ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை!

Freida Pinto As Osama Bin Laden Sex Slave   

ஒசாமா பின் லேடனின் செக்ஸ் அடிமையாக நடிக்க ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் ப்ரீடா பின்டோவை அணுகியிருக்கிறார்களாம். இது ஒசாமாவின் ஒரிஜினல் செக்ஸ் அடிமையான கோலா பூப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போல கறுப்பினப் பெண்ணைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கடுப்புடன் கூறியுள்ளார்.

ஒசாமாவுக்கும் தனக்குமான செக்ஸ் தொடர்புகளை டயரி ஆப் தி லாஸ்ட் கேர்ள் எனும் பெயரில் எழுதியிருந்தார் கோலா பூப். விற்பனையில் சக்கைப் போடு போடும் புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தின் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து ஒசாசா பின்லேடன்ஸ் செக்ஸ் ஸ்லேவ் எனும் தலைப்பில் படம் தயாரிக்க லயன்கேட் ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது.

இதில் ஒசாமாவின் செக்ஸ் பார்ட்னர் வேடத்தில் நடிக்க நவோமி காம்பெல் அல்லது கெர்ரி வாஷிங்டனை சிபாரிசு செய்திருந்தார் கோலா பூப். காரணம் இவர்களால்தான் தன்னை மாதிரியே ஒரிஜினலாக நடிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் லயன்கேட் ஸ்டுடியோஸ் இதனை நிராகரித்துவிட்டது. இருவரும் மிகவும் வயதானவர்களாகத் தெரிவதால், ஒசாமாவின் காதலி வேடத்தில் நடிக்க ப்ரீடா பின்டோவை அணுகியுள்ளதாம்.

ஒசாமா வேடத்தில் அட்ரீன் பரோடி நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து கோலா பூப் அளித்துள்ள பேட்டியில், "1996-லிருந்து ஒசாமாவுடனான எனது காதல் தொடர்புகளை தொகுத்து நான் எழுதிய புத்தகத்தை படமாகத் தயாரிக்க லயன்கேட் உள்பட மூன்று நிறுவனங்கள் முன்வந்தன.

கடைசியில் லயன்கேட் தயாரிக்க முடிவானது. ஆனால் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில், படத்தின் ஹீரோயினாக அதாவது எனது கேரக்டரில் நடிக்க இந்திய நடிகை ப்ரீடா பின்டோவை ஒப்புந்தம் செய்துள்ளனர்.

சாக்லேட் நிறமும், ஆப்ரிக்க ஸ்டைல் முடியும் கொண்டவள் நான். என் வேடத்தில் நடிக்க அந்தப் பெண் எப்படி பொருத்தமாக இருப்பாள் என்று தெரியவில்லை. கறுப்பு நிறத்தவர்கள் மீது மேற்கத்திய மக்களுக்கு உள்ள வெறுப்பையே இது இன்னும் காட்டுவதாக உள்ளது. இது ஒரு அவமானம்தான். அவர்களுக்கு, கறுப்பின பெண்கள் அழகானவர்கள் இல்லை என்ற நினைப்பு.

இளவரசர் சார்லஸ் ஒரு கமீலா பார்க்கரை பிக்கப் பண்ணதையோ, பில் கிளிண்டன் ஒரு மோனிகா லெவின்ஸ்கியை வைத்திருந்ததையோ ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அவர்களால், பின்லேடன் செக்ஸ் வைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தது என்னைத்தான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை (என்னா ஒரு பெருமை!!).

பொதுவாக கறுப்பினப் பெண்களை தடித்த வேலைக்காரிகளைப் போலவோ, விபச்சாரிகளாகவோ, செக்ஸ் அல்லது போதை அடிமைகளாகக் காட்டுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தப் படம் தயாராவது தெரிந்து, எனது வேடத்தில் நடிக்க நவோமி கேம்பெலின் பிரதிநிதி என்னைத் தொடர்பு கொண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் தயாரிப்பாளர்களின் எண்ணம் வேறாக உள்ளது," என்றார்.

இதே கோலா பூப் எழுதியுள்ள இன்னொரு புத்தகமான தி செக்ஸ் பார்ட் ஆப் தி பைபில் படத்தில் ப்ரீடா பின்டோ அல்லது ஜெஸிகா ஆல்பாவை நடிக்க வைக்க முயற்சிக்கிறதாம் இன்னொரு ஹாலிவுட் ஸ்டுடியோ!

 

சீரியல் பேரு சொந்தபந்தம்... வசனமெல்லாம் கந்தரகோலம்...!

