மகள் திருமணம்... ப்ரியமுடன் அழைக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர் ப்ரியன்!

கண்ணை உறுத்தாத ஔிப்பதிவு, பிரமாண்டத்தை படம்பிடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஔிப்பதிவாளர் ப்ரியன். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா ஆர்வத்தால் முன்னணி ஔிப்பதிவாளரானவர், இருபது வருட சினிமா அனுபவத்தில் எந்த விமர்சனத்திலும் ஆளாகாமல் உழைப்பையும், ஔிப்பதிவையும் நம்பி கதையை கவிதையாக காட்டியவர் ப்ரியன்.

தொடக்ககாலத்தில், சுஜாதா இன்டர்நேஷனல் நிறுவனத்தில் ஐந்து வருட ஔிப்பதிவு உதவியாளராக இருந்தார். ஔிப்பதிவில் சாதனைப் படைத்த பாலுமகேந்திரா, ராஜீவ் மேனன், இயக்குநர்கள் மணிரத்னம், சுரேஷ் மேனன் போன்றவர்களிடம் சினிமா கற்றுக் கொண்டார்.

DoP Priyan daughter's marriage

கே.எஸ்.அதியமான் இயக்கிய ‘‘தொட்டாச் சிணுங்கி'' இவரது முதல் படம். அடுத்து சேரனின், பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடிக்கட்டு... என்று வரிசையாக தொடக்கத்திலேயே தொடர் வெற்றிகளை நாட்டியவர். நாகேந்திரன் என்ற இவரது இயற்பெயரை, இவரின் மூத்த மகளான ப்ரியதர்ஷினியின் பெயரை சுருக்கி ப்ரியன் என்று பெயர் வைத்தவர் இயக்குநர் சேரன்.

இயக்குநர் ஹரியோடு ‘‘தமிழ்'' படத்தில் கைகோர்த்தவர் சிங்கம்-2 முடித்து சிங்கம்-3-க்கும் தயாராகிவிட்டார். கிட்டத்தட்ட 12 படங்கள் ஹரியோடு பயணித்த ப்ரியன், ஸ்டார், தெனாலி, வரலாறு, வல்லவன், திமிரு, தோரணை, வேலாயுதம்... என்று பல படங்களில் இவரது கேமரா திறமை பேசப்பட்டது.

இப்போது ப்ரியன் இல்லத்தில் ஒரு சுப நிகழ்ச்சி. ப்ரியன்-சுகன்யா தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ப்ரியதர்ஷினி, நியூட்ரிஷியன், டயட்டீஷியன் படித்தவர். இவருக்கும் ப்ரியனின் தங்கை மகனான பல் மருத்துவர் விஸ்வரூபனுக்கும் வருகிற மே 20ம் தேதி, மதுரையில், பசுமலை கோபால்
சாமி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களது வரவேற்பு விழா மே 29ம் தேதி, சென்னை, ராமாபுரம், ஜீவன் ஜோதி திருமண மண்டபத்தில் (எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்) விமரிசையாக நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரையும் சந்தித்து ப்ரியமுடன் அழைத்திருக்கிறார் ப்ரியன்.

 

செல்வராகவனின் புதிய படம் தொடங்கியது!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

காதல் கொண்டேன்', ‘7ஜி ரெயின்போ காலனி', ‘புதுப்பேட்டை' உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு புதிய படங்கள் இயக்காமல் இருந்தார்.

Selvaraghavan starts his new movie

இப்போது சிம்புவை வைத்து புதிய படம் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் முதலில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து வெளியேறினார்.

அவருக்கு பதில் மெட்ராஸ் படத்தில் நடித்த கேதரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். முக்கிய வேடத்தில் டாப்சி நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபுவும் முன்னாள் கதாநாயகனான சுரேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை குளோ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் தயாரிக்கின்றனர்.

யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

 

ஜூன் 9 முதல் ப்ளாஸோ... 9 திரைகள் கொண்ட ராஜ அரங்குகள்... தமிழகத்தின் முதல் ஐமேக்ஸ்!

வரும் ஜூன் 9-ம் தேதி முதல் சென்னையில் மேலும் 9 புதிய திரையரங்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. இந்த 9 அரங்குகளில் ஒரு ஐமேக்ஸும் உண்டு.

சென்னை வட பழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இந்த 9 அரங்குகளும் அமைந்துள்ளன.

இவை அனைத்தும் பழங்கால மன்னர்களின் அரண்மனை மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக நவீன திரைகள், ஒலி அம்சம், ஒளிப்படக் கருவிகளை இதில் பொருத்தியிருக்கிறார்கள்.

