நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!

Tags:


உதடு வரை வந்த அஜீத் முத்தமிடாமல் விலகிச் சென்றதால் பெரும் ஏமாற்றமடைந்தாராம் திரிஷா.

இது நிஜத்தில் அல்ல, சினிமாவுக்கா. அஜீத்தும், திரிஷாவும் இணைந்து நடிக்கும் படம் மங்காத்தா. இது திரிஷாவுக்கு 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்து வருகிறது. அதேசமயம், படத்தில் இடம் பெறும் ஒரு ரொமான்ஸ் காட்சியும் ரசிகர்களை துடிக்க வைக்குமாம்.

காட்சிப்படி ஒரு சீனில் அஜீத்தும், திரிஷாவும் சற்றே நெருக்கமான முறையில் நடித்துள்ளனர். இதில் அஜீத், திரிஷாவுக்கு உதட்டில் பச்சக்கென ஒரு இச் தருவதாக முதலில் திட்டமிட்டிருந்தனர். இந்தக் காட்சிக்கு திரிஷாவும் ஓ.கே சொல்லியிருந்தார். அஜீத்தும் தயக்கத்திற்குப் பின்னர் சரி என்று கூறியிருந்தார்.

இதையடுத்து காட்சிக்குப் போனார்கள். அஜீத்தும் திட்டமிட்டபடி திரிஷாவின் உதடு வரை வந்தாராம். வந்தவர் உதட்டை டச் பண்ணாமல் அப்படி ஒரு யூ டர்ன் போட்டு விட்டு வந்த வழியே திரும்ப போய் விட்டாராம்.

இதை இயக்குநர், திரிஷா உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்குத் தேவையான எபக்ட் கிடைத்து விட்டதாம். லிப் டூ லிப் கொடுப்பதில் அஜீத்துக்கு நிறைய தயக்கம் இருந்ததால்தான் இந்த அளவோடு நிறுத்திக் கொண்டு விட்டாராம் தல.

உதடு கிடைத்தால் குண்டக்க மண்டக்க விளையாட எத்தனையோ ஹீரோக்கள் காத்திருக்கும் நிலையில் படு டீசன்ட்டாக நடந்து கொண்ட அஜீத்தை பாராட்டலாம்தானே.

ஆனால் திரிஷாவுக்குத்தான் நிறைய ஏமாற்றமாம். அடடா, தலைக்கு வந்தது இப்படி தலைப்பாகையோடு போய் விட்டதே என்று லைட்டாக அப்செட் ஆகி விட்டாராம்.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவின் உதடுடன் முத்த மோதல் பூண்ட திரிஷாவுக்கு ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும்!
 

கணவர் நிஷால் சந்திராவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் காவ்யா மாதவன்

Tags:


கொச்சி: பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து அளித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல மலையாள் நடிகை காவ்யா மாதவன். கடந்த 1991-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

காவ்யாவுக்கும் கம்யூட்டர் என்ஜினியர் நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. பிப்ரவர் மாதம் காவ்யா கணவருடன் குவைத்தில் செட்டிலானார். ஆனால் சில மாதத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு காவ்யா ஜூன் மாதம் நாடு திரும்பினார்.

பிறகு அக்டோபர் மாதம் தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர். இதற்கிடையே தன்னை தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் கொடுமைப் படுத்தியதாகவும் காவ்யா புகார் கொடுத்தார்.

இந்த விவகாரத்து வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று காவ்யா மாதவனுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனது கணவர் மீது கொடுத்த புகாரை காவ்யா வாபஸ் பெற்றார்.
 

ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

Tags:


முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

படத்தின் நாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு 2 விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இன்று திடீரென ஆடுகளம் படக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இக்குழுவில் தனுஷ், வெற்றி மாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற என்னை முதல்வர் வாழ்த்தினார். மற்றவர்களையும் வாழ்த்தினார். பாராட்டு தெரிவித்தார்.ரஜினிசாரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்றார்.

ஜெயலலிதாவுடன் லண்டன் தொழிலதிபர் சந்திப்பு:

அதே போல முதல்வர் ஜெயலலிதாவை பிரிட்டன் வாழ் தொழிலதிபர் லார்ட் ஸ்வராஜ் பாலும் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பால் கபாரோ குழுமத்தின் தலைவராவார். நேற்று சென்னை வந்த ஸ்வராஜ் பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கபாரோ குழும தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
 

மறுபடியும் நடிக்கவே மாட்டேன்-சொல்கிறார் மீனா

Tags:


என்னுடைய செல்லக் குழந்தையுடன் நேரத்தை செலவிடவே எனக்கு சரியாக இருக்கிறது. அவளைப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் இனி என்னுடைய வேலை. எனவே மறுபடியும் நான் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் மீனா.

