ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Salman Khan Joins Facebook Gets   

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று ஒருவழியாக ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். பாக் ஆபீஸில் மட்டுமல்ல ஃபேஸ்புக்கிலும் புதிய சாதனை படைத்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களில் ஆமீர் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன் உள்பட ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இந்நிலையில் சல்மான் கான் இன்று ஃபேஸ்புக்கில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது,

நான் ஏன் ஃபேஸ்புக்கில் இல்லை என்று பலர் என்னிம் கேட்டனர். ஃபேஸ்புக்கில் என் பெயரில் உள்ள போலி அகௌண்டுகளால் ஏகப்பட்ட குழப்பம். இப்போது நானே ஃபேஸ்புக்கில் சேர்ந்துவிட்டேன். போலி அகௌண்ட்கள் இதில் சேரவேண்டும் இல்லை என்றால் காணாமல் போக வேண்டும் என்றார்.

சல்மானின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது புதிய படங்கள், போட்டோக்கள். வீடியோக்கள் உள்ளிட்டவை இருக்கும். சல்மான் படம் ரிலீஸானால் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்கும். அதே போன்று அவர் ஃபேஸ்புக்கில் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் அகௌண்ட் ஓபன் செய்த அன்றே 26 லட்சம் பேர் அவரை பக்கத்திற்கு லைக் கொடுத்துள்ளனர்.

சாதனை நாயகன் சல்மான்...

 

சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா

Shriya Goes Tokyo Attend Sivaji 3d   

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார்.

ரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

கன்னித்தீவு கதையாக நீளும் அத்திப்பூக்கள்!

Athipookkal Creates Big Yawn Among Viewers

தினத்தந்தி நாளிதழில் நம் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து கன்னித்தீவு படக்கதை வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதையும் தோற்கடிக்கும் விதமாக 2 ஆயிரமாவது எபிசோடை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது அத்திப்பூக்கள் சீரியல்.

சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை என்னவோ சாதாரணமாக அண்ணி - நாத்தனார் பிரச்சினை கதைதான். ஆனால் ஜவ்விழுப்பு இழுத்து 2 ஆயிரம் எபிசோடுகளை எட்டிப்பிடிக்கப்போகிறது.

கதாநாயகி பத்மாவின் அண்ணன் மனைவி அஞ்சலி. பத்மாவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக தனது மகன்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அஞ்சலி பத்மாவின் கருவை கலைத்து அவளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் செய்து விடுகிறாள்.

இது தெரியாமல் வாடகைத்தாய் கற்பகம் மூலம் குழந்தையை பெற்று தான் தான் அந்த குழந்தையை பெற்றெடுத்ததாக உலகிற்கு அறிமுகம் செய்கிறாள் பத்மா. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி பத்மாவின் கணவன் மனோகருக்கும் வாடகைத்தாய் கற்பகத்திற்கும் தவறான உறவு இருப்பதாக கதை கட்டி பத்மாவை கணவனிடம் இருந்து பிரிக்கிறாள்.

ஆயிரம் எபிசோடுகளை இந்த கதையே தாண்டிவிட்டது. இப்பொழுது 2000 மாவது எபிசோடுகளை எட்டப்போகிறது. இப்பொழுதுதான் கருவை கலைக்க மருந்து கொடுத்த நாகம்மா மூலம் பத்மாவின் கரு கலைந்து போனதற்குக் காரணம் அஞ்சலிதான் என்று தெரியவந்துள்ளது. இதனை அஞ்சலியின் பி.ஏ. ரமாவிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பத்மா கொலை வழக்கில் ஜெயிலுக்குள் உள்ள அஞ்சலி வெளியே வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த கதை இப்படியே நீண்டு கொண்டிருக்க இன்னும் எத்தனை எபிசோடுகளை முழுங்கப் போகிறதோ தெரியலை. மத்தியான சாப்பாடு ஒழுங்காக சாப்பிடுகிறார்களோ இல்லை. பெரும்பாலான அத்திப்பூக்கள் தவறுவதில்லையாம். இதனை கவனித்த திருடன் ஒருவன் சரியான இரண்டு மணியில் இருந்து இரண்டரை மணிக்குள் வீடுகளுக்குள் புகுந்து சிலிண்டர்களை திருடிச் சென்றதாக வேறு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

அத்திப்பூக்கள் மதியத் தூக்கத்தை கெடுத்தது மட்டுமல்லாது வீட்டில் உள்ள சிலிண்டர்களைகளையும் திருடு போகச் செய்துள்ளது என்பது வேதனையான விசயம். இல்லத்தரசிகளே இனியாவது உஷாராக இருங்களேன்.

 

சம்பாதிக்கிறது செலவு பண்ணத்தானே!..இது கீர்த்தியின் பார்முலா

Keerthi S Formula

நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அலங்காரம் செய்வதில் மானட மயிலாட நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்தியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அந்த அளவிற்கு அமர்களமான உடை அலங்காரம் இருக்கும். இதெல்லாம் கீர்த்தியின் சொந்த காசில் வாங்கிய ஆடைகளாம்.

சம்பாதிக்கும் காசில் 70 சதவிகிதத்தை உடைகள் வாங்கவும், மேக் அப் சாதனங்கள் வாங்கவும் மட்டுமே செலவிடுகிறாராம் கீர்த்தி. மானாட மயிலாட, நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளின் போது விலை உயர்ந்த இந்த ஆடைகள்தான் கீர்த்தியின் மீது ஸ்பெசல் கவனிப்பை ஏற்படுத்துகிறதாம்.

