குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்... காலையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடினார். நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி, காலையில் தனிமையான இடத்துக்குச் சென்றுவிட்டார்.

12-ம்தேதி காலையில் ரஜினி இல்லம் தேடி மலர்க்கொத்துகள், மலர் மாலைகளுடன் வந்த ரசிகர்களை ரஜினியின் மனைவி லதா வரவேற்று இனிப்பு வழங்கினார்.

நிச்சயம் ரசிகர்களை இன்னொரு நாள் ரஜினி சந்திப்பார் என்று ரசிகர்களுக்கு பதில் கூறி அனுப்பினார்.

பொதுவாக தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுவதில்லை ரஜினிகாந்த். யாரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்குச் சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிறந்த நாளின் போது சென்னையிலேயே இருந்தார் ரஜினி. 11-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதுகுறித்து ட்விட்டரில், "அப்பாவுடன் இன்றைய நாளை இனிமையுடன் கொண்டாடினோம். உலகிலேயே மிகச்சிறந்த தந்தையான எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.

சௌந்தர்யா கூறுகையில், "இந்த இரவுதான் உலகிலேயே பெஸ்ட் என்பேன். அப்பாவின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினோம். மிகச் சிறந்த தந்தையாகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் திகழும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் குவிப்பு

இன்று காலை 7 மணியிலிருந்தே ரஜினியின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர். வழக்கம்போல இந்த ஆண்டும் ரஜினி பார்க்கமாட்டார் என்பது புரிந்திருந்ததால், கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் எக்கச்சக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மூன்றரை மணிநேரம் காத்திருந்த பிறகு, ரசிகர்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு, ஒவ்வொருவராக ரஜினி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துக்கள், மலர் மாலைகள், சிறப்பு பூஜை பிரசாதங்கள் என ரசிகர்கள் பலவிதமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, கடலூர், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். சிலர் முந்தைய நாள் இரவே சென்னைக்கு வந்து அறை எடுத்துத் தங்கி ரஜினியைப் பார்க்க வந்திருந்தனர்.

ஒவ்வொரு ரசிகரும் ரஜினியின் நலம் மற்றும் அவரைப் பார்க்க விரும்பும் தங்களின் ஆவலை லதாவிடம் தெரிவித்தனர்.

பதிலுக்கு அவர், "இன்று அவரைப் பார்க்க முடியாது. ஆனால் நிச்சயம் விரைவில் உங்களைச் சந்திக்கப்பார்," என்று கூறி இனிப்பு கொடுத்து அனுப்பி வைத்தார். ரசிகர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கருணாநிதி வாழ்த்து

முன்னதாக பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

திரையுலகப் பிரமுகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்கத் தெரிவித்த வண்ணமிருந்தனர். ரஜினியின் குரு பாலச்சந்தர், காலையிலேயே ரஜினியை வாழ்த்தினார். பஞ்சு அருணாசலம், கவிஞர் வாலி, ஏவிஎம் சரவணன், எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு உள்பட ஏராளமானோர் வாழ்த்தினர்.
 

மிஷ்கினின் 'முகமூடி' - அசத்தலான தொடக்கம்!


மிஷ்கினின் கனவுப் படம் என்று வர்ணிக்கப்படும் முகமூடியின் தொடக்க விழா பூஜையுடன் இன்று அமர்க்களமாக ஆரம்பமானது.

ஜீவா - பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க, மிஷ்கின் இயக்கும் இந்த பெரிய பட்ஜெட் படம், இதுவரை தமிழில் யாரும் மேற்கொள்ளாத ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு சாகஸப் படமாக உருவாகிறது முகமூடி.

இன்று சாந்தோம் பள்ளி அரங்கில் அதிகாலையிலேயே படத்தின் பூடை நடந்தது. இதில் நடிகர் ஜீவா, நடிகை பூஜா ஹெக்டே உள்பட பலரும் பங்கேற்றனர். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.

ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "முகமூடி கதையை வைத்துக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சரியான ஹீரோவைத் தேடி அலைந்திருக்கிறேன். கடைசியில் ஜீவாதான் அந்தக் கதைக்கு பொருத்தமாக அமைந்தார்.

இந்தப் படத்தில் நடிக்க குங்பூ கற்க வேண்டியிருக்கும் என்று நான் சொன்னபோது, ஏற்கெனவே 2 ஆண்டுகள் குங்பூ கற்றதாக அவர் தெரிவித்தார். அப்போதே இவர்தான் சரியான ஹீரோ என முடிவு செய்துவிட்டேன்.

