இன்னைக்கு ராத்திரி 'அல்வா' படம்... பார்க்கத் தவறாதீர்கள்

Sun Tv Telecast Amaithipadai Tonigh

நடிகர் சத்தியராஜ் நடித்த ‘அல்வா' ஸ்பெசல் அமைதிப்படை திரைப்படம் இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சன் டிவி வாரா வாரம் ஒரு திரைப்பட வாரத்தை கொண்டாடி வருகிறது. இந்த வாரம் இரட்டையர் வாரத்தின் இறுதிப் படமாக சத்யராஜின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அமைதிப்படை ஒளிபரப்பாகிறது.

முந்தானை முடிச்சு வந்த பிறகு எப்படி முருங்கைக்காய் பிரபமலானதோ அதேபோல அமைதிப் படை வந்த பிறகு தமிழ்நாடு முழுக்க அல்வா பேமஸ் ஆனது. அப்படி ஒரு தாக்கம் இந்தப் படத்தில் சத்யராஜ் பேசிய அல்வா வசனம்.

1994ம் ஆண்டு வெளியான அமைதிப்படை மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம். சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய ஹிட். கஸ்தூரியை மோசடியாக ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுக்க அவர் கொடுத்த அல்வா...அதை விட பிரபலமானது.படத்தின் கதை, வசனம், இசை என எல்லாமே பிரமாதம். அதிலும் சத்யராஜின் வில்லத்தனத்திற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது ரசிகர்கள் மத்தியில்.

இப்படத்திற்கு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதைப் பார்த்துதான் இரண்டாம் பாகமாக நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற பெயரில் மணிவண்ணன் தற்போது எடுக்கவிருக்கிறார்.

எனவே ரசிகர்களே கரண்ட் இருந்தால் இன்று இரவு 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் அமைதிப்படை படத்தை காணத்தவறாதீர்கள்.

செக்மோசடி... நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட்!

Nbw Actress Bhuvaneshwari Cheque Bounce Case

செக் மோசடி வழக்கில் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பி்த்துள்ளது மன்னார்குடி நீதிமன்றம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் நிதி நிறுவனத்தில் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.13 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.

கடன் தொகைக்கு புவனேஸ்வரி காசோலை ஒன்று கொடுத்துள்ளார். அதை செல்வக்குமார் வங்கியில் செலுத்தினார். ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து விட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செல்வக்குமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதியன்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் புவனேஸ்வரி ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து நடிகை புவனேஸ்வரிக்கு நீதிபதி அய்யப்பன்பிள்ளை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளார்.

கிம் கர்தஷியான் 'பிரா' போடாவிட்டாலும் கூட நியூஸ் தாங்க!

Kim Uncovered

மியாமி: கிம் கர்தஷியான் என்ன செய்தாலும் அது நியூஸாகி விடுகிறது. நடந்து போனால் நியூஸ், டிரஸ் பறந்தால் நியூஸ், படகு ஓட்டினால் நியூஸ்... அந்த அடிப்படையில், இப்போது அவர் பிரா போடாமல் கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் வந்ததும் செய்தியாகி விட்டது.

மியாமிக்கு வந்துள்ள கிம், தனது சகோதரி கர்ட்னியுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குப் போனபோது காட்சியளித்த தோற்றத்தை புகைப்படத்தோடு வெளியிட்டு களேபரப்படுத்தி விட்டனர். காரணம், அவர் பிரா போடாமல், கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் வந்ததால்.

32 வயதான கிம், டைட்டான, உடல் வளைவு நெளிவுகள் தெரியும் வகையிலான டிரஸ்ஸுடன் லன்ச் சாப்பிட வந்திருந்தார். இத்தாலிய உணவகமான கார்பசியோவுக்கு வந்த அவரைப் பார்த்த அத்தனை கண்களும் அவரது கவர்ச்சியின் மீதுதான் குவிந்திருந்தன.

கருப்பு ஜீன்ஸ் மற்றும் லோ கட் டாப்ஸுடன் படு ஜில்லிப்பாக இருந்தார் கிம். மேலும் டிரஸ் படு லூஸாக இருந்ததால் டாப்ஸை அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டபடியும் காணப்பட்டார். அதைப் பார்க்கவும் செம கூட்டம்.