9 screen cinema mall Plazoo from June 9th

இந்த அரங்குகள் கட்டுமானப் பணி அனைத்தும் முடிந்துவிட்டாலும், அரசுத் தரப்பில் அனுமதி தரப்படாமல் இருந்தது.

இப்போது அனுமதி கிடைத்துவிட்டதால், வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 9-ம் தேதி இந்த அரங்குகள் திறக்கப்படுகின்றன. சத்யம் சினிமாஸ் நிறுவனம்தான் இந்த அரங்குகளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாங்குமா?

பொதுவாகவே வட பழனி மிகவும் நெரிசலான பகுதி. நாள் முழுக்க வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் இந்த சாலையில் உள்ளன. இப்போது 9 அரங்குகள் கொண்ட இந்த ப்ளாஸோ திறக்கப்பட்டால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ப்ளாஸோ தவிர மேலும் 2 மல்டிப்ளெக்ஸ்கள் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

'ஒருத்தன் புலின்னு எடுக்கறான்.. ஒருத்தன் சிங்கம்னு எடுக்கறான்.. நான் எலின்னு எடுக்கறேன்!'

பிரஸ் மீட்டுகளில் வடிவேலு பேசுவதை அப்படியே ஒளிப்பதிவு செய்து முழுமையாக வெளியிட்டால் போதும்.. அவர் படத்தின் காமெடியை விட அமோகமாக ரசிக்கப்படும் அந்த வீடியோ.

அப்படியொரு கலகலப்பு நிறைந்த சந்திப்புகள் அவை. நேற்று எலிக்காக அவர் செய்தியாளர்களைச் சந்தித்ததும் அப்படி ஒரு கலகலப்பு மிக்கதாகவே அமைந்தது.

Eli is not a competitor for Puli

எடக்கு மடக்காக வரும் கேள்விகளையும் ரொம்ப லாவகமாக நகைச்சுவையாக்குவது வடிவேலு ஸ்பெஷல்.

நேற்றைய சந்திப்பின்போது அவரிடம், புலி படத்தின் வசூலை மிஞ்சுமா உங்க எலி படம் என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில்தான் மேலே தலைப்பில் படித்தது.

வடிவேலு கூறுகையில், 'ஏன்.. நல்லாத்தானே போயிட்டிருக்கு.. எதுக்கு இந்த கேள்வி? என்றவர், அடுத்து இப்படிச் சொன்னார்

ஒருத்தன் புலின்னு எடுக்கறான்.. இன்னொருத்தன் சிங்கம்னு எடுக்கறான்... நான் எலின்னு எடுத்துக்கிட்டிருக்கேன். அது ஒரு பக்கம் ரிலீசாகட்டும்... எலி இந்தப் பக்கமா ஓடிட்டுப் போகட்டும் விடுங்கண்ணே... புலிக்கும் இதுக்கும் போட்டியெல்லாம் இல்ல... ஏன், அடுத்து கரப்பான் பூச்சின்னு கூட டைட்டில் வைப்போம்," என்றார்.

 

விஜய் பிறந்த நாளில் புலி ஃபர்ஸ்ட் லுக்!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் டிசைன்களை, விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் புதுமையான படம் ‘புலி'.

Puli first look posters on June 22nd

அதியுச்ச கற்பனைக் கதை ஒன்றில் விஜய் நடிப்பது இதுவே முதல் முறை. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

'புலி' படத்தின் முதல் புகைப்படங்களாக விஜய் வெள்ளை வேட்டி சட்டையில் நிற்பது போன்ற படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் போகிறார்கள்.

'புலி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் படத்தின் டீஸர், டிரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் இசையை ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே படம் விஜயதசமிக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

 

ரஜினி பெயரை மோசடியாக பயன்படுத்திய அந்த பைனான்சியரை விட மாட்டேன்- கஸ்தூரி ராஜா

ரஜினி பெயரை மோசடியாகப் பயன்படுத்தி, வழக்குத் தொடர்ந்து என்னை அலைக்கழித்த பைனான்சியர் முகுந்த் போத்ரா மீது வழக்குத் தொடருவேன் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திரைப்படங்களுக்கு பைனான்சியராக இருக்கும் முகுந்த் போத்ரா அறுபத்தைந்து லட்சம் கஸ்தூரி ராஜாவிற்கு கடன் கொடுத்ததாகவும் அதை அவர் திருப்பித் தரவில்லை என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

Kasturiraja to sue on Bothra for misusing Rajini name

அதற்காக போத்ரா கொடுத்த ஆவணங்கள், போத்ராவால் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்று புகார் நிராகரிக்கப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கஸ்தூரிராஜா, "சுமார் மூன்று வருடங்களாக என்னைப் பற்றி அவதூராக செய்திகளைப் பரப்பியும் வருகிறார். அடுத்தடுத்து பொய்வழக்குத் தொடர்ந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் என் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமானவரை (ரஜினிகாந்த்) பயன்படுத்தி அதன் மூலம் என்னை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டார். இதனால் பொய்வழக்குப் போட்ட அவர் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கைத் தொடர்வேன்," என்றார்.