ஜீவா மட்டும் 90 நாட்கள் எனக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தால் இந்தப் படத்தை வரும் கோடையில் நிச்சயம் வெளியிட்டுவிடுவேன்," என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஜீவா, "சரியான திட்டமிடல், அதிகபட்ச ஒழுங்குடன் இயங்கும் மிஷ்கினிடம் பணியாற்றுவது பெருமையளிக்கிறது. 90 நாட்கள் என்ன 120 நாட்கள் கூடத் தருகிறேன். நினைத்தபடி படத்தை எடுங்கள்," என்றார்.

இந்தப் படத்துக்கு கே இசையமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் மாஸ்டர் குங்பூ காட்சிகளை அமைக்கிறார். இவர் ஒரிஜினல் குங்பூ மாஸ்டர். இவரிடம்தான் குங்பூ கற்றுக் கொண்டாராம் இயக்குநர் மிஷ்கின்.

யுடிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்டத் தயாரிப்பு முகமூடி.
 

கோச்சடையானில் ஆசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்-இந்து மக்கள் கட்சி


மலையாள நடிகையான ஆசின், கோச்சடையான் படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடிக்க வைத்தால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது.

ரஜினி நடிக்க கோச்சடையான் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதில் ஜோடியாக நடிக்க யாரைப் போடலாம் என்று பெரிய டிஸ்கஷனே நடக்கிறதாம். சினேகாவைத் தங்கையாக நடிக்க வைக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறின.

அதேசமயம், ஹீரோயினாக நடிக்க ஆசினை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஆசினை நடிக்க வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணன் கூறுகையில், நடிகை ஆசின், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை சென்று வந்தார். அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தமிழ் சினிமாப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. ஆனால் நடிகர் சங்கம் குறுக்கிட்டுப் பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கி விட்டது.

தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான ஆசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.

இதனால் ஆசினை கோச்சடையான் ஹீரோயினாக்க சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரஜினியின் தங்கையாக சினேகா நடிக்கவிருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா தயங்கியதைத் தொடர்நதே ஆசினை கோச்சடையான் குழு அணுகியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வள்ளுவர் கோட்டத்தில் ரஜினிக்கு நாளை பிரமாண்ட விழா!


ரஜினியின் 62வது பிறந்த நாளை ரசிகர்கள் சார்பில் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர் ரசிகர் மன்றத்தினர்.

நாளை டிசம்பர் 13-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் இந்த விழாவில் 5000 ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை மன்றத்தின் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி ஆகிய மூவரின் ஏற்பாடு மற்றும் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் - ரஜினிக்கு பக்கபலமாக நிற்கும் இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பிஎஸ் அசோக் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகிறார்.

இவர்களைத் தவிர, தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன், நடிகர் செந்தில், ராகவா லாரன்ஸ், வாசு விக்ரம், சின்னி ஜெயந்த், கருணாஸ் போன்ற ரஜினியின் தீவிர அபிமானிகள் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல்களுக்கு சிக்கு புக்கு கலைநிகழ்ச்சி குழுவினர் ஆடும் நடனநிகழ்ச்சி இடம்பெறுகிறது.

நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் 62 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்படுகிறது.

விழா குழுவில் இடம்பெற்றுள்ள சைதை ரவி, அண்ணா நகர் மு.டில்லி, தாம்பரம் கேசவன், பட்டாணி மணி, மயிலை முருகன், பூங்கா நகர் எழில், வளசை ஆனந்தன், கொடுங்கையூர் ஆனந்தன், வில்லிவாக்கம் சுகுமார், வீரா சம்பத், சைதை முருகன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளராக பி.எஸ்.அசோக் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர மன்ற நிர்வாகிகள் நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன.
 

62வது பிறந்த நாள்- மந்த்ராலயத்தில் ரஜினிகாந்த் வழிபாடு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தர்மஸ்தலாவுக்கும் அவர் செல்கிறார்.

ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும்.இதை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, நலத் திட்ட உதவிகள் வழங்குவது என கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்றுள்ளார். அங்குள்ள ராகவேந்திரா சாமி கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ரஜினிக்காக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தர்மஸ்தலாவுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிடுகிறார்.

தலைவர்கள், திரையுலகினர், பல்துறையினர் வாழ்த்து

முன்னதாக ரஜினிகாந்த்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் தொலைபேசி மூலமும், வாழ்த்துக் கடிதங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 

உலகளாவிய ரசிகர்களை கொள்ளை கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்


ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.

நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலகளாவிய ரசிகர்கள்

ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சீமான் படத்தில் விஜய் நீக்கம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய்யிக்காக காத்திருந்த சீமான் தற்போது பொறுமையை இழந்துவிட்டதாக தெரிகிறது. இளைய தளபதி விஜய்யை வைத்து 'பகவலன்' திரைப்படத்தை இயக்க முடிவு செய்த சீமான் விஜய்யின் கால்ஷீட்டிற்காக காத்திருந்தார். ஆகால் இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், மற்றும் விஜய் இயக்கும் படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது 'பகவலன்' படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம் சீமான். ஆனால் இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.


 

பாட்டு ஹிட்... பாடல் காட்சி ஹிட்டாக்க வேண்டும் : "3" படக்குழு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒய் திஸ் கொல வெறி பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடலை படம் பிடித்தாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். எப்படி படமாக்குவது என்று  இன்னும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள். வரும் 15ஆம் தேதி 3 படத்தின் மூன்றாவது ஷெட்யூல் ஆரம்பமாகிறது. அப்போது இந்தப் பாடலை படமாக்கப்பட உள்ளது. தனுஷ், ஸ்ருதி  இந்தப் பாடலுக்கு ஆட உள்ளனர்.



 

ஒய் திஸ் கொல வெறி.... இதே ஒரு பாட்டா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்து ஒய் திஸ் கொல வெறி பாடலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில் "கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, பாடலை விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன்" என்றார்.


 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் : திரையுலகினர், ரசிகர்கள் என ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 62வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சினிமாவில் தனக்கென முத்திரை பதித்த நடிகர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். 80வயது முதல் 1 வயது குழந்தைகள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் ஒரே ஹீரோ என்றால் அது நம்ம சூப்பர்ஸ்டார் தான். தன்னுடைய ஸ்டைலான நடிப்பு, பேச்சு என அசத்தி இவருக்கு இதுவரை உலகமே காணாத ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையாகாது. ரஜினிக்கு ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற பவ நாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இவரது படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடி மகிழ்வார்கள். பொதுவாழ்ககையில் இயல்பு, எளிமை, தனிமை விரும்பும் நம்ம சூப்பர்ஸ்£ர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி, திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் இன்று (12-ந் தேதி) தாம்பரம் செல்வ விநாயகர் கோவில், பெசன்ட்நகர் வேளாங்கண்ணிமாதா கோவில், சைதை இளங்காளியம்மன் கோவில் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் மயிலை ராகவேந்திர கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தினகரன் சினிமா சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


 

இன்று முதல் "முகமுடி" ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மிஷ்கினின் கனவுப் படமான 'முகமுடி' ஷூட்டிங் இன்று முதல் தொடங்கிறது. படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு 'கே' இசையமைக்க, யு டிவி
நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்ட  பொருட் செலவில் தயாராகும் இந்த படம், கோடை விடுமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந் படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய
படமாக கருதப்படும் என நம்புவதாக யு டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்  சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படமும் இதுதான் என்பதால் 'முகமுடி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு.


 

700 திரையரங்குகளில் மம்பட்டியான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தியாகராஜன் நடித்த 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் ரீமேக்கான 'மம்பட்டியான்' படத்தில், தியாகராஜனின் மகனாக நடிகர் பிரசாந்த், நடித்திருக்கிறார். திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படத்தை  

உலகம் முழுவதும் 700 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இந்த படத்தின் மூலம் தன் மகனுக்கு பிரேக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் தியாகராஜன். மேலும் இந்த படத்தை தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


 

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகிறார் அசின்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. மேலும் அசினிடம் சவுந்தர்யா பேசி வருவதாக வும், கிட்டதட்ட இந்த பேச்சு முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

வெங்கட்பிரபுவின் அடுத்த போலீஸ் கதை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மங்கத்தா வெற்றி பிறகு மீண்டும் முழு நீள போலீஸ் கதை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கி‌ரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடியாம். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது.



 

டேம் 999 பட இயக்குநர் சோஹன்ராய் இன்று தமிழக உள்துறைச் செயலரிடம் விளக்கம்


சென்னை: சர்ச்சைக்குரிய டேம் -999 படத்தின் இயக்குநர் சோஹன் ராய், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

டேம் 999 ஆங்கிலத் திரைப்படம் முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில் அந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தடைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி டேம் 999 திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் உள்துறைச் செயலரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தவிட்டது.

இதனையடுத்து இன்று காலை இன்று காலை சென்னை வந்த சோஹன்ராயை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம் சென்று, உள்துறைச் செயலாளரை இயக்குநர் சோகன் ராய் நேரில் சந்திக்க உள்ளார்.

அப்போது, டேம் – 999 திரைப்படம் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையே, பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,சோஹன் ராய் விளக்கம் அளிக்க சென்னை வந்துள்ளார்.