ஹாலிவுட்டில் விஸ்வரூபம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உலக நாயகன் கமலஹாசனின் 'விஸ்வரூபம்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1 அன்று வெளியிட்ட பட போஸ்டர்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நி¬லியல் கமலின் 'விஸ்வரூபம்' படத்தை பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். 'மேட்‌ரிக்ஸ்', 'லார்ட் ஆஃப் தி ‌ரிங்ஸ்' போன்ற படங்களை தயாரித்த Barrie M Osborne, கமலின் 'விஸ்வரூபம்' படத்தின் சிறப்பு அம்சங்களை கேள்விப்பட்டதுடன், படத்தை பார்க்க வேண்டும் என்று கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெ‌ரிவித்திருக்கிறார். இதனையடுத்து விஸ்வரூபத்தை Barrie M Osborne-க்கு திரையிட்டு காட்டவே இந்தமுறை அமெ‌ரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.



 

'சகுனி'யின் விலை ரூ. 22 கோடி?!

saguni sold for rs 22 cr   
கார்த்தி நடித்த சகுனி படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்று விட்டார்களாம்.இதுதான் கோலிவுட் முழுக்க ஒரு பேச்சாக கிடக்கிறது.

கார்த்தி, பிரனீதா நடித்துள்ள படம் சகுனி. இப்படத்தை மே மாதம் 11ம் தேதிக்கு திரைக்குக் கொண்டு வரத்த திட்டமிட்டுள்ளனராம். இந்த நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்றுள்ளதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

கார்த்தி நடித்த எந்தப் படமும் இப்படி ஒரு பெரிய விலைக்கு இதுவரை போனதாக வரலாறே இல்லை. இந்த நிலையில் சகுனியை மட்டும் இவ்வளவு பெரிய விலைக்கு எப்படி விற்றார்கள் என்பதே பெரிய பேச்சாக உள்ளது.

இப்படத்தை தயாரித்தது டிரீம் வேரியர்ஸ் நிறுவனம். படத்தை வாங்கியிருப்பது வேந்திரன் பிலிம்ஸ் மதன். சங்கர்தயாள் சர்மாவின் அறிமுக இயக்கத்தில் சகுனி உருவாகியிருப்பது நினைவிருக்கலாம். ஜிவிபிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தானம் காமெடி பண்ணியுள்ளார்.

இவ்ளோ பெரிய ரேட்டுக்கு 'ஒர்த்'தானதுதானா சகுனி... படம் வரட்டும் பார்க்கலாம்...!
 

மலையாளத்தில் படமாகிறது சில்க்கின் நிஜக் கதை!.. ரிச்சாவிடம் பேச்சுவார்த்தை!

சில்க் ஸ்மிதாவின் கதையைத் தழுவி தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தார்கள். இப்போது அதை தமிழ், கன்னடம், பெங்காலி என ஒவ்வொரு மொழியாக ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சில்க்கின் நிஜக் கதையை நாங்கள் படமாக்கப் போகிறோம் என்று கூறி மலையாளத்தில் சிலர் கிளம்பியுள்ளனர்.

புரொபைல் என்று இப்படத்திற்கு இப்போதைக்குப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் கதை சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதைதான் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.

விஜயலட்சுமி எப்படி சில்க் ஸ்மிதாவாக மாறினார், எப்படி தென்னிந்தியத் திரையுலகை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் அரசாண்டார் என்பதை இன்ச் பை இன்ச்சாக சொல்லப் போவதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் கூறுகையில், சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர் ஆண்டனி ஈஸ்ட்மேன். அவர்தான் தனது இணையைத் தேடி படத்தின் மூலம் சில்க்கை மலையாளத்தில் நடிகையாக்கினார். அவரே இப்படத்திற்கும் கதை எழுதப் போகிறார்.