உடைக்காக ஏன் இத்தனை செலவு என்று யாராவது வி‌சா‌ரி‌த்‌தா‌ல்‌ பணம்‌ சம்‌பா‌தி‌ப்‌பதே‌ நம்‌மை‌ அழகுப்‌படுத்‌தி‌க்‌ கொ‌ள்‌ள தா‌ன்‌ என்‌கி‌றா‌ரா‌ம்‌ கீர்த்தி.

 

பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?

Clash The Heroines Who Will Win   

மும்பை: இந்த மாத இறுதியில் கரீனா கபூரின் ஹீரோயின், அடுத்த மாத துவக்கத்தில் ஸ்ரீதேவி, பிரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆகியோரின் படங்கள் ரிலீஸாகின்றன. இதில் யாரின் படம் வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கரீனா கபூரின் ஹீரோயின் படம் வரும் 21ம் தேதி அதாவது அவரது பிறந்தநாளன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்பதோடு, கரீனாவுக்கு விருதுகளை வாங்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளராக மாறியுள்ள பிரீத்தி ஜிந்தாவின் இஷ்க் இன் பாரீஸ் மற்றும் பல ஆண்டுகள் கழித்து ரீஎன்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் ஆகிய படங்கள் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. இதோ நானும் போட்டிக்கு வருகிறேன் என்று ராணி முகர்ஜியின் அய்யா படம் அக்டோபர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பாலிவுட்டின் பெரிய நட்சத்திரகங்களின் இந்த படங்களில் யாருடைய படம் சூப்பர் ஹிட்டாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரீனாவின் ஹீரோயின் தான் மற்ற படங்களை விட நன்றாகப் போகும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் ராணி, பிரீத்தியின் ரசிகர்கள் பட்டாளத்திற்கும் குறைவில்லை.

நீண்டடட காலம் கழித்து நடிக்க வந்துள்ள ஸ்ரீதேவியின் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் உள்ளது. அய்யாவில் மலையாள நடிகர் ப்ரித்விராஜும், இங்கிலீஷ் விங்கிலீஷில் அஜீத் குமாரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு தேவியாரில் ஜெயிக்கப் போவது யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா

14 Hansika S Not Buying House Chennai   

சென்னை: ஹன்சிகா சென்னையில் வீடு வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஹன்சிகா சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2, ஆர்யாவுடன் சேட்டை ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் கோலிவுட்டில் கவனம் செலுத்த சென்னையில் வீடு வாங்கும் எண்ணத்தில் இருப்பதாகவும், நல்ல வீடு தேடி அலைவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் சென்னையில் வீடு வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில்,

இன்றைய தொழில்நுட்பத்தில் யார் எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் யாரையும் தொடர்பு கொள்ளலாம். அதனால் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த அவர் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஹன்சிகாவை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எந்நேரத்திலும், எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். அவர் இந்தியாவின் எந்த இடத்திற்கும் ஆகாய மார்ககமாகவோ, சாலை மூலமாகவோ செல்லலாம். அதனால் அவர் சென்னையில் வீடு வாங்கவில்லை என்றனர்.

 

50 நாளில் 24.5 கோடி... இரு மொழிப் பட வரலாற்றில் புதிய சாதனை!

Naan Ee Collects 24 5 Cr 50 Days   

தெலுங்கில் தயாராகி, தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்களில் புதிய சாதனையைச் செய்திருக்கிறது நான் ஈ.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 50 நாட்களில் தமிழில் மட்டும் 24.5 கோடியை ஈட்டியுள்ளது.

ஏற்கனவே அனுஷ்கா நடித்த ‘அருந்ததி' தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். அப்படம் 6.5 கோடி வசூலித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. தமிழகமெங்கும் ‘நான் ஈ' படத்தை 221 தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் 72 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியுள்ளது.

சென்னையில் ரூ. 4 கோடியும், கோவையில் ரூ. 4.5 கோடியும், செங்கல்பட்டு ஏரியாவில் ரு. 4.5 கோடியும் வசூலித்துள்ளது.

'நான் ஈ' படத்தில் சுதீப், நானி, சமந்தா நடித்துள்ளனர்.

தமிழில் வெளியாகி, அதன் தெலுங்கு டப்பிங்கில் அதிக தொகையை சம்பாதித்த ஒரே படம் ரஜினியின் எந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'ராமச்சந்திரனாக' ஸ்ரீகாந்த்.. 'நம்பியாராக' சந்தானம்!

Srikanth S Next Nambiyar

பாகன் வெற்றியில் படு உற்சாகமாக இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். இப்போது அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாகியுள்ளார்.

அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு நம்பியார் என்று தலைப்பிட்டுள்ளனர் (வேற யாராவது வச்சிருக்காங்களான்னு செக் பண்ணிக்கங்கப்பா... இல்லன்னா ரிலீசுக்கு முந்தின நாள் கேஸ் போடுவாங்க!).

இந்தப் படத்தை இயக்குபவர் புதுமுகம் கணேஷ். படத்தின் தலைப்புக்கும் பாத்திரங்களுக்கும் ரொம்பவே தொடர்புள்ளதாம்.

இதில் கதாநாயகன் ஸ்ரீகாந்த் பெயர் ராமச்சந்திரன். அவருக்கு எதிரியாக வரும் சந்தானத்தின் பெயர் நம்பியாராம். ஆனால் சந்தானம் வேடம் ஒரு கற்பனை பாத்திரமாக வருகிறதாம் படத்தில்.

