழைப்பாளிகள். இளைய மற்றும் புதிய திறமைசாலிகள் கொண்ட இண்டஸ்ட்ரி. அங்குள்ளவர்கள் என்னை எளிதாக அடையாளம் கண்டுகொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது. தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதுபற்றி 'ஆமென் ரிலீஸ் வரவேற்பை பொறுத்து முடிவு செய்வேன்.
 

தீபாவளி ரிலீஸ் படங்கள் திடீர் இழுபறி

New Release Movies sudden tug

சென்னை: தீபாவளி ரிலீஸ் படங்களில் இழுபறி நீடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பல படங்கள் திரைக்கு வரும் என்ற நிலை சில வாரங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது அதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. விஜய் நடித்துள்ள 'துப்பாக்கிÕ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் இப்படம் சம்பந்தமான சில பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார்.

பிரச்னைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு 3 தினத்துக்கு முன்னதாகவே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்பு நடித்துள்ள 'போடா போடி படமும் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'கும்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய  திட்டமிடப்பட்டது. தற்போது டிசம்பர் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு, சுனேனா நடித்திருக்கும் 'நீர்ப்பறவை தீபாவளி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 'தீபாவளிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

2 பெரிய படங்கள் ஒரு சிறுபட்ஜெட் படம் ரிலீஸ் ஆனால் பொருத்தமாக இருக்கும். துப்பாக்கி, போடா போடி படத்துக்கு தியேட்டர்கள் புக் செய்யும் பணி தொடங்கிவிட்டது. தங்கர்பச்சான் இயக்கியுள்ள 'அம்மாவின் கைபேசி படத்துக்கு தியேட்டர் புக் செய்யும் வேலை தொடங்கவில்லை. தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் மன்சூர் அலிகானின் 'லொள்ளு தாதா பராக் பராக் படம் ரிலீஸ் ஆகலாம். இது தவிர இந்தியில் ஷாருக்கான் நடித்த யஷ் சோப்ராவின் 'ஜப் தக் ஹே ஜான், அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சன் ஆஃப் சர்தார் படங்களும் ரிலீஸ் ஆகிறது என்று தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரஜினி, கமல், அஜீத் படங்கள் தீபாவளி ரிலீஸ் இல்லை.
 

தமிழில் தயாராகும் 3டி பேய் படம்

First 3D Tamil ghost film

நேக் ஸ்டூடியோ நிறுவனம் தமிழ், மலையாளத்தில் தயாரிக்கும் படம் 'ராட்சசி'. ரூபேஷ் பால் இயக்குகிறார். 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட ஒளிப்பதிவாளர் கே.பி.நம்பியாத்ரி ஒளிப்பதிவு செய்கிறார். முகமது அலி இசை. சன்னி, அனன்யா நடிக்கிறார்கள். இதில் அனன்யா ரத்தக் காட்டேரியாக நடிக்கிறார். அடர்ந்த காட்டில் இருக்கும் ரிசாட்டுக்கு சுற்றுலா செல்லும் குடும்பம் சந்திக்கும் பயங்கர அனுபவங்களே படம். நவீன தொழில்நுட்பங்களுடன் 3டி யில் தயாராகிறது. மலையாளத்தில் 'ரத்த ராட்சசு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் வெளிவருகிறது.
 

திருவாசகம் என்ன கதை?

What is the story of thiruvasagam?

'ஆல்பம்' ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் நடிக்கும் படம், 'திருவாசகம்'. படத்தை இயக்கும் ஏ.கே.மைக்கேல் கூறியதாவது: கும்பகோணம் வரும் தொழிலதிபர் மகள் சரண்யாவும், முரட்டு சுபாவம் கொண்ட ஆர்யன் ராஜேஷும் காதலிக்கின்றனர். அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது கதை. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற கூற்றுக்கு ஏற்ப, இதிலுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதை உருக்கும். தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
 

