பேஸ்புக், ட்விட்டரில் நான் இல்ல.. இல்லவே இல்ல...! - சூர்யா


I M Not Facebook Twitter Says Surya
சென்னை: சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நான் இல்லை. என் பெயரில் இந்த தளங்களில் உள்ள கணக்குகள் போலியானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டரில் அநேகமாக பல நட்சத்திரங்களும் கணக்கு தொடங்கி, தங்களைப் பற்றி அப்டேட் செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா பெயரிலும் பேஸ்புக்கில சிலர் அப்டேட் செய்து வருகின்றனர். மாற்றான் படம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ரிலீஸ் ஆவதாக சூர்யாவே அறிவித்துள்ளது போல பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "என் பெயரில் போலியாக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் சிலர் அப்டேட் செய்வதை அறிந்தேன். ஏதோ நான்தான் தினமும் இப்படி செய்வதாக ரசிகர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. இது தவறு. ரசிகர்கள் நம்ப வேண்டாம்," என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் அதிகாரப்பூர்வமற்ற போலி பேஸ்புக் கணக்கைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் பேருக்கு மேல்... இது எப்படி இருக்கு!!
 

ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் திரளும் இளையராஜா ரசிகர்கள்!

Ilaiyaraaja Yahoo Group Meet Chennai Aug 19
உலகெங்கும் கோடிக்கணக்கான உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி கூடவுள்ளனர். இது இளையராஜாவின் யாஹூ குரூப் உறுப்பினர்களின் 25வது கூட்டமாகும். இதற்கான ஏற்பாடுகளை, குரூப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமனும் அவரது சகாக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு நிகராக, ஏன் அதை விட ஒரு படி மேலான, உயர்வான, நிறைவான, அழகான ரசிகர்களைக் கொண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. உண்மையில் இவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் இவர்தான் ஹீரோவாக திகழ்ந்திருப்பார். கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் இசையைக் கொடுக்கும் ஒரு சில இசை ஹீரோக்களில் ராஜாவுக்கு முதலிடம் உண்டு.

கடந்த தலைமுறையினரை மட்டுமல்லாமல் இப்போதைய தலைமுறையினரையும் கூட வியக்க வைத்த, லயிக்க வைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. அவரது தென்றல் இசைக்கு அடிமையானவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்த யாஹூ ராஜா குரூப்.

இளையராஜாவின் ரசிகர்களுக்கான இணையதள ரசிக மேடை இது. இதை கோவையைச் சேர்ந்த பிரபல டாக்டரும், ராஜாவின் முன்னணி ரசிகர்களில் ஒருவருமான டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு மே 17ம் தேதி உருவாக்கினார். வெறுமனே ராஜாவின் இசையை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், ராஜாவின் இசை குறித்து கிட்டத்தட்ட ஒரு ஆய்வையே இந்த குரூப் மேற்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமானது. தமிழ் இசையமைப்பாளர் ஒருவருக்கு இந்த அளவுக்கு உயர்ந்த தரத்திலான ஒரு ரசிகர் குழாம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

எந்தவித சர்ச்சையும் இல்லாமல் முழுக்க முழுக்க ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே அலசும் அருமையான குரூப்பாக இந்த யாஹூ இளையராஜா ரசிகர் குழு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இந்தக் குழு படிப்படியாக விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் 4400 உறுப்பினர்களுடன் அட்டகாசமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது - ராஜாவின் இசையைப் போல கம்பீரமாக.

இந்த குழுவினர் சுய கட்டுப்பாட்டைக் காப்பதில் மிக நேர்த்தியாக செயல்படுகிறார்கள். இந்த குழுவின் விவாதங்களில் ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே விவாதிக்கிறார்கள். ராஜாவைத் தாண்டி யாரைப் பற்றியும் இவர்கள் விமர்சிப்பதில்லை, ஒப்பிடுவதில்லை, பேசுவதில்லை.

டாக்டர் விஜய் வெங்கட்ராமனுடன் இணைந்து முப்பெரும் தூண்கள் போல பி.எஸ்.ராம்ஜி, வி.ஸ்ரீதர், எம்.ஸ்ரீவித்யா ஆகியோரும் இந்த குழுவை வழிநடத்திச் செல்கிறார்கள். இவர்கள் தவிர மேலும் பலரும் இந்தக் குழுவை சிறப்பாக கொண்டு செல்ல உதவி வருகிறார்கள்.

இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் 'திருவாசகம் பை இளையராஜா', 'தி மியூசிக் மெஸையா' ஆகிய படைப்புகளில் இந்த ரசிகர் குழுவுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.

ராஜாவின் யாஹூ குரூப்பை யாஹூ இந்தியா நிறுவனம் முறையாக அங்கீகரித்துள்ளது இந்த குரூப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும். மேலும் 2008ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மும்பையில் நடந்த 3வது யாஹூ குரூப் மாடரேட்டர்கள் சங்கத்தின் மாநாட்டுக்கும் இளையராஜா யாஹூ குரூப் அழைக்கப்பட்டிருந்தது. குரூப் சார்பில் உறுப்பனர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டில் சில நாட்கள் ஒன்றாக சந்தித்து ஆரோக்கியமான விவாதங்களை எடுத்து வைக்கிறார்கள். 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2005 முதல் 2010 வரை சென்னையில் உள்ள மாபோய் அகாடமியில் தொடர்ந்து இவர்களின் கூட்டங்கள் நடந்து வந்தன.

இளையராஜாவின் இசைப் படைப்புகள் குறித்து விவாதங்கள் இந்த கூட்டத்தில் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இளையராஜாவின் இசையில் பொதிந்து கிடக்கும் பல்வேறு சிறப்பம்சங்களையும் விவாதிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆர்கெஸ்டிரா மூலம் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களையும் ஒலிக்கச் செய்து இசை விருந்தும் படைக்கிறார்கள். உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக இதில் பங்கெடுத்து பாடுகிறார்கள்.

வெறுமனே கூடி விவாதித்துக் கலையாமல் ஆய்வுத் தாள்களையும் சமர்ப்பிப்பது இந்த குரூப்பின் முக்கிய அம்சமாகும்.

கடந்த 2009ம் ஆண்டு மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவையில் ராஜா குரூப்பின் 10வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி இக்குழுவின் 25வது கூட்டம் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

கூட்டம் நடைபெறும் முகவரி

கிளினிமைன்ட்ஸ்
எண் 9, தாமோதரன் தெரு, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம்
சென்னை -10

மேல் விவரங்களுக்கு 9600055773 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு அறியலாம்.
 

ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா?

Jayam Raja Remake Ek Tha Tiger With
சல்மான்கான் நடித்து இந்தியில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

பாலிவுட்டில் சமீபத்தில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் ஏக் தா டைகர். கபீர் கான் இயக்கிய இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வசூலில் சாதித்துவிட்டது.

இப்போதே இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். கோலிவுட்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா...

ரீமேக் ஸ்பெஷலிஸ்டான ஜெயம் ராஜாவை வைத்து இந்தப் படத்தை தமிழில் எடுக்க எடிட்டர் மோகன் முயற்சி மேற்கொண்டுள்ளாராம். ஹீரோவாக விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

விஜய்யும் ராஜாவும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்தான். கவுதம் மேனனின் யோஹனிலிருந்து விலகியுள்ளதால், அந்த தேதிகளை ஜெயம் ராஜாவுக்கு தர விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
 

ஒரே நேரத்தில் 2 பேருடன் இன்பமாக இருந்தாரா கிம் கர்தஷியான்?

Adult Film Star Claims He Had Threesome Kim Kardashian
லாஸ் ஏஞ்செலஸ்: அமெரிக்க கவர்ச்சிப் பாவை கிம் கர்தஷியான் ஒரே நேரத்தில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் இன்பமாக இருந்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஷயத்தை போட்டுடைத்திருப்பவர் 'பழம்பெறும்' ஆபாசப் பட நடிகரான ஜூலியன் செயின்ட் ஜாக்ஸ். இந்த விவகாரம் கிம் கர்தஷியான் 20 வயதாக இரு்நதபோது நடந்ததாம்.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்செலஸில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டபோது, கிம் மற்றும் இன்னொரு பெண்ணுடன் தான் உல்லாசமாக இருந்ததாகவும், மூன்று பேரும் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறியுள்ளார் ஜாக்ஸ்.

