கஞ்சா கருப்பு விழா... நிற்க இடமின்றி ஓரத்தில் நின்ற அமீர்!

கஞ்சா கருப்பு விழா... நிற்க இடமின்றி ஓரத்தில் நின்ற அமீர்!

கஞ்சா கருப்புவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாலா என்றாலும், அவரை பிரபல காமெடியனாக்கிய பெருமை அமீருக்கே உண்டு.

ஆனால் நேற்று நடந்த கஞ்சா கருப்புவின் சொந்தப் படமான வேல்முருகன் போர்வெல்ஸ் இசை வெளியீட்டு விழாவில் நிற்பதற்கு இடமின்ற ஓரத்தில் நின்றார் இயக்குநர் அமீர்.

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடித்து தயாரிக்கும் புதிய படம் வேல்முருகன் போர்வெல்ஸ். அவருக்கு ஜோடியாக ரகசியா நடித்துள்ளார்.

பாலா படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமாகியதால் கஞ்சா கருப்பு என்ற பெயர் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. அமீரின் ராம் படத்தின் மூலம் பெரிய காமெடியனாகிவிட்டார் கருப்பு.

பருத்திவீரன், சுப்ரமணியபுரம், சண்டகோழி என அடுத்தடுத்து வரிசையாக நடித்த படங்களின் வெற்றியில் கருப்புக்கும் கணிசமான பங்குண்டு.

கஞ்சா கருப்புவின் வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமீர் பேசுகையில், "ராம் படத்தின் தியேட்டர் விசிட்டிற்கு சென்றிருந்த போது நான் உள்ளே போனதும், தியேட்டர் ஊழியர்கள் கஞ்சா கருப்புவை உள்ளே விடவில்லை. இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியபின்தான் உள்ளேவிட்டார்கள்.

ஆனால் அதே கஞ்சா கருப்புவை படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதைப்பார்த்து சந்தோஷப்பட்டதை விட நான் இப்போது தான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்.

இன்று நான் தாமதமாக வந்ததால் உட்கார இடமில்லாமல் கதவோரமாக நின்றுவிட்டேன். தமிழ்த் திரையுலகமே கொண்டாடும் விஜய் சேதுபதி எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்.

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் முருகதாஸ் உள்ளே அமர்ந்திருந்தார். சினிமாவில் கஞ்சா கருப்பு வளர்ந்திருக்கிறார், வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் கிடையாது. சந்தோஷமாக உள்ளது," என்றார்.

 

40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள பாலு மகேந்திரா!

சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா. அதில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரைப் பற்றியும், அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே ஒரு விஷயம் சொன்னார்.

'ஜிவி பிரகாஷ், நீ நடிப்புல கவனம் செலுத்த நினைத்து இசையை விட்டுவிட வேண்டாம்.... பாரதிராஜா, நீங்களும் டைரக்ஷனை விட்டுவிட வேண்டாம்,' என்றார்.

இப்போது பாலு மகேந்திராவே நடிகராக களம் இறங்கியுள்ளார்.

40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள பாலு மகேந்திரா!

8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கும் தலைமுறைகள் படத்தின் முக்கிய பாத்திரத்தில் அவர்தான் நாயகன். ஒரு சிறுவனுக்கும் அவன் தாத்தாவுக்குமான பாசத்தை சித்தரிக்கும் கதையில், அந்த தாத்தா பாத்திரத்தில் நடித்திருப்பவர் பாலு மகேந்திராதான்.

ஆனால் படத்தின் ட்ரைலர்களில் ஒரு காட்சியில்கூட பாலு மகேந்திராவின் முகத்தைக் காட்டவில்லை. அவர் தலை மற்றும் நடந்து போவதை பின்பக்கமிருந்து மட்டுமே காட்டியுள்ளார்.

பொதுவாக வெளியில் அல்லது புகைப்படங்களில் தன் அடையாளமான தொப்பியை அவர் கழட்டுவதே இல்லை. எந்த விழாக்களுக்குப் போனாலும் அப்படித்தான். ஆரம்ப நாட்களிலிருந்தே பாலு மகேந்திரா என்றால் அந்தத் தொப்பிதான் கண் முன் நிற்கும்.

