நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
வாரிசை ஹீரோவா அறிமுகப்படுத்தினாரு வெற்றிசித்ர பெண் இயக்குனரு. படத்துல நீளமாவும் ஹீரோ பில்டப்புக்கும் நிறைய வசனங்கள் இருந¢துச்சாம்… இருந்துச்சாம்… இதனாலதான் படம் ஓடலேன்னு ஹீரோ புலம்புறாராம்… புலம்புறாராம்… வாரிசே இப்படி சொல்றானேன்னு நடிகை உர்ரா இருக்கிறாராம¢… இருக்கிறாராம்…நல்ல காலம் பொறக்குது…
புதுப் பட வாய்ப்புகளை மீரா மல்லிகை நடிகை ஏத்துக்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… சமீபத்துல தமிழ்ல நடிக்க கேட்டதுக்கும் மாட்டேன்னு சொல்லிட்டாராம். கல்யாணத்துக்கு நடிகை ரெடியாகுறாரு. அதனாலதான் வாய்ப்பு மறுக்கிறாருன்னு கோடம்பாக்கம் பட்சி சொல்லுது… சொல்லுது…
மாஸ்டர் பேட்ஸ்மேன் பெயர்ல படம் எடுத்தாரு ரெண்டெழுத்து இயக்குனரு. பல முயற்சிகள் பண்ணியும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கல… கிடைக்கல… நீண்ட வருஷத்துக்கு பிறகு கிடைச்ச வாய்ப்பும் கை நழுவி போயிடுச்சி. இப்போ காதல் நடிகர்கிட்ட கதை சொல்ல முயற்சி பண்றாராம். நடிகரோ ஸ்டார் ரேஞ்சுக்கு அப்போ, இப்போன்னு காலம் தள்ளுறாராம்… தள்ளுறாராம்…
Source: Dinakaran