'ஆன்ட்டி' மணி ஆன நடிகை பிரியா மணி

திருவனந்தபுரம்: நடிகை பிரியாமணி ஆன்ட்டி ஆகிவிட்டார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பருத்தி வீரன் படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் பிரியாமணி. அதில் இருந்து அவரை பருத்திவீரன் பட கதாபாத்திரமான முத்தழகு என்ற பெயரிலேயே ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

'ஆன்ட்டி' மணி ஆன நடிகை பிரியா மணி

பருத்தி வீரனுக்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை. அதனால் அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதை பல முறை வாய்விட்டு கூறினார். இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிரியாமணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் சகோதரர் விசாக்தேவ் மணியின் மனைவி பிரார்த்தனா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அத்தையாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

 

எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம்

சென்னை: முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் யாரும் எனக்குத் தேவையில்லை. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறத உள்ளங்கள் இருந்தா போதும், என்றார் நடிகர் சந்தானம், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வருவதில்லை... அது அவரவர் நாக்கிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கிறது, என்பார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும், அதுவும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம்!

எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம்

சந்தானத்துக்கு கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதுதான் நேற்று அவர் பேச்சைக் கேட்ட அத்தனை பேரின் கமெண்ட்ஸும்.

அவர் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தேவி தியேட்டரில் நடந்தது.

ஏதோ ரசிகர் மன்ற மாநாடு மாதிரி ஆட்களைக் குவித்திருந்தார் சந்தானம். தெலுங்கு தேசத்திலிருந்து இயக்குநர் ராஜமவுலியையும் அழைத்திருந்தார். இவர் எடுத்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்தான் இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

திரையில் சின்ன வேடத்தில் வந்தாலும், பேசியே கொல்லும் ஸ்ரீநாத்-தான் இந்தப் படத்தின் இயக்குநர். மைக்கைப் பிடித்தவர் நான்கைந்து படங்களுக்குச் சேர்த்தே பேசிவிட்டுத்தான் இறங்கினார்!

அடுத்துப் பேசிய சந்தானம், " எவ்ளோ காலத்துக்குதான் ஹீரோவோட லவ்வுக்கு உதவி பண்ற மாதிரியே நடிக்கிறது... அதான் இப்போ நானே ஹீரோவா களமிறங்கிட்டேன். என் ரசிகர்கள் என்னை நீண்ட நாட்களாக 'தலைவா.. தனி ஹீரோவா நடிங்க'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வரும் வரை காத்திருந்தேன். இப்போ அது வந்துருச்சி... என் ரசிகர்களுக்காகத்தான் இந்தப் படம் பண்றேன்.

என் ஏரியால அடிக்கடி பசங்க வந்து, மச்சான் அவன் என்னைக் கலாய்ச்சிட்டான்.. வாடா அவனை ஒரு கை பாக்கலாம்னு கூப்பிடுவாங்க.

நான் சொல்வேன், 'டேய் உங்களுக்கு தில் இருந்தா தனியா போய் மோதுங்கடா.. அடுத்தவனை எதுக்கு இழுக்கறே'-ன்னு.

நான் என்னை மட்டுமே இந்த சினிமால நம்பியிருக்கேன். அப்படி நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இந்தப் படத்துல இருக்கற ஒரு டெக்னீஷியன் பேரு கூட தயாரிப்பாளருக்குத் தெரியாது. அவங்ககிட்ட நான் சொன்னதே, என்னை மட்டும் நம்புங்க.. இந்தப் படத்தை முடிச்சித் தர்றேன்-ன்னு சொன்னேன். பெரிய பெரிய டெக்னீஷியன்களை நம்பவில்லை. நான் என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கேன்.

இந்த விழாவுக்குக் கூட முன்னணி ஹீரோக்களையோ இயக்குநர்களையோ நான் கூப்பிடவில்லை. அவர்களைவிடட, நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்கதான் எனக்கு வேணும். அவர்களைத்தான் இங்கே அழைச்சிருக்கேன்," என்று பேசிக் கொண்டே போனார்!

 

நன்றி கெட்ட ஹீரோ: பொறிந்து தள்ளும் ஹீரோயின்

சென்னை: சிவமான நடிகர் மீது சின்ன சில்க் நடிகை கடுப்பில் உள்ளாராம்.

சிவமான நடிகரின் சங்க படத்தில் சின்ன சில்க் நடிகை கெஸ்ட் ரோலில் வந்து சென்றார். அவர் அந்த கதாபாத்திரத்தில் காரணமில்லாமல் நடிக்கவில்லை. தற்போது இதில் நடித்தால் அடுத்த படத்தில் நடிகர் தன்னை ஜோடியாக்குவார் என்று நினைத்து நடித்துள்ளார்.

ஆனால் படத்தில் நடிகருக்கும், ஊதா கலரு ரிப்பனுக்குமான கெமிஸ்ட்ரி தான் வெகுவாக பேசப்பட்டது. மேலும் படம் ஹிட்டாக நடிகர் சின்ன சில்கை மறந்துவிட்டார். மாறாக ஊதா கலரு ரிப்பனுக்கு தான் பரிந்துரை செய்கிறாராம்.

இது குறித்து அறிந்த சின்ன சில்க் சிவமான நடிகர் மீது கோபத்தில் உள்ளாராம். நம்பி நடித்தேனே இப்படி கண்டுகொள்ளாமல் உள்ளாரே என்று கொதிப்பில் உள்ளாராம்.

அதனால் நடிகரின் பெயரை கேட்டாலே நன்றி கெட்டவர் என்று கூறி பொறிந்து தள்ளுகிறராாம்.