மொட்டை காட்சிக்காக நடிக்க மறுத்த நடிகைகள்

Shaved refused to play for the scene actresses

ஸ்ரீசிவசக்தி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஹேமந்த் குமார், நிஜாம் தயாரிக்கும் படம், 'ராஜி இவள் ஒரு புதுமைப்பெண்'. ராஜ்குமார், உமாஸ்ரீ, குமரிமுத்து அண்ணன் மகன் ராகவன், சபீதா ஆனந்த், அப்பு, கன்னட வில்லன் ஜேசுதாஸ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, குமரன்.ஜி. இசை, எம்.பீட்டர் ஜோசப். பாடல்கள், தர்மபுரி சோமு. கிருஷ்ணகிரி அசோக்.ஜி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: அம்மாவோ, அப்பாவோ இறந்துவிட்டால், ஆண்கள்தான் கொள்ளிபோடுவார்கள்.

ஆனால், தன் தாய்  இறந்தபின், ஊராரின் எதிர்ப்பை மீறி சுடுகாட்டுக்கு செல்லும் ஹீரோயின், இறுதிச்சடங்கு செய்து அம்மாவுக்கு கொள்ளிபோடுகிறார். இந்தக் காட்சியில் நடிக்க மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னதற்காக நிறைய ஹீரோயின்கள் நடிக்க மறுத்தனர். பிறகு 'லொள்ளு தாதா பராக் பராக்' உமாஸ்ரீயிடம் கேட்டபோது சம்மதித்தார்.
 

தமிழ் சினிமாவில் மிஸ் லண்டன்

Miss London in Tamil cinema

வாஸ்த் இனோவேஷன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'விண்ணைத்தொடு'. தேஜ் ஹீரோ. 2009ம் ஆண்டு மிஸ் யு.கே பட்டம் வென்ற சமீரா ஹீரோயின். நாகேஷ் ஆச்சார்யா ஒளிப்பதிவு. வீர் சமர்த் இசை. படம் பற்றி இயக்குனர் விஜய் கூறியதாவது:

இந்திய கலாசாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும், வெளிநாட்டு கலாசாரத்தில் வாழ்ந்த பெண்ணுக்கும் இடையே காதல். இதில் அவர்களுக்கிடையே வரும் மோதல், யார் கலாசாரம் பெஸ்ட் என்பதுதான். தங்களோடதுதான் பெஸ்ட் என்பதை நிரூபிக்க, அவர்கள் என்ன செய்கிறார்கள்? யார் ஜெயிக்கிறார்கள் என்பது கதை. இதற்காக மிஸ் யு.கே சமீராவை தேடிப்பிடித்து நடிக்க வைத்தோம்.
 

அமிதாப்பச்சனுக்கு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது

Amitabh bachan

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அமிதாப்பச்சனுக்கு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார் என்று கலர்ஸ் டிவி மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியது. இதில் பெருவாரியான மக்கள் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப் பச்சனை சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

கோன் பனேகா குரோர்பதி சீசன் 1 நிகழ்ச்சி கடந்த 2000மாவது ஆண்டு ஒளிபரப்பானது இதுவரை 5 சீசன் முடிந்து 6 சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவருகிறது. 6ல் 5 சீசன் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார். சீசன் 3 மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார்.

நன்றி கூறிய அமிதாப் சிறந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன்னை தேர்ந்தெடுத்த ரசிகர்களுக்கு அமிதாப்பச்சன் டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார். தனக்கு ஓட்டளித்து தேர்வு செய்த ரசிகர்களுக்கு நன்றி என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

வயசானலும் 'பிக் பி' தான் இன்னமும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிருபித்து வருகிறார்.
 

'ஒரே ஒரு ரசிகன் எனக்காக வந்தாலும்...!' - அதான் ராஜா

Ilayaraja Firm On His Stand Conduct

கனடாவில் என்னைக் காண à®'ரே à®'ரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா.