நகைச்சுவை, காதல் கலந்து சுவாரஸ்யமான படமாக நம்பியார் இருக்கும் என்கிறார் ஸ்ரீகாந்த்.

இந்தப் படம் குறித்து நம்மிடம் ஸ்ரீகாந்த் பேசுகையில், "இதுவரை நான் கேட்காத புதிய பாணி கதை இது. நிச்சயம் இதை எங்கு வேண்டுமானாலும் சொல்ல முடியும். கேட்ட உடனே பிடித்துப் போய் ஒப்புக் கொண்டேன். என்னைவிட சந்தானத்துக்கு ரொம்ப பிடித்துவிட்டது. இந்தப் படத்துக்காக சில பெரிய படங்களைக் கூட அவர் தவிர்த்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்," என்றார் ஸ்ரீகாந்த்.

 

இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா!

Namithaa S Technique Avoid Director   

டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை.

ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி.

எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் உண்டாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு படத்தை ஆரம்பித்தார். வாய்ப்பு உள்ள, வாய்தா போன நடிகைகள் 9 பேரை கதாநாயகி என அறிவித்துவிட்டார்.

அவர்களில் ஒருவர் நமீதா. உப்புமா கம்பெனி என்றாலும், அவசரத்துக்கு உப்புமாவும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.

படப்பிடிப்புக்கு செல்லும் போதுதான், அவர் காதில் இயக்குநரின் 'இறுக்கியணைச்சு உம்ம தரு' மேட்டரை சொன்னார்களாம்.

அப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்ட ஆறடி உயர அம்மணி, செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஹலோ நமீதா டியர் என்று உரக்கச் சொன்னபடி அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்க இயக்குநர் ஓடி வர, நமீதா சட்டென்று இரண்டடி பின் வாங்கி 'வணக்கம் பிரதர்' என்று போட்டாராம் ஒரு போடு!

செம ஷாக்காகிப் போன டைரடக்கர், 'யாரோ செம்மையா போட்டுக் கொடுத்திருக்காங்கப்பா... கட்டிப்புடிக்கலன்னாலும் பரவால்ல.. வாய்க்கு வாய் மச்சான்ஸ் மச்சான்ஸ்னு கூப்புடற அந்தப் பொண்ணு புதுசா பிரதர்னு சொல்லிடுச்சே...!" என்று இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருந்தாராம்!

 

சுந்தரபாண்டியன், நெல்லை சந்திப்பு, துள்ளி எழுந்தது காதல்... - இன்னிக்கு மூணு!

Friday Releases Sundara Pandiyan   

இந்த வெள்ளிக்கிழமை மூன்று நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

சசிகுமாரின் சுந்தரபாண்டியன்தான் இந்த மூன்றில் பெரிய படம்.

சுந்தர பாண்டியன்

இது சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ளார். சசிகுமாரின் முன்னாள் உதவியாளர் இவர்.

எஸ்ஆர் ரஹ்நந்தன் இசையமைத்துள்ளார். சசிகுமாருக்கு ஜோடி லட்சுமி மேனன். பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி ஆகியோரும் உண்டு. தலைப்பு பிரச்சினையைக் காட்டி படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினாலும், பின்னர் சமரசமாகிவிட்டதால், திட்டமிட்டபடி படம் வெளியாகிறது.

நெல்லை சந்திப்பு

நவீன். கே.பி.பி இயக்கியிருக்கும் படம் நெல்லை சந்திப்பு. மலேஷியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் இசையமைத்துள்ளார்.

ரோகித், பூஷன், மேகா நாயர் நடித்துள்ள இந்தப் படத்தில், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் நடித்துள்ளார் (ஆனால் படத்துக்கு இவர் தயாரிப்பாளர் அல்ல..)

டி கிரியேஷன்ஸ் திருமலை, யங் சினி ட்ரீம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

துள்ளி எழுந்தது காதல்

ஸ்ரீஹரிநானு இயக்கத்தில் வெளியாகும் படம் துள்ளி எழுந்தது காதல். இசை - போபோ சசி. ராஜா, ஹரிப்ரியா, பூமிகா, சிறப்புத் தோற்றத்தில் அனுஷ்கா மற்றும் 40 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து டப்பாகி தமிழுக்கு வந்துள்ள படம் இது.

இந்தப் படங்கள் தவிர இரண்டு இந்திப் படங்களும் வெளியாகின்றன.

 

இந்திக்குப் போகிறது பாகன்!

Paagan Goes Bollywood

தமிழில் டீசன்டான வெற்றிப் படம் என பெயரெடுத்த கையோடு, இந்திக்குப் போகிறது ஸ்ரீகாந்த் நடித்த பாகன்.

தமிழில் இந்தப் படத்தை இயக்கிய அஸ்லமே இந்திப் பதிப்பையும் இயக்குகிறார்.

ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்த பாகன், சின்ன பட்ஜெட்டில் நிறைவான லாபம் தந்த படமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஸ்ரீகாந்த்துக்கு அவரது பழைய மார்க்கெட்டை திரும்பப் பெற வைத்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட்காரர்கள், கிட்டத்தட்ட ப்ரியதர்ஷன் படம் மாதிரி இருக்கிறது என்று கூறி, படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.

தமிழில் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்லம்தான் இந்திப் பதிப்பையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிட நினைத்தவர்கள், இப்போது தெலுங்குக்கு ஏற்ற மாதிரி புதிய திரைக்கதை எழுதி ரீமேக் பண்ணும் முடிவில் உள்ளார்களாம்.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஸ்ரீகாந்த் ரொம்பவே பழக்கமானவர் என்பதால், அவரே ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.