இந்தப் படத்தில் அந்தத் தொப்பி இல்லை. தன் நிஜமான முடி, முகத்துடன் தோன்றுகிறார்.

உங்கள் அடையாளமான தொப்பி இல்லாமல் நடிக்கிறீர்களே என்று கேட்டபோது, 'என் அடையாளம் தொப்பி அல்ல... என் படங்களே என் அடையாளம்" என்றார்.

 

சூது கவ்வியதால் அப்செட் ஆன சூர்ய நடிகர்

சமீபத்தில் நடைபெற்ற சிறைச்சாலை நகரின் பெயரில் உருவாகியுள்ள திரைப்பட விழாவுக்குச் சென்ற சூர்ய நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

காரணம் விழாவுக்கு வந்திருந்த சூது கவ்விய நடிகர் மீதே பெரும்பாலானவர்களின் கவனிப்பு மையம் கொண்டிருந்தது தானாம். தொடர்ந்து படங்களில் வித்தியாசம் காட்டி வரும் அந்த சூது நடிகரை விழாவுக்கு வந்திருந்தவர்கள் புகழ்ந்து தள்ள, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருத்தப் பட்டாராம் சூரிய நடிகர்.

எனவே, சூடு பட்ட அந்தச் சிங்கம் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.

 

எத்தனை காலத்துக்கு ஈரானியப் படங்களை வியந்து பார்ப்பது; இனி... - பாலு மகேந்திராவின் சவால்

சென்னை: இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஈரானியப் படங்களை வியந்து பார்த்து பாராட்டிக் கொண்டிருப்பது... இதோ, இனி நாங்கள் எடுக்கிறோம், ஈரானிய, இத்தாலிய, ப்ரெஞ்சு சினிமாக்காரர்கள் அதைப் பார்த்து வியந்து பாராட்டட்டும் என இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார்.

சென்னை பிரசாத் லேபில் நடந்த தலைமுறைகள் படத்தின் அறிமுக செய்தியாளர் சந்திப்பில் பாலுமகேந்திரா பேசுகையில், "கோடாக் கம்பெனி இனி நெகடிவ் தயாரிக்கப் போவதில்லை என்று கூறியதும், இனி என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்து நின்றேன். ஏனென்றால் எனக்கு பிலிமில் படமெடுத்துதான் பழக்கம்.

எத்தனை காலத்துக்கு ஈரானியப் படங்களை வியந்து பார்ப்பது; இனி... - பாலு மகேந்திராவின் சவால்

ஆனால் நாளைய சினிமா டிஜிட்டல் சினிமா தான் என்ற ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. என் பிள்ளைகள் நாளை எடுக்கப்போகும் திரைப்படங்கள் டிஜிட்டல் திரைப்படங்கள் தான் என்று எனக்கு தோன்றியது.

இயக்குனர் சசிகுமார் ஈரான், கொரியா, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களிலிருந்து படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள். நாம் வாயை பிளந்து பார்த்து வியந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். ஏன் இனி நாங்கள் இங்கு படம் எடுத்து அனுப்புவோம், அவர்கள் அங்கு வாயை பிளந்து பார்க்கட்டுமே.

என் பிள்ளைகளிடம் நான் எப்போதும் சொல்வது தான் அது. நீங்கள் படம் எடுங்கள். நாம் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம். கலாச்சார ரீதியிலா? தொழில்நுட்ப ரீதியிலா? எந்த வகையிலும் கிடையாது. என் பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரி படமாக நான் ஒரு படம் எடுத்து காட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றியது.அந்த நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம்தான் தலைமுறைகள்.

இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்ததும் என் மனசில் தோன்றியவர் இயக்குநர் - நடிகர் - தயாரிப்பாளர் சசிகுமார்தான். அவருக்கு போன் செய்து சசி நான் உங்களைப் பார்க்கணுமே என்றேன். நீங்க இருக்கிற இடம் சொல்லுங்க சார், நானே வர்றேன் என்றார். இல்லை, நான் வருவதுதான் முறை என்று சொல்லி அவர் அலுவலகம் சென்றேன்.

