ராஜிவின் மரணத்துக்கு புலிகள் மட்டுமே காரணமா?.. மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள்!

மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்று சொல்லும் மெட்ராஸ் கஃபே திரைப்படம், நிஜங்கள் பலவற்றையும் புதைத்திருக்கிறது என்று மூத்த அரசியல் பார்வையாளர் தவ்லீன்சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக http://www.niticentral.com இணையதளத்தில் தவ்லீன்சிங் எழுதியுள்ளதன் சுருக்கம்:

(Madras Cafe brings back memories)

மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடங்கிய உடனேயே ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் திரைப்படம் இது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. இலங்கையில் தனிநாட்டுக்கான தமிழர்களின் போராட்டம், காடுகளில் தமிழ் புலிகளின் தலைமையகத்தின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லுகிறது இத்திரைப்படம். வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்திருப்பவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் என்னை வருத்தப்படவும் வைத்தது.

ராஜிவின் மரணத்துக்கு புலிகள் மட்டுமே காரணமா?.. மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள்!

மிக முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னாலும் உண்மையான வரலாற்றை சொல்லத் தவறிவிட்டது. இலங்கை தொடர்பான தங்களது நிலைப்பாட்டை ராஜிவ் காந்தி பின்பற்றினால் அது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்து என்று தெரிந்தே இருந்த இந்திய அதிகாரிகள் எப்படியெல்லாம் ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை லேசாக தொட்டுச் செல்கிறது படம். இன்னும் சற்று கூடுதலாக ஆராய்ந்திருந்தால் எப்படியெல்லாம் இலங்கை விவகாரத்தில் தலையிட்ட இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகள் போன்ற குழுக்களை அரவணைத்துக் கொண்டே ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை சொல்லியிருக்க முடியும்.

ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் தமிழ் தீவிரவாதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரையில் சர்வதேச அரசியலை அவ்வளவாக அறிந்தவர் அல்ல. இதனால் அவர் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் ஆலோசனைகளை எதிர்பார்த்திருந்தார். இந்த ஆலோசனைகளால்தான் தமிழ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க ராணுவத்தை அனுப்பும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்.

அப்படி ராஜிவ்காந்தி அனுப்பிய வீரர்கள், அமைதிப் படை என்ற பெயரில் கைகளை பின்புறமாக கட்டி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.. இதனாலேயே 1500 இந்திய வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது. ஏனெனில் அந்த யுத்தமானது படு குழப்பமானது..நிச்சயம் வெற்றிபெற முடியாதது.. அதுதான் ராஜிவ் காந்தியின் வாழ்க்கை முடிந்துபோனதற்கு உண்மையான காரணமும் கூட. ஆனால் மெட்ராஸ் கஃபே திரைப்படம் அதைப் பற்றியெல்லாம் சொல்லவே இல்லை..

இதற்கு மாறாக மேற்கத்திய நாடுகள் தங்களது சொந்த ராணுவ- வணிக நலன்களுக்காக இலங்கையை தங்கள் வசமாக்கிக் கொள்ள முயல்வதாகவும், தங்களது நலன்களுக்காக இந்தியாவை பலவீனப்படுத்தவே தலையிட்டதாகவும் சொல்கிறது மெட்ராஸ் கஃபே.

உண்மை என்னவெனில் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடத் தொடங்கிவிட்டது. இலங்கையை தெற்காசியாவின் சிங்கப்பூராக மாற்றுவதற்காக தாராளமய பொருளாதார கொள்கைகளை ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்திரா காந்தி ஏற்கவில்லை. இந்திய மண்ணில் எப்படி பாகிஸ்தானின் ஜிஹாதி அமைப்புகள் தற்போது எப்படி இயங்குகின்றனவோ அதுபோலத்தான் அன்று இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியாவும் தலையிட்டது. இதனது தொடர்ச்சிதான் ராஜிவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. மேலும் டெல்லி செங்கோட்டை சுவர்களுக்குள் புதைக்கப்பட்ட பல கோரமான துரோகங்களும் உண்மை கதைகளும் பாலிவுட் திரைப்படங்களால் சொல்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஓ மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள் இதுவோ?

 

தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2

தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2  

சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.

சிக்கல் என்றால் சிக்கல் இடியாப்ப சிக்கலில் சிக்கி ஒரு வழியாக ரிலீஸானது கமல் ஹாஸன் நடித்த விஸ்வரூபம். படம் ஹிட்டானதற்கு சர்ச்சைகளே காரணம் என்று கூட கூறப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளன. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.

அதனால் பாக்ஸ் ஆபீஸில் அஜீத்தின் ஆரம்பமும், விஸ்வரூபமும் வசூல் வேட்டை நடத்துவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது.

படம் சோலோவாக ரிலீஸாகுமாம். வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரிலீஸாகலாம். அதிக ஸ்கிரீன்களில் வெளியிடவே இந்த முடிவாம். டிசம்பர் மாதம் கோச்சடையான் வரலாம் என்கிறார்களே. ஒரு வேளை கமல், ரஜினி படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுமோ?