கலிபோர்னியாவில் உள்ள வின்ட்ஹாம் ஹோட்டலில் வைத்துத்தான் இதை அரங்கேற்றினராம்.

இதுகுறித்து ஸ்டார் பத்திரிகைக்கு ஜாக்ஸ் அளித்த பேட்டியில், அன்று இரவு 11.30 மணி இருக்கும். ஒரு கருப்பர் இன ஆணுடன் வந்தார் கிம். நான் எமிலி ஆன் என்ற ஆபாசப் பட நடிகையுடன் போயிருந்தேன்.

கிம் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்து என்னுடன் வந்த நடிகைக்கு மோகம் பிறந்தது. கிம்முடன் சேர்ந்து அவர் சிறிது நேரம் நடனமாடினார். கவர்ச்சிகரமான சில மூவ்களையும் அவர்கள் போட்டனர். கிம்முடன் அவர் பின்ணிப் பிணைந்து ஆடினார்.

அதன் பின்னர் கிம்மும், எமிலியும் ஒரு அறைக்குள் புகுந்தனர். அங்கு ஏற்கனவே இரண்டு ஆபாசப் பட நடிகர், நடிகை உல்லாசமாக இருந்தனர். அதைப் பார்த்து இவர்களுக்கு மூடு வந்து இவர்களும் தனி அறைக்குள் புகுந்து கொண்டனர். பின்னர் நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வு கிம்முக்கு இருந்தது என்றார் ஜாக்ஸ்.

இவர்கள் மூவரும் இன்பம் அனுபவித்தபோது கிம்முடன் வந்த கருப்பர் இன ஆண் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஜாக்ஸ் சொல்லவில்லை....!
 

பிரஜீனும் நானும் – நடிகை சான்ட்ரா

My Lovable Prajeen Actress Santra
போராளி திரைப்படத்தில் சாந்தி, சாந்தி என்று கணவரை கத்த விட்டு நிமிடத்திற்கு ஒரு சண்டை பிறகு சமாதானம் என்று தூள் கிளப்பியவர் சான்ட்ரா. கிரண் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது சன்மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரஜீனுடனான காதல், மணவாழ்க்கை, சினிமா வாழ்க்கைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் சான்ட்ரா.

பிரஜீனும் நானும் ஒரே துறை என்பதால் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வாழ முடிகிறது. தனியாக வேலை பார்த்த போது இருந்ததை விட திருமணத்துக்கு பிறகுதான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

எங்களின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் சம்மதம் இல்லாதபோது நாங்களே கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். காதலிக்கும் போது இருந்த தருணங்களை விட இப்பொழுது வாழ்க்கை அமைதியாய் போய்க்கொண்டிருக்கிறது.

திருமண வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. சந்தோஷமான வாழ்வைக் கொடுத்த காதலுக்கு நன்றி.

மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துவிட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். நாயகியாக 10 படங்களில் நடித்திருக்கிறேன். ‘கஸ்தூரி மான்' நான் நடித்ததில் பிடித்த படம்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது இல்லை. சினிமா எனக்கு பிடிக்காமல் போனதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சினிமாவில் தினந்தோறும் எதிரிகள் உருவாகக் கூடிய நிலை உண்டு. சீரியலில் அது இல்லை.

சீரியல் வாழ்க்கை நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். என்னை பொருத்தவரைக்கும் சீரியலில் இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை என்றுதான் சொல்வேன் . அதே சமயம் போராளி படத்தின் கதை பிடித்திருந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததால் நடித்தேன் என்று புன்னகையோடு விடை கொடுத்தார் சான்ட்ரா.
 

இசைஞானி ரசிகர்களின் சங்கமம்... ஒரு வித்தியாசமான இசை அனுபவம்!

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு அறிவுஜீவி முதல் மோழி பிடித்து நிலத்தை உழும் உழைப்பாளி வரை அனைவரும் ரசிகர்கள்தான். நல்லிசையின் காதலர் யாராக இருந்தாலும் அவர்கள் ராஜாவின் இசைக் காதலர்களாக இருப்பார்கள்!
ilayaraaja yahoo group fan s 25th meeting an exclusive
ஒரு முறை வேலூர் தாண்டி நாட்றம்பள்ளி என்ற ஊர் வழியாக செல்லும்போது, இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராஜா நற்பணி மன்றம் என்ற பெயர்ப் பலகையைக் காண நேர்ந்தது. நாட்றம்பள்ளியில் மிகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. அப்படியே பெங்களூர் சென்று சேர்வதற்குள், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி என முக்கிய இடங்களில் ராஜாவின் ரசிகர் மன்ற பலகையைக் காண முடிந்தது.