தலைமுறைகள் படத்தின் கதையை பாதி சொல்லிக் கொண்டிருந்த போதே, இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் சார் என்றார்.

நன்றி சசிகுமார். ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவரை இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில்தான் நடிக்க வைக்க முடிந்தது. ஆனால் அந்த ஒரு காட்சியை எடுத்த பிறகுதான், இன்னும் நான்கைந்து சீன்கள் வருவதுபோல மாற்றியிருக்கலாமே என்று தோன்றியது. நான் இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை," என்றார்.

 

'ண்ணா.. தயவு செய்து எதுவும் எழுதிடாதீங்க ப்ளீஸ்' - நிருபர்களிடம் கெஞ்சிய விஜய்

செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் பிரியாணித் திருவிழா நடத்தி வந்த விஜய்யிடம், சச்சின் படத்திலிருந்து ஒரு புதிய பழக்கம்... செய்தியாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து தன் நீலாங்கரை வீட்டுக்கோ, கோடம்பாக்க அலுவலகத்துக்கோ ரகசியமாக வரவழைத்து, அவர்களிடம் 'மனம்விட்டுப்' பேசி அனுப்புவார்.

இந்த சந்திப்பைப் போலவே, சந்திப்பு குறித்த செய்திகளும் ரகசியமாகவே இருந்துவிடும்!

'ண்ணா.. தயவு செய்து எதுவும் எழுதிடாதீங்க ப்ளீஸ்' - நிருபர்களிடம் கெஞ்சிய விஜய்

நேற்றும் அப்படித்தான்... குறிப்பிட்ட சில நாளிதழ் மற்றும் வார இதழ் நிருபர்களை மட்டும் தனியாக அழைத்த விஜய்யின் மேனேஜர், 'சார் உங்க கிட்ட பர்சனலா கொஞ்சம் பேசனுமாம்... நீங்க மட்டும் வந்துடுங்க,' என ஒவ்வொருவரிடமும் தனியாகச் சொல்லி வைக்க, முத்து படத்தில் தீபாவளிப் பரிசுக்காக வருவார்களே, அப்படி ரகசியமாகப் போய், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்திருக்கிறார்கள் செய்தியாளர்கள்.

ஆனாலும் தனித்தனியாகவே சந்தித்திருக்கிறார் விஜய். சந்திப்பின்போது அவர் பேசியது இரண்டே வரிகள்தான், 'ண்ணா... இந்தப் படம் நல்லபடியா ரிலீசாகணும்... தயவு செய்து எதுவும் எதிர்மறையா எழுதி காலி பண்ணிடாதீங்க,' இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டாராம் விஜய்.

விஜய் பேட்டி என எதுவும் கொடுக்காததில் கூட வருத்தமில்லையாம் சிலருக்கு. பேஸ்புக்ல போடும் அளவுக்கு படமெடுத்துக்கக் கூட அனுமதிக்கலயே என்றுதான் ரொம்ப அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்!

 

லீடர்ல விட்டதை மாவட்டத்திலே பிடிக்க தீயா வேலை செய்றாங்கண்ணா

சென்னை: லீடர் படத்தில் விட்டதை மாவட்டத்தில் பிடிக்க தளபதி ஆட்கள் தீயா வேலை செய்கிறார்களாம்.

தளபதியின் லீடர் படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் படத்தை வெளியிடுவதற்குள் தளபதிக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்துவிட்டது. படத்தின் தலைப்பு மற்றும் டைம் டு லீட் என்ற வாசகம் தான் தளபதிக்கு வினையாக வந்தது.

கடைசியில் அங்கும் இங்கும் ஓடி ஒரு வழியாக படத்தை வெளியிட்டார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் தான் தளபதி மாவட்டம் படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து அவர் டப்பிங் பேசி வருகிறார்.

லீடர் தான் ஓடவில்லை, மாவட்டம் படமாவது ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார் தளபதி. படத்தை ஹிட்டாக்க தளபதியின் ஆட்கள் தீயா வேலை செய்து வருகிறார்களாம். கடவுளே இந்த படமாவது பிரச்சனை இல்லாமல் ரிலீஸாகட்டும் என்று தளபதி பிரார்த்தனை செய்கிறாராம்.