Dialouges Tv Serials Goes Beyond Red Line

"என் மகன் கூட 15 நாள் குடும்பம் நடத்தின உன் தங்கச்சிக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேள் நான் கொடுக்கிறேன். அதை வாங்கிட்டு நீ வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு"

இது என்னவென்று பார்க்கிறீர்களா? தமிழ் தொலைக்காட்சியில் மருமகளைப் பார்த்து மாமியார் பேசிய வசனம்தான். சகிக்க முடியாத இந்த வசனம் மட்டுமல்ல இதை விட கொடுமையான வசனங்கள் எல்லாம் தமிழ் கூறும் தொலைக்காட்சி நல் உலகில் உலா வருகின்றன. இதைக் கேட்கும் இல்லத்தரசிகளுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி உடல்நலக்குறைவு ஏற்படுகிறதாம்.

மெகா சீரியல்கள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தன. குடும்ப சென்டிமென்ட், காமெடி என்று போய்க் கொண்டிருந்தவர்கள் பின்னர் மென்மையான காதலுக்கு மாறினர். ஆனால் அதுவே நாளடைவில் குடும்பத்தைக் கெடுப்பது, கள்ளக்காதல், கண்டக்க முண்டக்க காதல் என்று தடம் மாறி இப்போது தொட்டால் ஷாக் அடிக்கும் அளவுக்கு மாறி நாறிப் போயுள்ளன.

குறிப்பாக அனைத்து சீரியல்களுமே சொல்லி வைத்தாற் போல முறை தவறிய காதல்கள், இரண்டு பொண்டாட்டி கதை, காது கூச வைக்கும் வசனங்கள், லேசுபாசான கவர்ச்சி என்று மாறிப் போயுள்ளன.

புதிதாக இப்பொழுது சொந்த பந்தம் என்ற சீரியல் ஒளிபரப்புகின்றனர். எந்த டிவியில் இது வருகிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் கிராமத்து கதையாகத்தான் தொடங்கியது. பின்னர் திருமணத்தில் நடந்த குழப்பத்தில் அண்ணனின் நண்பனே பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். புகுந்த வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மகனை மணந்த பெண்ணை, அதாவது மருமகளை மாமியார்க்காரி கடுமையாக திட்டி வீட்டை விட்டு விரட்டுகிறாள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். வீட்டுக்கு வெளியே வந்து விழுகிறாள் மருமகள். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வருகிறான் தனது தங்கையைப் பார்க்க அவளுடைய அண்ணன்.

தங்கையை இப்படி விரட்டுகிறீர்களே என்று அவன் நியாயம் கேட்கும்போது மாமியார்க்காரி பேசிய வசனம் உண்மையிலேயே சற்று கடுமையானதுதான். "உன்னோட தங்கச்சி என் மகன் கூட 15 நாள் குடும்பம் நடத்தியிருக்கிறாள். அதுக்கு என்ன பணம் வேணுமோ கேள் கொடுக்கிறேன். உன்னோட தங்கச்சியோட ஒரு நாள் கூலி என்ன சொல் தருகிறேன். காசுக்காக சோரம் போற உன் தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு வெளியே போ" என்று காரசாரமாக பேசுகிறாள்.

இதுமட்டுமல்ல காலை 10.30 மணி தொடங்கி இரவு 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களிலும் இதுபோன்ற காதுகூசும் வசனங்களைத்தான் ஒளிபரப்புகின்றனர். இதை கேட்கும் இல்லத்தரசிகளுக்குத்தான் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான சீரியல்களைப் போடுவதில் அந்த டிவிக்காரர்களுக்குத்தான் எதுவுமே கூசுவதில்லை போல.

 

'சுண்டாட்டம்' படத்தை வாங்கினார் சக்சேனா!

Saxena Release Sundattam Movie

சாருலதாவுக்குப் பிறகு சுண்டாட்டம் என்ற படத்தை வாங்கி விநியோகிக்கிறார் 'சாக்ஸ் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

சன் பிக்சர்ஸிலிருந்து பிரிந்து போய், சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற தனி நிறுவனம் தொடங்கி, புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார் சக்சேனா. அவர் முதலில் வெளியிட்ட படம் சாருலதா.

இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட்டது. இருந்தாலும் தன் முயற்சியில் மனம் தளராத சாக்ஸ், அடுத்து சுண்டாட்டத்தை வாங்கியுள்ளார்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இத்தகவலை அவரே தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இந்தப் படத்தை நேத்து இரவுதான் எனக்கு போட்டுக் காட்டினாங்க.., படம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே வாங்கி என்னோட பேனர்ல ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணிட்டேன்," என்றார்.

