தந்தி டி.வி.யில் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்..!

Lights Camera Action Thanthi Tv

தந்தி தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 4.10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, 'லைட்ஸ் கேமரா ஆக்ஷன்'. இந்த நிகழ்ச்சியில் ஒரு திரைப்படத்தின் பின்னால் இருந்து இயங்கும் பல துறைகள் பற்றி ஒளிபரப்புகிறது.

கேமரா, படத்தொகுப்பு கிராபிக்ஸ், நடனம் என்று திரைக்குப் பின்னால் அவரவர் துறைகளை பற்றியும் குறிப்பிட்ட தொழில் நுட்பம் ஒரு திரைப்படம் உருவாவதற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரிக்கின்றனர்.

அந்த வரிசையில் இந்த வாரம் ஒரு திரைப்படத்தில் டப்பிங் எவ்வாறு இடம் பெறுகிறது? எவ்வாறு அவர்கள் டப்பிங் செய்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் விளக்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில், டப்பிங் கலைஞர்கள் பலரும் பேசினார்கள். நடிகர் நடிகையர்களின் குரலுக்கு அழகூட்டும் அந்த கலைஞர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தது தந்தி டிவி.

தமிழ் ரசிகர்களுக்கு திரைக்கு பின்னால் இருக்கும் முகங்களை வெளியில் கொண்டு வரும் வித்தியாசமான நிகழ்ச்சியாக இந்த 'லைட்ஸ் கேமரா ஆக்ஷன்' அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

 

'பொன்னோவியம்...' என்னிடம் அனுமதி கேட்டிருக்கலாம்! - குட்டிப்புலி மீது வருத்தத்தில் இசைஞானி

Ilayarajaa Complaints On Kutti Puli

சென்னை: குட்டிப் புலி படத்தில் என் பாடலை முன் அனுமித பெறாமல் பயன்படுத்தியுள்ளனர் என்று வருத்தப்பட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்றைக்கு வரும் பெரும்பாலான படங்களில் வேறு இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும்கூட, பெருமளவு இளையராஜாவின் பாடல்களையும் பின்னணி இசையையும் எடுத்தாள்கின்றனர்.

சிலர் அனுமதி பெற்று அப்படிச் செய்கிறார்கள். பலர் கேட்பதே இல்லை.

சுப்பிரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் சிறுபொன்மணி அசையும்... என்ற புகழ்பெற்ற பாடலை ஒரு காட்சியில் அப்படியே பயன்படுத்தியிருந்தார் சசிகுமார். மேலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பிரதான பாடலான கண்கள் இரண்டால்..., அப்படியே கவிக்குயிலில் வந்த சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலின் அப்பட்டமான நகலாகும்.

அதற்கடுத்து நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற படங்களிலும் கூட ஆங்காங்கே இளையராஜா இசையை எடுத்தாண்டனர்.

சமீபத்தில் சசிகுமார் நடித்து திரைக்கு வந்துள்ள குட்டிப் புலி படத்தில், இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு முழு டூயட்டுக்கும் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியுள்ளனர். ரஜினியின் கழுகு படத்தில் இடம்பெற்ற மிகப் புகழ்பெற்ற "பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்...' என்ற பாடலை அப்படியே பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பல இடங்களில் பின்னணி இசைக்கப் பதில் இளையராஜா பாடல்களையே உபயோகித்துள்ளனர். இந்தப் பாடல்கள் இடம்பெற்ற காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இளையராஜா, 'குட்டிப்புலி படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ள என்னிடம் எந்த முன் அனுமதியும் கேட்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் கேட்டிக்கலாம்..' என்று வருத்தப்பட்டுள்ளார்.

இளையராஜா இசையமைத்த அனைத்துப் படங்களின் இசை - பாடல்கள் உரிமையும் அவரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஜியா கானிடம் கடைசியாகப் பேசிய நடிகர் மகன்- போலீஸ் விசாரணை

Jiah Khan Suicide Case Police Question An Actors Son

சென்னை: நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானுடன் கடைசியாகப் பேசியவர் ஒரு நடிகரின் மகன் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

25 வயது பிரபல நடிகை ஜியா கான் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு ஜியா கான் துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது உடல் ஜே.ஜே. மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த தற்கொலை பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

எனவே, அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று துணை கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரே பாட்டீல் தெரிவித்தார். மேலும் ஜியா கானுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜியா கான் சாவு பற்றி அவரது வீட்டின் பாதுகாவலர் கூறுகையில், ''என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது'' என்றார்.

