6/8/2011 12:52:35 PM
நடிகர் ஷக்திக்கு அக்.31ல் திருமணம்!
6/8/2011 12:52:35 PM
தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரு?
6/7/2011 10:42:49 AM
ஸ்ரீகாந்த் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்!
6/8/2011 10:57:59 AM
பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆசை!
6/7/2011 10:35:01 AM
பாலாவின் அவன் இவன் தெலுங்கில் வாடு வீடூ என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் ‘நான் பாலாவின் ரசிகன்’ என்று கூறினார். படத்தின் ட்ரெய்லரை வெகுவாக புகழ்ந்தார். நல்ல திறமையான இயக்குனர்களைப் பார்த்தால் வாய்ப்பு கேட்க கூச்சப்படாத அல்லு அர்ஜுன் பாலாவின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கிசு கிசு -ஹீரோவுக்கு ஹீரோயின் அட்வைஸ்!
6/8/2011 11:32:38 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
டாப் நடிகைக்கு புதுமுக நடிகர் ஒருவரு பாய்பிரெண்டா கிடைச்சிருக்காராம்… கிடைச்சிருக்காராம்… நடிகரோடு நெருக்கமா பழகுற நடிகை, சினிமா சம்பந்தமா அவருக்கு நிறைய அட்வைஸ் பண்றாராம். முன்னணி இடத்தை பிடிக்க¤றது எப்படி, எந்த ஸ்கிரிப்ட்ல நடிக்கணும், என்ன ஸ்டைல்ல நடிக்கணும்னு நிறைய யோசனை சொல்றாராம்… சொல்றாராம்… ஒவ்வொரு
விஷயத்தையும் நடிகையோடு டிஸ்கஸ் பண்ண¤ன பிறகே நடிகரு முடிவு செய்றாராம்… செய்றாராம்…
வாமன ஜெ ஹீரோ நடிச்ச படங்கள் அவருக்கு கைகொடுக்கல. புதுசா ஸ்கிரிப்ட்டுக்கு காத்திருந்தும் எதுவும் கைகூடி வரலையாம்… வரலையாம்… அதனால இன்ஷியலுக்கு பேர் மாறிய ஹீரோவோடு காதல் நடிகரு நடிச்சமாதிரி, அதே ஹீரோ நடிக்க¤ற ஹன்ட் கிங் படத்துல செகண்ட் ஹீரோவா நடிக்க ஜெ
நடிகரு ஒத்துக்கிட்டாராம்… ஒத்துக்கிட்டாராம்…
காஜலான நடிகையோட இந்தி படம் அடுத்த மாசம் ரிலீசாகுது. படத்துல அவர் நடிக்கிறது பற்றி பாலிவுட் வட்டாரத்துல யாருக்கும் தெரியாதாம்… தெரியாதாம்… பப்ளிசிட்டில ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர்றாங்களாம். இதனால நடிகை வருத்தமா இருக்காராம்… இருக்காராம்…
தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவன் கல்யாண்!
6/8/2011 11:38:43 AM
தமிழ் படத்தில் நடிக்க தற்போது நிறைய தெலுங்கு ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி நடிக்க ஆசைப்பட்ட பட்டியலில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இடம்பெறுகிறார். தமிழில் 'ஏகன்’ படத்தை இயக்கிய ராஜு சுந்தரம் அடுத்து பவன் கல்யாண் நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். ஓரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படம் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
குப்பத்து சிறுவர்களுக்கு பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி
6/8/2011 11:01:07 AM
குப்பத்து சிறுவர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார்.'பசங்க', 'வம்சம்' படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்து சென்னையை கதைக் களமாக கொண்ட படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக சென்னையில் உள்ள குப்பங்களிலிருந்து 12 முதல் 9 வயது வரையிலான 10 சிறுவர்களை தேர்ந்தெடுத்து தினமும் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அடுத்து இயக்கப் போகும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நகர்புறத்து மக்களின் யதார்த்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கும். இதற்காக சிறுவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறேன். 'பசங்க' போன்று குழந்தைகளின் படமல்ல. அவர்களின் பங்கு ஒரு பகுதி இருக்கும். இதுதவிர கதை நடக்க இருக்கும் சென்னை கடற்கரை, மீனவர் குப்பம், கடற்கரை, துறைமுகம் போன்ற பகுதிகளுக்கு இரவிலும், பகலிலும் உதவியாளர்களுடன் சென்று அங்கு நடப்பவற்றை ஆய்வு செய்து வருகிறேன். அதன் அடிப்படையிலேயே காட்சிகள் அமைக்க இருக்கிறேன்.