சுண்டாட்டம் படத்தில் இர்பான் நாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே பட்டாளம் படத்தில் அறிமுகமானவர். ஆடுகளம் நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிரம்மா ஜி தேவ் இயக்கியுள்ளார்.

 

'சினிமா பள்ளி' தொடங்குகிறார் கமல்!

Kamal Start School Artists

சென்னை: சினிமா கலைஞர்களுக்கென ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாஸன்.

சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் கமல் ஹாஸன். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சிரமங்களை அறிந்தவர் என்பதால், முடிந்தவரை அவர்களின் நலனுக்கு தன்னாலானதைச் செய்து வருகிறார்.

இப்போது சினிமா கலைஞர்களுக்கு பயிற்சி பள்ளி தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக சென்னையில் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க கமலஹாசன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் கமல் கூறுகையில், "நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ கிடையாது.

ஆனால் இப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகிவிட்டன. நடிப்பு பயிற்சிக்காக ஏராளமான பள்ளிகள் உள்ளன.

அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் கடினமான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது.

எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்து வருகிறோம். இதுகுறிப்பாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்," என்றார்.

 

அக்.10ல் "நீர்பறவை" பாடல்

'neer paravai' songs from oct 10

தென்மேற்கு பருவக்கா‌ற்‌று படத்‌தை‌ இயக்‌கி‌ய சீனுராமசாமி, நீர்பறவை என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் நாயகனாக விஷ்ணு நடிக்கிறார். விஷ்ணுக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார். இவருடன் தம்பி ராமய்யா, சரண்யா பொன்வண்ணன், "பூ" ராம், பிளாக் பாண்டி, பாரதி கிருஷ்ணகுமார், அருள்தாஸ், தேவராஜ், ரோகிணி போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்‌படத்‌தை‌ ரெ‌ட்‌ ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. நீர்பறவை படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்நிலை படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற அக்டோபர் 10ந் தேதி நடைபெறுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட ஹாரிஸ் ஜெயராஜ் ஆடியோவை பெற்றுக் கொள்கிறார்.
 

இயக்குனராக காத்திருக்கும் பிரபாஸ்

Prabhas Waiting for Rajamouli

'நான் ஈ' பட இயக்குனர் ராஜ மவுலி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் டோலிவுட் ஹீரோ பிரபாஸ். தன்னை கொன்றவனை அடுத்தப்பிறவியில் 'ஈ' யாகி பழிவாங்கும் சிம்பிள் கதைதான். ஆனால், அதை எந்த வித 'ஈ'யடிச்சான் காப்பியும் இல்லாமல் சொன்ன விதத்தில் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ராஜ மவுலியை நிறைய பெரிய நடிகர்கள் கவனிக்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாகச் சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமவுலிக்கு முதலில் ரெட்கார்பெட் வரவேற்பு தான் அளிக்க வேண்டும். இந்த படம் தெலுங்கிலும் செம ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கும் ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க ரொம் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்து தன் ஆர்வத்தை காட்டியுள்ளாராம் பிரபாஸ்.
 

மொராக்கோ நாட்டில் தமிழ் பட ஷூட்டிங்

Tamil film shooting in Morocco

ரவி கே.சந்திரன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் மொராக்கோ நாட்டில் நடக்க உள்ளது. ஜீவா, ராதா மகள் துளசி நடிக்கும் படம் 'யான்'. இது பற்றி தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராம் கூறியதாவது:
கவுதம் மேனன் இயக்கத்தில் எங்களது தயாரிப்பில் இருக்கும் 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தையடுத்து தயாராகும் 'யான்'. படத்திலும் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தில் அறிமுகமாகும் துளசி ஹீரோயின். இவர் நடிக்கும் 2வது படம் இது. நாசர், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரேம்ஜி அமரன், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு தர வரிசையில் முன்னணியில் இருப்பவர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ரவி கே.சந்திரன் இப்படத்தின் கதை அமைத்து முதல்முறையாக இயக்குகிறார். இனிமையான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்கிறார். தேசிய விருது பெற்ற சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். 'ஸ்லம் டாக் மில்லினர்' படத்தின் ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது வென்ற ரெசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார். சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை தவிர இதுவரை படமாக்கப்படாத தொன்மையான மொராக்கோ நாட்டின் முக்கிய பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
 

விரைவில் திரைக்கு வருகிறது சமர்

Samar will hit the screen soon

விஷால், த்ரிஷா நடிக்கும் படம், 'சமர்'. இதை 'திராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் இயக்குனர் திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலாஜி ரியல் மீடியா படத்தை தயாரிக்கிறது. இதனையடுத்து படத்தின் டப்பிங் முடிந்துவிட்டதாக விரைவில் படம் திரைக்கு வரும் என இயக்குனர் திரு கூறியுள்ளார். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என திரு கூறியுள்ளார்.
 