 

வெங்கட் பிரபு - சூர்யா இணையும் புதிய படம்... ஏப்ரலில் படப்பிடிப்பு!

சென்னை: சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படம் முழுக்க முழுக்க வெங்கட் பிரபு பாணியில் ஆக்ஷன் - ரொமான்ஸ் - காமெடி கலந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா முடிந்ததும், சூர்யாவை வைத்து படம் இயக்கத்தான் வாய்ப்பு கேட்டிருந்தார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு - சூர்யா இணையும் புதிய படம்... ஏப்ரலில் படப்பிடிப்பு!

ஆனால் சூர்யா அப்போது மாற்றான், சிங்கம் 2 என படு பிஸியாக இருந்ததால், அந்த இடைவெளியில் கார்த்தியை வைத்து 'பிரியாணி'யை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள் ஸ்டுடியோ கிரீன்காரர்கள்.

இப்போது சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்கிறார். இடையில் அவர் நடிக்கவிருந்த கவுதம் மேனன் படம் ட்ராப்பாகிவிட, இப்போது அந்த கால்ஷீட்டை வெங்கட்பிரபுவுக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா.

வெங்கட் பிரபு சொன்ன ஒரு வரிக் கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்ட சூர்யா, இந்தப் படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம். ஏப்ரலில் ஆரம்பித்துவிடலாம் என கூறியுள்ளாராம்.

முக்கியமான விஷயம், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ள புதிய பட நிறுவனமான டி 2 எண்டர்டெயின்மென்ட்!

 

கமலின் விஸ்வரூபம் 2 - பிப்ரவரிக்கு தள்ளிப் போனது!

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதியை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

கமலின் விஸ்வரூபம் 2 - பிப்ரவரிக்கு தள்ளிப் போனது!  

கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்தினை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பொங்கலன்று படத்தை வெளியிடத் திட்டமிருந்தார் கமல். ஆனால் அந்தத் தேதியில் ரஜினியின் கோச்சடையான் உள்ளிட்ட படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிரம நிலை ஏற்பட்டது.

எனவே ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளிப் போட்டார் கமல். இப்போது ஜனவரி 26-ம் தேதி ரஜினி படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே கமல் மூன்று வாரங்கள் தன் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார்.

இம்மாத இறுதியில் படத்தை சென்சாருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார் கமல்.

 

கமலின் விஸ்வரூபம் 2... பெரும் விலைக்கு விற்கப்பட்டது கேரள உரிமை!

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் கேரள உரிமை, அதன் முதல்பாகத்தை விட அதிக விலைக்குப் போயுள்ளது.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம், டிடிஎச், இஸ்லாமிய மதப் பிரச்சினை, தமிழக அரசின் தடை என சிக்கல்களால் தமிழகத்தில் வெளியாகாமல் திணறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் வெளியானது.

கமலின் விஸ்வரூபம் 2... பெரும் விலைக்கு விற்கப்பட்டது கேரள உரிமை!  

அப்போது தென் தமிழகத்தைச் சேர்ந்த பல ரசிகர்களும் பார்வையாளர்களும் வண்டி கட்டிக் கொண்டு கேரளாவுக்குப் போய் படம் பார்த்தார்கள். அங்கே விஸ்வரூபம் நல்ல வசூலையும் பெற்றது.

இப்போது விஸ்வரூபம் 2 படத்தின் பிற மாநில உரிமைகள் விற்பனை தொடங்கியுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகத்தை விட அதிக விலைக்கு இரண்டாம் பாகத்தை விற்பனை செய்துள்ளார் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்தப் படத்தை கேரளாவின் பிரபல விநியோகஸ்தரான காளீஸ்வரி பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

கர்நாடகத்தில்...

கர்நாடகத்திலும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது விஸ்வரூபம் 2. கணேஷ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வாங்கியுள்ளது.

 

சென்சாரில் யுஏ சான்று... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது பிரியாணி!

சென்னை: தணிக்கைக் குழு யு ஏ சான்றிதழ் அளித்ததால் அதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது பிரியாணி திரைப்படம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி - ஹன்சிகா, பிரேம்ஜி நடித்துள்ள பிரியாணி திரைப்படம் இன்னும் இரு வாங்களில் வெளியாகவிருக்கிறது.