மம்மூட்டிக்கு வில்லன் ஆனார் பிருத்வி ராஜ்
6/8/2011 10:56:36 AM
மம்மூட்டிக்கு வில்லனாக நடிக்கிறார் பிருத்விராஜ். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிருத்விராஜ், தமிழில் 'கனா கண்டேன்' படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால், மலையாளத்தில் வில்லனாக நடிக்க வில்லை. இப்போது, அமல் மீரத் இயக்கும் படத்தில் மம்மூட்டிக்கு வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமல் மீரத், 'பிக் பி', 'சாகர் அலைஸ் ஜாக்கி', 'அன்வர்' ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். இது 1950-ல் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்!
6/8/2011 3:18:47 PM
தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. வருகிற ஜூன் 22-ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
கிசு கிசு -டான்ஸ் ஆட நடிகை மறுப்பு
6/7/2011 2:32:07 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பாவனை நடிகை, மல்லுவுட்ல நடிக்க¤ற ஒண்ணு ரெண்டு படம் திடீர்ன்னு சக்ஸஸ் ஆகுறதால லைம்லைட்ல இருக்க¤றாராம். மறுபடியும் கோலிவுட்ல கவனத்தை திருப்பியிருக்கிற ஹீரோயின், பல கம்பெனில அப்ரோச் பண்ண¤னதுக்கு பலன் க¤டைச்சிருக்காம்… கிடைச்சிருக்காம்… பஞ்ச் நடிகரோட அடுத்த படத்துல நடிக்க¤றதுக்கான கிரீன் சிக்னல் எரிய ஆரம்பிச்சிருக்காம். இது தெரிஞ்சுகிட்ட டாப் நடிகைங்க சிலரு, அந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க¤ற முயற்சியில இறங்கியிருக்காங்களாம்… இறங்கியிருக்காங்களாம்…
ஸ்ரீயான பழைய ஹீரோயினை திரும்ப நடிக்க வைக்க தமிழ் இயக்குனருங்க ட்ரை பண்ணினாங்க. நடிகை மறுத்துட்டாரு. அவரோட வாரிசை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்துச்சு. அதுக்கும் நடிகை ஒத்துக்கல. இப்போ திரும்ப நடிகையோட வாரிசை அறிமுகப்படுத்த, கோலிவுட் டீம் ஒண்ணு தீவிரமா இருக்காங்களாம்… இருக்காங்களாம்… இது சம்பந்தமா நடிகையோட கோலிவுட் நண்பரான கலை குடும்பத்து தலைவரை அணுகி இருக்காங்களாம். அவரோட உதவியை அந்த டீம் எதிர்பார்க்குதாம்… எதிர்பார்க்குதாம்…
சான்டல்வுட்டுக்கு போயிட்டு வந்தும் சானா நடிகைக்கு பலன் கிடைக்கல. இதனால வருத்தமா இருந்தவருக்கு, தமிழ் படத்துல ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வருதாம்… வருதாம்… நடிச¢சா ஹீரோயின்தான்னு பிடிவாதமா மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்…
தினமும் ரஜினி நடைப்பயிற்சி!
6/7/2011 11:48:55 AM
சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தனது அறையில் அரை மணி நேரம் தினமும் நடைப்பயிற்சி எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனை சார்பில் மருத்துவர்களோ, ரஜினியின் குடும்பத்தினரோ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இன்னும் பத்து தினங்கள் ரஜினி மருத்துவமனையில் தங்கியிருப்பார், டிஸ்சார்ஜ் ஆனாலும் சில வாரங்கள் அவர் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து சிகச்சையும், ஓய்வும் எடுத்துக் கொள்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
தம்பி பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய சிம்பு!
6/8/2011 3:22:15 PM
தன் தம்பி குறளரசன் பிறந்த நாளை நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக கொண்டாடினார் நடிகர் சிம்பு. சென்னை 5 நட்சத்திர ஓட்டலில் பெரிய அரங்கில் குறளரசன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதில் அவரது தங்கை இலக்கியாவும் பங்கேற்றார். நண்பர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்தும் நடந்தது. இதுபற்றி சிம்பு கூறும் போது, “என் தம்பிக்காக பிறந்த நாள் விருந்தை ஏற்பாடு செய்தேன். தம்பியின் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா சம்பந்தப்பட்ட யாரையும் அழைக்கவில்லை. குறளரசன் சினிமாவில் நடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பா படத்தில் விரைவில் அறிமுகமாவார்,” என்றார்.