ஹீரோ ஆகிறார் ஜி.வி.பிரகாஷ்

G V becomes an actor

நடிக்க மாட்டேன் என மறுத்து வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க¤றார். Ôஎங்கேயும் எப்போதும்' படத்தை அதுபோல் தயாரித்தார். அடுத்து, தனது உதவியாளர் ராஜசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இசை சம்பந்தமான கதை இது. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ÔÔமுருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். இப்போது தமிழ், இந்தி படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறேன். அதே நேரம் படத்தில் நடிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தி வருகிறேன். இது பற்றி உடனே எதையும் சொல்ல முடியாது" என்றார். இதற்கு முன் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்றார்கள். Ôநடிப்பு ஆசை இல்லை. இசையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்' என கூறி வந்தார் பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகராக ஜெயிக்க முடியுமா என அவருக்கு சந்தேகம் இருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் 'நான்' வெளியாகி ஹிட்டானது. விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டினர். இதையடுத்து பிரகாஷுக்கும் நடிப்பில் சாதிக்கலாம் என தைரியம் வந்திருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 

நம் கையில்தான் எல்லாம் இருக்கிறது

Everything is in our hands

கேமரா முன் வெட்கப்பட்டால் மக்கள் குட் பை சொல்லிவிடுவார்கள் என்றார் ஸ்ரீதேவி. இது பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது ரிஸ்க் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. 'இங்லிஷ் விங்லிஷ்" கதை எனக்கு பிடித்திருந்தது. இந்த கதாபாத்திரத்துடன் நான் ஒத்துப்போனேன். படத்தில் வருவதுபோல் எனது மகள்களும் என்னை அவ்வப்போது ஜாலியாக கிண்டல் செய்வார்கள். என்னை குழந்தைபோல் கவனித்துக்கொள்வார் போனிகபூர்.

'தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா?" என்கிறார்கள். தற்போது, நடித்திருக்கும் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். கேமரா முன் வெட்கப்பட்டால் மக்கள் குட் பை சொல்லிவிடுவார்கள். கேமரா முன் நடிப்பதற்கு எப்போதும் ஆர்வமாக இருப்பேன். ஏற்ற கேரக்டராகவே மாறிவிடுவேன். வீட்டை பொறுத்தவரை எனது கணவர் என்னை ஜோக்கர் என்றுதான் அழைப்பார். காரணம் நிறைய ஜோக் சொல்வேன். குழந்தைகளுடனும் கலகலப்பாக பேசி சிரிக்க வைப்பேன். என் வீட்டில் நான் தான் பாஸ். சூழலைப்பொறுத்து இது மாறும். போனிகபூரை (கணவர்) பொறுத்தவரை எனது கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்.

அதுபோல் நானும் அவரது சொல்லை கேட்பேன். முன்னணி நடிகையாக இருந்தபோது நான் திருமணம் செய்துகொண்டதுபற்றி கேட்கிறார்கள். அந்த வாய்ப்பை நானே தேர்வு செய்துகொண்டேன். நமக்கு என்ன தேவையோ அதை அடைவது நம் கையில்தான் இருக்கிறது என்பதில் நம்பிக்கை உடையவள் நான். நடிப்பிலிருந்து இல்லறத்துக்கு வந்த இடைவெளி சந்தோஷ மாக இருந்தது. அம்மா என்ற ஸ்தானத்தை அளித்தது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பதுடன் எனது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கிறேன். நடிப்பு என்று வரும்போது அதில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருக்கிறேன். இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.
 

"வெற்றி கொண்டான்" தல?

'Vettri kondaan' Ajith

சிறுத்தை படத்தின் மெகா ஹிட் பிறகு சிவா இயக்கும் படத்தில் நம்ம தல அஜீத் நடிக்கயிருக்கிறார். பில்லா2 படம் பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யு£வுடன் தல அஜீத் படு பிசியாக நடித்து வருகிறார். அடுத்து கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத், அடுத்து விஜயா புரோடக்ஷன் நாகரெட்டி சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு 'வெற்றி கொண்டான்' என்று தலைப்பு வைக்கப்படுகிறதாம். ஆனால் டைட்டில் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர்.
 

மீண்டும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு""

Paritchaiku Neramaachu

சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த 'பரீட்சைக்கு நேரமாச்சு' படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. சிவாஜி நடித்த வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒய்.ஜி.மகேந்திராவின் நாடக குரூப்பின் விழாவில் சந்தானமும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் பரீட்சைக்கு நேரமாச்சு ரீமேக் குறித்து பேசியதாக தெரிகிறது.
 