கண்ணழகியாக, தமிழ் திரையுலகை கலக்கி வந்த மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பொறியாளருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குட்டிப் பாப்பாவுக்கு நைனிகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மீனா மீண்டும் நடிக்கப் போவதாகவும், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுக்கு மாமியார் வேடத்தில் அவர் தெலுங்கில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் மீனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு நடிக்கும் எண்ணமே இல்லை. இப்போது நான் நிம்மதியாக, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் நைனிகாவை பார்த்துக் கொள்ளவே எனக்கு நேரம் போதவில்லை. எனவே மீண்டும் நடிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்றார் மீனா.
 

அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்?

5/31/2011 12:19:01 PM

அனுயா கூறியது: 'சிவா மனசுல சக்திÕ படம் என்னை அடையாளம் காட்டியது. 'மதுரை சம்பவம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பேசும்படியாகவே அமைந்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஷங்கரின் 'நண்பன்Õல் கிடைத்த வாய்ப்பு. இலியானாவின் அக்காவாக நடிக்கிறேன். இது முக்கியமான வேடம். கிளைமாக்ஸ் என்னை சுற்றித்தான் நடக்கிறது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.இதற்கு மேல் என் வேடம் பற்றி எதுவும் கூற முடியாது. இதன் ஷூட்டிங்கில் ஆகஸ்ட் வரை கலந்துகொள்கிறேன். அடுத்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் 'நான்Õ படத்தில் நடிக்கிறேன். இப்படத்திலும் சஸ்பென்ஸ் வேடம். எனது வேடம்பற்றி சொன்னால் கதையின் சஸ்பென்ஸையே உடைத்ததுபோலாகி விடும். எனவே இரண்டு படங்களின் வேடத்தின் ரகசியம் காத்து வருகிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன்.




 

நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

5/31/2011 12:15:23 PM

இத்தாலியில் உள்ள மிகப் பழமையான மிலன் மக்கள் யுனிவர்சிட்டி, நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் வழங்கியது. பல்கலைக்கழகத்தின், துணைத் தலைவர், சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்னிலையில் பட்டத்தை பல்கலைத் தலைவர் பேராசிரியர் மார்கோ கிராப்ஸியா விக்ரமுக்கு வழங்கினார். சிறந்த நடிப்புக்காக, ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்தியர் விக்ரம்.




 

உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

5/31/2011 12:13:39 PM

முன்னாள் கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த நடிகை வனிதா கைதாகி விடுதலை செய்யப்பட்டார். நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாயுடன் 2 நாட்களும், தந்தை ஆகாஷுடன் 5 நாட்களும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஸ்ரீஹரியை தன¢னிடம் ஒப்படைக்காததால் நுங்கம்பாக்கம் போலீசில் வனிதா புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணா விரதம் இருப்பேன் என வனிதா கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணி அளவில் வனிதா சாலிகிராமம் லோகையா காலனி 5வது தெருவில் உள்ள முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். பையில் வைத்திருந்த பெட்ஷீட்டை வீட்டு வாசலில் விரித்து உட்கார்ந்தார். "ஸ்ரீஹரியை ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று கூச்சல் போட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "7 மாத காலமாக என் மகன் ஸ்ரீஹரியை மீட்க போராட்டம் நடத்தி வருகிறேன். ஒரு தாய் தனது மகனை மீட்க எந்தளவுக்கு போராட வேண்டி இருக்கிறது. கோர்ட் உத்தரவை ஆகாஷ் மதிக்கவில்லை. என் மகனை என்னிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றுகிறார். என் மகன் பிரச்னை இந்தளவுக்கு போவதற்கு காரணம் போலீஸ் தான்'' என்றார்.  வடபழனி உதவி கமிஷனர் நந்தகுமார், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி வனிதாவிடம் வலியுறுத்தினார். ஆனால் மறுத்து விட்டார். இதையடுத்து ஆகாஷ் வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாலை 3 மணி அளவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததற்காக வனிதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 

நடிகர் ராஜசேகருக்கு எலும்பு முறிவு!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ராஜசேகருக்கு எலும்பு முறிவு!