 

ரஜினி அண்ணன் கூப்பிட்டா, அடுத்த படத்துல நடிக்க தயார்! - வடிவேலு

ரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நல்ல நெருக்கம் இருக்கு. அவர் அடுத்த படத்துல நடிக்கக் கூப்பிட்டா கட்டாயம் நடிப்பேன், என்றார் நடிகர் வடிவேலு.

எலி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலுவிடம், இனி மற்ற நடிகர்களின் படங்களில் காமெடி செய்வீர்களா? என்று கேட்கப்பட்டது.

Vadivelu waiting for Rajini's call

அதற்கு பதிலளித்த அவர், எலி வெளியான பிறகு நிச்சயம் செய்வேன். நிறைய கதைகளும் கேட்டு வைத்திருக்கிறேன், என்றார்.

உங்களை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு மிரட்டல் வருவதாகச் சொன்னீர்களே.. இப்போது நிலைமை எப்படி? என்று கேட்டபோது, 'அதெல்லாம் அப்போண்ணே.. இப்பதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்காங்களே படம் தயாரிக்க... இப்போ நிறைய பேர் கேட்டு வராங்க.. நான் நல்ல கதையா தேர்வு செஞ்சு நடிக்கிறேன்," என்றார்.

ரஜினி படத்தில் நடிப்பீர்களா?

நிச்சயமா நடிப்பேங்க. ரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நெருக்கமான உறவிருக்கு. அவர் கூப்பிட்டா எப்ப வேணாலும் நடிப்பேன், என்றார்.

ரஜினி தயாரித்த வள்ளி, ப்ளாக் பஸ்டர் படமான முத்து, சரித்திரம் படைத்த சந்திரமுகி, தோல்வியைத் தழுவிய குசேலன் படங்களில் வடிவேலு நடித்திருக்கிறார்.

 

கெஜ்ரிவால் பாராட்டிய இந்தி ரமணா!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கி, தமிழில் பெரும் வெற்றி பெற்ற ரமணா படம் இந்தியில் கப்பர் ஈஸ் பேக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்து பாராட்டியுள்ளார் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்.

க்ரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கரீனா கபூர் 'தேரி மேரி கஹானி' என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

Kejriwal praises Gabbar is Back

இந்தப் படம் மே 1ம் தேதி ரிலீஸானது. இதுவரை ரூ 70 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இப்படத்தை சமீபத்தில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பார்த்தார்.

பார்த்து முடித்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கப்பர் ஈஸ் பேக்' படம் பார்த்தேன். அற்புதமான படம். கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதைக் கருவே லஞ்சம், ஊழலுக்கு எதிரானது என்பதால் கெஜ்ரிவாலுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாம்.

 

தொடர்ந்து ஆடியதால் முட்டி போச்சு.... புலம்பும் "முனியாண்டியம்மா"!

ஹைதராபாத்: பாகுபாலி படத்தில் நடித்து வரும் அனுஷ்கா மற்றொரு வரலாற்றுப் படமான ருத்ரம்மா தேவியிலும் நடித்து வருகிறார்.

அனுஷ்காவுடன் மற்றொரு நடிகையாக நடித்து வருபவர் ஓ காதல் கண்மணி பட புகழ் நித்யா மேனன். இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா.

இந்தப் படத்தில் அனுஷ்காவின் உறவினராக முனியாண்டியம்மா என்னும் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

Actress Nithya Menon suffers from joint pain

நடிகை அனுஷ்காவுடன் இணைந்து நித்யா மேனன் ஆடும் நடனக் காட்சி ஒன்று சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டது. அனுஷ்காவை விட நித்யா குள்ளம் என்பதால் ஏழு அங்குல உயரமுள்ள ஹை ஹீல்ஸ் போட்டு டான்ஸ் ஆடி உள்ளார்.

டான்ஸ் ஆடிய போது ஒன்றும் தெரியவில்லை ஆனால் இப்போது என் மூட்டு பெயர்ந்து விட்டது என்று வலியில் புலம்பி வருகிறாராம் நித்யா மேனன்.