மேலும் அவர் பிரா போடவில்லை என்பதும் அப்பட்டமாக தெரியவே, சாப்பிட வந்தவர்கள் கிம்மைப் பார்த்தபடியே சாப்பிட்டு முடித்தனர். நகை ஏதும் போடாமல் படு சிம்பிளாக, அதேசமயம் பளிச் என்று காணப்பட்டார் கிம்.

இது போதும், அடுத்த நியூஸில் சந்திக்கலாம்...!

ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர் ஹரிசரனுக்கு விஜய் டிவியின் இசை விருது

Vijay Music Awards

விஜய் டிவியின் இசை விருது வழங்கும் விழாவில் 2011ம் ஆண்டின் சிறந்த இசை அமைப்பாளர் விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கு வழங்கப்பட்டது. பாடகர் ஹரிசரன், பாடகி சுவேதாவிற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

திரைப்பட நடிகர் நடிகையர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக விருதுகளை வழங்கும் விஜய் டிவி கடந்த இரண்டு ஆண்டுகளாக இசை விருதுகளை வழங்கி வருகிறது.

இசைத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் இதில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான நடுவர்களாக கவுதம் மேனன், ஸ்ரீனிவாஸ், ஜேம்ஸ்வசந்தன், ஆனந்த் வைத்தியநாதன், மால்குடி சுபா ஆகியோர் பங்கேற்றனர்.

சிறந்த இசை அமைப்பாளர் விருது ‘எங்கேயும் காதல்' படத்தில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வழங்கப்பட்டது. தெய்வத்திருமகள் படத்தில் பாடிய ஹரிசரன் சிறந்த பாடலாசிரியராகவும், சிறந்த பாடகிகளாக சின்மயி, சுவேதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

என்றைக்கும் தெவிட்டாத குரலாக எவர்கிரின் வாய்ஸ் அவர்டு பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வழங்கப்பட்டது. வாகை சூடாவா படத்தில் ‘சரசர சாரக்காத்து...' பாடலை எழுதிய வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

பெரும்பாலான படங்களில் சிறந்த பாடல்களை எழுதியதற்காக நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது. ‘ஒத்த சொல்லாலே' பாடலை பாடிய வேல்முருகன் சிறந்த நாட்டுப்புற பாடியதற்காக விருது வழங்கப்பட்டது.

கோ படத்தின் என்னமோ ஏதோ... பாடல் 2011ம் ஆண்டில் சிறந்த பாடலாக தேர்ந்தெடுப்பட்டது.

ஏழாம் அறிவு படத்தில் யம்மா யம்மா... பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதினை பெற்றார். மயக்கம் என்ன படத்தில் பிறைதேடும்... பாடலைப் பாடிய சைந்தவிக்கு சிறந்த பின்னணிப் பாடகி விருது வழங்கப்பட்டது.

சிறந்த இசைஅமைப்பாளர் பாடிய பாடலாக ஆடுகளம் படத்தில் ‘யாத்தே யாத்தே'... பாடலை பாடிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு விருது வழங்கப்பட்டது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான ரசிகர்களும், திரை உலகைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 11ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கள்ளத்துப்பாக்கி படத்துக்கு தடை ஏன்? : தணிக்கை அதிகாரிகளுடன் பட குழுவினர் வாக்குவாதம்

Why ban kallattuppakki film? : Audit authorities argue with the film crew சென்னை: புதுமுகங்கள் நடித்த 'கள்ளத்துப்பாக்கி' படத்துக்கு தணிக்கை குழு தடை கொடுத்தது. பின்னர் மறுதணிக்கைக்கு படம் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்த பிறகு மீண்டும் சான்றிதழ் தர மறுத்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் தந்த விளக்கத்துக்கு பிறகு 35 கட் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்தனர். இதுபற்றி தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது,'கள்ளத் துப்பாக்கி படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழுவினர் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்தனர். பிறகு மறுதணிக்கை குழுவுக்கு விண்ணப்பித்தோம். படத்தை பார்த்தபிறகு 7 மணி நேரம் அதிகாரிகள் எங்களிடம் கேள்வி கேட்டனர்.

