எந்திரனில் ரஜினி நடிப்பு-வாயடைத்துப் போன தனுஷ்

Danush
எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு என்னை வாயடைக்க வைத்துவிட்டது, என்றார் தனுஷ்.

எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது.

படத்தில் ரஜினியின் நடிப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் பிரமிக்க வைத்துவிட்டது. இளைஞர்களுக்கு அவரது உழைப்பு ஒரு பாடம். அவரது நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்த அளவு இறங்கிவந்து இயல்பாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. நடிப்பில் அவருக்கு இணை அவர்தான்.

என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான்.

எந்திரனை பார்த்து முடித்தபிறகு என் மனதில் தோன்றியது இதுதான்… சூப்பர் ஸ்டார், கடின உழைப்பு, தொழில் மீதான பக்தி… இவற்றுக்கெல்லாம் ஒரேயொரு உதாரணம்தான்… அவர் ரஜினிகாந்த்”, என்றார்.

 

மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ.வுடன் நடிகை நவ்நீத் கெளர் காதல்

Navneeth Kaur
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நாயகியாக நடித்த நவ்நீத் கெளருக்கும், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் மணம் புரியவுள்ளனராம்.

பஞ்சாபைச் சேர்ந்தவர் நவ்நீத். தற்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். பெரிய அளவில் இவருக்கு தமிழ் சினிமாவில் இடம் கிடைக்கவில்லை. தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானியிலும் கருணாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் இவருக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவான ரவி ரானா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

பத்னேரா தொகுதியைச்சேர்ந்த எம்.எல்.ஏதான் ரவி ரானா. இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்துக் கொண்டபோது காதல் பற்றிக் கொண்டதாம்.

சில பல சந்திப்புகளுக்குப் பிறகு காதலை உறுதி செய்து கொண்ட இருவரும் தற்போதுஅதை கல்யாணத்தில் முடிக்கத் தீர்மானித்துள்ளனர்.

மகாராஷ்டிர எம்எல்ஏவை மணக்கவுள்ளதால் கல்யாணத்திற்குப் பிறகு நவ்நீத் கெளர் நடிக்க மாட்டார் என்று தெரிகிறது.

 

ட்விட்டரில் நான் இல்லை :அசின்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


தனக்கு தெரியாமல் என்பெயரில் ட்விட்டர் ஆரம்பித்து, எனது ரசிகர்களுடன் யாரோ உரையாடி வருகிறார்கள், என்று கூறியுள்ளார் அசின். யாரோ சிலர் ட்விட்டரில் அசின் பெயரில் துவக்கி, ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனராம். இதற்கு ஏராளமான பாலோயர்கள் குவிந்துள்ளனராம்.
இதுகுறித்து பற்றி அசின் நான் டுவிட்டரிலோ, ஆர்குட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை துவங்கலாம். ஆனால் இப்போது இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்…” என்று கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

நமீதாவுக்கு மலேரியா காய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனியார் செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நமீதா கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால், காய்ச்சலை பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நமீதா பேசமுடியாமல் தடுமாறி, மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். நமீதா உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.


Source: Dinakaran
 

ராதிகாவின் '38ஸ்டெப்ஸ்'!

Radhika
ராதிகா சரத்குமார் அறிமுகப்படுத்தும் ’38 ஸ்டெப்ஸ்’!
‘மன்னா… என்னா…’ அல்லது ‘வாயில நுழையற மாதிரி பேரு, வாழைப் பழம்’ போன்ற அரதப் பழசான அல்லது கடி ஜோக் நாடகங்களிலிருந்து மக்க்களைக் காப்பாற்றும் புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராதிகா சரத்குமார்.
சித்தி மூலம் மெகா சீரியல் இலக்கணத்தையே மாற்றி எழுதியவரல்லவா…!
100 பேர் நடிக்க வேண்டிய ஒரு முழு நீள நாடகத்தை வெறும் 4 பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு சொல்லும் ஒரு அபார, அதே நேரம் நவீன நாடக முறையை அவர் அறிமுகப்படுத்தவிருக்கிறார், ஏவாம் குழுவினருடன் இணைந்து.
கிட்டத்தட்ட மேடையிலேயே முழு சினிமாவை அதன் த்ரில்களோடு பார்க்கும் அனுபவத்தை இந்த நாடகங்கள் தரும். சினிமாவில் வருவது போன்ற கார், பைக் சேஸிங் மட்டுமல்ல, பெரிய ரயில் சேசிங் கூட நடத்துவார்களாம் மேடையில். ரயில்வே ஸ்டேஷன், பேப்பர் மற்றும் பாப்கார்ன் விற்கிற ஆட்கள், பயணிகள், ரயில் கொள்ளை, துப்பாக்கி சேஸிங் என்று இந்த நால்வர் மட்டுமே நடத்தும் இந்த டைப் காட்சிகள் மேல்நாடுகளில் படு பிரபலம்.
இந்த மாதிரி நாடகங்களுக்கு 39 ஸ்டெப்ஸ் என்று பெயர்.
இந்த புதிய அனுபவத்தை தென்னிந்தியா முழுவவதிலும் உள்ள ரசிகர்களுக்கு தரப்போகிறார்களாம்.
முதல் கட்டமாக வரும் அக்டோபர் 29, 30 மற்றும் 31 தேதிகளில் சென்னை வேங்கட சுப்பாராவ் கலையரங்கில் நடத்தப் போகிறார்களாம். டிக்கெட்டுகளுக்கு லேண்ட்மார்க் அல்லது 98404 44916, 98406 13333 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் ராதிகா.
 

