விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்

சென்னை: எங்களுக்கு உதவுவதாக விஜய் சொல்லவும் இல்லை, அவர் உதவியைப் பெறும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர் மறைந்த மேஜர் முகுந்த் குடும்பத்தினர்.

சமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷேவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமென்று விஜய்க்கு தெரிவித்தார்களாம்.

நாட்டின் எலையில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவான மேஜரின் குழந்தையை நேரில் சென்று பார்த்துவிட்டு, அவருடன் ஒரு நாளைச் செலவிட்டார் விஜய்.

அர்ஷேவை விஜய் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அர்ஷாவின் படிப்புச் செலவை விஜய் ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒன்இந்தியா உள்பட சில தளங்களிலும் அந்தத் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்தவித விளக்கங்களும் வெளிவரவில்லை. அதே நேரம் மேஜர் முகுந்த் சார்பில் இந்த தகவலில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்

மேஜர் முகுந்தின் ஃபேஸ்புக் பகத்தில், "அர்ஷே விஜய் ரசிகை என்பதையறிந்து, அக்‌ஷராவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார் விஜய்.

ஒரு நாள் முழுவதும் விஜய்யுடன் இருந்த அர்ஷேவிற்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. இதற்காக விஜய்க்கு மேஜர் முகுந்தின் குடும்பத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

விஜய் அர்ஷேவை வெளியில் அழைத்துச் சென்றாரே தவிர எவ்வித உதவியும் செய்தவதாகச் சொல்லவில்லை. முகுந்தின் குடும்பத்தினரும், முகுந்தின் பெயரால் எந்த உதவியும் பெறக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். இந்த விளக்கம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

கடந்த வாரம் வெளியான மனம் தெலுங்குப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

மறைந்த ஏ நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, மருமகள் அமலா, பேரன்கள் நாக சைதன்யா, அகில் என குடும்பமே நடித்த படம் இந்த மனம். சமந்தா, ஸ்ரேயாவும் நடித்துள்ளனர்.

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம் தமிழகத்தில் ஒரு வாரத்தில் ரூ 63 லட்சத்தை தியேட்டர் வசூலாகப் பெற்றுள்ளது.

விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார் கமல்ஹாஸன்.

பின்னர் படம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "நான் நாகேஸ்வரராவின் ரசிகன். இந்தப் படம் பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன். நாகேஸ்வரரராவுக்கு மிகச் சிறந்த முறையில் அஞ்சலி செலுத்திய நாகார்ஜூனா குடும்பத்தைப் பாராட்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மஞ்சு வாரியருக்கு குவியும் புதுப்பட வாய்ப்புகள்.. தமிழில் சூர்யாவுடன் நடிக்க அழைப்பு!

கணவர் திலீப்பிடமிருந்து பிரிந்து வந்த பிறகு நடிகை மஞ்சு வாரியருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் அவரைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைப் பெற்ற பிறகு பிரிந்து, விவாகரத்துக்கும் மனுச் செய்துவிட்டார்.

மஞ்சு வாரியருக்கு குவியும் புதுப்பட வாய்ப்புகள்.. தமிழில் சூர்யாவுடன் நடிக்க அழைப்பு!

இப்போது மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மலையாளப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து மஞ்சு வாரியருக்கு மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான வாய்ப்புகள் வந்துள்ளன. நாகார்ஜூனா, நானி போன்றவர்களுடன் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்.

தமிழிலோ, நடிகர் சூர்யாவுடன் நடிக்கக் கேட்டுள்ளார்களாம்.

மலையாளத்தில் மோகன் லால் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடந்து வருகிறதாம்.

 

மம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்!

சம்பளம் கூடக் குறைய இருந்தாலும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் சீனியர் நடிகைகள். காரணம், எப்போதும் பிஸியாக இருக்கலாம்... அதிர்ஷ்டமிருந்தால் அவார்டும் கிடைக்கலாம் அல்லவா!

தமிழில் இப்போதைக்கு ஓரிரு படங்களை மட்டுமே வைத்துள்ள லட்சுமி ராய்க்கு, மீண்டும் ஒரு மலையாள வாய்ப்பு. இந்த முறையும் மலையாளத்தின் முதல் நிலை நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தின் தலைப்பு ராஜாதி ராஜா.

மம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்!

இந்த செய்தியை உறுதி செய்த லட்சுமிராய், மலையாளத்தில் தாங்கள் இருவரும் அதிர்ஷ்ட ஜோடியாகக் கருதப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கதைப்படி முதலில் மம்மூட்டியின் காதலியாகவும் பின்னர் மனைவியாகவும் வருகிறாராம் லட்சுமி ராய். சில காட்சிகளில் மம்முட்டியையே ஓரம்கட்டும் அளவுக்கு இவர் பாத்திரம் உள்ளதாம்.

