மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

மலையாளத் திரையுலகையே கலக்கியிருக்கிறது ஒரு படத்தின் வெற்றி. அது மோகன் லால் நடித்த த்ரிஷ்யம்.

தொடர்ந்து சுமாரான படங்களை மட்டுமே கொடுத்த மோகன் லாலுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

இந்தப் படத்தின் வசூல் மூலம் மோகன் லாலின் கேரியரே அடுத்த கட்டத்துக்கு தாவிவிட்டதாக பாகத்ஸ் ஆபீஸ் புள்ளிகள் பேசிக் கொள்கிறார்கள்.

த்ரிஷ்யம் ஒரு குடும்ப த்ரில்லர். கேபிள் ஆபரேட்டராக வேலைசெய்யும் மோகன்லாலி மனைவி மீனா. இரண்டு மகள்கள்.

மிக நேர்மையான மனிதராக திகழும் மோகன்லால், யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் தீர்வு சொல்லிவிடுவார்.

ஆனால் தீவிர சினிமா மோகம் கொண்டவர். ஆனால் இந்த சினிமா மோகமே அவரது குடும்ப சிக்கலை எப்படித் தீர்க்கிறது என்பதுதான் சுவாரஸ்ய முடிச்சுகள் கொண்ட பின்பாதி.

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஜீத்து ஜோசப்.

சமீபத்தில் சென்னையில் இந்தப் படத்தைத் திரையிட்டபோது, தமிழ் சினிமாவின் பெரும்பாலான முக்கிய கலைஞர்கள் வந்து பார்த்து பிரமித்து வாழ்த்தினர்.

 

சேட்டையைத் தொடர்ந்து மீகாமன்னிலும் ஆர்யா ஜோடியாகும் ஹன்சிகா

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ‘மீகாமன்'. இப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, ஆர்யா-ஹன்சிகா ஜோடி சேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பெரிதும் ரசித்ததால் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

ஹன்சிகா தற்போது மான் கராத்தே, வாலு, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்குப் படங்களும் கைவசம் உள்ளது. இந்நிலையில், மீகாமன் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், கதாநாயகி முடிவாகி விட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

சேட்டையைத் தொடர்ந்து மீகாமன்னிலும் ஆர்யா ஜோடியாகும் ஹன்சிகா

மீகாமன் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மகிழ்திருமேனி இரண்டொரு நா‌ட்களில் படத்தின் நாயகியை அறிவிப்பதாக தெ‌ரிவித்தார். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தும் நாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், ஆர்யாவின் அடுத்த நாயகி ஸ்ருதிஹாசன், ப்‌ரியா ஆனந்த் என பல பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், மீகாமன் படத்தின் கதை ஹன்சிகாவிடம் சொல்லப் பட்டதாகவும், த்ரில்லரான அக்கதையில் நாயகியின் கதாபாத்திரம் அவருக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லி விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

'பவர்' நடிகருக்கு இப்படி ஃபியூஸ் போயிடுச்சே!

சென்னை: பவர் நடிகர் சிறை சென்று திரும்பியதை அடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம்.

பவர் நடிகர் சந்தன நடிகரின் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு முன்பு அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத திரையுலகம் அவரைத் தேடிச் சென்றது.

பவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தான் அவர் பண மோசடி வழக்கில் கைதாகி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் அளிக்க ஆள் இல்லையாம். இதனால் அவர் மீண்டும் சந்தன நடிகரிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார்.

இந்த ஆளை நடிக்க வைத்தால் நம்ம மார்க்கெட்டை காலி பண்ணிடுவார் என்று நினைத்த சந்தன நடிகர் பவரை கை கழுவிவிட்டாராம். இதையடுத்து பவர் திரைப்பட கம்பெனிகளை நாடி வருகிறாராம். அவரை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு அவர் பாட்டுக்கு சிறைக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது என்று யாரும் வாய்ப்பளிக்க மாட்டேன் என்கிறார்களாம்.

ஒரே படத்தில் ஓஹோ என்று பேசப்பட்டு அந்த படத்தோடு மார்க்கெட் போன நடிகர் நானாகத் தான் இருப்பேன் என்று கூறி பவர் வருத்தப்படுகிறாராம்.

 

டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'

நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக படம் இயக்குகிறார். குறோணி என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார்.

தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி.

டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'

இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது டேனியல் பாலாஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதன் முறையாக இவர் இயக்கும் படத்திற்கு 'குறோணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் எம்ஆர் கணேஷ் தயாரிக்கிறார். இயக்குவதோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் டேனியல் பாலாஜி. நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் தற்போது ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 7ல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை அடுத்து இந்நிறுவனம் 'குறோணி' படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.

 

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சிறு தயக்கத்தால் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஏற்கெனவே நடித்தவர் ஜீவா.

அவர் அடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்க ஆரம்பித்தபோது ஜீவாவையும் அழைத்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க சற்று தயங்கியுள்ளார் ஜீவா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நண்பன்' படம் முடிவந்தவுடன் சங்கர் சார் ‘ஐ' படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார். பின்னர் விக்ரமுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொண்டார்.

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

இது வழக்கமான வில்லன் வேடம் அல்ல. எனவே அந்த கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் உடனே பதில் சொல்லவில்லை.

‘சிங்கம் புலி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் இமேஜ் நினைத்து நான் கொஞ்சம் பயந்தேன். படம் வெளியானபோது எனது நடிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. அதுதான் இப்போது தயங்கினேன்.

ஷங்கர் சார் எனக்கு கொடுத்த வாய்ப்பை நிராகரித்த பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்-க்கு சென்றது," என்றார்.