படத்தின் திரைக்கதையை காலூர் டென்னிஸ் கவனிப்பார். இவர் சில்க்கின் 15 படங்களுக்கு திரைக்கதை அமைத்தவர் ஆவார். அனில் படத்தை இயக்குவார் என்றனர்.

இருப்பினும் இப்படம் குறித்து கருத்து தெரிவிக்க காலூர் டென்னிஸ் மறுத்து விட்டார். அவர் கூறுகையில், ஒரு நடிகையின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தின் கதைக்கு நான் திரைக்கதை அமைக்கிறேன். அவ்வளவுதான் இப்போதைக்கு கூற முடியும் என்றார்.

சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதை படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப் போவதாக ஒரு தகவல் கூறுகிறது.

சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிக்க ரிச்சா கங்கோபாத்யாயாவை அணுகியுள்ளனராம். இவர் மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய இரு தோல்விப் படங்களில் நடித்தவர். இப்போது தமிழில் பெரிய அளவில் பேசப்படாதவர். இந்த நிலையில் சில்க்கின் நிஜமான கதையில் நடிக்க அவரைத் தேடிப் போயுள்ளனர்.

பார்க்கலாம், இந்த சில்க் கதை என்ன சொல்லப் போகிறது என்பதை...!
 

தமிழ் படத்துக்கு முக்கியத்துவமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் 'தாண்டவம்', கார்த்தியுடன் 'அலெக்ஸ் பாண்டியன்', ஆர்யாவுடன் 'இரண்டாம் உலகம்', சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் தமாருகம்,

பிரபாஸுடன் 'வாரதி' என ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. அவரது சினிமா கேரியரை பார்க்கும்போது தமிழைவிட தெலுங்கில் பெரிய வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஆனாலும் தற்போது அவர் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. 30 வயதை கடந்துவிட்ட அனுஷ்கா தற்போதுள்ள இளம் நடிகைகளின் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுத்திருப்பார் என்று டோலிவுட் திரையுலகினர் கருதுகின்றனர். அதேநேரம்,  கோலிவுட்டில் மார்க்கெட்டை நம்பி இந்த முடிவு எடுத்திருக்கலாம் அல்லது தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம்.


 

2 கதையில் எதை படமாக்குவது? குழப்பத்தில் முனி 3

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரண்டு கதைகளில் எதை படமாக¢குவது என முடிவு எடுக்க முடியாமல் முனி 3 படக்குழு குழப்பத்தில் உள்ளது. லாரன்ஸ் நடித்து, இயக்கிய படம் முனி. இதன் இரண்டாம் பாகமான காஞ்சனா, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து மூன்றாம் பாகம் ஷூட்டிங் ஜூனில் தொடங்கும் என லாரன¢ஸ் அறிவித்துவிட்டார். இப்படத்தையும் அவரே இயக்கி, நடிக்கிறார்.
ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. அதே நேரம் படத்தின் திரைக்கதையும் இன்னும் எழுதி முடிக்கவில்லை லாரன்ஸ். காரணம், படத்துக்காக 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார். இதில் எதை படமாக்குவது என அவர் முடிவெடுக்காமல் உள்ளார். கதையை தேர்வு செய்துவிட்டால்,

அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பட யூனிட் டிஸ்கஷன் நடத்தும். ஆனால் கதை தேர்வில் குழப்பம் நீடிப்பதால், ஷூட்டிங்கிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் திட்டமிட்டபடி ஷூட்டிங் நடக்குமா என பட யூனிட்டார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது பற்றி லாரன்ஸ் கூறுகையில், ரபேல் தெலுங்கு பட வேலைகளில் பிசியாக உள்ளேன். இதை முடித்த தும் அடுத்த மாதம் முனி 3 பட ஷூட்டிங் தொடங்கும். 2 கதைகளில் ஒன்றை தேர்வு செய்துவிட்டால், அதன்பின் வேலை சுலபமாகிவிடும். திட்டமிட்டபடி ஷூட்டிங் நடத்துவோம் என்றார்.


