சென்னை: பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனும் தனுஷும் இணையும் புதுப் படம் தொடங்கியது.
இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
பொல்லாதவன் படத்தில்தான் தனுஷும் வெற்றி மாறனும் முதலில் இணைந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ஆடுகளம் படத்தில் இருவரும் இணைந்தனர். அந்தப் படம் வெற்றி பெற்றதோடு, 6 தேசிய விருதுகளையும் அள்ளியது.
மீண்டும் இருவரும் இணையப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தை தனுஷே தனது சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் வெற்றி மாறன்.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ஆறு தேசிய விருதுகளை வென்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் அந்தப் படத்தை வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிப்பதில் பெருமையடைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.