இரண்டே வாரங்களில் ரூ 225கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Rajinikanth and Aishwarya Rai
த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.
ரூ 162 கோடி செலவில் தமிழில் எந்திரனாகவும், தெலுங்கு – இந்தியில் ரோபோவாகவும் ரஜினியின் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
அனைத்து மொழிகளிலும் எந்திரன் ரூ 200 – 225 கோடியை இரண்டே வாரங்களில் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.
இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை வேறு எந்தப் படமும் இந்த அளவு வசூலை அதுவும் இரண்டே வாரங்களில் எடுத்ததில்லை.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், தமிழில் மட்டும் இரண்டு வாரங்களில் எந்திரன் ரூ 150 கோடியை வசூலித்துள்ளதாகவும், தெலுங்கு மற்றும் கேரள – கர்நாடக பகுதிகளில் ரூ 50 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகவும், இந்தியில் ரூ 15 கோடி (ரூ 31 கோடி என்கிறார் மற்றொரு விநியோகஸ்தர்) வசூலித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், ரூ 400 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலைக் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள் சிலர். கர்நாடகத்தில் இரண்டே வாரங்களில் ரூ 10 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளதாகவும், இன்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாகவே எந்திரன் ஓடுவதாகத் தெரிவித்தார் பெங்களூரைச் சேர்ந்த விநியோகஸ்தர் சுதாகர்.
25 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று முதலில் பிடிவாதமாக இருந்தது கர்நாடக பிலிம்சேம்பர். ஆனால் குவியும் வசூலைப் பார்த்த பிறகு, அமைதியாக 60க்கும் மேற்பட்ட திரையரங்களில் எந்திரனை அனுமதித்துள்ளனர்.
இரண்டாவது வார முடிவில் வெளிநாடுகளில் எந்திரன் வசூல் விவரமும் வெளியாகியுள்ளது. எந்திரனுடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானியின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட, எந்திரன் மட்டும் கூடுதலாக 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இந்த வாரம் வெளியான வேறு எந்தப் படமும் எதிர்ப்பார்த்த வசூலைப் பெற முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நிலவரம்:
வட அமெரிக்கா- 24,00,000 டாலர்கள் (10 நாள் கணக்கு)
பிரிட்டன் – 7,80,000 டாலர்கள் (10 நாள்)
மலேசியா -29,00,000 டாலர்கள் (11 நாள்)
 

ரசிகர்களுடன் நடந்த சந்திப்பின் மயங்கிவிழுந்தார் நமீதா!

Namitha
காய்ச்சல், தலைவலி என தங்கள் உடல்ரீதியான பிரச்சினைகளையும் சில சமயம் நடிகர் நடிகைகள் தாங்கித்தான் தீர வேண்டியுள்ளது, கொடுத்த கமிட்மெண்டுக்காக, அல்லது வாங்கிய பணத்துக்காக.
சமீபத்திய உதாரணம் நடிகை நமீதா.
நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால், காய்ச்சலை பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.
நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நமீதா பேசமுடியாமல் தடுமாறி, மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். நமீதா உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.
நமீதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார்.
அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நமீதா, ‘மச்சான்ஸை’ எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், முதலில் உடம்பைப் பார்த்துக்குங்க…!
 