 

உயிரெழுத்து படத்தில் நான் ஹீரோ இல்லை! - ராகவா லாரன்ஸ் அறிக்கை

Lawrence
இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ள ‘உயிரெழுத்து’ படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், அதில் ஹீரோவின் தோழனாக மட்டுமே தான் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் இயக்குனர்களில் ஆர்.சுந்தரராஜன் அவர்களும் ஒருவர்.

அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு ‘உயிரெழுத்து’ படத்தில் நடித்தேன். நான் ஏற்கெனவே நடித்த அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அற்புதம் போன்ற படங்களைப் போன்றுதான் இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனாக ஒரு சில காட்சிகளிலும், ஒரே ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். நான் அதில் ஹீரோ இல்லை.

ஆனால் சமீபத்தில் உயிரெழுத்து படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில் நான்தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை சந்திக்கிற நண்பர்களும் இப்படத்தில் எப்பொழுது நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே, இனி ‘உயிரெழுத்து’ விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 

'அடடா... இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்!'

அறிமுகமானது ஹீரோவாக இல்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் அசத்தலாக நடித்து வாகை சூடியவர் அந்த இளம் நடிகர்.

சமீப காலமாக இவரைப் பற்றித்தான் ஒரே கசமுச செய்தியாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.

அப்போது மேடையில் இளம் நடிகர் பேச வேண்டிய முறை. ஆனால் அவரோ பேசாமல் பம்மிக் கொண்டு, ஸ்டேஜுக்குப் பின்னால் போக, வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர், அவர் நிலைமை புரியாமல்.

வந்தவர், ஒரு பக்கமாக சிரித்தபடி, வணக்கம், நன்றி என்று கூறிவிட்டு ஓட, அப்போதுதான் மனிதர் உற்சாக பானத்தில் இருந்தது தெரியவந்தது.

மாலை 6 மணி கூட ஆகலியே, பகலிலே இந்த நிலவரமா என்று கலவரத்துடன் பேசிக் கொண்டனர் நடிகரின் நலம் விரும்பிகள். 'அடடா, இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்... எல்லாம் புதுசா கட்டுண கல்யாணந்தானப்பா காரணம்... குடும்ப சிக்கல் இந்த புதுமாப்பிள்ளையை குடிமகனாக்கிவிட்டுடுச்சி போல', என்று பேசிக் கொள்ள அது அப்படியே மீடியாவிலும் ஒரு சுற்று வர ஆரம்பித்துள்ளது!
 

தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியெடுத்த வழக்கு எண் 18/9!

vazhakku enn 18 9 shakes the heart tamil cinema
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டனர் பாலாஜி சக்திவேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்.

படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, "இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?" என்றார்.

படத்தின் விமர்சனத்துக்கு.... வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருங்க!
 

'8 வருடங்களில் 40 வாட்டி...' - கோவையில் நமீதாவின் கொஞ்சல்!

Namitha  
பட வாய்ப்புகள் இருக்கிறதோ இல்லையோ நடிகைகள் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். கடை திறப்புகள், விளம்பர அழைப்புகள், நடன மேடைகள் என அவர்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.

அப்படி ஒரு நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை நமீதா வந்திருந்தார். இடம் கோவை, கணபதி.

நமீதாவைப் பார்த்ததும் உற்சாகமான ரசிகர்கள் பறக்கம் முத்தங்களை வீச, அவரும் அதை பக்குவமாகக் கையாண்டு, ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதில் அவர் கில்லாடியாச்சே!

பின்னர் தன்னைப் பார்க்க ரசிகர்களுக்கு இணையாக முண்டியடித்த செய்தியாளர்களிடம் கொஞ்ச நேரம் பேசினார். அவர் கூறுகையில், "கோயமுத்தூர் எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வரத் தயங்கியதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் 40 தடவை வந்து போயிருக்கிறேன் இந்த ஊருக்கு.