5/31/2011 12:14:14 PM

இதுதாண்டா போலீஸ் பாகம் 2 படபிடிப்பின்போது நடிகர் ராஜ சேகருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர். இவர் தற்போது, "மஹா காளி" என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தை அவரது மனைவி நடிகை ஜீவிதா இயக்கி வருகிறார். இந்த படம் தமிழில் "இதுதாண்டா போலீஸ் பாகம் 2' என்ற பெயரில் சூட்டிங் நடந்து வருகிறது. இதனையும் நடிகை ஜீவிதாவே இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது.

இதுதாண்டா போலீஸ் பாகம் 2' படத்துக்கான சில காட்சிகள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை படமாக்கப்பட்டது. வில்லன்களுடன் கதாநாயகன் ராஜசேகர்  மோதும் பரபரப்பான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்து கொண்டிருந்தார். 10 அடி உயரத்துக்கு எகிறி குதித்து வில்லனுடன் மோதும் காட்சியில் நடித்த சில துணை ஸ்ட ன்ட் நடிகர்கள் சரியாக நடிக்கவில்லை. எனவே, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

வில்லனுடன் மோதியபோது நிலை தடுமாறி 10 அடி உயரத்தில் இருந்து ராஜசேகர் கீழே விழுந்தார். எதிர்பாராத விதமாக அவரது முகமும் தரையில் மோதியது. இதனால் அவரது முகத்தில் தரையில் இருந்த ஜல்லி கற்கள் குத்தின. அத்துடன் அவரது முட்டியிலும் வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.  வலி தாங்க முடியாமல் துடித்தார். இந்த சம்பவத்தை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விரைந்து சென்று டாக்டர் ராஜசேகரை மீட்டு ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக முதல் உதவி அளித்தனர். அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில்  வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் நடிகை ஜீவிதா மற்றும் அவரது தம்பி நடிகர் செல்வா ஆகியோர் உள்ளனர்.

 

நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து!

5/31/2011 12:14:37 PM

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு, எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான காவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷால்சந்திரா என்பவருக்கும், கடந்த 2009ம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகா கோயிலில் திருமணம் நடந்தது. நிஷால்சந்திரா, குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பின்னர், காவ்யா மாதவன் கணவருடன் குவைத்திற்கு சென்றார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணம் முடிந்த 5வது மாதத்தில் கணவரை பிரிந்த காவ்யா மாதவன், கேரளாவுக்கு திரும்பினார். அதன் பின்னர், அவர் குவைத் செல்லவில்லை. இதன்பின், காவ்யா மாதவன் கடந்த ஆண்டில் எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் காவ்யா மாதவனுக்கு விவாகரத்து வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.

 

பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன்!

5/31/2011 11:39:03 AM

பாணா காத்தாடிக்குப் பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. அதர்வா வளர்ந்து வரும் நடிகர். இந்த நேரத்தில், பெ‌ரிய இயக்குனர், நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என யாரும் தீர்மானம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதர்வா வித்தியாசம். பெ‌ரிய பேனர், பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தீர்மானித்திருக்கிறார். வளர்ந்து வரும் நேரத்தில் ‌ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை... அதனால்தான் இந்த‌த் தீர்மானம் என்கிறார்.




 

மீண்டும் விஜய்-ஆர்யா கூட்டணி

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீண்டும் விஜய்-ஆர்யா கூட்டணி

5/31/2011 11:39:27 AM

மதராசப்பட்டினத்துக்குப் பிறகு விஜய் இயக்கியிருக்கும் தெய்வத்திருமகள் வெளியாகும் முன்பே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதாதற்கு பாலசந்தர் விஜய்யை மிகச் சிறந்த இயக்குனர் என அடையாளப்படுத்தியிருக்கிறார். தெய்வத்திருமகள் படத்துக்குப் பிறகு விஜய் ஆர்யாவை வைத்து படம் இயக்குகிறார். மதராசப்பட்டினத்துக்குப் பிறகு இந்த‌க் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பது புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் கதை மற்றும் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.




 

படு வேகத்தில் ஷங்கரின் நண்பன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படு வேகத்தில் ஷங்கரின் நண்பன்!