அக்டோபர் 19ல் "கடல்" பாடல்

'Kadal' Songs from Oct 19

கார்த்தி மகன் கவுதம், முன்னாள் ஹீரோயின் ராதாவின் இளைய மகள் துளசி நாயர், அர்ஜுன், மலையாள நடிகர் பைஜு, அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்கும் படம், 'கடல்'. மணிரத்னம் இயக்குகிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட முடிந்த நிலையில் படத்தின் ஆடியோவை வருகிற அக்டோபர் மாதம் 19ந் தேதி வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் படம் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
 

ஆனந்தை கவர்ந்த காஜல்

Anand praises Kajal

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தயிருக்கிறார். இதனையடுத்து, காஜல் அகர்வாலை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறுகையில் 'காஜல் ஒரு திறமையான ஹீரோயின்.. அவரது திறமையை கண்டு தான் அவருக்கு வாய்ப்பு வழங்கினேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ரியக்ஷனையும் உடனடியாக வரவழைத்து விடுவார். எல்லாத வித முக பவனையும் அவர் எளிதாக கொண்டு வருவார். கதாபாத்தரத்தை உள்வாங்கி அழகாக நடிப்பார்.' என்றார்.
 

டாப்சி படம்.. புதிய சர்ச்சை!

Tapsi Posters Become An Issue   

டாப்சிக்கும் சர்ச்சைக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு போல... அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இப்போது சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.

மோகன் பாபு மகன்களோடு இரண்டு படம் நடித்தார். முதல் படம் பண்ணும்போது, மூத்தவர் விஷ்ணுவுடன் காதல் என்று பற்றிக் கொண்டது. இரண்டாவது படம் மஞ்சு மனோஜோடு செய்தார்.

அதன் விளைவாக அவரது பழைய லவ்வர் மகத்தும் மஞ்சு மனோஜும் கட்டிப் புரண்டு உருண்டு அடித்துக் கொண்டது தெரிந்த சங்கதி.

இப்போது மீண்டும் மோகன் பாபு குடும்பத்தினர் தொடர்பாகத்தான் விவகாரம் முளைத்துள்ளது.

ஆனால் இது ஒரு போஸ்டர் விவகாரம் (என்னங்க மேட்டர் சப்புன்னு ஆகிடுச்சா!).

மலையாளத்தில் மம்முட்டி, நதியா, டாப்சி இணைந்து நடித்த ‘ட்வின்ஸ்' படம் தமிழில் ‘புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரம் செய்ய டாப்சி படங்களுடன் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கு மனோஜ் மஞ்சுவின் சகோதரி லட்சுமி மஞ்சு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "ஆதி, டாப்சி நடித்த ‘மண்டல்ல கோதாவரி' என்ற பெயரில் தெலுங்கு படமொன்றை தயாரித்து வருகிறேன். அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட டாப்ஸி படங்களை புதுவை மாநகரம் போஸ்டர்களில் பயன்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளேன் என்றார்.

ஆனால் டாப்சியோ, எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று கூறிவிட்டார் கூலாக!

 

ஓட்டுக்கேட்டு பாட்டு பாடும் குட்டீஸ்கள்!

Who Wins Wildcard Selection Round Airtel Super Singer

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இப்பொழுது வைல்ட்கார்டு சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இறுதிச்சுற்றுக்கு தங்களைச் தேர்வு செய்யச் சொல்லி ஓட்டுகேட்டு பாட்டு பாடுகின்றனர் 10 குட்டீஸ்கள். இவர்களில் யாழினி, அஜீத் இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் நடைபெற்று வரும் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் ஏற்கனவே மூன்று குழந்தைகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். தற்போது நான்காவதாக ஒரு போட்டியாளரைத் தேர்வு செய்வதற்காக வைல்ட்கார்டு சுற்று நடைபெற்று வருகிறது.

இதுநாள் வரை பாடிய குழந்தைகளில் 10 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாட அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் தங்களின் திறமையை அழகாக வெளிப்படுத்திவருகின்றனர்.

ஒவ்வொரு போட்டியாளரும் ரசிகர்களை கவர்வதாக சிறப்பான பாடல்களைப் பாடி ஒட்டுகேட்கின்றனர். வைல்ட்கார்டு சுற்றில் பங்கு பெரும் பத்து குழந்தைகளைமட்டும் வைத்து அவர்கள் ஓட்டுகேட்பதையே தனியாக பாடலாக எடுத்து ஒளிபரப்புகின்றனர். அது கூட வித்தியாசமாக அழகாக இருக்கிறது. ‘ஓட்டுக்கேட்டு பாட்டு பாடுறோம். எங்களுக்கு ஓட்டுப் போடாட்டி உங்க பேச்சு கா' என்று செல்லக்குழந்தைகள் கேட்பது கூட அழகாக இருக்கிறது.