எனக்கு இந்த ஊரில் ரொம்ப பிடித்த இடம் கோவை ரேஸ்கோர்ஸ். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் உற்சாகமாக இருக்கும். எதிர்காலத்திலும் நான் தொடர்ந்து வர விரும்பும் இடம் இந்த கோவைதான்.

சினிமாவில் ஒரு இடத்தைப் பெற வேண்டிய நிலையில் நான் இல்லை. பாப்புலாரிட்டியைத் தாண்டி, நல்ல சினிமாவில், நல்ல வேடங்களில் நடித்தால் போதும் என்ற நிலை. அதனால்தான் திறமையை காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.

இதுவரை நான் நடிச்சதில் பச்ச குதிரை என்னை ஒரு நல்ல திறமையான நடிகையாக காட்டியது. இன்னொரு படம் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடித்த ஏய். காமெடி, ரொமான்ஸ் என எனக்கு நல்ல பேர்.

அஜீத்துடன் நடித்த பில்லா எனக்கு பெரிய திருப்பு முனை தந்தது. தற்போது கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறேன். நடிப்பு

என்னுடன் நடித்த நடிகர்களில் யாரை பிடிக்கும் என்று தனித்து சொல்ல முடியாது. அனைத்து நடிகர்களுமே எனக்கு பிடிக்கும். வலது கண் பிடிக்குமா? இடது கண் பிடிக்குமோ? என்று கேட்டால் என்ன சொல்வது. அது போல் தான் என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். யாரிடமும் எனக்கு கெட்ட பெயர் கிடையாது," என்றார்.
 

லீலை - திரைப்பட விமர்சனம்

Leelai Movie  
நடிகர்கள்: ஷிவ் பண்டிட், சந்தானம், மான்சி பரேக்

இசை: சதீஷ் சக்ரவர்த்தி

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்

தயாரிப்பு: டி ரமேஷ் பாபு

நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த சின்னப் படம். ஆனால் ரசிக்க வைக்கும் முயற்சி. ஆள்மாறாட்டக் கதைதான். ஆனால் சொன்ன விதம், பார்ப்பவர் முகத்தில் புன்னகையைத் தவழ விடுகிறது.

படிக்கும் காலத்தில் கருணை மலர் என்ற பெண்ணின் முகத்தைப் பார்க்காமலே போனில் கடலைப் போட்டே லவ்வாகிறான் ஹீரோ. ஆனால் ஒரு நாள் இருவருக்கும் போனில் சண்டையாக, முகத்தைப் பார்க்காமலேயே பிரிந்தும் விடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிறுவனத்தின் வேறு வேறு தளங்களில் இருவருக்கும் வேலை. எதேச்சையாக ஒரு போன் காலில் மீண்டும் கருணை மலருடன் பேசும் வாய்ப்பு ஹீரோவுக்கு. ஆனால் அந்த வாய்ப்பும் சண்டையில் முடிகிறது. ஒரு நாள் தன் காதலி யார் என்பதைப் பார்த்து விடுகிறான். தன் உண்மைப் பெயரில் போய் பேசினால் சண்டை தொடரும் என்று நினைத்து, தன் பெயரை மாற்றிக் கொண்டு அவளிடம் அறிமுகமாகிறான். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஹீரோ உண்மையை சொன்னானா, காதலர்கள் சேர்ந்தார்களா என்பதெல்லாம் தியேட்டரில் பார்க்க வேண்டிய சமாச்சாரம்.

புதுமுகம் ஷிவ் பண்டிட் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஐடி கம்பெனி கதைகளுக்கே உரித்தான அப்பர் மிடில் கிளாஸ் முகம், உடல் மொழி. இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார்.