ஆனால் ஈழத் தமிழர்களின் துக்க மாதம் நவம்பர். அந்த மாதத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என புதிதாகப் புறப்பட்டிருக்கும் சில திடீர் உணர்வாளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களும், எதிராக à®'ரு சிறு குழுவும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலை. ஆனாலும் டிக்கெட் வாங்கியவர்களைப் போகவிடாமல் தடுக்க சிலர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்றும், தன் நிலையில் மாற்றமில்லை என்பதையும் உணர்த்தும் வகையில் à®'ரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

அதில், "கடல் கடந்து கனடா நாட்டுக்கு உங்களைக் காண வரும் எனக்காக à®'ரே à®'ரு ரசிகன் அரங்கத்தில் இருந்தாலும், அந்த ரசிகன் எழுந்து போகும் வரை, அவன் ஐந்து மணி நேரம் காத்திருந்தால், அவனுக்காக நான் அந்த ஐந்து மணிநேரமும் இசை நிகழ்ச்சி நடத்துவேன்," என்று கூறியுள்ளார்.

 

அமிதாப்பச்சனுக்கு சிறந்த டிவி நிகழ்ச்சிச் தொகுப்பாளர் விருது

Amitabh Bachchan Receives Best Tv Award Kbc

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அமிதாப்பச்சனுக்கு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார் என்று கலர்ஸ் டிவி மக்களிடம் à®"ட்டெடுப்பு நடத்தியது. இதில் பெருவாரியான மக்கள் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப் பச்சனை சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

கோன் பனேகா குரோர்பதி சீசன் 1 நிகழ்ச்சி கடந்த 2000மாவது ஆண்டு à®'ளிபரப்பானது இதுவரை 5 சீசன் முடிந்து 6 சீசன் கடந்த சில மாதங்களாக à®'ளிபரப்பாகிவருகிறது. 6ல் 5 சீசன் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார். சீசன் 3 மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார்.

நன்றி கூறிய அமிதாப் சிறந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன்னை தேர்ந்தெடுத்த ரசிகர்களுக்கு அமிதாப்பச்சன் டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார். தனக்கு à®"ட்டளித்து தேர்வு செய்த ரசிகர்களுக்கு நன்றி என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

வயசானலும் ‘பிக் பி' தான் இன்னமும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிருபித்து வருகிறார்.

 

ப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்!

Sun Express Reality Show Gives Sweet

சன் டிவியில் à®'ளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை கொடுத்து அசத்துகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி பிரபலமாகத் தொடங்கியுள்ளது.

நம் வீட்டில் ரிப்பேராக உள்ள பழைய பொருட்களை மாற்றவேண்டுமா? கடை கடையாக ஏறி அதை எக்சேஞ்ச் ஆபரில் மாற்றிக்கொண்டு வருவோம். ஆனால் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் அவர்களே நம் வீடு தேடி வந்து நமக்கும் தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். பொருளை வாங்குபவர்கள் செய்யவேண்டியது à®'ன்றே à®'ன்றுதான். சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிச் தொகுப்பாளர் தீபக் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் போதும் அவர்களுக்கான பொருள் பரிசாக கிடைத்துவிடும்.

இந்த வாரம் சன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்காக தீபக் சென்றது வேலூர். வேலூர் கல்லூரி மாணவர்களிடம் விளையாடிய தீபக் ஸ்மார்ட் போனை வைத்து எக்ஸ்பிரஸ் ரவுண்டை விளையாடினார். தீபக் கேட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விக்கு சரியான பதிலை கூறி ஸ்மார்ட் போனை ஜெயித்தார் மாணவர் கதிரவன்.

அதேபோல் வேலூரைச் சேர்ந்த சலீம் பாஷா வீட்டிற்கு சென்றது சன் எக்ஸ்ப்ரஸ். தீபக், முதலில் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி ஃப்ரிட்ஜ், சைக்கிளை பரிசாக பெற்றார். அதேபோல் மற்றொரு குடும்பத் தலைவி சரியான பதிலைச் சொல்லி எல்.சி.டி கலர்டிவியை பரிசாக பெற்றார். ஆனால், மற்றொரு கேள்விக்கு தவறான பதிலை கூறியதால் ஏ.சி. மெசினை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டனர்.

