3 விரலை காட்டிய ஆலியா பட்: மூச்சடைத்து போன தனுஷ்

சென்னை: வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் நடிக்க ஆலியா பட் ரூ.3 கோடி சம்பளம் கேட்டதால் தனுஷ் அதிர்ந்து போனாராம்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயினாகிவிட்டார் ஆலியா பட். பலரின் தூக்கத்தை கலைக்கும் ஆலியா பட்டை கோலிவுட்டில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

3 விரலை காட்டிய ஆலியா பட்: மூச்சடைத்து போன தனுஷ்

இந்நிலையில் தனுஷ் ஆலியாவை தனது அனேகன் படத்தில் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார் ஆலியா. இந்நிலையில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தி ரீமேக்கில் தனுஷே நடிக்கிறாராம். இந்தியில் அமலா பால் கதாபாத்திரத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்க நினைத்துள்ளார் தனுஷ். இதையடுத்து ஆலியாவை அணுகி விவரத்தை கூற அவரோ நான் நடிக்க ரெடி ஆனால் என் சம்பளம் ரூ. 3 கோடி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

ஆலியா கூறிய தொகையை கேட்டு தனுஷுக்கு தலை கிறுகிறுத்துவிட்டதாம். பாஸ், பாலிவுட்டில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவே கோடிக் கணக்கில் சம்பளம் கேட்பார்கள். பாலிவுட்டில் நடித்து வரும் போதிலும் இது தனுஷுக்கு தெரியாமல் போய்விட்டதே.

 

முதல்வரை இழிவுபடுத்தியதை, என் தாயை தப்பாக பேசிய மாதிரி நினைக்கிறேன்!- விஜய் பேச்சு

சென்னை: இலங்கை அரசு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்டதை, என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முதல்வரை இழிவுபடுத்தியதை, என் தாயை தப்பாக பேசிய மாதிரி நினைக்கிறேன்!- விஜய் பேச்சு

இதற்கென தூதரகம் முன்பு தனி பந்தல் போடப்பட்டு, பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதில் நடிகர் விஜய் முதல் ஆளாகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள், எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க.

அதை இலங்கை அரசு அவர்களுடைய பாதுகாப்புத் துறை வெப்சைட்டில் கொச்சைப்படுத்துவது போன்று ஒரு கமெண்ட் போட்டிருப்பது உண்மையிலேயே என் தாயை தப்பாக பேசின மாதிரிதான் நினைக்கிறேன்.

இது ஒட்டுமொத்த தமிழருக்குமே ரொம்ப, ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம். அதை கடுமையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.

 

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!

இன்று கூகுள் டூடிளில் நீங்கள் பார்க்கும் உருவம்... இந்திய திரை இசையின் ஒப்பற்ற பாடகர், மிகச் சிறந்த நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் கிஷோர் குமார்.

இன்று அவரது 85 வது பிறந்த நாள் என்பதால், அவரது உருவத்தை டூடிளில் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது கூகுள். அநேகமாக டூடிளில் இடம்பெற்ற முதல் இந்தியப் பாடகர் கிஷோர் குமாராகத்தான் இருக்கும்.

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!

காரணம், கிஷோர் குமாரின் நவரசம் மிளிரும் குரல். எந்த வகைப் பாடலாக இருந்தாலும், அதைச் சற்றும் சிரமமின்றி, அந்த பாடலின் பாவனையோடு பாடும் அவரது ஸ்டைல்.

அப்பாஸ் குமார் கங்குலி என்ற இயற்பெயரோடு, 1929, ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு வங்காள குடும்பத்தில் பிறந்தவர் கிஷோர் குமார். பிறந்த மாநிலம் மத்திய பிரதேசம்.

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!

கிஷோரின் அண்ணன் அசோக் குமார் இந்திய சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்.

சினிமா ஆசையில் மும்பைக்கு இடம்பெயர்ந்த கிஷோர் குமார், 1946-ல் ஷிகாரி என்ற படத்தில் ஒரு நடிகராகத்தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து நௌக்ரி உள்பட பல படங்களில் நடித்தார்.

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!

1956-ல்தான் அவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு முதல் வாய்ப்பு தந்தவர் சலீல் சவுத்ரி. இத்தனைக்கும் முதலில் கிஷோரை வேண்டாம் என்று நிராகரித்த சலீல் சவுத்ரி, பின்னர் அவர் குரலைக் கேட்டு வாய்ப்புத் தந்தாராம். படம் நௌக்ரி, பாடல் சோடா சா கர் ஹோகா.