தமிழில் இப்போது இரும்புக் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.

 

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

சினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர்.

அந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்!

இந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் மீடியாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீடு.. தொடர்ந்து பிரஸ் மீட்.

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

தொடர்ந்து வந்த நாட்களில் இயக்குநர் அமரர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் எனப் புகார். மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான்தான் முறையாக அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அவர் தண்டோரா போட, மணிவண்ணன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துவிட்டார்.

அதற்கு பார்த்திபன் அளித்த விளக்கத்தை சுரேஷ் காமாட்சி ஏற்றுக் கொண்டாரா.. அல்லது இன்னும் கோபப்பட்டிருப்பாரா? என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்.

இதோ பார்த்திபன் விளக்கம்..

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

அடுத்த பிரச்சினை ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜ் வேடத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், 'விஜய் வேஸ்ட்..அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்.. ஆமீர்கான் வேடத்துக்கு பர்பெக்டாக இருப்பார்,' என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.

அதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு, ஏதோ ஆயா வடைசுட்ட கதை என்றெல்லாம் எழுதி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

இதோ அந்த இரண்டாவது அறிக்கை...

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

விளைவு.. நிகில் அனுப்பிய படத்தின் பிரஸ் ரிலீஸையும் தாண்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏதோ ஒரு வகையில் தினசரி பார்த்திபன் செய்தியைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது மீடியா.

இப்போ சொல்லுங்க... பார்த்திபன் பெரிய பிஆர்ஓதானே!

குறிப்பு: பார்த்திபன் சார்.. உங்க அறிக்கையின் நக்கல் தொனி யாருக்கும் புரியாமலில்லை... அதற்காக விளக்க அறிக்கைகளைக் கூட கிறுக்கல்கள் மாதிரியே பிழைகளோடு எழுதுவதைத் தவிருங்களேன்!

 

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

மைசூர்: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தன் பிறந்த நாளை மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரவிக்குமாருக்கு ரஜினி பிறந்த நாள் கேக் ஊட்டி வாழ்த்துச் சொன்னார்.

கோச்சடையானுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லிங்கா. விடுதலைக்கு முந்தைய இந்தியாவை கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடர்ந்து நடந்து வருகிறது.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

நேற்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் பிறந்த நாள். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்தது. நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும், பெரிய கேக் வரவழைத்து, கேஎஸ் ரவிக்குமாரை வெட்டச் சொல்லி பிறந்த நாள் கொண்டாட வைத்தார் ரஜினி.

படக் குழுவினர் பிறந்த நாள் பாடல் பாட கே எஸ் ரவிக்குமார் கேக் வெட்டினார். முதல் துண்டை எடுத்து கேஎஸ் ரவிக்குமாருக்கு ஊட்டினார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!  

இந்த பிறந்த நாளை தன்னுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

அவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். நம்மை விரும்பும், அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் இல்லாமல் பிறந்த நாள் முழுமையடையாது. இந்தப் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக்கிய லிங்கா குழுவினருக்கு நன்றி.

இந்த நாளை என் வாழ்வின் மிகப் பெரிய நாளாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி. ராக்லைன் வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டுள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

 

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

மும்பை: கோச்சடையான் படம் பெரிய ஹிட்டானதில் மகிழ்ச்சி. ஆனால் முழுக்க முழுக்க லைவ் ஆக்ஷனில் ரஜினியுடன் தமிழ்ப் படம் நடிக்கக் காத்திருக்கிறேன் என்றார் நடிகை தீபிகா படுகோன்.

தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான். அதற்கு முன் அவர் ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வந்தார். இந்தி, தெலுங்கு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை.

கோச்சடையான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் படத்தில் தீபிகா படுகோன் உருவம் சரியாக வரவில்லை என்று மீடியா விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர். தீபிகா ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து தீபிகாவிடம் கேட்டபோது, "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அனிமேஷனில் இந்த அளவு கொண்டு வருவதே பெரிய விஷயம்தான்.

காரணம், ஹாலிவுட் அனிமேஷன் படங்களில், உயிரோடு உள்ள ஒரு பெரிய நடிகர் நடிகையை யாரும் அனிமேட் செய்ததில்லை. அதனால் நமக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கோச்சடையானில் நடித்த ரஜினி சார், நான் உள்ளிட்ட மற்ற அனைவரும் வாழும் பாத்திரங்கள். எங்களின் அனிமேஷன் உருவத்தோடு நிஜ உருவத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் இந்தப் பிரச்சினை. எனக்கு அது புரிகிறது. சவுந்தர்யா அருமையான முயற்சியை எடுத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

இன்னொரு படத்தில் லைவ் ஆக்ஷனில் ரஜினி ஜோடியாக நடிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.