சென்னை: கேடி பில்லா கில்லாடி ரங்கா ஷூட்டிங்கில் சிவ கார்த்திகேயன் அழுதுவிட்டாராம். இயக்குனர் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்ளிட்டோர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார் மனோஜ் குமார். அண்மையில் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது.
அப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை சின்சியராகக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மனோஜ் குமார் சொல்வதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுதுவிட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அவரிடம் என்னாச்சு என்று கேட்க, இல்லை மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்றாராம். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.