பின்னர் கிஷோரின் குரலின் இனிமை உணர்ந்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தவர் அன்றைய இசை மேதை எஸ்டி பர்மன். இவரது மகன் ஆர்டி பர்மனும் கிஷோரும் மிக நெருக்கமான நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

ஆர் டி பர்மன் - கிஷோர் குமார் இணையில் வெளியான அத்தனைப் பாடல்களும் அற்புதங்கள் நிகழ்த்தின என்றால் மிகையல்ல. இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கும் இனிய இசையைத் தந்தவர்கள் இந்த இரு மேதைகளும்.

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!

திரையுலகினரும் ரசிகர்களும் கிஷோர் குமாரை கிஷோர்தா என அன்புடன் அழைத்தனர்.

இந்தி தவிர வங்காளம், மராத்தி, குஜராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார் கிஷோர் குமார். 19 முறை பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, 8 முறை அந்த விருதை வென்றவர் கிஷோர் குமார். பின்னாளில் அவர் பெயரிலேயே ஒரு விருதினை நிறுவி, கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது மத்திய பிரதேச அரசு.

1987-ம் ஆண்டு தனது 58வது வயதில் மரணத்தைத் தழுவினார் கிஷோர் குமார். இந்திய இசை, குறிப்பாக பாலிவுட்டைப் பொறுத்தவரை இன்று வரை ஈடு செய்ய முடியாத பேரிழப்புகளில் ஒன்று கிஷோர் குமாரின் அகால மரணம்.

கிஷோர் குமாருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இன்றும் கிஷோர் குமாரின் நினைவைப் போற்றும் வகையில் அடிக்கடி அவரது பாடல்களை கச்சேரிகளாக நடத்தி வருகின்றனர். எவ்வளவு புதுப் பாடல்கள் வந்தாலும், கிஷோர் குமார் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தால், உலகையே மறந்து அவர் குரலோடு ஒன்றிப் போகிறார்கள் ரசிகர்கள்.

 

இலங்கை தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - விஜய், சூர்யா பங்கேற்பு

சென்னை: தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர்.

இலங்கை தூதரகத்தை  மூடக் கோரி ஆர்ப்பாட்டம் -  விஜய், சூர்யா பங்கேற்பு

தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்,

உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே

நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல
10 கோடி தமிழர்களின் தாயை!

தேசப் பிதா என்றால் காந்தி
பெரியார் என்றால் ஈவெரா
அம்மா என்றால் எங்க முதல்வர்தான்!

இலங்கை தூதரகத்தை  மூடக் கோரி ஆர்ப்பாட்டம் -  விஜய், சூர்யா பங்கேற்பு

-இவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை வைத்துக் கொண்டு, ஒரு பந்தலில் அமர்ந்திருந்தனர் திரையுலகப் பிரமுகர்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

 

சரபம் - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: நவீன் சந்திரா, சலோனி லுத்ரா, நரேன்

ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்

இசை: பிரிட்டோ மைக்கேல்

தயாரிப்பு: சிவி குமார்

இயக்கம்: அருண் மோகன்

கொலை, வன்முறையைக் கதைக் களமாகக் கொண்டு கொஞ்ச காலம் வண்டியோட்டிக் கொண்டிருந்த கோடம்பாக்க படைப்பாளிகள், இப்போது சூதுக்கு தாவியிருக்கிறார்கள். நவீன முறையில் மோசடி செய்வது, அதையும் நியாயப்படுத்துவதுதான் தமிழ் சினிமாவின் இப்போதைய போக்கு.

சூது கவ்வும், சதுரங்க வேட்டை போன்ற படங்களின் வரிசையில் இப்போது சரபம்.

நரேன் ஒரு பெரிய வர்த்தகப் பிரமுகர். அவரிடம் ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை முன் வைக்கிறார் நவீன் சந்திரா. ஆனால் மகள் மீதான கோபத்தில் இருக்கும் நரேன், அந்த திட்டத்தை நிராகரித்துவிடுகிறார். இதனால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தை மனதில் வைத்து, கோபத்துடன் நரேன் வீட்டின் மீது கல்லெறியப் போகிறார் நவீன். அந்த நேரம் பார்த்து நரேனின் மகள் சலோனி வீட்டுச் சுவரிலிருந்து குதித்து ஓடுவதைப் பார்த்து, பின் தொடர்கிறார்.