உலகிலேயே ஒரு இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் வைத்து தீவிரமாக இயங்குவது அநேகமாக இளையராஜாவுக்குத்தான் இருக்கும்.

வட மாவட்டங்களில் இப்படி என்றால்... மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னும் எத்தனையோ வடிவங்களில் ராஜாவுக்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமில்லையே.

மன்றம் வைத்துதான் ராஜா இசையை அனுபவிக்க வேண்டியதில்லை. முகம் தெரியாமல், ரசனையின் அடிப்படையில் மட்டுமே இணையதளம் மூலம் ஒரு குழுவாக இயங்குபவர்களும் உண்டு.

அப்படி உருவானதுதான் இசைஞானியின் தீவிர ரசிகர்களைக் கொண்ட யாஹூ குழு. இந்தக் குழு பற்றி ஏற்கெனவே ஒன்இந்தியா விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்களுடன் இயங்கும் குழு இது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்குப் பிறகு, ஆன்லைனில் இளையராஜாவுக்கு மட்டும்தான் இப்படி ஒரு தீவிர ரசிகர்கள் குழு உள்ளது.

கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு இந்தக் குழுவை உருவாக்கினார். சும்மா அவர் இசை அப்படி, இப்படி, ஆஹா, ஓஹோ என்று பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் குழுவல்ல இது.

அவரது இசையின் உன்னதங்களை, அவர் சொல்ல முயன்ற விஷயத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆராதிக்கிற ரசனையான ரசிகர்கள் நிறைந்த குழு இது!

ராஜா பெரியவரா... அவருக்கு யார் போட்டி... அவருக்கு இந்த விருதெல்லாம் கிடைக்கவில்லையே என்ற ரசிக மனோபாவத்தை வென்ற ரசிகர்கள் இவர்கள் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுவே உண்மை.

இந்தக் குழுவில் உள்ளவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ஏன் கடல் தாண்டியும் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு தருணத்தில் இவர்களில் வர முடிந்தவர்கள் மட்டும் பங்கேற்று ஒரு சந்திப்பை நிகழ்த்துவது வழக்கம்.

இதுவரை 24 முறை சந்தித்த இந்தக் குழுவின் வெள்ளி விழா சந்திப்பு... 25வது சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கெல்லீஸில் நடந்தது.

அதில் நாமும் பங்கேற்றோம்... ஒரு செய்தியாளராக மட்டுமல்ல... ராஜாவின் ரசிகராகவும்!

ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ராஜா தன் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது. இந்த சந்திப்பில் ராஜாவின் சினிமா இசை அல்லாத, பக்தி ஆல்பங்கள் குறித்து விவாதித்தனர்.

ராஜாவின் புகழ்பெற்ற கீதாஞ்சலி மற்றும் ரமணமாலைதான் ரசிகர்களின் முதல் விவாதத்துக்கான ஆல்பங்களாக அமைந்தன. ராஜாவின் மிக சமீபத்திய ரமணர் ஆல்பமான 'ரமணா சரணம் சரணம்' குறித்தும் விவாதித்தனர்.

திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த டாக்டர் ஸ்ரீதர் இளையராஜாவின் அபாரமான ரசிகர். ரமணமாலையின் பாடல்கள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்து கொண்ட விதத்தை, கண்களை மூடி, மனமுருக அவர் பாடிய விதத்தை... கண்டிப்பாக இசைஞானி பார்த்திருக்க வேண்டும். அந்தப் படைப்பின் அர்த்தத்தை அங்கே உணர முடிந்தது!