ஜியா கான் மரணம் பற்றி கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் தனது துக்கத்தை பதிவு செய்திருந்தார். அதில், ''ஜியா கான் இறந்துவிட்டாரா? என்ன நடந்தது? இது சரியான தகவல்தானா? என்னால் நம்ப முடியவில்லை'' என்று குறிப்பிட்டிருந்ததார்.

 

'பாட்டைத் திருடிட்டாங்க...' போலீசில் புகார்...- 'புரமோஷனை' ஆரம்பித்த விஜய் & டீம்!

சென்னை: தலைவா படத்தின் ஒரு பாடலை திருட்டுத்தனமாக சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுவிட்டார்கள் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் இன்று புகார் கொடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

thalaivaa team lodges complaint on single track   

இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற படத்தின் இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சிபி சுனில் குமார் ஆகியோர் மனு ஒன்றை கமிஷனரிடம் கொடுத்தனர்.

அதில், "தலைவா படத்திலிருந்து ஒரு பாடலை சட்டவிரோதமாக சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சதியின் பின்னணியில் சாய்ராம் கல்லூரியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Thalaivaa team lodges complaint on leakage of single track

 

சந்தோஷ் சிவன் இயக்கும் இனம்… பர்ஸ்ட் லுக்

The Stunning First Look Santosh Sivan

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் இனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இனம். சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ரத்தத்தில் தோய்க்கப்பட்ட கைரேகையினை இலங்கை மேப் போல வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இனம் படத்தின் போஸ்ட் புரடெக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ட்ரெயிலர் வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரவிந்த் சுவாமி நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பரில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மார்பக அகற்றத்துக்குப் பின் முதல் பொது நிகழ்ச்சியில் ஜூலி

லண்டன் மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக தனது பார்ட்னர் பிராட் பிட்டுடன், லண்டனில் ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி.

சமீபத்தில் ஜூலி இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டார். இதை அவரே பகிரங்கமாகவும் பின்னர் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூலியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.மிகவும் தைரியமானவர், நம்பிக்கை மிகுந்தவர் என்று ஜூலிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இந்த நிலையில் பிராட் பிட் நடித்துள்ள வேர்ல்ட் வேர் இசட் என்ற படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. அதில் அவருடன் ஜூலியும் கலந்து கொண்டார். இதுதான் மார்பக அகற்றத்திற்குப் பின்னர் ஜூலி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி ஆகும்.

கருப்பு நிற உடையில் மிகவும் கம்பீரமாகவும், உற்சாகமாகவும் காணப்பட்டார் ஜூலி.

இன்று ஜூலியின் 38வது பிறந்த நாள் ... தெரியுமா...!

 

ஜூன் 21-ல் தலைவா இசை... ஆகஸ்டில் படம் ரிலீஸ்!

Thalaivaa Music From June 21   

சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 21-ம் தேதி நடக்கிறது. விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார்.

ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக பாடல்களை வெளியிடுகிறார்கள். சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் தமிழக, கர்நாடக, கேரள உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுளது. வெளிநாட்டு உரிமை, விஜய் படத்துக்கு இதுவரை கிடைக்காத அளவுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.

 

நடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள்

Simran Missing Posters Rock Chennai

நடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதைக்கண்ட பலரும் சிம்ரனை யார் கடத்தியது. போஸ்டர் உண்மையா? போலியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபடி சென்றனர்.

இன்று காலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதைக்கண்ட பலரும் ஆர்வத்துடன் அதனை படித்தனர். சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து பலர் விசாரித்தனர்.

கடத்தியது யார்?

நடிகை கடத்தல் என்றாலே பலருக்கும் ஆர்வம்தான். அதுவும் ஃபீல்டில் பிஸியாக இருக்கும் போது கடத்தாமல் சிம்ரனை இப்போது கடத்தியது யார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

விளம்பரமாம்பா...

இந்த போஸ்டர் டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பரம்தான் என்று பின்னர் தெளிவானது. பிரபல டி.வி. சேனல் ஒன்றில் ‘கேம்ஷோ' ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

நல்லா கிளப்புறாங்கப்பா பீதி

பிரபல சேனல் ஒன்றில் ஜாக்பாட் நடத்தி வரும் சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோடம்பாக்கத்திலிருந்து விரட்டினாலும் மீண்டும் சினிமாவுக்குதான் வருவேன்! - மணிவண்ணன்

சென்னை: இந்த கோடம்பாக்கத்தை விட்டு என்னை அடித்து விரட்டினாலும், திரும்ப சினிமாவுக்குள்ளேயே வருவேன். பெட்டிக்கடை நடத்தக்கூட எனக்கு தெரியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

டேனியல் பாலாஜி, பானுசந்தர், அனூப், பிரீதி தாஸ் நடித்து, கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ள படம், ‘மறுமுகம்.' த்ரில்லர் படமான இதை சஞ்சய் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.

manivannan releases marumugam audio

விழாவில், மணிவண்ணன் பேசுகையில், "திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் ஆர்ட் படம்தான் எடுப்பார்கள். வேகம் குறைவான படங்களைத்தான் கொடுப்பார்கள் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. ‘ஊமை விழிகள்' படம் வந்தபின், அந்த எண்ணம் மாறியது. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைத்தது.

