நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் ‘ அடையாளம்' என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, உங்களில் யார் பிரபுதேவா, அது இது எது, கலக்கப்போவது யாரு, நீயா நானா, குற்றம் நடந்தது என்ன, பெரிதினும் பெரிது கேள், என பலரும் பாராட்டும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய விஜய் டிவி கலைஞர்களை அடையாளப்படுத்தும் புதுமையான நிகழ்ச்சியை ஒளிபரப்பிவருகிறது. தன்னுடைய நிகழ்ச்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர்களையும் தலை சிறந்த கலைஞர்களாகவும், தொகுப்பாளர்களாகவும் உலகிற்கு உணர்த்தும் நிகழ்ச்சி அது.
சந்தானம், சிவகார்த்திகேயன், ஜீவா, கோபினாத், ஜெகன், திவ்யதர்ஷினி, தீபக், ரம்யா, மகாபா ஆனந்த், பாவனா, சின்மயி, கல்யாணி, ரிஷி என பல்வேறு தொகுப்பாளர்களின் ஆரம்பகால கலைவாழ்க்கையிருந்து இன்று வரை இவர்கள் கலை உலகில் பயணித்த விதம், அதில் இவர்கள் கண்ட அனுபவங்கள், வெற்றிகள் போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை 'அடையாளம்' நிகழ்ச்சி மூலம் காணலாம்.
நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவர்களுடன் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மற்றும் தங்கள் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டி அதன் மூலமாக மக்களின் அபிமான நட்சத்திரங்களாகிய நபர்கள் பற்றியும் அடையாளம் நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.
விஜய் டிவியின் நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் மதியம் 1230 மணிமுதல் 2.30 மணிவரை ஒளிபரப்பாகிறது.