 

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: நடிகை சின்டி

I Was Deceived Innocence Muslims Actress Cindy

வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.

இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.

மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.

இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் ஒரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.

சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

காதுகளால் 'பார்க்கும்' டேனியல் கிஷ்... தாண்டவம் படத்துக்காக விக்ரமுக்கு பயிற்சியளித்தார்!

Echo Location Expert Daniel Kish Thaandavam   

சென்னை: பார்வைத் திறன் இழந்துவிட்டால், இருட்டிலேயே வாழ வேண்டியதுதான் என்ற தியரியை உடைத்திருக்கிறார் டேனியல் கிஷ். அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

எக்கோ லொகேஷன் என்ற புதிய உத்தி மூலம், தன் காதுகளையே கண்களாக்கி, கண் தெரியும் சாதாரண மனிதர்களைப் போல மலைகளில் நடக்கிறார்... அருவியோரங்களை சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்... வாகனங்கள் ஓட்டுகிறார்.

இவரைப் பற்றி கேள்விப்பட்டு, நேரடியாக அமெரிக்கா போய் பேசி, தனது தாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக நடிக்கும் விக்ரமுக்கு பயிற்சி கொடுத்தார்களாம். படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார் டேனியல் கிஷ்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த டேனியல் கிஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், "நான், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். 7 மாத குழந்தையாக இருந்தபோது, ஒரு நோய் தாக்கியதில் ஒரு கண்பார்வை பறிபோனது. 13-வது மாதத்தில் இன்னொரு கண்பார்வையும் பறிபோனது. `ஆபரேஷன்' மூலம் இரண்டு கண்களையும் எடுத்து விட்டார்கள். என்றாலும், என் பெற்றோர்கள், எனக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு, சுதந்திரமாக வளர்த்தனர்.

18-வது வயதில், எல்லா அமெரிக்க இளைஞர்களையும் போல் நானும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். வவ்வால்களைப் போல் காதுகளால் பார்க்கும் திறனை வளர்த்துக்கொண்டு, என்னை நானே கவனித்துக்கொண்டேன். இப்போது கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதன் மூலம் காதுகளால் பார்க்கும் திறனை, பல நாடுகளுக்கும் சென்று கற்றுக்கொடுக்கிறேன்.

`தாண்டவம்' படத்தில் என்னைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக கேள்விப்பட்டதும், சந்தோஷப்பட்டேன். எப்படி நடப்பது, எப்படி ஒலி அலையை காதுகளால் வாங்குவது என்பது பற்றி விக்ரமுக்கு பயிற்சி அளித்தேன். சில நாட்களிலேயே அவர் நன்றாக கற்றுக்கொண்டார்.

நான், அவரை மாணவராகத்தான் பார்த்தேன். நடிகராக பார்க்கவில்லை. விக்ரமின் செல்லப்பெயர், `கென்னி' என்று கேள்விப்பட்டேன். `தாண்டவம்' படத்தில் அதே பெயரில்தான் நடித்து இருக்கிறார். நான், நானாகவே நடித்து இருக்கிறேன்.''கண் பார்வையற்ற ஒருவர், காதுகளையே கண்களாக பயன்படுத்தி, தனது வாழ்க்கையை சிதைத்தவர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் இது. இதில், கண்பார்வையற்றவராக விக்ரம் நடித்திருக்கிறார்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ விக்ரம், இயக்குநர் விஜய், யுடிவி சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தமிழ்நாட்டு விவசாயி சேத்துல கால்வச்சாதான் நாங்க சோத்துல கைவைக்க முடியும் - மம்முட்டி

Mammootty S Opinion On Water Disputes Tn Kerala

சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் ஒரு நல்ல மனிதன் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் நடிகர் மம்முட்டி.

சமீபத்தில் சிவகாசியில் தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை வழங்கி, தமிழ் மக்களை தழுதழுக்க வைத்தவர் மம்முட்டி.

ஆனால் தான் செய்தது ஒரு பெரிய விஷயம் என நினைக்காமல், கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் ஆன ஒரு சின்ன உதவி என்றே கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் - கேரளம் இடையிலான நீர்ப் பங்கீடு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த கேள்விக்கு மம்முட்டி அளித்த நச்சென்ற பதில் இது:

''தமிழ்நாட்டு விவசாயி சேத்துல கால் வெச்சாத்தான், நாங்க சோத்துல கை வைக்க முடியும். இல்லைன்னா, நாங்க பசியும் பட்டினியுமாக் கிடக்க வேண்டியதுதான்.''

இந்த விஷயத்தில் மலையாள பிரபலங்கள் பலரும் இதே போலத்தான் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமே அநியாயத்துக்கு அடம் பிடித்து பிரச்சினையை பகையாக மாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காய்ச்சல், சோர்வு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிபாஷா பாசு

Bipasha Basu Hospitalised Discharged Latter   

மும்பை: காய்ச்சல், உடல் சோர்வால் அவதிப்பட்ட பாலிவுட் நடிகை பிபாஷா பாசு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல் நலம் சற்று தேறியவுடன் அவர் வீடு திரும்பினார்.

இது குறித்து அவருக்கு சிகி்ச்சை அளித்த டாக்டர் சுதிர் டகோன்கர் கூறுகையில்,

காய்ச்சல் மற்றும் சோர்வால் அவதிப்பட்ட பிபாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார் என்றார்.