மீண்டும் கோன் பனேகா குரோர்பதி- பச்சனின் அட்டகாச மறு வருகை

Amitabh Bachchan
மீண்டும் நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கம்பீரக் குரல் காற்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கோன் பனேகா குரோர்பதியின் 4ம் அத்தியாம் சோனி டிவியில் தொடங்கியுள்ளது.
கோன் பனேகா குரோர்பதி-4வது தொடரின் முதல் பகுதி சோனி டிவியில் ஒளிபரப்பானது. இதை அமிதாப் பச்சனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
வெறும் குவிஸ் மாஸ்டராக மட்டும் இல்லாமல், போட்டியாளர்களின் குடும்பப் பின்னணி, பொது அறிவை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்துகிறார் அமிதாப்.
கோன் பனேகா குரோர்பதியின் முதல் இரு பாகங்களை அமிதாப் நடத்தினார். 3வது பாகத்தை ஷாருக் கான் நடத்தினார். ஆனால் அமிதாப் பச்சன் அளவுக்கு ஷாருக்கானின் குரோர்பதி நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தற்போது 4வது அத்தியாயத்திற்கு மீண்டும் வந்துள்ளார் அமிதாப் பச்சன்.
மீண்டும் அமிதாப் பசச்சின் கை பட்டு மிளிரத் தொடங்கியுள்ள கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி புதிய உயரத்தை எட்டும் என்று நிழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதல் நிகழ்ச்சியை கோலாகலமான கொண்டாட்டத்துடன் நடத்தினர். இதில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சனின் பிறந்த நாளன்று முதல் எபிசோட் ஒளிபரப்பானதால் அனைவரும் அமிதாப்புக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதே நேரத்தில்தான் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.
அமிதாப்பின் முதல் எபிசோடுக்கு டிஆர்பி தர வரிசையி்ல் 5 சதவீத புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். அதேசமயம்,நேற்று ஒளிபரப்பான சல்மான் கான் நிகழ்ச்சிக்கு 3.4 சவீதமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நடிகர் ஜீவாக்கு ஆண் குழந்தை பிறந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ஜீவா & சுப்ரியா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கும், அவரது உறவுப் பெண் சுப்ரியாவுக்கும் கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுப்ரியாவுக்‌கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினர் இனிப்பு கொடுத்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.


Source: Dinakaran
 

நட்புக்காக பாலிசியை கைவிட்ட மம்மூட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

Ôஇன்னொரு நடிகரின் படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன்Õ என்ற பாலிசியை வைத்திருந்தார் மம்மூட்டி. சில படங்களுக்கு, வேறொரு நடிகருக்காகவும் திரையில் பின்னணியில் மட்டுமே ஒலிக்கும்படியும் டப்பிங் பேச அவரை கேட்டனர். மறுத்துவிட்டார். இப்போது ப¤ருத்விராஜ் நடிக்கும் Ôஅன்வர்Õ படத்தில் டப்பிங் பேச சம்மதித்துள்ளார் மம்மூட்டி. காரணம், நட்பு. பிருத்விராஜ், மம்மூட்டியின் நண்பர். அதே போல் இப்பட இயக்குனர் அமல் நீரத், இதற்கு முன் மம்மூட்டி நடிப்பில் Ôபிக் பிÕ படத்தை இயக்கியவர். அவர்கள் இருவரும் கேட்டதால் டப்பிங் பேச சம்மதித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் மம்மூட்டியின் குரல் திரையில் பின்னணியில் ஒலிக்கும்.


Source: Dinakaran
 

தயாரிப்பாளர் மீது மோனிகா புகார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

Ôகவுரவர்கள்Õ படத்தில் நடித்ததற்காக தனது சம்பள பாக்கி ரூ. 2 லட¢சத்தை தரவில்லை என தயாரிப்பாளர் மீது நடிகை மோனிகா புகார் அளித்துள்ளார். சஞ்சய்ராம் தயாரித்து, இயக்கியுள்ள படம் Ôகவுரவர்கள்Õ. சத்யராஜ், விக்னேஷ், மோனிகா நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. மோனிகாவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில், ரூ. 2 லட்சத்தை ஷூட்டிங்கிற்கு பின் வழங்குவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்து இருந்தார்களாம். ஆனால் படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் சம்பள பாக்கியை தரவில்லை என சஞ்சய் ராம் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மோனிகா.
இது பற்றி மோனிகா கூறியதாவது: பட ஷூட்டிங் முடிந்ததும் டப்பிங¢ பேசுவதற்கு முன்பே சம்பள பாக்கியை கேட்டேன். டப்பிங் முடிந¢ததும் தருவதாக சொன்னார்கள். டப்பிங் முடிந்தும் சம்பளத்தை தரவில்லை. இது பற்றி கேட்பதற்கு போன் செய்தால் போனை சஞ்சய் ராம் எடுப்பதே இல்லை. 100 முறையாவது அவருக்கு போன் செய்திருப்பேன். ஒரு முறை கூட எடுத்து பேசவில்லை. வேறு வழியில்லாமல்தான் சங்கத்தில் புகார் செய்தேன். இப்படத்துக்கு 20 நாள் கால்ஷ¦ட் கொடுத்தேன். ஆனால் 6 நாட்கள் கூடுதலாக நடித்துக் கொடுத்தேன். அதையெல்லாம் மறந்துவிட்டு என்னை அலைக்கழிக்க வைக்கிறார்கள். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுப்பதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி  தெரிவித்துள்ளார். இவ்வாறு மோனிகா கூறினார்.