இந்த பத்து போட்டியாளர்களில் இதுவரை யாழினியும், அஜித்தும் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுக்குத்தான் எஸ்.எம்.எஸ் ஓட்டு அதிகம் கிடைத்திருக்கிறதாம். இன்னும் இரண்டுநாட்கள் மட்டுமே இருக்கின்றன. அக்டோபர் 5ம் தேதியுடன் ஒட்டுபோடும் நேரம் முடிந்துவிடும். யாழினி ஏற்கனவே சுகன்யா, பிரகதி, கவுதமுடன் இறுதிச் சுற்று போட்டியாளர்களுடன் பாடி இருக்கிறார். வைல்ட் கார்டு சுற்றில் யாழினி பாடிய பழம் நீயப்பா பாடல் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது. அஜீத் தன்னுடைய செல்லக்குரலால் நடுவர்கள் உஷா உதூப், புஷ்பவனம் குப்புசாமி, விஜய் யேசுதாஸ் ஆகியோரையே கலங்க வைத்திருக்கிறான். 10 போட்டியாளர்களில் இவர்கள் இருவருமே வயதில் சிறியவர்கள் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் இவர்களுக்கு ஓட்டளித்திருக்கின்றனர். இதில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றில் நுழையப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மானாட மயிலாட சீசன் 7 பட்டத்தை தட்டிச்சென்ற பாபி- ஸ்வர்ணா

Bobby Swarna Winner Maanada Mayilada Season 7 Finale

மானாட மயிலாட சீசன் 7 பட்டத்தை பாபி - சுவர்ணா ஜோடி வென்றுள்ளது. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசினை சிறப்பு விருந்தினர்கள் டாப்ஸியும், விவேக்கும் வழங்கினார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடும் இந்த ரியாலிட்டி ஷோ 7 சீசன்களை கடந்துள்ளது. சீசன் 7க்கான இறுதிப்போட்டி செப்டம்பர் மாதம் 8ம் மலேசியாவில் நடைபெற்றது. கலா, குஷ்பு, நமீதா நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் நான்கு ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக நடனமாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய பாபி - சுவர்ணா ஜோடி முதல்பரிசைத் தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை சுஜித் - அங்கிதா ஜோடியும் மூன்றாவது இடத்தை புவியரசு - அனுஷா ஜோடி தட்டிச்சென்றனர்.

மலேசியத் தமிழர்களை மகிழ்விப்பதற்காக இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் ஜெயம் ரவி, விவேக், நடிகை டாப்ஸி பங்கேற்று போட்டியாளர்களுக்கு பரிசளித்தனர். முதல்பரிசை பெற்ற ஜோடிக்கு டாப்ஸியும், விவேக்கும் 10 லட்சம் ரூபாய் பரிசுக்கான செக்கினை வழங்கினார்கள்.

சிறப்பாக நடனம் அமைத்து சிறந்த நடன இயக்குநருக்கான முதல் பரிசை வென்ற ஆண்டனிக்கு 1,50000 ரூபாய் பரிசினை நடிகர் ஜெயம் ரவி வழங்கினர். நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்ற நமீதா மாம்பழக்கலர் புடவை கட்டி மல்கோவா மாம்பழம் போல நடனமாடினார். நடனம் முடிந்த உடன் ரசிகர்களை நோக்கி பல பறக்கும் முத்தங்களை பறக்கவிட்டுச் சென்றது நிகழ்ச்சியின் ஹைலைட்.

 

தமிழ்நாட்டில் 170 தியேட்டர்களில் இங்கிலீஸ் விங்கிலீஸ் ரிலீஸ்

English Vinglish Ready Break Salman   

ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்குப்பின்னர் நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 170 தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இது சல்மான்கான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

ஏக் தா டைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆனது. இது தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் 20 தியேட்டர்களில் வெளியாகி கணிசமான அளவிற்கு வசூல் செய்தது

தற்போது ஸ்ரீதேவி நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழில் ‘ஆங்கிலம், வாங்கிலம்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி நீண்டநாள் கழித்து நடித்த படம் என்பதாலும், அஜீத் நடித்திருக்கிறார் என்பதாலும் விநியோகஸ்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 170 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

ஏக் தா டைகர் திரைப்படம் முதன்முறையாக 1 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் வசூல் செய்து சாதனைபடைத்தது. இதனை முறியடிக்கும் வகையில் ஸ்ரீதேவியின் திரைப்படம் இருக்குமா? வசூலில் சாதனை படைக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அம்மாவின் கைப்பேசியில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை!