வன்முறை அதிகம் இருப்பதாக கூறி மீண்டும் சான்றிதழ் தர மறுத்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் அளித்தேன். பிறகு தாங்கள் சொல்லும் காட்சிகளை வெட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்டோம். 35 சீன்களுக்கு கட் கொடுத்தார்கள். இதில் ஹீரோ, ஹீரோயின் ஜோடி காட்சியும் வெட்டப்பட்டது.  வன்முறையை மையமாக கொண்ட படமாக இருந்தாலும் கடைசியில் அப்படி இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. தமிழ்செல்வன், பிரபாகரன், குட்டி ஆனந்த், விஜித், விக்கி, சாவந்திகா, சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகியாஸ் இயக்கம். முருகேசன், ரவி தேவன் தயாரிப்பு. இவ்வாறு ரவிதேவன் கூறினார்.
 
முன்னணி நடிகையாக இருந்தும் இந்தி பேச முடியாமல் தவிக்கும் கேத்ரினா

leading actress Katrina can not able to speak Hindi மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும் இந்தி பேச முடியாமல் தவிப்பதாக கூறினார் கேத்ரினா கைப். ஷாருக்கான், சல்மான் கான் என முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருப்பவர் கேத்ரினா கைப். லண்டனில் பிறந்து வளர்ந்த கேத்ரினா கடந்த 10 வருடமாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இந்தியில் சரளமாக பேச முடியாமல் தவிக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற் றார். அப்போது ஒரு பெண் நிருபர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். உடனே கேத்ரினா, 'இந்த கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்கிறேன்.

எனக்கு அதுதான் வசதியாக இருக்கிறது' என்ற படி பதில் அளித்தார். இதுபற்றி கேத்ரினா கூறும்போது, 'இந்தி படங்களில் 10 வருடமாக நடித்து வந்தாலும் இந்தியில் சரளமாக பேசுவதற்கு தயக்கம் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தான் எனக்கு எளிதாக இருக்கிறது. 24 மணி நேரமும் என்னுடன் இந்தி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடன் பேசிப் பழகியும் சில கேள்விக்களுக்கு இந்தியில் பதில் சொல்லத் தெரியவில்லை. வேற்று மொழிகளில் நடிக்கும் எல்லா ஹீரோயின்களுக்கும் இப்படியொரு பிரச்னை இருக்கிறது. சரளமாக இந்தி பேசுவதற்கு இன்னும் பயிற்சி எடுத்து வருகிறேன்' என்றார்.
 
வெங்கட்பிரபுவுடன் மோதல் இல்லை : ரிச்சா பேட்டி

No conflict with Venkat : Richa interview சென்னை: இயக்குனர் வெங்கட்பிரபு படத்தில் இருந்து வெளியேறியதால் இருவருக்கும் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா. 'மயக்கம் என்ன?' 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் வெங்கட் பிரபு இயக்கும் 'பிரியாணி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க முடிவானது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ரிச்சா கூறியதாவது: பிரியாணி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டேன். அதில் 3 ஹீரோயின்கள் நடிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவராகத்தான் நான் நடிக்க கேட்டிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். அதில் என்னுடைய வேடமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை.

எனவே விலக முடிவு செய்தேன். இதுபற்றி நானும் வெங்கட்பிரபுவும் மனம்விட்டு பேசினோம். அப்போது குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இஷ்டமில்லை என்பதை தெரிவித்ததுடன் விலகி கொள்ள விரும்புவதையும் தெரிவித்தேன். என் முடிவை அவர் ஏற்றுக்கொண்டார். இன்னொரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வரும்போது நடிப்பேன். தெலுங்கு படத்தில் கவனத்தை திருப்பிவிட்டீர்களா? என்கிறார்கள் தமிழ் படங்கள்தான் என்னை நடிகையாக அங்கீகரித்தது. 'மயக்கம் என்ன' படத்திற்காக 5 விருதுகளும். 'ஒஸ்தி' படத்திற்காக ஒரு விருதும் பெற்றேன். தமிழ் படங்கள் மீது எனக்கும். என் மீது அங்குள்ளவர்களுக்கும் அக்கறை இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது நிச்சயம் ஏற்பேன். அதற்காக காத்திருப்பேன். இதற்கிடையில் 4 தெலுங்கு படங்களில் இப்போது நடித்து வருகிறேன்.
 