அது சரி தீபக் பின்னாடி நிற்கிற பீம்பாய்கள் ஏன் சிரிக்கவே மாட்டேங்கிறாங்க. ஜோக் அடிச்சா கூட சிரிக்க கூடாதுன்னு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்காங்களா என்ன?

வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு à®'ளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிச்சயம் à®'ரு மாற்றத்தை தரும் நிகழ்ச்சிதான் என்கின்றனர் ரசிகர்கள்.

 

3டி காமசூத்ரா படத்தில் ஷெர்லின் சோப்ரா!

டெல்லி: மாடலாக இருந்து நடிகையாகி, இப்போது அடுத்தடுத்து ஆபாசம், நிர்வாணம் என்று அதகளம் செய்து வரும் நடிகைsherlyn chopra star kamasutra 3d   

Close
 
தொடர்ந்து தனது பிளாக் மற்றும் டிவிட்டரில் நிர்வாண போஸ், குண்டக்க மண்டக்க போஸ் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

இது கற்பனை காமசூத்ரா கதை இல்லையாம். வாத்ஸயனர் எழுதிய à®'ரிஜினல் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ளதை அப்படியே படமாக்கப் போகிறாராம் சோப்ரா. அதை 3டி வடிவில் தரப் போகிறாராம்.

கேன்ஸ் பட விழாவின்போது இதுதொடர்பான அறிவிப்பை பால் வெளியிட்டார். இவர் ஏற்கனவே செயின்ட் டிராகுலா 3டி படத்தை இயக்கியவர்.

ஏற்கனவே மீரா நாயர் காமசூத்ராவை அடிப்படையாக வைத்து à®'ரு படம் இயக்கியுள்ளார். அதை ஷெர்லின் மிஞ்சுவாரா என்பது படத்தைப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். இருந்தாலும் இந்த 3டி காமசூத்ரா நிச்சயம் வெள்ளித் திரைகளை சுட்டெரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

 

நம்பிக்கையில்லா தீர்மானம்: பெட்டிக்கு சீல் வைப்பு

No-confidence motion: Seal deposit box

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று காலை சென்னை வடபழனி 100 அடி சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் இருக்கிறார். அவரது தலைமையிலான அணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கேயார் தலைமையில் உருவான எதிரணியினர் முடிவு செய்தனர்.

 சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த தடை கேட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றனர். அந்த தடையை விலக்க வேண்டும் என்று, கேயார் அணியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தடை விலக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் மேற்பார்வையில், சிறப்பு பொதுக்குழு கூட்டலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, கேயார் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுடன் சேர்த்து 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் மீது கேயார் அணியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதை ஆதரித்தும், எதிர்த்தும் இருதரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டம் நடந்த அரங்கில் பத்திரிகை மற்றும் போட்டோகிராபர்கள், டி.வி கேமராக்கள் அனுமதிக்கப்படவில்லை.

  இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது ஒருசில மீடியாக்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அரங்கையும், ஓட்டலையும் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை உள்ளே அனுமதித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாக்கெடுப்பு நடத்துவதாக குற்றம் சாட்டி, அவரது அணியை சேர்ந்தவர்கள் அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான அணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து பெட்டியில் போட்டனர்.

'70 சதவீதம் போலி உறுப்பினர்கள்'

நிருபர்களிடம் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், 'இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு மேல் போலி உறுப்பினர்கள். 25 சதவீதம் பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். உடனே இதை நீதிபதியிடம் சொன்னோம்.  இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடருவோம்' என்றார். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை சேர்ந்தவர்கள், ஓட்டல் முன் நின்று, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கோஷம் எழுப்பினர்.

புதிய நிர்வாகிகள் தேர்தல்...

நிருபர்களிடம் பேசிய கேயார், 'கோர்ட்டில் முடிவு அறிவிக்கப்பட்டதும், இதுகுறித்து சங்க பதிவாளரிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். பிறகு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

ரிசல்ட் எப்போது?