5/31/2011 11:38:35 AM

பொதுவாக ஷங்கர் பட ஷூட்டிங் என்றால் குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது நடக்கும். ஆனால் தற்போது ஷங்கர் படமா என்று ஆச்ச‌ரியப்படும் அளவுக்கு இருக்கிறது நண்பன் படத்தின் வேகம். 25ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் நண்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து அவசர அவசரமாக கோயம்புத்தூர் வந்தார் நடிகர் ‌ஜீவா. அதேபோல் இலியானா. காய்ச்சலால் கோவாவில் சிகிச்சை பெற்று வந்த இவரும் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் வந்துள்ளார். நண்பனின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூ‌ரின் வெப்பத்தை தாங்க முடியவில்லை என டுவிட்ட‌ரில் புலம்பியிருக்கிறார் இலியானா.

 

கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு

5/31/2011 10:59:28 AM

விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் படங்களில் மென்மையான சிம்புவைப் பார்த்த ரசிகர்களுக்கு வேட்டை மன்னன் படத்தில் சிம்பு வித்தியாசமாக‌த் தெ‌ரிவார் என்றார்கள். இதில் வன்மையான கேங்ஸ்டராக நடிக்கிறாராம் சிம்பு. இதுதான் சிம்புவின் கே‌ரிய‌ரில் மிக பிரமாண்டமான படம் என்பது உப‌ரி தகவல். எஸ்.எஸ்.சக்ரவர்த்தி முப்பது கோடி வரை வேட்டை மன்னனுக்காக செலவ‌ழிக்கயிருக்கிறாராம். இசை யுவன் ஷங்கர் ராஜா. ஜெய் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது சிம்புவின் நண்பனாக.

 

இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை : அனுஷ்கா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை : அனுஷ்கா!

5/31/2011 10:56:36 AM

சிங்கம் படத்தின் இந்தி ‌ரீமேக்கில் காஜல் அகர்வால் ஹீரோயின். சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்காவிற்கு ஏன் இந்தி ‌‌ரீமேக்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று அவரிடம்(அனுஷ்காவிடம்) கேட்டோம்… சிங்கத்தின் இந்தி ‌‌ரீமேக்கில் நடிக்க என்னைதான் கேட்டனர். ஆனால் இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் முடியாது என்று கூறிவிட்டேன் எனக் கூறினார் அனுஷ்கா. தமிழும், தெலுங்கும் அனுஷ்காவுக்கு போதுமாம்.

 

சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்!

Tags:


தம்பி கார்த்திக்குடன் ஜோடி போட்ட காஜல் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாகிறார்

சூர்யா அடுத்து நடிக்கவுள்ள மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் காஜல் அகர்வால்.

ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் காஜல். இந்தப் படத்திற்குப் பிறகு அவருடன் சேர்த்து கிசுகிசுக்கவும் பட்டார்.

இந்த நிலையில் தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைகிறார் காஜல். மாற்றான் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைகிறார் காஜல்.

படத்தை இயக்கப் போவது கே.வி.ஆனந்த். கோ படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு வருகிறார் ஆனந்த். அதேபோல தற்போது ஏழாம் அறிவு படத்தில்நடித்து வரும் சூர்யா அந்தப் படத்தை முடித்த பின்னர் இப்படத்திற்கு வருகிறார்.

மாற்றான் பட நாயகியாக யாரைப் போடுவது என்பதில் ஆரம்பத்தில் பெரும் குழப்பம் இருந்ததாம். தமன்னா, அனுஷ்கா என பலரையும் பரிசீலித்துள்ளனர். அமலா பாலின் பெயரும் கூட அடிபட்டதாம். தமன்னா வேண்டாம் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. அனுஷ்காவும் பின்னர் நிராகரிக்கப்பட்டார். அமலா பால் ஸ்டிராங்கான முகமாக இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளார். இறுதியில் காஜல் அகர்வால் தேர்வானார்.

காஜலிடம் ஆனந்த் கதையைச் சொல்லியுள்ளாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

நான் மகான் அல்ல படத்திற்குப் பிறகு காஜலைத் தேடி தமிழ்ப் படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் தெலுங்குக்குத் திரும்பினார் காஜல். அப்படியே பாலிவுட்டுக்குப் போய் விடலாமா என்ற யோசனையில் இருந்தவரை ஆனந்த் அணுக, இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பிகிறார் காஜல்.
 

இயக்குநர் ஜெயம் ராஜா பிறந்த நாள்-கேக் கொடுத்த விஜய்

Tags: lsquo, rdquo


இயக்குநர் ஜெயம் எம்.ராஜா தனது பிறந்த நாளை வேலாயுதம் படப்பிடிப்பில் வைத்துக் கொண்டாடினார்.