கிசு கிசு - குழப்பும் ஹீரோ : பாதிச்ச வசூல்

Kodambakkam kodangi நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

நடிகர்கள கிண்டலடிச்சி நடிச்ச ஷிவ் ஹீரோ எதையும் காமெடியா எடுத்துக்கறாராம்... எடுத்துக்கறாராம்... அவரது மேரேஜ் பத்தி இப்ப கோடம்பாகத்துல பேச்சு வந்திருக்காம். சின்னவயசுலருந்து பழகின பிரியமானவர மேரேஜ் பண்ணப்போறதா நட்பு வட்டாராங்க சொல்றாங்களாம். ஆனா ஹீரோயினுங்க மாதிரி ஷிவ் ஹீரோ, 'மேரேஜ் நடக்குற எடம் சொல்லாமாட்டேன்'னு மறைக்கறாராம். நடிகைங்கதான் மவுசு குறைஞ்சிடும்னு மறுப்பாங்க இவரு எதுக்காக மறைக்கறாருன்னு நட்புவட்டாரங்க குழப்பத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

சைலன்ட் படை படத்தோட செகன்ட் பார்ட்ல சத்யமான உசர நடிகர் நடிக்கறாராம்... நடிக்கறாராம்... இதோட ஷூட்டிங் காட்டுபகுதில நடத்த முடிவு பண்ணி பட குழு போச்சாம். காட்டுபகுதிக்குள்ள யூனிட் நுழைஞ்சதும் அந்த பக்கத்துல இருக்க சமூக ஆர்வலருங்க ரவுண்டு கட்டிட்டாங்களாம். இங்க ஷூட்டிங் நடத்தகூடாதுனு ஆர்டர் இருக்குனு வாதம் பண்ணாங்களாம். ஆனா யூனிட்காரங்க முறைப்படி பர்மிஷன் வாங்கிட்டுதான் ஷூட்டிங் நடத்தறோம்னு சொன்னாங்களாம். கையில ஆர்டரோட இருந்த பட குழுவுக்கு அதிகாரிங்களும் சப்போட் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்...

புயலடிச்சி ஓய்ஞ்சதுல சைலன்ட்டா தியேட்டர்காரங்க வசூல் பாதிச்சிடுச்சாம்... பாதிச்சிடுச்சாம்... கரை கடக்கப்போற புயல் அத சாய்க்கும், இத சாய்க்கும்னு அறிவிப்பு வந்த வண்ணமிருந்தச்சாம். இதுல பயந்துபோன சில தியேட்டர்காரங்க காட்சிகள ரத்து பண்ணிட்டாங்களாம். இன்னும் சில தியேட்டர்ல ரசிகருங்க கூட்டம் கம்மியா இருந்ததால காட்சிய ரத்து பண்ணிட்டாங்களாம். நல்ல வசூல்ல போன படங்ககூட புயல் பீதில படுத்திடுச்சாம். இதுலயிருந்து மீளனும்மா சீக்கிரமே வர்ற தீபாவளி ரிலீஸ்ல கல்லா கட்டினாதான் உண்டுனு தியேட்டர்காரங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
 
யாருக்கு தெரியும் - சினிமா விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: கலாபவன் மணி, ஜெயப்பிரகாஷ், சஞ்சனா சிங், அச்சுத குமார், அக்ஷதா, தர்மா, திலீப் ராஜ், ஹாரிஸ் ராஜ், நிஷான்

இசை: கண்ணன்

பிஆர்ஓ: ஏ ஜான்

தயாரிப்பு: ஸ்ரீதர் (அருபேரா ஆர்ட் வெஞ்ச்ரா )

கதை, திரைக்கதை, இயக்கம்: ஸ்ரீதர்

ஒரு சில படங்கள் பார்க்க ஆரம்பித்த பத்து நிமிடங்கள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழிக்க நேரிடம்... ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது படத்துக்குள் நம்மையும் அறியாமல் போய்விட்டிருப்போம்.

அப்படி ஒரு த்ரில்லர் படம் யாருக்குத் தெரியும்.

yaarukku theriyum review   
Close
 
படம் ஆரம்பிக்கும்போது, குடோன் மாதிரி ஒரு இடத்தில் ஒருவன் மயக்கம் தெளிந்த நிலையில் திணறிக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நாற்காலியில் கட்டுண்டு கிடக்கிறான். மூன்றாமவன் தரையில் ரத்தம் வழிய கிடக்கிறான்.