Old Actress Revathy Ammavin Kaipesi   

சென்னை: எம்ஜிஆர் படங்களில் நடித்த ரேவதி என்ற பழைய நடிகை, அம்மாவின் கைப்பேசி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் சாந்தனு-இனியா ஜோடி நடித்துள்ள அம்மாவின் கைப்பேசி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ், படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள ரேவதி, எம்ஜிஆருடன் நடித்தவர் என்பதைக் குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், "எல்லோருக்குமே அம்மா பாசம் இருக்கும். எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு தாய்ப்பாசம் இன்னும் அதிகமாக இருக்கும். அவருடைய எல்லா படங்களிலும் தாய்ப்பாசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனால்தான் இந்த படத்தில், எம்.ஜி.ஆர். படத்தை முதலில் காட்டியிருக்கிறார் தங்கர்பச்சான். உலக சினிமாவில் தவிர்க்க முடியாதவர், தங்கர்பச்சான். `அம்மாவின் கைப்பேசி' நாவலை நான் படித்து இருக்கிறேன். இதில், அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்? என்று கேட்டேன். ரேவதி என்றார்கள்.

இந்த ரேவதி, `காக்கும் கரங்கள்' படத்தில் நடித்தவர். `தனிப்பிறவி' படத்தில், எம்.ஜி.ஆரின் தங்கையாக வருவார். அவரை தேடிக்கண்டுபிடித்து நடிக்க வைத்த தங்கர்பச்சானை பாராட்ட வேண்டும்,'' என்றார்.

 

யாரையுமே நான் கிஸ் பண்ணியதே இல்லை தெரியுமா..சொல்கிறார் சன்னி லியோன்

I Never Kissed Stranger Until Jism   

இந்திய - கனடிய கூட்டுத் தயாரிப்பான சன்னி லியோன் பேசப் பேச ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கனடாவில் புகழ் பெற்ற ஆபாசப் பட நடிகையாக திகழ்ந்த சன்னி லியோன் இப்போது இந்தியாவுக்கு வந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ளதாலோ என்னவோ ஒரு வித அடக்கத்துடனேயே பேசி வருகிறார்.

ஜிஸ்ம் 2 படம்தான் சன்னியின் முதல் இந்தியப் படம். இந்தப் படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைப் பிழிந்து கொடுத்திருந்த சன்னி இந்தப் படத்தில் அடித்த கிஸ்ஸைப் போல வேறு யாரும் அடித்திருக்க முடியாது என்று சிலாகிக்கப்பட்டார். ஆனால் இந்தப் படத்துக்கு முன்பு வரை அறிமுகம் இல்லாத யாருக்குமே தான் முத்தம் கொடுத்ததே இல்லை என்று காளியாத்தா மீது சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார்.

இதுதொடர்பாக ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் சன்னி. அதிலிருந்து சில சுவாரஸ்யத் துளிகள்...

கணவர் டேணியல் வெப்பர் குறித்து...

டேணியல் எனது நல்ல நண்பர். எனது தாயார் இறந்தபோதுதான் முதல் முறையாக அவரை சந்தித்தேன். அதன் பிறகு பலமுறை சந்தித்தோம். என்னை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார், தோழமையுடன் பழகினார். எனது மனத் துயரங்களுக்கு நல்ல வடிகாலாக இருந்தார். நள்ளிரவில் நான் அம்மா நினைவாக எழுந்திருப்பேன், அப்போது கூட அவர் எனக்காக விழித்திருந்து ஆறுதல் சொல்வார். எனக்காக ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்கு பெரும் சந்தோஷமாக இருந்தது. அவர் எனக்கு ஒரு தேவதை போல..

சரி, குழந்தைகள் எப்போது...

இப்போது நான் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன். இநத உலகம் எனக்குப் பிடித்திருக்கிறது. இதை சில காலம் அனுபவித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். இப்போது என்னிடம் 2 நாய்க்குட்டிகள் உள்ளன. அவையே எனக்குக் குழந்தைகள் போலத்தான். எனக்கான குழந்தைகள் குறித்து பிறகு பார்க்கலாம்.

ஜிஸ்ம் 2 குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்ததே...

இந்த சர்ச்சைகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளழில்லை. இந்தியாவில் 100 கோடிப் பேர் உள்ளனர். அவர்களில் மிகச் சிறிய அளவிலானாரே சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றனர். எனவே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

சரி பெட்ரூம் காட்சிகளில் நடித்தீர்களே...