இயக்குநர் எம்.ராஜா இன்று தனது பிறந்தநாளை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ‘வேலாயுதம்” படப்பிடிப்பில் கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவழைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார்.

நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் எம்.ராஜா.

ஏற்கனவே ‘வேலாயுதம்” படபிடிப்பின்போது நடிகை ஹன்சிகா மோத்வானி, கேமராமேன் ப்ரியன், தனக்கு தங்கையாக நடிக்கும் நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
 

தள்ளிப் போனது சூர்யாவின் 7ஆம் அறிவு!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தள்ளிப் போனது சூர்யாவின் 7ஆம் அறிவு!

5/31/2011 10:50:19 AM

ஜூனில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் 7ஆம் அறிவு படம் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டு‌ள்ளதாக கூறுப்படுகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை ஜூலையில் திரைக்கு கொண்டுவர முருகதாஸும், தயா‌ரிப்பாளர் உதயநிதியும் திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் 7ஆம் அறிவு படம் ஜூலையில் திரைக்கு வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் 7ஆம் அறிவு. மார்ஷியல் ஆர்ட்டை மையமாக வைத்து முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா சர்க்கஸ் கலைஞராக நடித்திருப்பதாகவும், இன்னொரு வேடம் சீக்ரெட் எனவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.




 

ஒரு பாடலுக்கு ஆட சம்மதம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாடலுக்கு ஆட சம்மதம்!

5/31/2011 10:32:30 AM

கிருஷ்ணவம்சி தெலுங்கில் கோபிசந்தை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் தாப்ஸீ ஹீரோயின். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளார். காஜலின் சினிமா கே‌ரியர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு கிருஷ்ணவம்சியும் ஒருவர். அதனால் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். சும்மாயில்லை… ஐந்து நிமிஷ பாடலுக்கு ஆட முப்பது லட்சம் சம்பளம் தரப்பட்டிருக்கிறது காஜலுக்கு.

 

முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைதாகி விடுதலை

Tags:


தனது முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த நடிகை வனிதாவைப் போலீஸார் கைது செய்து, கடும் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளனர்.

நடிகர் விஜயக்குமார் மற்றும் அவரது 2வது மனைவி மஞ்சுளாவுக்குப் பிறந்தவர் வனிதா. இவருடைய முதல் கணவர் நடிகர் ஆகாஷ். இவர்களது மகன் விஜய் ஸ்ரீஹரி.

விஜய் ஸ்ரீஹரி தொடர்பாக முதலில் வனிதாவுக்கும், விஜயக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையிலான தகராறாக மாறியது.

தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறார் வனிதா. ஆனால் மகன் வந்தால் தாராளமாக அழைத்துப் போகட்டும் என்கிறார் ஆகாஷ். ஆனால் விஜய் ஸ்ரீஹரியோ தனது தாயுடன் போக மறுத்து வருகிறான்.

இந்த நிலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை வனிதாவோடு ஸ்ரீஹரி இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் கோர்ட் உத்தரவிட்டும் மகனை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி வருகிறார் வனிதா.

இதுதொடர்பாக சற்று இடைவெளி விட்டிருந்த வனிதா தற்போது பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

விஜய் ஸ்ரீஹரியிடம் போலீஸ் தரப்பில் பல மணி நேரம் கவுன்சிலிங் நடத்தியும், அவன் தனது தந்தையுடன்தான் இருப்பேன் என்று கூறி விட்டான்.

இந்த நிலையில் நேற்று ஆகாஷ் வீட்டுக்குச் சென்ற வனிதா அவரது வீட்டு முன்பு தனது 2வது கணவருக்குப் பிறந்த மகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

வனிதாவின் 2வது கணவர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக சற்று தொலைவில் நின்று கொண்டார்.

வனிதாவின் இந்தப் போராட்டத்தால் நடிகர் ஆகாஷ் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டார்.

இந்த நிலையில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி வனிதாவை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் அவரை அங்கு வைத்து கடுமையாக எச்சரித்தனர். இதுபோல இனிமேல் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினால் அடுத்து கைது செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று கடுமையாக எச்சரித்து அவரை மாலையில் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் தான் சட்ட ரீதியாக தொடர்ந்து போராடப் போவதாக வனிதா கூறியுள்ளார்.