வீடு திரும்பிய பிப்ஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி அறிந்து கவலையாக உள்ளவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் தற்போது நலமாக உள்ளேன். சோர்வு மற்றும் வைரஸ் காய்ச்சல் என்று தெரிவி்த்துள்ளார்.

பிபாஷா நடித்து அண்மையில் ரிலீஸான ராஸ் 3 படத்தின் வெற்றியை அவர் உடல் நலம் தேறிய பிறகு கொண்டாடப்போவதாக தெரிவித்துள்ளார். தனது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு

Marina Movie Case Filed Against Pandiraj   

'மெரினா' படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டியராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இது பற்றி ' மெரினா ' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பாலமுருகன் கூறியது:

'நானும் இயக்குநர் பாண்டியராஜும் பத்தாண்டுக்கும் மேல் நண்பர்கள். 'பசங்க' படத்துக்கு பிறகு வந்த 'வம்சம்' சரிவரப் போகாததால் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். ஊரிலிருந்து என்னை அழைத்து நாம் படம் செய்யலாம் என்றும் என்னைத் தயாரிப்பாளர் ஆக்குவதாகவும் கூறினார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் 'மெரினா'. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்ததால் அந்த நட்பின் மீது நம்பிக்கை வைத்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் படத்தை தொடங்கினோம். படப்பிடிப்பு தொடங்கியதும் எல்லா செலவுகளையும் நான்தான் செய்தேன்.

பணத்தை மட்டுமல்ல படப்பிடிப்புக்கு என் காரை கூட கொடுத்திருந்தேன். இப்படி நன் 50 லட்ச ரூபாய் செலவு செய்தேன். அதற்கான பில்கள்,வவுச்சர்கள் எல்லம் என்னிடம் இருக்கின்றன. கணக்கும் உள்ளது.

பணத்தேவை முடியும்வரை பாசத்துடன் பழகிய பண்டியராஜ் படப்பிடிப்பு செலவுகள் எல்லாம் செய்து முடித்து படத்தின் பெரும்பகுதி முடிந்ததும் என்னைக் கழற்றிவிடப் பார்த்தார். தான் தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.

வேறு வழியில்லாமல் நீதி மன்றம் சென்றேன். என் பணத்தில் படமெடுத்துவிட்டு இவர் பெயரில் தயாரிப்பாளர் என்று போட்டு வெளியிடுகிறார் என்று கூறினேன். ஏழாவது சிட்டி சிவில் கோர்ட்டில் நீதியரசர் சந்திரசேகர் அவர்கள் 31.01.2012ல் எங்களை அழைத்து விசாரித்தார். அப்போது பேசிய போது சமரசம் ஏற்பட்டது. அதன்படி என்னை தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று போட வேண்டும் என்று படப்பிடிப்பு செலவை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவானது.

படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்று பெயர் போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் வெளிமொழி உரிமை,சாட்லைட் உரிமை தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் எனக்கு எந்தவித பலனும் இல்லை. படமும் வெளியானது. பாண்டியாஜ் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டேன். இப்ரகிம் ராவுத்தர் அப்போது இருந்தார்,. என் பிரச்சனையைச் சொன்னேன். அப்போது வேறு 9 தயாரிப்பாளர்களும் கூட உடன் இருந்தார்கள் ஐம்பது லட்சம் செலவு செய்திருக்கிறேன் என்று கூறினேன்.

ரூ 6 கோடி லாபம்...

பாண்டியராஜை அழைத்து பேசினார்கள். அவர் அப்போது 80-85 செலவாகி விட்டது . இவர் செலவு செய்தற்கு கணக்கு என்னாயிற்று என்றார். நான் இருக்கிறது என்றேன்.
தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் பிறகு அவர் என் மீது தயாரிப்பாளர் சங்கம் மூலம் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். 'மெரினா' படத்தின் மூலம் ஆறுகோடி ரூபாய் லாபம் பார்த்தவர் படத்தில் தனக்கு லாபமே இல்லை நஷ்டம் என்றார்.

மீண்டும் என்னை சமரசத்துக்கு அழைத்த பாண்டியராஜ் ஒரிஜினல் டாக்குமெண்டுகளை கொடுத்தால் சமாதானமாகி விடலாம் என்றார். தான் மாறிவிட்டதாகவும் இனி இதுமாதிரி நமக்குள் வேண்டாம் என்று கூறியதாலும் நம்பி செலவுக் கணக்குகள் டாக்குமெண்ட்களை கொடுத்தேன். வாங்கிய பிறகு மாற்றிப் பேச ஆரம்பித்தார். அதனால் மீண்டும் நீதிமன்றம் சென்றேன். நீதிபதி சின்னசாமி அவர்கள் விசாரித்தார். ஒன்பது லட்சம் பணமாகவும் மீதியை செக்காகவும் கொடுப்பதாகவும் முடிவானது அப்படி அவர் கொடுத்த 15 லட்சத்தை தவிர வேறு ஒரு காசும் இன்னும் தரவில்லை.

படப்பிடிப்புக்கு முதலீடு செய்து செலவு செய்த பணமும் வரவில்லை. படத்தின் மூலம் அடைந்த லாபமும் என் பங்கிற்கானது வரவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆந்திரஜோதி பத்திரிக்கையில் மெரினா' தெலுங்கில் வெளியாகிறது என்றும், எஸ்.வி.ஆர்.மீடியா நிறுவனம் தெலுங்கில் வெளியிடுவதாகவும் விளம்பரம் வந்துள்ளது.

தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி பெறாமல் ' மெரினா' வை வேறு மொழிகளில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக படம் விற்கப்பட்டுள்ளது. வெளியிடுவதாக விளம்பரமும் வந்துள்ளது. எஸ்.வி.ஆர். மீடியா நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பாண்டியராஜ் மீது கிரிமினல் வழக்கும் தொடர்ந்து இருக்கிறேன்', என்றார்.

'சினிமாவில் பழக்கம், நட்பு, நம்பிக்கை என்று நினைத்து பண விஷயத்தில் யாரும் முறையான ஒப்பந்தம் இல்லாமல் செயலில் இறங்க வேண்டாம். அப்படி இறங்கினால் என்னைப் போல ஏமாற வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன். ஏமாற வேண்டாம்', என்பதை தனது அனுபவப் பாடமாகச் சொன்னார்.

 

சினேகா அளவுக்கு கிளாமரா நடிக்க ஆசை: சந்திரா லட்சுமணன்

Actress Chandra Lakshmanan Interview

சன் டிவியில் சொந்த பந்தம் ஜீ தமிழ் டிவியில் துளசி என அமைதியான கதாபாத்திரத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளார் சந்திரா லட்சுமணன். மலையாள திரை உலகில்தான் அறிமுகம் என்றாலும் தமிழில் கோலங்கள் தொடரில் போல்டான பெண்ணாக வந்து யார் இவர் என்று கேட்க வைத்தவர். சின்னத்திரை மட்டுமல்ல சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவர் தன்னுடைய திரை உலக பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

நா‌ன்‌ தி‌ரை‌த்‌துறை‌க்‌கு வந்‌து பத்‌து வருடங்‌கள்‌ ஆகி‌றது. ஆரம்‌பத்‌தி‌ல்‌ மலை‌யா‌ள படங்‌கள்‌ , தொ‌டர்‌கள்‌ நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌. கடந்த ஐந்து வருடங்‌களா‌க தமி‌ழ்‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌யி‌ல்‌ நடி‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌. எங்‌க அப்‌பா‌ இந்‌துஸ்‌தா‌ன்‌ லீ‌வரி‌ல்‌ ஓர்‌க்‌ பண்ணி‌னா‌ர்‌,அம்‌மா‌ பே‌ங்‌க்‌ல ஓர்‌க்‌ பண்‌றா‌ங்‌க.என்‌னோ‌ட கூட பி‌றந்‌தவங்‌க யா‌ரும்‌ இல்‌லை‌ நா‌ன்‌ ஒரே‌ பெ‌ண்‌. ஓட்‌டல்‌ மே‌னே‌ஜ்‌மண்‌ட்‌ படி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. இரண்‌டரை‌ வயதி‌ல்‌ இருந்‌து பரதநா‌ட்‌டி‌யம்‌ கற்‌றுக்‌கொ‌ண்‌டடே‌ன்‌. பத்‌தா‌வது படி‌க்‌கும்‌ போ‌தே‌ நி‌றுத்‌தி‌வி‌‌ட்‌டே‌ன்‌. அரங்‌கே‌ற்‌றம்‌ பண்‌ணவி‌ல்‌லை‌யே‌ன்‌றா‌லும்‌. அதை‌ வி‌ட அதி‌கமமா‌ கற்‌றக்‌கொ‌ண்‌டே‌ன்‌. என்‌னோ‌ட முதல்‌ டா‌ன்‌ஸ்‌ குரு சா‌ந்‌தி‌ கி‌ருஷ்‌ணா‌.

நான் திரைத்துறைக்கு வந்தது விபத்துதான். பா‌ர்‌க்‌ ஷர்‌டன்‌ ஓட்‌டல்‌ல டிரையினிங்ல இருந்தப்ப சினிமா தொடர்புடைய‌ யா‌ரோ‌ என்‌னை‌ பா‌ர்‌த்‌து வி‌ட்‌டு நடிக்க அழை‌த்‌தா‌ர்‌கள்‌. எனக்‌கு பி‌லி‌ம்‌ பே‌க்‌ ரவு‌ண்‌ட்‌ கி‌டை‌யா‌து. யா‌ர்‌கி‌ட்‌ட கே‌ட்‌பதுனு தெ‌ரி‌யல அதனா‌ல சா‌மி‌ முன்‌னா‌டி‌ சீ‌ட்‌டு குலுக்‌கி‌ப்‌ போ‌ட்‌டு பா‌ர்‌த்‌தோ‌ம்‌. அதி‌ல்‌ முன்‌று முறை‌யு‌ம்‌ நடி‌கை‌ன்‌னு தா‌ன்‌ வந்‌தது. பி‌றகு தா‌ன்‌ இந்‌த பீ‌ல்‌டுக்‌கு வந்‌தே‌ன்‌.