எங்களால் வர்த்தக ரீதியிலான படங்களையும் எடுக்க முடியும் என்று நிரூபித்தார்கள். இப்போதைய இளைஞர்கள் நிறைய சிந்தனையுடன் வருகிறார்கள். புதிதாக யோசிக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. சினிமா வியாபாரம் விரிவடைந்திருக்கிறது. எப்.எம்.எஸ், சேனல் ரைட்ஸ் என்று வருமான வழி கூடியிருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து படம் தயாரித்தால், லாபம் சம்பாதிக்கலாம். நஷ்டம் அடைந்தாலும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.

டார்ச்சர் பண்ணக் கூடாது...

சினிமா என்பது கனவு வியாபாரம். நம் கனவும், ரசிகன் கனவும் ஒன்றாக அமைந்தால், படம் வெற்றி பெறும். மாறாக நாம் காணும் கனவை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரசிகனை ‘டார்ச்சர்' பண்ணக்கூடாது.

‘காமெடி' படங்கள் இப்போது ஒரு ‘டிரெண்ட்' ஆக இருக்கிறது. அது, விரைவில் மாறிவிடும். காமெடி, ஒரு சுவை. அதுவே சினிமாவாகி விட முடியாது.

புதிதாக வரும் இளைஞர்களுடன் நானும் பணியாற்றுவேன். அதற்குள் சாக மாட்டேன். எனக்கு சினிமாவை விட்டால், வேறு தொழில் தெரியாது. வீட்டுக்கு முன்னால் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தால் கூட, நஷ்டம் அடைந்து விடுவேன். என்னை துரத்தி அடித்தால் கூட மறுபடியும் சினிமாவுக்குள்ளேயே வருவேன். ஒரு கேட் வழியாக அடித்து விரட்டினால், இன்னொரு கேட் வழியாக உள்ளே வந்து விடுவேன்,'' என்றார்.

கேஎஸ் ரவிக்குமார் பேச்சு

விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், ‘‘சினிமா அழிந்து விடும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். ஆனால் அது என்றைக்குமே அழியாது. அழியும் என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள். ஒரு காலத்தில் பிலிம் இன்ஸ்டியூட் மட்டும்தான் இருந்தது. இப்போது விஸ்காம், டிகிரி என்று விரிவடைந்திருக்கிறது. அதில் சேருவதற்கு கூட சிபாரிசும், பணமும் தேவைப்படுகிறது.

அதனால் சினிமா முன்பை விட வளர்ந்திருக்கிறது என்று பொருள். இளைஞர்கள் தைரியமாக சினிமாவுக்கு வரலாம். வெற்றி பெறலாம். சினிமா போன்று ஈர்ப்பான துறை வேறு இல்லை. அரசியல் அதற்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.

 

குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக்!

After Kutti Puli Muthaiya Teams Up With Goutham Karthik

சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் புதிய படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

சசிகுமார் - லட்சுமிமேனன் நடிப்பில் முத்தையா இயக்கிய முதல் படம் குட்டிப்புலி. பெரிய நடிகர்களின் படத்துக்கு இணையான ஆரம்ப வசூலைப் பெற்றது இந்தப் படம்.

இந்நிலையில் அடுத்த படம் இயக்க தயாராகிவிட்டார் முத்தையா. கவுதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் 'சிப்பாய்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' மற்றும் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் கவுதம்.

'சிப்பாய்' படத்தில் லட்சுமி மேனன், 'வை ராஜா வை' படத்தில் ப்ரியா ஆனந்த் என முக்கிய நாயகிகள் ஏற்கெனவே கவுதமும் ஜோடி சேர்ந்திருப்பதால், வேறு யாரையாவது நாயகியாக்கும் முயற்சியில் உள்ளார் முத்தையா.

 

இந்தி கஜினியில் நயன் ரோலில் நடித்த ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை

Bollywood Actor Jiah Khan Commits Suicide

மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான்(25). இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் செட்டிலானார். கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் அண்மை காலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் சாகும் முன்பு கடிதம் எழுதி வைக்கவில்லை. அவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நிஷப்த் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.