சென்சாரில் யுஏ சான்று... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது பிரியாணி!  

இந்த நிலையில் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். படத்தில் சில காட்சிகள் வயது வந்தோர் மட்டும் பார்க்கும்படி உள்ளதால், படத்துக்கு யு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார்.

தமிழக அரசின் கேளிக்கை வரியிலிருந்து விலக்குப் பெற க்ளீன் யு சான்று பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே அழகுராஜா படத்துக்கு வரிவிலக்குப் பெற்றதில் நிறைய சங்கடங்களைச் சந்தித்தது ஸ்டுடியோ க்ரீன்.

எனவே இந்த முறை அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதால் கவனமாக, யு சான்று பெற முயற்சி செய்து வருகிறார்கள். படத்தை இப்போது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி, தேவைப்பட்டால் சில காட்சிகளை நீக்கிவிட்டாவது யு சான்று பெறத் தீர்மானித்துள்ளார்களாம்.

 

ராஜபக்சே மகனின் பாக்கெட்டை உரசும் தமிழ் நடிகையின் போட்டோ?

ராஜபக்சே மகனின் பாக்கெட்டை உரசும் தமிழ் நடிகையின் போட்டோ?

சென்னை: இலங்கைக்கு சென்று தமிழர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளான நடிகையின் போட்டோவை அதிபர் ராஜபக்சேவின் மகன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிவதாகக் கூறப்படுகிறது.

கோலிவுட்டில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கையில் நான் பாலிவுட் போகிறேன் என்று மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பையில் செட்டிலானார் அந்த நடிகை. இந்தி படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அவர் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இலங்கை சென்றிருந்தபோது ராஜபக்சேவின் மகனுடன் நெருக்கமாக இருந்த சிடி தமிழகத்தில் உள்ள சில முக்கியப் புள்ளிகளிடம் கிடைத்துள்ளது என்று செய்திகள் வெளியாகின.

நடிகை இலங்கையை விட்டு வந்து பாலிவுட்டில் நிலைத்து நிற்க போராடிக் கொண்டிருக்கிறார்.  ஆனால் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இன்னும் அந்த நடிகையின் போட்டோவை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

மம்மூட்டிக்காக டான்ஸராக மாறும் விஜய்

சென்னை: மம்மூட்டி நடிக்கும் மலையாள படத்தில் இளையதளபதி விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

மம்மூட்டியை வைத்து மலையாள இயக்குனர் ஆஷிக் அபு எடுக்கவிருக்கும் படம் தி கேங்ஸ்டர். இதில் மம்மூட்டி பெரிய தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி துவங்குகிறது. படத்தில் ஆஷிக் அபுவின் காதல் மனைவி ரீமா கல்லிங்கல், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மம்மூட்டிக்காக டான்ஸராக மாறும் விஜய்

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு இளையதளபதி விஜய்யை ஆட வைக்கிறார்கள். இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக விஜய் பிரபுதேவாவின் சிறுத்தை இந்தி ரீமேக்கான ரவுடி ராத்தோர் படத்தில் ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ்கள் போட்டிருப்பார். அந்த ஸ்டெப்ஸ்களை பார்த்தே படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் அசந்துவிட்டார். விஜய் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவரும் அறிந்ததே.

 

நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்

நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்

சென்னை: ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் பணம், நகை போன்றவற்றை மோசடி செய்துவிட்டதாக புதுமுக நடிகை அனுராதா மீது தொழிலதிபர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா.

இவர் மீது சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதரன் என்பவர் கமிஷனரிடம் பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ‘'எனக்கும் அனுராதா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஆகையால், அவரை கதாநாயகியாக நடித்த மேற்கண்ட படங்களுக்கு 40 லட்சம் பைனான்ஸ் செய்தேன்.

இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோம். இதுமட்டுமல்லாமல் பணம்,சொத்து, நகை என மொத்தம் ஒன்றைரை கோடிக்கு மேல் என்னிடம் இருந்து அனுராதா கறந்துவிட்டார். இப்போது அதை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்''என்றார்.