மேற்பார்வையிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனிடம் நிருபர்கள் கேட்டபோது, '12.30 மணி நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் வாக்களித்துள்ளனர். சீல் வைக்கப்பட்ட இந்த பெட்டி, நாளை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். விசாரணைக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்படும்' என்றார்.
 

சம்பள பிரச்னையால் ரஜினியை பிரிந்தேன்: கமல்ஹாசன் பேட்டி

The Rajinikanth've wage issue: Interview with Kamal Haasan

ரஜினியுடன் சேர்ந்து நடிக்காததற்கு சம்பள பிரச்னையே காரணம் என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.
'16 வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவள் அப்படித்தான்', 'அவர்கள்', 'ஆடு புலி ஆட்டம்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'தாயில்லாமல் நானில்லை', 'நினைத்தாலே இனிக்கும்', அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'தில்லுமுல்லு' உள்பட 15-க்கும் அதிகமான படங்களில் கமல், ரஜினி இணைந்து நடித்தனர். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்காமல் பிரிந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முயன்றும் முடியவில்லை.

இந்நிலையில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் கமல் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது, ''ஆரம்ப கால கட்டங்களில் எனக்கும் ரஜினிக்கும் இடையே ஈகோ இருந்தது. இதை உணர்ந்த எங்களது குரு பாலசந்தர், இருவருக்கும் அறிவுரை கூறினார். அதை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்குள் இருந்த ஈகோ மறைந்து நட்பு ஏற்பட்டது. ஆனாலும் எங்களுக்குள் சத்தமே இல்லாமல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். இனி இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதில்லை என்பதே அது. அதற்கு காரணம் ஒன்றாக நடிக்கும்போது எங்களது சம்பளம் இரண்டாக பிரிக்கப்படுவதுதான். இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கியதும் எங்களது சம்பளம் இரு மடங்கானது மட்டுமல்லாமல், இருவரும் அந்த சம்பளத்துக்கு உரிய தகுதி உடையவர்கள்தான் என்பதை நிரூபிக்க முடிந்தது. இது நடைமுறைக்கு உகந்த சரியான முடிவாக இருந்தது. இருவருமே வியாபார நோக்குடனே இருந்த நேரம் அது'' என்றார்.
 

நீயா? நானா?: அரசு கல்லூரி மாணவர்களின் வன்முறைக்கு காரணம் என்ன?

Govt Arts College Students Vs Genereral Public

அரசு கல்லூரி மாணவர்களைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு என்று என்று அச்சப்படுகின்றனர் பொதுமக்கள் தரப்பினர். அந்த பயம் இருக்கணும்! அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்கிறது மாணவர் தரப்பு.

இது ஞாயிறன்று ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியின் சூடான விவாதம்.

அரசு கல்லூரி மாணவர்களின் வன்முறை அதிகமாகிவிட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. ஆனால் நாங்கள் படிக்கிற காலத்தில்தான் இதை எல்லாம் செய்யமுடியும். அதை பொதுமக்கள் பெரிது படுத்துகின்றனர் என்று கூறினர் மாணவர் தரப்பினர். கல்லூரி நடத்தும் தலைவர்கள் சரியாக இல்லை. அதனால் மாணவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர். எங்களுக்கு சரியான ரோல் மாடல் இல்லை என்பதும் மாணவர் தரப்பினர் வாதம். அடிப்பவன்தான் ஹீரோ அதேபோல் மாணவர்களுக்கு வயலன்ஸ்தான் பிடிக்கிறது. அதுவும் இன்றைய வன்முறைக்கு காரணமாக இருக்கிறது என்றார் ஒரு மாணவர்.