மலை‌யா‌ளத்‌தி‌லும்‌ சீ‌ரி‌யல் நி‌றை‌ய‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. அங்கே‌ ஒரு படத்தோ‌ட செ‌ட்‌டப்‌ எப்‌படி‌யி‌ருக்‌குமோ‌ அந்‌த செ‌ட்‌டப்‌ இங்‌கே‌ சீ‌ரி‌யலுக்‌கே‌ இருக்‌கும்‌. அங்‌கே‌ படத்‌தி‌ற்‌கு இருக்‌கும்‌ பி‌ரமாண்‌‌டம்‌ இங்‌கே‌ சீ‌ரி‌யல்‌ல இருக்‌கும்‌. நி‌றை‌ய வி‌த்‌தி‌யா‌சம்‌ இருக்‌கு. தமி‌ழ்‌ இண்‌‌டஸ்‌ட்‌ரி‌ பெ‌ரி‌ய இன்‌‌டஸ்‌ட்‌ரி‌ . இங்‌கே‌‌ டெ‌க்‌னீ‌க்‌கல இருந்து எல்‌லா‌வற்‌றி‌லும்‌ ரொ‌ம்‌ப அட்‌வா‌ன்‌ஸா‌ இருக்‌கும்‌. இங்‌கே‌ நி‌றை‌ய டை‌ம்‌ கி‌டை‌க்‌கும்‌. அங்‌கே‌ கா‌ல்‌ஷி‌ட்‌ எல்‌லா‌ம்‌ கி‌டை‌யா‌து. இரவு‌ ஒன்‌பதரை‌,பத்‌துவரை‌க்‌கும்‌ ஓர்‌க்‌ பண்‌ண வே‌ண்‌டி‌யி‌ருக்‌கும்‌. இங்‌கே‌ கா‌ல்‌ஷி‌ட்‌ வை‌த்‌து ஓர்‌க்‌ பண்‌றது ரொ‌ம்‌ப கா‌ம்‌பட்‌டபு‌ளா‌ இருக்‌கு.

நான் நடித்ததில் கோலங்கள், வசந்தம், காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களில் கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது. இப்‌போ‌ கூட நி‌றை‌ய பே‌ர்‌ என்‌னி‌டம்‌ கா‌தலி‌க்‌க நே‌ரமி‌ல்‌லை‌ தொ‌டர்‌ பற்‌றி‌தா‌ன்‌ ரொ‌ம்‌ப வி‌சா‌ரி‌ப்‌பா‌ர்‌கள்‌. ஒரு தொ‌டருக்‌கா‌க சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ வரை‌ போ‌னதே‌ மறக்‌க முடி‌யா‌த அனுபவம்‌ தா‌ன்‌. அந்‌த தொ‌டருக்‌கா‌க என்‌சொ‌ந்‌த குரலி‌ல்‌ டப்‌ செ‌ய்‌ததும்‌, முதன்‌ முறை‌யா‌ என்‌குரலை‌ ஸ்‌கீ‌ரி‌ன்‌ல கே‌ட்‌டதும்‌ மறக்‌கவே‌ முடி‌யா‌து.

நா‌ங்‌கள்‌ கே‌ரளா‌வி‌ல்‌‌ இருந்‌த தமி‌ழ்‌ பி‌ரா‌மி‌ன்‌‌ என்‌பதா‌ல வீ‌ட்‌டி‌ல்‌ பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்கும். எப்‌பவு‌மே‌ ஆத்‌துக்‌கு போ‌றே‌ன்‌, போய்‌ன்‌றி‌ருக்‌கே‌ன்‌.இப்‌படி‌ தா‌ன்‌ வரும்‌ ஆனா‌ல்‌ அந்‌த தொ‌டரி‌ல்‌ தே‌‌வர்‌ பொ‌ண்‌ணு கே‌ரக்‌டர்‌. அந்‌த பேச்சே வே‌ற மா‌தி‌ரி‌ இருக்‌கனும்‌. அடி‌க்‌கடி‌ பே‌சும்‌ போ‌து என்‌ தமி‌ழ்‌ வந்‌தி‌டும்‌. பி‌ரஜன்‌ மலை‌யா‌ளி‌ ஆனா‌ அவர்‌ மலை‌யா‌ளத்‌தை‌ வி‌ட தமி‌ழ்‌ தா‌ன்‌ நல்‌லா‌ பே‌சுவா‌ர்‌. அதே‌ மா‌தி‌ரி‌ அந்‌த தொ‌டரி‌ன்‌ டை‌ரக்‌டரும்‌ ஒரு மலை‌யா‌ளி‌ நா‌ன்‌ பே‌சும்‌ போ‌து தப்‌பு‌ வந்‌தா‌ சரியா கண்‌டு பி‌டி‌ச்‌சி‌டுவா‌ர்‌. இப்‌போ‌ இந்‌தளவு‌க்‌கு தமி‌ழ்‌ பே‌சுறே‌ன்‌னா‌ அது அந்‌த தொ‌டர்‌ முலமா‌ தா‌ன்‌.