சரபம் - விமர்சனம்

அப்பாவின் கடுமையான குணம், பணம் தராதது போன்றவற்றால் வெறுத்துப் போய் வீட்டைவிட்டு வெளியேறியதாக சலோனி கூறுகிறார். தனக்கு தங்க இடம் தருமாறு நவீனை கேட்க, அவரும் ஒரு நாள் மட்டும் தங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறார்.

இருவருக்குமே பணம் தேவையாக இருப்பதால் ஒரு திட்டம் போடுகிறார்கள். தன்னைக் கடத்தியதாக நவீன் நாடகமாடினால் போதிய பணம் கிடைக்கும், அந்தப் பணத்தில் ஆளுக்கு பாதிப் பாதி என யோசனை சொல்கிறார் சலோனி. முதலில் தயங்கி, பின் யோசனையை செயல்படுத்த, திட்டமிட்டபடி ரூ 30 கோடி கிடைக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு, சலோனியை நரேன் வீட்டில் விட்டுவிட்டு, வரும் நவீனுக்கு காலையில் அதிர்ச்சி. சலோனியை யாரோ கொன்றுவிட்டதாக செய்தி வெளியாகிறது.

சரபம் - விமர்சனம்

இதில் அதிர்ந்து போன நவீன், அதிலிருந்து மீள்வதற்குள் இறந்து போன சலோனியும், நரேனும் அவன் வீட்டுக்கே வந்து மேலும் அதிர்ச்சியை கொடுக்கின்றனர்.

சலோனி எப்படி இறந்தார்? நவீனுக்கு பணம் கிடைத்ததா? என்பது படத்தின் மறுபாதி.

பார்க்க அரபுக் குதிரை மாதிரி இருக்கிறார் சலோனி. புகைப்பது, போதைப் பொருள்கள் உபயோகிப்பது போன்ற காட்சிகளில் ரொம்ப இயல்பாக, தயக்கமின்றி நடித்திருக்கிறார். சில காட்சிகளில் கம்பீர அழகு.. சில காட்சிகளில் சற்றே கடூரம்!

நவீன் சந்திராவுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. க்ளைமாக்ஸில் 'நான் இந்த நிலைக்கு வர எவ்வளவு வேலை செஞ்சேன் தெரியுமா?' என அவர் கேட்கும்போது, 'நீ என்னப்பா செஞ்சே.. செஞ்சதெல்லாம் ஹீரோயின்தானே!' என படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள். நவீனின் பாத்திரப்படைப்பு எப்படி என்பதைச் சொல்ல இதுவே போதும்!

ஆடுகளம் நரேன்.. மிக அருமையான நடிகர். மீண்டும் ஒருமுறை படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவு முக்கியமான பாத்திரம். உணர்ந்து நடித்துள்ளார். எங்கும் ஒரு மில்லி மீட்டர் அளவுக்குக் கூட மிகையில்லை.

சரபம் - விமர்சனம்

ஏதோ மேடை நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை அடிக்கடி தருகிறது பிரிட்டோ மைக்கேலின் இசை.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

படத்தில் நிறைய புகை, மது, போதைப் பொருள் உபயோகிக்கும் காட்சிகள். இவை இல்லாமல் வாழ்க்கையே இல்லையா.. அல்லது இன்றைய இயக்குநர்களால் படம் எடுக்க முடியாதா?

சொந்த மகளே மூன்றாம் மனிதனுடன் கூட்டணி போட்டு அப்பாவை ஏமாற்றி பணம் பறிக்கப் பார்ப்பது, பெற்ற அப்பாவையே கொல்வது, உழைக்காமல் - வலிக்காமல் கோடிகளைக் குவிக்க புதுப் புது யோசனைகள் சொல்வது... இதெல்லாம் சமூகம் இன்றுள்ள மோசமான நிலையை படுமோசமாக்கவே உதவும் என்பதை சிவி குமார் போன்ற தயாரிப்பாளர்களும், அருண் மோகன் போன்ற இயக்குநர்களும் நினைவில் கொள்ள வேண்டும்!

 

இலங்கை தூதரகத்தை மூடக் கோரி இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை தூதரகத்தை  மூடக் கோரி இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்தும் போராட்டத்தில் பெப்சி அமைப்பும் இணைந்தது.

இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்களுமே பங்கேற்கின்றன. இதனை ஒவ்வொரு சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.

பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குநர் அமீர் மற்றும் செயலர் ஜி சிவா ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த போராட்டத்தில் பெப்சி அமைப்பும் கலந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோஷங்களுடன், இலங்கை தூதரகம் முன்பு திரையுலகினர் குவிந்து வருகின்றனர்.

போராட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.