பரதேசியில் பவரு ஏன் நடிக்கலை தெரியுமா?

Why Power Star Not Played Paradesi

நேற்று ரிலீசாகி, இன்று கலவையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பரதேசியில் ஒரு பாத்திரத்தில் நடிக்க பவர் ஸ்டாரை இயக்குநர் பாலா கூப்பிட்டிருந்ததை ஏற்கெனவே எழுதியிருந்தோம்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் வரை போன பவரை பியூஸ் பிடுங்கி அனுப்பிவிட்டார் பாலா என்ற உண்மை தெரியுமா?

பரதேசியில் கிறிஸ்துவ டாக்டராக வருகிறாரே சிவசங்கர் மாஸ்டர்... அந்த ரோலுக்கு முதலில் அழைக்கப்பட்டவர் பவர் ஸ்டார்தானாம்.

அலுவலகத்துக்கு வரவழைத்து, ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓகே செய்த பாலா, குறிப்பிட்ட தேதியில் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.

அதற்குள் தன்னால் முடிந்த அளவு பப்ளிசிட்டியை செய்துவிட்ட பவர், சொன்ன தேதியில் ஸ்பாட்டுக்குப் போயிருக்கிறார்.

எப்படி தெரியுமா... பாலா சொன்ன நேரத்துக்குப் போகாமல், 3 மணி நேரம் தாமதமாக, தனது படை பரிவாரங்களுடன் போயிருக்கிறார். அங்கு இவரது கைத்தடிகள் செய்த அலம்பல், பவர் பார்க்கும்போதெல்லாம் கைத்தட்டி விசிலடிக்க.. கடுப்பான பாலா தனது ரியலிட்டி டீஸரில் காட்டிய கோபத்தை நிஜமாகவே காட்ட, தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

இன்னும் ஏன்யா நிக்கிறே கிளம்பு கிளம்பு...என்று சவுண்ட் விட, சப்த நாடியும் அடங்கிப் போய் கிளம்பினாராம் பவரு!

 

மலையாளப் படங்களில் நடிக்க ரீமா கலிங்கலுக்கு தடை!

Ban On Reema Kallingal

மலையாளப் படங்களில் நடிக்க நடிகை ரீமா கலிங்கலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரத் ஜோடியாக யுவன் யுவதி தமிழ் படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.

மலையாள நடிகர், நடிகைகள், டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் யாரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் இல்லை.

ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி மிடுக்கி என்ற மலையாள டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் சுரேஷ் கோபியும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளை முடித்த பிறகே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

ரூ 20 கோடி மோசடி புகார்: கவுதம் மேனனை கோர்ட்டுக்கு இழுக்கும் எல்ரெட் குமார்!

Gautham Menon Owes Elred Kumar Rs 20 Crore

சென்னை: கவுதம் மேனன் தனக்கு ரூ 20 கோடி வரை தரவேண்டும் என்று தயாரிப்பாளரும் அவரது முன்னாள் பார்ட்னருமான எல்ரெட் குமார் புகார் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் எல்ரெட் குமார்.

எல்ரெட் குமாரும் கவுதம் மேனனும் இணைந்து படங்கள் தயாரித்து வந்தனர். ஆனால் கடைசியாக தயாரித்த நான்கு படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக புகார் எழுந்தது.

இதுதவிர இருவருக்கும் கடுமையான கருத்து மோதல் எழுந்ததால், இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் இதே நிறுவனத்தில் பார்ட்னராக இருந்த மேலும் இருவரும் பிரிந்து சென்றனர்.

இந்நிலையில், கவுதம் மேனன் தனக்கு ரூ 20 கோடி வரை தரவேண்டும் என்று கேட்டு எல்ரெட் குமார் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் கவுதம். எல்ரெட் குமார் வெளிப்படையான இந்த குற்றச்சாட்டால், கவுதம் மேனனுக்கு புதிய படங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஜில்லாவில் விஜய்-மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் அள்ளும்: நேசன்

சென்னை: ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் தான் ஹைலைட்டாக இருக்கும் என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.

நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா. படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

விஜய்-மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும். எல்லாம் நன்றாகப் போனால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று நேசன் தெரிவித்தார்.

 

புதிதாய் பிறந்த நீர்யானை குட்டிக்கு த்ரிஷாவின் பெயர்!

Baby Hippo Named After Actress Trisha

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த நீர்யானைக்கு நடிகை த்ரிஷா பெயரைச் சூட்டியுள்ளார் பூங்காவின் பொறுப்பாளர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. பூலோகம், என்றென்றும் காதல், ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஒன்று சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இந்தக் குட்டிக்கு அந்தப் பூங்காவின் அதிகாரி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சூட்டியுள்ளார்.

இந்த செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்த த்ரிஷா, தனது ட்விட்டரில், "நான் இப்போது வெளிநாட்டில் உள்ளேன். சென்னை வந்ததும் த்ரிஷா aka குட்டி நீர்யானையைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மிருக வதைக்கு எதிரான PETA (People for Ethical Treatment of Animals) அமைப்பில் உறுப்பினராக உள்ளார் த்ரிஷா. வழியில் எங்கே தெருநாய் தென்பட்டாலும் அதை எடுத்துப் போய் வளர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

த்ரிஷாவின் இந்த பண்பு காரணமாக அவர் பெயரை நீர்யானைக் குட்டிக்கு வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது!

 

மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்கும் பால்கி!

Balki Join Hands With Ilayarajaa 2rd Time

பாலிவுட்டில் இளையராஜாவின் இசைக்கு ராஜபாட்டை அமைத்துத் தந்தவர் இயக்குநர் பால்கி.

அவரது சீனி கும், பா போன்ற படங்களில் இளையராஜா பின்னணி இசையில் பின்னி எடுத்தார். ஆனால் ராஜாவின் பழைய மெட்டுகள்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தினார் பால்கி.

தனது அடுத்த புதிய படத்துக்கு மீண்டும் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார் பால்கி.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மீண்டும் இளையராஜாவுடன் இணைவதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய முந்தைய இரு படங்களுக்கும் அவர்தான் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜாதான் இசை. இசைதான் இளையராஜா. அவர் என் படங்களுக்கு இசையமைக்க விரும்பி சம்மதித்தால், அதை என் மகிழ்ச்சியாக கருதுவேன்," என்றார்.

இந்தப் படத்துக்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.