Source: Dinakaran
 

விமான கடத்தல் கதையை மாற்றினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து டைரக்டர் மேஜர் ரவி இயக்கும் Ôகாந்தகார்Õ படமும் அதே கதையில் ராதாமோகன் இயக்கும் 'பயணம்Õ படமும் ஒரே நேரத்தில் ஷூட்டிங்கை தொடங்கின. இந்நிலையில் காந்தகார் கதையை முற்றிலும் மாற்றிவிட்டதாக கூறுகிறார் மேஜர் ரவி.இது பற்றி அவர் கூறியது:காந்தகார் கடத்தல் சம்பவத்தை நான் எடுக்கவில்லை. அந்த ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது. அப்படி எடுத்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள். அதனால் புதிதாக கதை எழுதி, இப்படத்தை இயக்கி இருக்கிறேன். இதில் விமான பயணிகள் கடத்தல் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்படும். கமாண்டோ வீரராக மோகன்லால் நடித்திருக்கிறார். விமானத்தில் வரும் பயணியின் தந்தையாக அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். கணேஷ் வெங்கட¢ராமன். அனன்யா, ராகினி என பலர் நடித்துள்ளனர். மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானம் பறக்கும்போது சிறப்பு அனுமதி பெற்று விமானத்துக்குள்ளேயே ஷூட்டிங் நடந்தது. இதை சிரமப்பட்டுதான் எடுத்தோம். மும்பை, பெங்களூர், ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லி என 5 இடங்களில் ஷூட்டிங் நடத்தி முடித்துவிட்டேன். இப்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் படம் ரிலீஸ்.


Source: Dinakaran
 

களவாணி நாயகனும் ரூ 40லட்சம் சம்பள பஞ்சாயத்தும்!

Oviya and Vimal
ஒரு படம் சுமாராக ஓடினாலே, சம்பளத்தை உச்சாணிக்கு ஏற்றுவது தமிழ் ஹீரோக்களின் வழக்கம். ‘களவாணி’ விமல் மட்டும் விலக்காகிவிடுவாரா…
பசங்க படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். களவாணி படத்தில் கதாநாயகனானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தூங்கா நகரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
களவாணிக்கு முன்பே அவர் கலிங்கத்துப் பரணி என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம். இதற்கு ரூ 6 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம். அதற்குள் களவாணி வெளியாகி, பெரும் வெற்றிப் படமாகிவிட, இப்போது சம்பளத்தை கிர்ரென்று ரூ 40 லட்சமாக உயர்த்தி, தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
உடனே, கலிங்கத்துப் பரணியைத் தயாரிக்கும் ஏ.கே.மூவீஸ் நிறுவனமும் அப்படத்தின் இயக்குனர் ஐந்து கோவிலானும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.
நடிகர் சங்கம் தரப்பில் விமலை அழைத்து பேசினர். சம்பளத்தை குறைக்கும்படி வற்புறுத்தினர். இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய சம்பளத்தை நடிகர் சங்கம் நிர்ணயம் செய்து பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது.
 

கிசு கிசு - இசையால் தள்ளிப்போகும் படம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிரகாச நடிகருக்காக கதை எழுதியிருந்தாரு அஞ்சாத இயக்குனரு. அந்த கதையில நடிக்கிறது பற்றி நடிகர்கிட்ட இயக்குனரு பேச விரும்பினாராம்… விரும்பினாராம்… நடிகரோ நேரம் ஒதுக்காம இழுத¢தடிச்சாராம். இதனால உர்ரான இயக்கம், இப்போ அந்த கதைக்கு ஐ காட் ஹீரோவை புக் பண்ணிட்டாராம்… பண்ணிட்டாராம்…
ஓரெழுத்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண ஆனந்தான இயக்கம் பிளான் பண்ணியிருந்தாராம்… பண்ணியிருந்தாராம்… ஆனா ஆரிசான இசை வழக்கம்போல லேட் பண்றாராம்… பண்றாராம்… இதனால படம் தள்ளிப்போகுதாம்… தள்ளிப்போகுதாம்…
தமிழ்ல வாய்ப்பு இல்லாததால கன்னட சினிமாவுல வாய்ப்புகள் பிடிக்க முயற்சி செய்றாராம் காதல் நடிகை. சமீபத்துல பெங்களூர்ல போட்டோ ஷூட் நடத்தி, அதை கன்னட தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பி வச்சாராம்… வச்சாராம்…


Source: Dinakaran