அடுத்த சில நிமிடங்களில், இன்னொருவன் ஒரு அறையிலிருந்து வருகிறான். அடுத்த காட்சி நகர, ஒரு பெண்ணும் ஆணும் மயக்கம் தெளிந்து எழுகிறார்கள்.

இந்த ஏழு பேருக்கும் தாங்கள் எப்படி அங்கே வந்தோம் என்பது நினைவில் இல்லை. தாங்கள் யார் என்பதும் தெரியவில்லை. வெளியே போகலாம் என்றால் அந்த இடம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், ஏன் அங்கே வந்தார்கள்? எப்படி மயங்கினார்கள்? தங்களைப் பற்றி அறிந்து, எப்படி வெளியில் செல்கிறார்கள்? என்பதுதான் மீதிக் கதை.

ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பியடித்தாலும், காட்சிகள் நகர நகர, ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ, ஒரு துப்பறியும் நாவலின் சுவாரஸ்யம் வந்துவிடுகிறது.

தெரிந்த முகம் என்று பார்த்தால், கலாபவன் மணி, ரியாஸ்கான், சஞ்சனா மற்றும் ஜெயப்பிரகாஷ்தான். மற்றவர்கள் புதுமுகம் என்றாலும் சின்சியராக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அந்த குடிகாரன் பாத்திரத்தில் வரும் அச்சுத குமார்!

ஹீரோயின் என்று தனியாக யாருமில்லை. சஞ்சனா சிங்கும், புதுமுகம் அக்ஷதாவும்தான் படத்தில் வரும் மொத்த பெண் பாத்திரங்களே.

தமிழ்ப் படம் கண்ணனின் இசையும், மகேஷ் கே தேவின் ஒளிப்பதிவும் படத்தின் சஸ்பென்ஸைக் காப்பாற்றும் அளவுக்கு உள்ளன. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

ஆரம்பக் காட்சிகளில் இன்னும் கூட அமெச்சூர்த்தனத்தைக் குறைத்திருக்கலாம் இயக்குநர். குறிப்பாக இரு முறை பேக்டரிக்கு வரும் போலீசார், கேட்டைக் கூட திறக்காமல் அப்படியேவா திரும்பிப் போவார்கள்?

குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஸ்டேடஸ் பிரச்சினை வர, அது பெரிய பிரச்சினையாக மாறுவதை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் நீளம் குறைவு என்பது இன்னொரு பெரிய ஆறுதல். நிச்சயம் ஒரு முறை பார்க்கக் கூடிய படம்தான்!

ரஜினி பாணியில் நடிகர் 'மிர்ச்சி' சிவா திருமணம்

Actor Shiva Enter Wedlock On Nov 15

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி பாணியில் நடிகர் 'மிர்ச்சி' சிவாவின் திருமணம் நடைபெறப் போகிறது.

‘சென்னை-28' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரேடியோ ஜாக்கியாக இருந்த சிவா. இதைத் தொடர்ந்து, ‘சரோஜா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ‘தமிழ் படம்' என்ற படம் மூலம் கதாநாயகன் ஆனார். சுந்தர் சி. டைரக்ட் செய்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘கலகலப்பு' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடிக்கிறார்.

தில்லுமுல்லு வெளியானபோதுதான் ரஜினியின் திருமணம் நடந்தது. லதாவை காதலித்து மணம் புரிந்தார். தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வரும் 'மிர்ச்சி' சிவாவின் திருமணமும் அதே பாணியில் நடைபெறவுள்ளது. இதுவும் காதல் திருமணமாம்.

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கடந்த ஐந்து வருடமாக காதலில் மூழ்கியுள்ளார் சிவா. பேட்மிண்டன் வீராங்கனையான பிரியாதான் சிவாவின் மனம் கவர்ந்தவர். இப்போது இவர்களது காதல் திருமணத்தில் வந்து முடிகிறது. நவம்பர் 15ம் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாம்.

அலட்டிக் கொள்ளாத கேஷுவல் காமெடியைப் பலமாக கொண்டு நடித்து வரும் சிவாவின் மனம் கவர்ந்த பிரியா தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாராம்.