ராஜாவின் இன்னொரு ஆல்பமான மணிகண்டன் கீதமாலையை அணுஅணுவாக ரசித்துப் பாடி மகிழ்ந்தனர். பெங்களூரிலிருந்து வந்திருந்தார் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர். பெயர் ராகா... குரலில் இளம் மணிகண்டனை தரிசித்த அனுபவம். உடம்பெல்லாம் ஒரு ரோமாஞ்சனம் என்ற பாடலை அந்தப் பெண் பாடி முடித்த போது, கேட்டவர் அத்தனைபேர் உடம்பின் மயிர்க்கால்களும் சிலிர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

இருமுடி கட்டி சபரிமலைக்குப் போகும் ஒவ்வொருவரும் கேட்டுப் பரவசமடைய இளையராஜா அந்த ஆல்பத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார். இருமுடிகட்டி.. என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை இந்த கூட்டத்தில் பரவசத்தோடு பாடியவர்... அன்வர் என்ற இளைஞர்!

"மதங்களைக் கடந்த இசை இது. எல்லா மதமும் சொல்வது ஒரே தத்துவத்தைத்தான் என்பதை இசைஞானி இந்தப் பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார்," என்றார் பாடி முடித்ததும்.

சாய் பாபாவுக்காக ராஜா உருவாக்கிய பாபா புகழ்மாலையில் இடம்பெற்ற உன்னைக் கேட்டுப்பார்... என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம்... இது ரசிகர்களை அதிகமாகப் போய்ச் சேரவில்லையோ என்ற சின்ன வருத்தம் மேலோங்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில், அந்தப் பாடலை ஸ்ரீதரும் அன்வரும் பாடிப் பாடி விவாதித்த விதம் அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களை சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது ராஜாவின் இசையமுதம்!

Ilayaraaja yahoo group fan's 25th meeting

'விண்ணார் அமுதே வீசும் சுடரே ஓதும் மறையே ஓதாப் பொருளே...' என்று ஒரு பாடல்... எந்த கணத்தில் கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் மெட்டு. இறைவனை எப்படி ஒவ்வொரு கணமும் புதிதாய் உணர்கிறோமோ... அப்படி எப்போது கேட்டாலும் புத்தம் புதிதாகத் தெரியும் மெட்டு. இந்தப் பாடலையும் ராகாதான் பாடினார். அசாதாரண நிசப்தத்துக்கிடையே ஒலித்த அந்தச் சிறுமியின் குரல் இறைவனின் இருப்பையே அந்தப் பாடல் வழி உணர்த்துவதாக இருந்தது!

இன்னும் கீதாஞ்சலி, திருவாசகம் பற்றியெல்லாம் விவாதித்தாலும், இவற்றை விரிவாக அனுபவித்துப் பேச இன்னொரு கூட்டம் போடணும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது.

இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவருமே ராஜாவின் இசையை முழுமையாக லயித்து உணர்ந்தவர்கள்தான். சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தன் மனைவி ஜெயலலிதா மற்றும் மகனோடு கூட்டத்துக்கு வந்திருந்தார். ஓசூரிலிருந்து வந்திருந்தார் உஷா சங்கர். டாக்டர் நந்தா, திருச்சி செந்தில் குமார் (ராஜாவின் முரட்டு பக்தர்- ஆனால் ஏகப்பட்ட விஷயம் உள்ளவர்), ஆடிட்டர் கிரிதரன், வேல்ரமணன் உள்பட அனைவரும் திருவாசகம் தொடங்கி ராஜாவின் ஆன்மீக இசையை அழகாக அலசினர்.

டாக்டர் விஜய்யுடன் இணைந்து இந்த கூட்டத்தை அழகாக ஒருங்கிணைத்தார் நரசிம்மன்.

டாக்டர் விஜய்...

நாம் டாக்டர் விஜய்யைச் சந்தித்தோம்... வெறும் பட்டம் பெற்ற டாக்டரல்ல இவர். கோவை சாய்பாபா காலனியில் பிரபலமான மருத்துவர். தன் பணிநேரம் போக, மற்ற நேரத்தை ராஜாவின் பாடல்களில், அவரது நல்ல ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் செலவிடுபவர்.

இந்த குழு குறித்து நம்மிடம் கூறுகையில், "இணையதளம் என்ற கான்செப்ட் அறிமுகமான காலகட்டத்தில், பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கும். அதிலெல்லாம் நானும் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்பேன். ஆனால் என் வருத்தமெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்ந்து, அடுத்தவரை மட்டம் தட்டும் போக்குதான்... இப்படி வரும் விவாதங்களில் யார் நடுநிலையோடு இருக்கிறார்களோ...அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி, ஒருங்கிணைக்க முயன்றேன். அப்படி ஒவ்வொருத்தராகப் பார்த்துப் பார்த்து சேர்த்து உருவான குழுதான் இந்த இளையராஜா யாஹூ குரூப்ஸ்!