கருணை மலராக வரும் மான்சி பரேக் களையாக இருக்கிறார். எளிதில் பார்வையாளர்களை ஈர்க்கிறார். நாயகன் - நாயகி இருவருமே நகரத்து மேல்தட்டு இளைஞர்களின் நகல்களாக உள்ளனர். நாட்டின் இருவேறு உலகங்களுக்கிடையிலான 'கேப்' அதிகரித்துக் கொண்டே போவது தெரிகிறது!

இவர்களின் தோழியாக வரும் சுஹாசினி ராஜ் பரவாயில்லை.

சந்தானத்தின் காமெடி தனி ட்ராக். படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் முக்கியப் பங்கு சந்தானம் ட்ராக்குக்கு உண்டு.

தொழில்நுட்ப ரீதியில், வேல்ராஜின் கேமரா பிரமாதப்படுகிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் இசை சுமாருக்கும் கீழே.

ஹீரோ வேலை பார்க்கும் கம்பெனியில் ஹெச் ஆர் மேனேஜராக இருக்கிறார் ஹீரோயின். ஆனாலும் அவருக்கு ஹீரோவைத் தெரியவில்லை என்பது போன்ற ஓட்டைகளும் உள்ளன. அதேபோல பெயரை மாற்றிக்கொண்டு பேசும் தன் முன்னாள் காதலன் குரல் கூடவா அவருக்குத் தெரியாது?

எழுதி இயக்கியிருக்கும் ஆன்ட்ரூ லூயிஸுக்கு இது முதல் படம். ஆனால் அப்படிச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம். இதற்காக, சில இடங்களில் அவர் தெரிந்தே மீறியிருக்கும் லாஜிக் மீறல்களை மன்னிக்கலாம்.

ரெண்டேகால் மணி நேரம்... வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு 'மால்'ல படம் பாக்க போகணும்... எந்தப் புதுப்படத்துக்குப் போகலாம் என்று கம்ப்யூட்டரில் தேடுவோருக்கு லீலை ஓகே!

-எஸ். ஷங்கர்
 

'அவிழ்ப்பு ராணி' பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கலைந்தது!

poonam pandey s bollywood dream shattered   
தனது ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால், ஓவர் நைட்டில் உச்சாணிக்குப் போன பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கிட்டத்தட்ட வெடித்துச் சிதறி விட்டதாம். அமீத் சக்சேனாவின் இயக்கத்தில் பூனம் பாண்டே நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரது வாயாலேயே இந்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு விட்டாராம் பூனம் பாண்டே.

நம்ம வீரர்கள் மட்டும் கோப்பையை வெல்லட்டும், நிர்வாணமாக ஓடுகிறேன் என்று ட்விட்டர் மூலம் பெட் கட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அந்த ஸ்டேட்மென்ட்டுக்கு முன்பு வரை பூனம் எப்படி இருப்பார் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த அறிவிப்புக்குப் பின்னர் பூனம் இப்படியெல்லாமா இருப்பார் என்று அத்தனை பேரும் பேசும் அளவுக்கு தன்னையும், தனது உடலையும் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வருகிறார் பூனம்.

இந்த நிலையில் 21 வயதான பூனம், இந்தியில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதையும் கூட இவரேதான் தொடர்ந்து பரப்பி வந்தார். ஜிஸ்ம் படத்தை இயக்கியவரான அமீத் சக்சேனாவின் புதிய படத்தில் பூனம் நடிக்கப் போவதாகவும், படு கவர்ச்சியாக அதில் அவர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கூறின.

ஆனால் அது பொய்யான தகவல் என்று அமீத்தே தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் பூனம் இதுபோல பொய்யான கதைகளை சொல்வதை நிறுத்த வேண்டும்.

இது மோசமானது. நான் இதுவரை எதையுமே முடிவு செய்யவில்லை. எனவே பூனம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது என்றார்.

மொத்தத்தில் பூனத்தின் பாலிவுட் அறிமுகம் அவரது வாயாலேயே கெட்டுப் போய் விட்டது என்று கூறுகிறார்கள்.