இயக்குனரை வறுத்தெடுத்த செவத்த பொண்ணு நடிகை

சென்னை: சிவத்த பொண்ணு நடிகை தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவரை வறுத்தெடுத்துள்ளாராம்.

கோலிவுட், டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் சிவத்த பொண்ணு நடிகை. ஆனால் தற்போது அம்மணியின் மார்க்கெட் டல்லடித்துவிட்டது. அவர் தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த 2 படங்களைத் தவிர அவருக்கு வேறு படம் இல்லை. இந்நிலையில் அவர் தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறாராம். நாம் எல்லாம் அப்படியா பழகி இருக்கிறோம், உங்களின் அடுத்த படத்தில் என்னை ஹீரோயினாக போடுங்கள் என்று கூறி வருகிறாராம்.

இந்நிலையில் சிவத்த பொண்ணை வைத்து தமிழில் வெற்றிப் படம் கொடுத்த ஒரு இயக்குனர் தற்போது ஹெட் நடிகரை இயக்க உள்ளார். அந்த படத்தில் தன்னையே ஹீரோயின் ஆக்கும்படி நடிகை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.

நாம் ஏற்கனவே சேர்ந்து பணியாற்றிய படம் ஹிட்டாகியுள்ளது. அதனால் இந்த படமும் ஹிட்டாகும் என்று கூறி இயக்குனரை வறுத்தெடுத்துள்ளாராம்.

அந்த இயக்குனரோ சிவத்த பொண்ணுவிடம் டோஸ் வாங்கிய பிறகு வாரிசு நடிகையை ஹீரோயினாக்கிவிட்டார்.

 

லிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த ரஜினிகாந்துக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு!

லிங்கா பட விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

இதுகுறித்து அவர்கள் இன்று நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளதோடு, நன்றி அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை:

‘லிங்கா' பட நஷ்டஈடு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் முக்கியமானவர்கள். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று உழைத்தனர்.

லிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த ரஜினிகாந்துக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு!

10 கோடி ரூபாய் பணத்தை வாங்கி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரித்து கொடுக்க கலைப்புலி தாணு பட்டபாட்டை பார்த்த போது அவரது பதவி முள் கிரீடம் என தெரிந்து கொண்டோம்.

ராக்லைன் வெங்கடேஷ் எங்களை உபசரித்ததை பார்த்த போது அவரை போய் கன்னடர் என பேசி விட்டோமே என்று மனம் கூனி குறுகுகிறது. வில்லுக்கு விஜயன் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ்தான்.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து சந்தோஷப்படுத்துங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார். அதை ஏற்று நஷ்டஈடு வழங்கினார் ராக்லைன் வெங்கடேஷ். வேந்தர் மூவிஸ் இதில் பங்கு கேட்பது ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. திங்கட்கிழமை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல் கட்டமாக வைப்பு தொகை திருப்பி தரப்படும் என தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்கிறோம். எல்லா விநியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

எங்களுக்கு உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ராக்லைன் வெங்கடஷ், சரத்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.