இளையராஜா என்ற மகத்தான கலைஞரின் படைப்புகளை முழுமையாக உள்வாங்கி ரசிக்க வேண்டும். அது பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் பிரதான நோக்கம்.

இந்தக் குழுவிலும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதுபோல, யார் பெரியவர் என்பது போன்ற, ராஜாவுக்கு உரிய விருதுகள் வரவில்லையே என்பது போன்ற கருத்துகள் வராமலில்லை. ஆனால் அவற்றை நானோ இந்தக் குழுவின் மற்ற மாடரேட்டர்களோ வளரவிட்டதேயில்லை. ஆரம்பத்திலேயே நீக்கிவிடுவோம்..." என்றார்.

இதற்கு முன் 2009-ல் இந்தக் குழு கூடியபோது, இளையராஜா இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 20 திரைப்பட ஆல்பங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் குறித்து மட்டும் விவாதித்துள்ளனர்.

ஒவ்வொரு கூட்டத்தின்போதும், இதுதான் டாபிக் என முடிவு செய்துவிடுவீர்களா?

"ஆமாம்... ராஜா சார் இசை ஒரு சமுத்திரம் மாதிரி. எல்லையில்லாமல் விரியும் ராஜ்யம் அது. ஒரு நாளில் பேசி முடிக்கிற விஷயமா அவரது இசை? எனவே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விவாதிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் இப்படி..!", என்றார் டாக்டர் விஜய்.

இத்தகைய கூட்டங்கள் விவாதங்கள் தாண்டி, இந்த குழு செய்திருக்கும் ஒரு விஷயம், இசைஞானியின் திருவாசகம் ஆரட்டோரியா உருவாக்கத்துக்காக, தங்களால் முடிந்த பல பணிகளை, தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். 30 பேர் கொண்ட குழுவே வேலை பார்த்திருக்கிறது. திருவாசகம் வெளியான அன்று நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரட்டி ராஜாவிடமும் கொடுத்துள்ளனர்.

ராக்கம்மா கையத்தட்டு பாடல் பிபிசியின் ஆல்டைம் டாப்டென்னில் இடம் பிடித்ததல்லவா... அந்தப் பாடலுக்கு பிபிசி அங்கீகாரம் கிடைக்கச் செய்ததில் இந்தக் குழுவின் பங்களிப்பும் உண்டு!
 

நயன்தாரா காதலன் நானில்லீங்கோ! - ஆர்யா

Arya Denies Affair With Nayanthara
சென்னை: நயன்தாராவுக்கும் எனக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான்... காதல் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ஆர்யா.

பிரபு தேவா - நயன்தாரா பிரிந்துவிட்டதால், இப்போது நயன்தாராவுடன் ஆர்யாவை இணைத்து கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நல்ல தொடர்பில் உள்ளனர்.

பிரபுதேவாவைப் பிரிந்து சென்னை திரும்பிய நயன்தாராவை முதல் ஆளாக வரவேற்றவர் ஆர்யா. அவரது புதுவீட்டை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தவர் நயன்தான். நயன்தாராவை ‘கேக்' வெட்ட வைத்து விருந்தே கொடுத்தார் ஆர்யா. அத்துடன் மீண்டும் நடிக்கும்படி அவர்தான் அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. புதுப்படங்களில் நயன்தாராவை அவர்தான் பரிந்துரைக்கிறாராம். முக்கியமாக அஜீத்துடன் தான் நடிக்கும் படத்தில் நயன்தாரா இடம்பெற அவர்தான் காரணம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ஆர்யா கூறுகையில், "இதெல்லாம் ரொம்ப ஓவர்... நயன்தாரா திறமையான நடிகை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஒன்றாக நடித்தோம். எங்களைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நயன்தாரா எனக்கு நல்ல தோழிதான். காதலெல்லாம் கிடையாது.

புதுப்படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு நான் சிபாரிசு செய்வதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர்.