 

இளையராஜாவின் மேகா... பரவசத்தில் ரசிகர்கள்!

நீதானே என் பொன்வசந்தத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்துள்ள மேகா படத்தின் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேகா படத்தின் இசை சில தினங்களுக்கு முன் லண்டனில் கமல்ஹாஸனால் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் சிடிக்காக பல ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இளையராஜா கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றனர்.

இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இளையராஜாவின் மேகா... பரவசத்தில் ரசிகர்கள்!

முகிலோ மேகமோ பாடலை யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். மிகச் சிறப்பான மெட்டு, மனதை வருடும் இசைக் கட்டமைப்பு. நா முத்துக்குமார் எழுதிய பாடல் இது.

செல்லம் கொஞ்சும் (பழனி பாரதி) என்ற பாடலையும் யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் மிக இனிமையாக ஒலிக்கிறது.

கார்த்திக், ப்ரியதர்ஷினி இசையில் ஒலிக்கும் 'என்ன வேண்டும்' (நா முத்துக்குமார்) பாடல், ராஜாவின் இசை ஆளுமையை உணர்த்துகிறது.

இளையராஜா குரலில் வரும் ஜீவனே ஜீவனே.. உயிரை உருக்குகிறது.

எண்பதுகளில் வெளியாகி இன்றுவரை கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் புத்தம் புதுக் காலை பாடலை இந்த ஆல்பத்தில் சேர்த்துள்ளனர். பழைய பாடலை ஜானகி பாடியிருந்தார். இந்தப் புதிய வர்ஷனை அனிதா பாடியுள்ளார். கங்கை அமரன் எழுதிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்வனே கள்வனே என்ற பாடல் ஹரிச்சரண், என்எஸ்கே ரம்யா குரல்களில் மனதை மயக்குகிறது (நா முத்துக்குமார்).

முகிலோ மேகமோ பாடல் இளையராஜாவின் குரலிலும் ஒரு முறை ஒலிக்கிறது. சான்சே இல்லை. யுவன் குரலில் கேட்டதைவிட, ராஜா குரலில் தனி பரவசத்தை உணர முடிந்தது.

இப்போது ரசிகர்கள் கவலையெல்லாம் இந்தப் பாடலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமே என்பதுதான்.

 

காப்பியடித்தே பிழைக்கிறார்: கலாய்க்கும் ரசிகர்களால் கடுப்பில் இசையமைப்பாளர்

சென்னை: காப்பியடித்தே பிழைப்பை நடத்தும் இசையமைப்பாளர் ஒருவரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பதால் மனிதர் டென்ஷனாக உள்ளாராம்.

இடி இடித்தால் வானில் மின்னுமே அந்த பெயரில் வந்த படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விக்டரிராஜ். மனிதர் திரையுலகிற்கு வந்த நாளில் இருந்து கண்டமேனிக்கு ட்யூன்களை காப்பிடியடுத்து வருகிறார். அவரின் சிறப்புத் தன்மை என்னவென்றால் வெளிநாட்டு பாடல்களின் இசையை மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பாடல்களின் இசையைக் கூட நைசாக திருடி நமக்கு பிரஷ்ஷாக கொடுத்திடுவார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஹாலிவுட், பாலிவுட் முதல் பாப் பாடல்கள் வரை அனைத்தையும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் விக்டரிராஜின் குட்டை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உடைத்து வருகின்றனர். காப்பியடிக்க பெயர் போன இசையமைப்பாளர் எந்தெந்த பாடல்களுக்கு எங்கெங்கிருந்து இசையை சுட்டார் என்று ஃபேஸ்புக்கில் பெரிய பட்டியலே அளித்துள்ளனர்.

இதனால் காப்பி மன்னன் கடுப்பில் உள்ளாராம். இந்த பட்டியலை மறுக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் உள்ளதால் சத்தமில்லாமல் இருக்கிறாராம்.

 

தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

இயக்குனர் கவுதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தங்க மீன்கள்.

கற்றது தமிழ் "ராம்" இயக்கி, முதல் முறை ஹீரோவாக நடித்துள்ளார். அவர் தந்தையாக நடிக்க சாதனா என்ற சிறுமி அவரது மகளாக நடிக்கிறார்.

பத்மப்ரியா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கற்றது தமிழ் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து வெளிவரும் படம் இது.

தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

படத்தின் ட்ரைலர் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது. அதேநேரம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலோ, கேட்ட அத்தனை பேரையும் நெகிழ வைத்துவிட்டது.

இப்படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே செய்தியாளர்களுக்குப் போட்டுக் காட்டி விட்டார் ராம்.

அந்தக் காட்சியின்போது செய்தியாளர்களுக்கு அவர் வைத்த வேண்டுகோள் இது..

வணக்கம், நான் ராம்.

தங்க மீன்கள் என்ற எளிமையான படத்தை பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யவிருக்கும் உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் மிக்க நன்றி..

உங்களுடைய விமர்சனங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். உங்கள் பார்வைகளே என் குறைகளை குறைப்பதற்கான வழி.

தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

விமர்சனங்களை ஆகஸ்ட் 30 வெள்ளி முதல் வெளியிடும் படி கேட்கிறேன், வியாபார காரணத்திற்காக.

நிறைகளை இன்றே சொல்லுங்கள் குறைகளை ஆகஸ்ட் 30க்கு மேல் சொல்லுங்கள்

காத்திருக்கிறேன்,
ராம்

என்று தன்னுடைய நல்ல சினிமா முயற்ச்சியை ஊக்குவிக்க ஆதரவு கேட்டுக்கொண்டார்... வாழ்த்துக்கள் ராம், நல்ல படங்களை ஊக்குவிக்க நாங்கள் தயங்கியதே இல்லை.

 

தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ்

சென்னை: அஜீத் குமார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றபோது தமிழக-கர்நாடக எல்லையில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் குமார் தான் புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யூ பைக்கில் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். ரேஸ் சூட்டில் சென்னையில் இருந்து கிளம்பிய அவர் ரோட்டோரக் கடை ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டார்.

தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ்

ரோட்டோரக் கடையில் அஜீத்தை பார்த்துவிட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அதன் பிறகு அவர் பெங்களூர் சென்றார். தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அஜீத்தின் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர். ஹெல்மெட்டை கழற்றியதும் பைக்கில் இருந்தவர் அஜீத் என்பதை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர்.

பின்னர் அஜீத் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

 

ஏற்கனவே பட்டது பத்தாதா, லீடரின் அரசியல் பஞ்ச் டயலாக்கை நீக்கிய தயாரிப்பாளர்

சென்னை: லீடர் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசி வந்த பிரச்சனையை அடுத்து தளபதி நடிக்கும் மாவட்ட படத்தில் வரும் அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டாராம்.

தளபதி நடிகர் லீடர் படத்தில் ஒரு சில அரசியல் பஞ்ச் வசனங்களை பேசியதற்கே படம் அறிவித்தபடி ரிலீஸாக முடியாமல் போனது. இதையடுத்து அரசிடம் மன்றாடி படத்தை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில் தளபதி தற்போது நடித்து வரும் மாவட்ட படத்திலும் அரசியல் பஞ்ச் வசனங்களை வைத்திருந்தனர்.

லீடர் பிரச்சனையைப் பார்த்து அதிர்ந்த மாவட்ட பட தயாரிப்பாளர் தனது படத்தில் இருந்து அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்கிவிட்டாராம். மேலும் ஏற்கனவே படமாக்கப்பட்ட அரசியல் பஞ்ச் வசன காட்சிகளையும் தூக்கி கடாசிவிட்டாராம்.

நான் தயாரிக்கும் படத்தில் அரசியல் பஞ்ச்சோ, அல்லது யாரையாவது தாக்கியோ எந்த வசனமும் இருக்கவே கூடாது என்று இயக்குனர் மற்றும் தளபதியிடம் கறாராக கூறிவிட்டாராம் தயாரிப்பாளர்.

 

‘நோ டேக்லைன்... நோ ப்ராப்ளம்’.... இது ‘ரெண்டாவது படத்தின் டேக்லைன்ங்க...

சென்னை : தலைவா படம், ‘டைம் டு லீட்' என்ற டேக் லைனைத் துறந்து ரிலீசானதைத் தொடர்ந்து, தற்போது விஷாலும் தனது மத கஜ ராஜா படத்தில் பயன்படுத்தப் பட்ட எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கினார்.

வீண் சிக்கல்களில் சிக்காமல் இருப்பதற்காக, இது போன்ற டேக்லைன் எனச் சொல்லப்படுகின்ற படத்தலைப்பின் கீழ்ப் போடப்படும் ஒன்று அல்லது சில வார்த்தைகளின் தொகுப்புகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி யோசித்து வருகிறார்கள் நாயகர்கள்.

இந்நிலையில், இது போன்ற டேக்லைன்களை பயன் படுத்தினால் தானே பிரச்சினை என, விரைவில் ரிலீசாக இருக்கிற ரெண்டாவது படத்தின் டேக்லைனாக ‘நோ டேக்லைன்.. நோ ப்ராப்ளம்' என வித்தியாசமாகப் போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.

‘நோ டேக்லைன்... நோ ப்ராப்ளம்’.... இது ‘ரெண்டாவது படத்தின் டேக்லைன்ங்க...

முதல் படமான தமிழ்ப்படத்தில் இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களில் உள்ள லாஜிக் இல்லா மேஜிக்களை கிண்டலடித்திருந்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் தற்போது தனது அடுத்த படமான ‘ரெண்டாவது படத்தில்' டேக்லைனிலேயே தனது வேலையைக் காட்டியிருப்பது படம் பற்றிய ஆவலை ரசிகர்களிடம் அதிகப் படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வித்தியாசமாக அதே சமயம் சர்ச்சைக்குள் சிக்காமல் ‘இப்ப என்ன பண்ணுவ...இப்ப என்ன பண்ணுவ...' என்ற ரேஞ்சில் இருக்கிறது இந்த விளம்பரங்கள்.