அது ஒரு சாதாரண காட்சிதான். அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியதால் அதிகம் பேசி விட்டனர். அதுவும் கூட ஒரு விளம்பர உத்திதான். எல்லாப் படங்களுக்கும் விளம்பர் தேவைதானே. அது அமெரிக்கப் படமாக இருந்தாலும் சரி, பாலிவுட் படமாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட விளம்பரங்கள் சகஜமானவைதான்.

உங்களுடன் நடித்த நடிகரின் மருத்துவ சான்றிதழைக் கேட்டீர்களாமே...

அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. கனடாவிலும், அமெரிக்காவிலும் இது சகஜமானதுதான். ஒவ்வொரு மனிதரின் மருத்துவ நலமும் அங்கு முக்கியமாக பார்க்கப்படும். தேவைப்பட்டால் சர்டிபிகேட் தயங்க மாட்டோம். எனவேதான் அந்த அடிப்படையில்தான் நான் இங்கும் கேட்டேன்.

மேலும் நான் இயக்குநருக்கு அனுப்பியது எனது பெர்சனல் இமெயில். அதை யார் இவ்வாறு வெளியிட்டது என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஜிஸ்ம் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் அறிமுகம் இல்லாத யாரையும் முத்தம் கூட இட்டதில்லை. இப்படத்தில்தான் முதல் முறையாக முத்தமிட்டேன் என்றார் சன்னி.

சன்னிக்கு மிகவும் பிடித்த பாலிவுட் நடிகை வித்யா பாலன்தானாம். ரொம்ப செக்ஸியாக அவர் இருக்கிறார் என்று கூறுகிறார் சன்னி..

 

எனக்கு கல்யாணமா?-அந்த அறிகுறியை கூட காணோம்: நடிகர் ஜான் ஆப்ரஹாம்

I Don T Have Clue About My Marriage

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் என்றாலே நினைவுக்கு வருவது அவரது முன்னாள் காதலி பிபாஷா பாசு தான். காதலர்களாக இருந்த இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் தற்போது திருமணம் குறித்து கேட்டாலே, ஜான் ஆப்ரஹாம் உஷாராகிவிடுகிறார்.

தனிப்பட்ட முறையில் பிபாஷா பாசு குறித்து எந்த கேள்விகளும் கேட்க வேண்டாம் என்று துவக்கத்திலேயே 'ஜகா' வாங்கி கொள்கிறார் ஜான். 'நிரா' என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஜான் ஆப்ரஹாமிடம் நைசாக கேள்விகளை கேட்டோம். சமீபத்தில் முதலீட்டு வங்கியாளரான பிரியா ரஞ்சல் என்பவரை, ஜான் ஆப்ரஹாம் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவியது.

இது குறித்து ஜானிடம் கேட்ட போது, அது நடக்கும் போது நடக்கும். ஆனால் தற்போது திருமணத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தற்போதைக்கு எனது பெற்றோருடன் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறேன் என்றார்.

கடந்த ஜனவரி மாதத்திலேயே நீங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறதே என்று கேட்டதற்கு, அது ஒரு பொய்யான தகவல். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் திருமணம் செய்திருந்தால், அதற்கேற்ப நடந்து கொள்வேன். எனது திருமணத்தை யாராவது கனவு கண்டிருப்பார்கள் என்றார்.

பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களில் நடித்து வருவது குறித்து கேட்ட போது, நான் மக்களில் ஒருவனாக உள்ளேன். பலருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இதனால் தான் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களில் நடிக்க நான் ஒப்பு கொள்கிறேன் என்றார்.

 

மாற்றானுக்கு யு சான்றிதழ்!

Maattrraan Gets U   

சூர்யாவின் மாற்றான் படத்துக்கு அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

சூர்யா -காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள படம் மாற்றான். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் மாற்றான், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை. இரண்டு வேடங்களிலும் சூர்யா நடித்துள்ளார்.

ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், இது எங்கள் சொந்தக் கற்பனை என்று படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய சுபா பிடிவாதமாகக் கூறி வருகின்றனர் (ஆனால் கேவி ஆனந்த், இது தனக்கு ஏதோ ஒரு தாய்லாந்துப் படம் மற்றும் நாவல் ஒன்றின் பாதிப்பு என்று வாய் தவறி முதலில் கூறிவிட்டார்!).

படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று போட்டுக் காட்டினர். எந்த இடத்திலும் கட் இல்லாமல், கிளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. மொத்தம் ரூ 85 கோடிக்கு பிஸினஸ் ஆகியிருக்கிறதாம் மாற்றான்!