கதாநாயகிகளை தேர்வு செய்வது இயக்குனர்கள்தான். அதிலெல்லாம் நான் தலையிடுவதே இல்லை," என்றார்.

நெஜமாவா!!
 

2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை டிவி

Puthiya Thalaimurai Tv Completes Year
சென்னை: தமிழகத்தின் மக்கள் மனம் கவர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தமிழகத்தில் ஆங்கில செய்தி சேனல்களுக்கு நிகராக தமிழ் செய்தி சேனல்கள் வராதா என பலரும் ஏங்கிக் கிடந்த நிலையில் சன் செய்தி சேனல் வெளி வந்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதை விட்டால் வேறு செய்திச் சேனல் இல்லை என்ற நிலை இருந்தது.

ஒரு சம்பவம் நடந்தால் அது தவறு என்று ஒரு சேனலும், சரி என மற்றொரு சேனலும் ஒளிபரப்பி வந்தது. இதனால் நடுநிலை செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனலாக துவங்கப்பட்டது. வழக்கம்போல் இந்த சேனலும் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் நினைத்தபோது, அந்த நினைப்பை மாற்றி நடுநிலையான செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டு வந்தது.

இதனால் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. நடுநிலை பிறவாமல் தனி இடம் பிடித்த புதிய தலைமுறை தொலைக்காட்சி துவங்கி நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இன்று இரண்டாமாண்டு தொடங்கியுள்ளது.

இதையொட்டி பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இன்று ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்தி சேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன.
 

யாருக்குத் தெரியும் படத்தில் 20 லட்சம் மோசடி - நடிகர் மீது போலீசில் புகார்!

Producer Lodges Complaint On Actor For Cheating
சென்னை: யாருக்குத் தெரியும் என்ற படத்தில் தயாரிப்பாளரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் கிருஷ்ணமூர்த்தி மீது தி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜி காமராஜ் இயக்கத்தில் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படம் யாருக்குத் தெரியும். சஞ்சனா சிங், கலாபவன் மணி, ஜெய்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதருக்கு இதுதான் முதல்படம். ஏற்கெனவே தெரிந்தவர் என்ற முறையில் ஸ்ரீதருக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு வந்து சேர்ந்தாராம் ஏ கிருஷ்ணமூர்த்தி. இவர் நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தியின் மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தன் மூலம் பணம் பட்டுவாடா செய்தால் ஏமாற்ற மாட்டார்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறி பணம் பெற்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

ஆனால் பலருக்கு பேசியபடி சம்பளத்தை அவர் கொடுக்கவில்லை. துணை நடிகர்கள், இசையமைப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பேசிய சம்பளம் ஒன்றாகவும், வவுச்சரில் கொடுத்த சம்பளம் வேறாகவும் இருந்ததாம்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரகசியமாக விசாரித்ததில் கிருஷ்ணமூர்த்தி பணம் கையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் தன் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் பெயரிலெல்லாம் காசோலை பெற்று, பணத்தைக் கையாடியதாகக் கூறப்படுகிறது. இதுபோல கிட்டத்தட்ட ரூ 20 லட்சம் வரை அவர் மோசடி செய்ததது தெரிய வந்ததாம்.

கிருஷ்ணமூர்த்தியை விசாரிக்க அழைத்தபோது, தனக்கு ரூ 15 லட்சம் தராவிட்டால் படத்தை வெளியிட முடியாமல் செய்துவிடுவே்ன் என்று அவர் குடித்துவிட்டு வந்து தயாரிப்பாளரை மிரட்டினாராம்.

மேலும், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் மற்றும் பெப்சியிலும் ஸ்ரீதர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சும்மா உதவியாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு வந்தவர் ரூ 20 லட்சம் ஏமாற்றியதோடு, மேலும் ரூ 15 லட்சம் தரவேண்டுமென்று கேட்டு மிரட்டுகிறார் என தனது புகாரில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஸ்ரீதர்.

இந்தப் புகாரை திநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.

இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, வழக்கு விசாரணையில் இருப்பதால் எதுவும் பேசவிரும்பவில்லை என்றார். கிருஷ்ணமூர்த்தையைத் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்புக்கே வரவில்லை.
 