பஸ் டே கொண்டாடுவதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறிவருகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இந்த விவாத நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் ஞானி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்று அரசு கல்லூரி மாணவர்கள் பற்றிய தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

4 ஆயிரம் பேர் படிக்கும் கல்லூரியில் 400 பேர்தான் ரவுடித்தனம் செய்கின்றனர். மீதி 3500 பேர் நன்றாக படிக்கும் மாணவர்கள். எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் எந்திரங்களாக உருவாகிவருகின்றனர். மருத்துவம் படித்தவர்கள் கமிஷன் வாங்குகின்றனர். பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக படிக்கும் படிப்புகள் அவை. ஆனால் அரசு கல்லூரி மாணவர்கள் மதிப்பெண்களுக்காக படிக்கவேண்டியதில்லை என்றார் எழுத்தாளர் ஞானி.

நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஊடகங்களில் வரும் வன்முறைக் காட்சிகளும், காதல் காட்சிகளும் இன்றைக்கு மாணவர்களை மாற்றியிருப்பதாக கூறினார். நாங்கள் படித்த காலத்திலும் அரசியல் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜன்சி இருந்தது உயரிய சிந்தனைகள் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டோம். ஆனால் இன்றைக்கு மதிப்பெண்களை மட்டுமே பெற்றோர்கள் இலக்காக நினைக்கின்றனர். மாணவர்களிடையே உயர்ந்த இலக்கை பெற்றோர்கள் நிர்ணயிக்கத் தவறிவிட்டனர் என்றார் இளங்கோவன் உளவியல் ரீதியான சிக்கல்களே மாணவர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட காரணமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.

அரசுக்கல்லூரி வன்முறைக் களமாக மாறுவதற்கு இன்றைக்கு மூன்று காரணங்களை முன்வைத்தார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். பாலியல் சார்ந்த கவர்ச்சி, அரசியல், ஜாதிய உணர்வு. தான் படித்த காலத்தில் அந்த காலத்தில் அழகு தேவதைகள் நடமாடிய இடமாக பிரசிடென்ஸி கல்லூரி இருந்தது என்று தமிழருவி மணியன் கூறினார். மாணவர் கல்லூரி மீது மற்ற கல்லூரி மாணவர்களுக்கு தனி பார்வை இருந்தது. ஆனால் அதே கல்லூரி இன்றைக்கு அப்படி இல்லை. தனது கல்லூரி மாணவியை வேறு கல்லூரி மாணவன் காதலிப்பதை விரும்புவதில்லை. அதனால் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் உருவாகிறது என்றார்.

அரசியல், மாணவர் தேர்தல் நடக்கும் போது மோதிக்கொள்வார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல் சரியில்லை. வெளி ஆட்கள் மாணவர்கள் போர்வையில் கல்லூரிக்குள் சென்று வன்முறையில் ஈடுபடுகின்றனர். மூன்றாவது பிரச்சினை ஜாதி. எங்கள் காலத்தில் சாதி மோதல் கிடையாது. ஆனால் இன்றைக்கு சட்டக்கல்லூரியோ, அரசுக் கல்லூரியோ இரண்டு சாதிகள் பிரச்சினையை உருவாக்குகின்றன என்று ஆதங்கப்பட்டார் தமிழருவி மணியன்.

அடித்தட்டு மக்களின் உறைவிடம்தான் கலைக்கல்லூரிகள். வறுமையில் இருப்பவர்கள்தான் படிக்கின்றனர். ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இன்றைக்கு அரசு கல்லூரியில் படிக்கின்றனர். இலவசமாக கல்வி கொடுக்கிறோம் என்று கூறி தரமற்ற கல்வியாக தருகின்றனர் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தமிழருவி மணியன்.

3 ஆயிரம் பேர் படிக்கும் இடத்தில் 50 மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதால் அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரின் மீதும் ஒரே மாதிரியான பார்வையை செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று உணர்வு பூர்வமான கூறினார் தமிழருவி மணியன்.

ஊடகங்கள் உங்களின் பிரச்சினைகளைக் காட்டுகின்றன. எங்களின் கல்லூரியில் மிகச்சிறந்த சாதனைகளையும் செய்திருக்கிறோம் என்று கூறினர் மாணவர்கள்.