தமிழ் படங்‌களில் நடி‌ப்‌பதற்‌கு நி‌றை‌ய ஆசை‌யி‌ருக்‌கி‌றது. ஆனா‌ல்‌ லீ‌ட்‌ ரோ‌ல்‌ தா‌ன்‌ பண்‌ணுவே‌ன்‌ கி‌டை‌யா‌து. ஒரு படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தா‌ல்‌ அதி‌ல்‌ என்‌னை‌ ஆடி‌யன்‌ஸ்‌ ஞா‌பகம்‌ வை‌த்‌துக்‌ கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌. அந்‌த மா‌தி‌ரி‌ ரோ‌ல்‌ஸ்‌ பண்ணனும்‌. கி‌ளமர்‌ எல்‌லா‌ம்‌ ஒரளவு‌க்‌கு தா‌ன் ‌பண்‌ணுவே‌ன்‌. சி‌னே‌கா‌ பண்‌றளவு‌க்‌கு தா‌ன்‌ எனக்‌கு இன்‌ட்‌ரஸ்‌ட்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ இருந்‌தே‌ ரொ‌ம்‌ப செ‌ல்‌க்‌டீ‌வ்‌வா‌ன கே‌ரக்‌டர்‌ஸ்‌ தா‌ன்‌ நா‌ன்‌ பண்‌றே‌ன்‌. ஒரு எக்‌ஸ்‌பி‌ரி‌மண்‌ட்‌டா‌ன கே‌ரக்‌டரா‌ இருக்‌கனும்‌. அதே‌ மா‌தி‌ரி‌ எல்‌லா‌வி‌தமா‌ன கே‌ரக்‌டரும்‌ பண்‌ணனும்‌. அப்‌போ‌ தா‌ன்‌ ஒரு ஆர்‌டி‌ஸ்‌ட்டா‌‌ கம்‌ப்‌ளி‌ட்‌‌ ஆவதா‌க அர்‌த்‌தம்‌. சி‌னி‌மா‌ சீ‌ரி‌யல்‌ன்‌னு வி‌த்‌ததி‌யா‌சம்‌ எதுவு‌ம்‌ நா‌ன்‌ பா‌ர்‌க்‌கவி‌ல்‌லை‌. என்‌ன கே‌ரக்‌டர்‌ பண்‌றே‌ன்‌ என்‌பது தா‌ன்‌ முக்‌கி‌யம்‌. இப்பொழுது சன் டிவியில் ‘சொந்த பந்தம்' நடித்துக்கொண்டிருக்கிறேன். கிராமத்துப் பெண் கதாபாத்திரம். ஜீ தமிழில் ‘துளசி' லீட் ரோல் நான்தான் என்பதால் என் கதாபாத்திரம் பேசும் படியாக அமைந்திருக்கிறது.

நான் நடித்து வரும் பாத்திரங்கள் சின்னதாக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரியான பாத்திரங்களில் தான் நடித்து வருகிறேன். இது மாதிரியான வேடங்கள் வந்தால் தொடர்ந்து சினிமாவிலும் நடிப்பேன்'' என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் சந்திரா லட்சுமணன்.

 

மாற்றுத்திறனாளிகளின் படிப்புக்கு பணம் ஜெயித்து கொடுத்த கணேஷ் வெங்கட்ராமன்

Actor Ganesh Venkatraman Wins Rs 1 39 Lakh In Tv Show

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ஆயிரத்தில் ஒருவன்" ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் போட்டியில் ஜெயித்த 1லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயை பார்வையற்றவர்களின் படிப்பிற்காக வழங்கினார்.

சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கும் புதிய ரியாலிட்டி ஷோ ஆயிரத்தில் ஒருவன் 12 எபிசோடுகளை கடந்துள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் நிச்சயமாக ஏதாவது ஒரு பரிசு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்களிலேயே பிரபலமடைந்தது. இந்த போட்டியில் பிரபலங்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். உன்னைப் போல் ஒருவனில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் இந்த ஷோவில் பங்கேற்று பார்வைத் திறனில்லாத பிரபாகரன் மற்றும் தமிழ்வேலன் ஆகியோரின் எதிர்காலத்திற்காக விளையாடி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஜெயித்துக் கொடுத்தார். இவர்கள் இருவரும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தற்போது லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்த பணம் தங்களின் படிப்பிற்கு பெரிதும் உதவி புரியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதேபோல் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு எபிசோடில் சென்னையைச் சேர்ந்த மணிமாலா என்னும் போட்டியாளர் கடைசி கனவுக் கேள்விக்குச் சரியான விடையைக் கூறி ரூ.5 லட்சம் பரிசு பெற்றுள்ளார். பெருமூளை பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவச் செலவிற்காக இந்த பணம் கிடைத்துள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.

பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையச் செய்யும் அமைந்துள்ளது ஆயிரத்தில் ஒருவன் என்கின்றனர் தொலைக்காட்சி ரசிகர்கள்.

 

பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் தலைமுறைகள்!

Ilayaraaja Compose Balu Mahendra New Movie

7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

தலைமுறைகள் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்!

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் அது ஒரு கனாகாலம். தனுஷ் நடித்திருந்தார். 2005-ல் இந்தப் படம் வந்தது. அதற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக படங்கள் இயக்காமல், திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்தப் படம் குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில், "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் "தலைமுறைகள்" என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.

படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன். 78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது... 34 இனிய வருடங்கள் ! இனியும் அப்படித்தான்.

இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கரும்புள்ளி விமர்சனத்தால் பாடகர் உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்

Douglas Devananda Slams Unnikrishnan

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் டக்ளஸ் தேவானந்தா தமக்கு பொன்னாடை போர்த்தியது ஒரு கரும்புள்ளி நிகழ்வு என பின்னணி பாடகர் உன்னிகிருஷணன் கூறியிருந்ததற்கு டக்ளஸ் தேவானந்தா எரிச்சலைக் கொட்டியுள்ளார்.

நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:

உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்ததால் கலந்து கொண்டேன்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் தமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரினார். மேலும் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். உன்னி கிருஷ்ணனின் இந்த கருத்துதான் தற்போது டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

அடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்

Former Miss World Yukta Mookhey Complaint Against Hubby

மும்பை: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் யுக்தா முகி. அதன் பிறகு அவர் சில இந்தி படங்களில் நடித்தார். தமி்ழில் அஜீத் குமார், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் யுக்தா முகி, யுக்தா முகி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் டுலியை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மணந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், பிரின்ஸ் டுலி தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் டுலி மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது.

முன்னாள் உலக அழகியான யுக்தா முகி தனது கணவர் மீது புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.