மக்கள் நெஞ்சில் பதிந்த சூப்பர் ஸ்டாரை காலத்தை வென்றவராகக் காட்டவே கோச்சடையான்! - சௌந்தர்யா

I Want Immortalise My Dad Thro Kochadaiyaan

லண்டன்: மக்கள் நெஞ்சில் தனது ஸ்டைல், தனித்த மேனரிஸம், உச்சரிப்பு மூலம் பதிந்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியை, காலத்தை வென்ற நாயகனாகக் காட்டும் முயற்சிதான் கோச்சடையான் படம், என்று கூறியுள்ளார் இயக்குநர் சௌந்தர்யா.

லார்டு ஆப் தி ரிங்ஸ், அவதார் படங்களைத் தாண்டி, கோச்சடையான் படத்தை, அனிமேஷனின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்லும் படம் என்று அறிமுகம் செய்துள்ள சிஎன்என் தொலைக்காட்சி, அந்தப் படத்தின் இயக்குநர் சௌந்தர்யாவின் பேட்டியை சமீபத்தில் வெளியிட்டது.

இந்தப் படம் குறித்து சௌந்தர்யா கூறுகையில், "அனிமேஷன் என்றால் ஏதோ கார்ட்டூன் என்ற எண்ணத்தை கோச்சடையான் மாற்றும். அப்பாவை காலத்தை வென்ற ஒருவராக நிலைநிறுத்தும் முயற்சி இது. மேனரிசங்கள், ஸ்டைல், பேசும் முறை என அனைத்திலும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட மாபெரும் நடிகர் ஒருவரை ரியலாகக் காட்டும் முயற்சி இது. இந்தப் படத்தில் நான் வால், இறக்கைகள் கொண்ட அசாதாரண உருவங்கள் நெருப்பை உமிழும் காட்சிகளைக் காட்டவில்லை. இது ஒரு Photo realistic performance capturing film. முழுக்க முழுக்க இயல்பாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் என் தந்தை தான் கடைப்பிடிக்கும் தத்துவங்களின்படி வாழ்பவர். தான் சொன்னதைச் செய்பவர்.

ஒரு கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, மொழி தெரியாத ஒரு பகுதிக்கு வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் அவர். தான் சொல்ல நினைப்பதை வாழ்க்கை மூலம் காட்டுபவர் அப்பா.

காஸ்ட்யூம், பாடல்கள், நடனம் என பல வகையிலும் கோச்சடையான் ஒரு இந்தியப் படமாக இருக்கும்.

உலகில் என் தந்தையை நேசிக்கும் மக்கள் உள்ள நகரங்கள் அனைத்துக்கும் அவரை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.. லண்டன், யுஎஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய்... டோக்யோ ஆகிய நகரங்களுக்கு அவர் பயணம் செய்து மக்களை அவர் சந்திப்பார்," என்றார்.

 

என் வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்கள் - காயத்ரி ஜெயராம்

Gayathri Jayaram Again Anchoring New Realtyshow

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர், சினிமா நடிகை, விளம்பர மாடல் என பன்முகம் கொண்டவர் காயத்ரி ஜெயராம். இப்பொழுது சூப்பர் குடும்பத்தில் மீண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான காயத்ரி திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு மலேசியா சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு குழந்தைகளுக்கு நீச்சல், டைவிங் கற்றுத்தரும் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

மலேசியாவில் இருந்து குறிப்பிட்ட மாதங்கள் வரை மட்டுமே சென்னை வந்து செல்லும் காயத்ரி அந்த நேரத்தில் சின்னத்திரையில் கிடைக்கும் வேலைகளை செய்கிறார்.விஜய் டி.வி.யின் "ச்சீயர் லீடர்ஸ்' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக சில மாதங்கள் இருந்த காயத்ரி அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மலேசியாவிற்கு சென்றுவிட்டார். இப்பொழுது சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் சின்னத்திரையில் காலடி வைத்துள்ளார்.

குடும்பம், வேலை என நேரம் சரியாக இருப்பதால் இனி சினிமா, சீரியல்களில் பார்ப்பது என்பது முடியாத விஷயம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என் வாழ்க்கையில் சினிமா என்பதும் ஒரு இடம் அதில் நான் இருந்தேன் அவ்வளவுதான். இப்போது மாற்றங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்கிறார் காயத்ரி ஜெயராம்.