மாணவப்பருவத்தில் வன்முறை மட்டுமே ஹீரோயிசம் இல்லை... வன்முறை ஒருநாளும் வழியாகாது... என்று கூறி விவாதத்தை இனிதே முடித்தார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

 

முதல் முறையாக பிரகாஷ் ராஜ் நடனமாடினார் 'துள்ளிவிளையாடு' படத்திற்காக!

Prakash Raj Dances First Time Thulli Vilayadu   

துள்ளிவிளையாடு என்ற படத்துக்காக முதல் முறையாக ஒரு முழு பாடலுக்கும் நடனமாடினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

துள்ளி விளையாடு படத்தை வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், வெண்ணிலா கபாடிகுழு புகழ் சூரி ஆகியோர் நடிக்க உருவாகி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மாடல் அங்கீதாவுடன் செம ஆட்டம் ஆடியுள்ளார்.

முழுக்க முழுக்க இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது.

சண்டிக் குதிர
சண்டிக் குதிர
வண்டிக்குள்ள சிக்காத
ஒன்டிக்குதிர...

என்ற மிக வேகமான பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன்.

ஒரு பிரச்சினையில் தனக்கு சாதகமான தகவல் வந்ததால் மகிழ்ச்சியடையும் பிரகாஷ் ராஜ் அதை தன் குழுவுடன் ஆடிக் களிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதற்கு முன் எந்தப் படத்திலும் பிரகாஷ்ராஜ் இப்படி முழு பாடலுக்கும் நடனமாடியதில்லையாம்.

 

பர்தாவோடு மும்பையை வலம் வரும் வீணா மாலிக்

Veena Searching Streets Mumbai Find The Character Face

நடமாடும் கவர்ச்சிப் புயலாக வலம் வரும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், அடுத்து ‘தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகத்தை தேடி மும்பை நகரில் வலம் வருகிறார். தன்னுடைய ஒரிஜினல் முகத்தோடு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும் என்று பர்தா போட்டு கவர் செய்து மும்பை நகரை சுற்றி வருகிறாராம் வீணா மாலிக்.

இது மிகப்பெரிய சாதனைப் படம். எனவே இதில் நடிப்பது சவாலான விசயம். அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான்கான், ஷாருக் கான், போனற் நடிகர்கள் திரைப்படங்களில் தங்களுக்கு என ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர். அதேபோல் நானும் சிறந்த நடிகையாக பெயரெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் இந்த கவர்ச்சி நாயகி.

கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது

வீணாவின் டிராமா க்வீன் ஆல்பம் ஏற்கனவே இசைத்தட்டு விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இசை அலையுடன் கவர்ச்சி அலையுடன் சேர்த்துக் கலக்கி இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் வீணா. தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் வீணா மாலிக்குடன் பூஜா மிஸ்ராவும் இணைந்துள்ளார். இதனால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்களிடையே பேச்சு எழுந்துள்ளது.

கின்னஸ் சாதனப் படம்

தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் திரைப்படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் எடுக்கப்படவுள்ளதாம். ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தை சதீஷ் ரெட்டி தயாரிக்கிறார். இதில் ஹாலிவுட் நடிகர் ஜெரிமி மார் வில்லியம்ஸ் உடன் நடிக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில் இங்கிலாந்து, பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, ஆகியா நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் இந்த படம் தயாராகிறது. இதில் பிரபல ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் நடிக்கின்றனர். நான்கு இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட துணை இயக்குநர்கள் இணைந்து ஒருவாரத்தில் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப பெருமையா இருக்கு

வீணாவை தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து கூறிய, தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி, எனது படம் சாதனைகளை முறியடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் வீணாவைப் போன்ற அழகான ஒரு நடிகை எனது படத்தில் இருப்பதுதான் பெரிய பெருமையாக உள்ளது. அவருடன் சேருவது பெரும் சந்தோஷம் என்று குஷியாக கூறியுள்ளார்.