சித்தார்த் படத்திலிருந்து விலக ஸ்ருதி ஹாசன் காரணம்
6/8/2011 10:58:45 AM
தமிழில் 'வெப்பம்', '180' படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை நித்யா மேனன். அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கினாலும் பத்திரிகையாளராக வேண்டும் என்று ஜர்னலிசம் படித்தேன். பிறகு இயக்குனராவதற்கான முயற்சியில் இருந்தேன். பின்னர் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவாளர் கோர்ஸுக்கு விண்ணப்பிக்கும்போது, தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டியை சந்தித்தேன். அவர், என்னை 'நீ ஹீரோயினாக நடிக்கலாம். இதெல்லாம் படிக்க வேண்டாம்' என்றார். பிறகு கன்னடத்தில் நடிகை ஆனேன். மலையாள படம் மூலம் ஹீரோயின் ஆனேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ்ப் படங்களில் நடித்துவருவதால் என்னை மலையாள நடிகை என்று சொல்வதில் அர்த்தமில்லை. சிலர் என்னை சவுந்தர்யா போல் இருப்பதாகவும் சிலர் ஜெனிலியா போல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். யாருடனும் என்னை ஒப்பிடுவதை விரும்பவில்லை. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் படத்தில் நடிக்க மறுத்ததைப் பற்றி கேட்கிறார்கள். அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம். படத்தில் எங்களைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் மறுத்தேன். '180' படத்துக்குப் பிறகு சித்தார்த்துடன் நான் நடிக்க வேண்டிய தெலுங்கு படம் 'ஓ மை பிரண்ட்'. கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க விரும்பினார். அதனால் நான் நீக்கப்பட்டேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
2 வருடம் கழித்து திருமணம்
6/8/2011 10:59:31 AM
இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இரண்டு வருடத்துக்குப் பிறகு அதுபற்றி யோசிப்பேன் என்றார் பாவனா. அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள 'மேரிக்கொண்டொரு குஞ்சாடு' ஹிட்டாகியுள்ளது. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் படம் ஹிட்டாகும் என்று தெரியும். இதையடுத்து மோகன்லாலுடன் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் எனது ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். வழக்கமாக எல்லா நடிகைகளுடன் நட்புடன் இருக்கிறீர்களே எப்படி? என்று கேட்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில், அப்போதிருந்த சில ஹீரோயின்களால் அவமானப்படுத்தப்பட்டேன். அந்த நிலை மற்றவர்களுக்கு வரவேண்டாம் என்றுதான் உடனே நட்பாகி விடுகிறேன். தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். எப்போது திருமணம் என்கிறார்கள். இதற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு வருடங்களுக்கு அது பற்றி யோசிக்கப் போவதில்லை. இவ்வாறு பாவனா கூறினார்.
ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் :விரைவில் ரசிகர்களை சந்தித்து பேசுகிறார் ரஜினி!
6/8/2011 10:42:53 AM
இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ள ரஜினி, ரசிகர்களிடம் நேரடியாக பேச ஆர்வமாக உள்ளார் என்று தனுஷ் தெரிவித்தார். 'ராணா' பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு வீடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற, கடந்த மாதம் 27ம் தேதி சென்றார் ரஜினி. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்த டாக்டர்கள், ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனுஷ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ரஜினி உடல்நலம் தேறிவிட்டார். அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவையில்லை. 10 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார்' என்றார். இந்நிலையில், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. உண்மை நிலை என்ன என்பது குறித்து, சிங்கப்பூரில் உள்ள தனுஷிடம் தினகரன் நிருபர் நேற்று கேட்டபோது, கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினி, பூரண குணமடைந்து விட்டார். அவர் முன்பு போல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். இன்னும் சில நாட்களில், டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் லதா ரஜினிகாந்த், நான், என் மனைவி ஐஸ்வர்யா, அவரது தங்கை சவுந்தர்யா, எனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தங்கியிருக்கிறோம். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை நாங்கள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறோம். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு இதே அபார்ட்மென்டில் தங்கி ஓய்வு எடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நலம் தேறியுள்ள ரஜினி, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கு ஓய்வு எடுப்பாரா? அல்லது இதே அபார்ட்மென்டில் தங்க சம்மதிப்பாரா? அல்லது சென்னைக்கு வந்து ஓய்வு எடுப்பாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் கலகலப்பாக இருக்கும் ரஜினி, தனது அறையிலுள்ள டி.வியில், படங்கள் பார்த்து ரசிக்கிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். தியானம் செய்கிறார். வாக்கிங் செல்கிறார். மேலும் சில உடற்பயிற்சிகளும் செய்கிறார். பேரன்களுடன் விளையாடுகிறார். ரஜினி தனது ரசிகர்களுக்கு 'வாய்ஸ்' மூலம் பேசினார். அவர் ஏன் வீடியோவில் தோன்றி பேசக்கூடாது என்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருக்கிறார். தன் கருத்துகளை அறிக்கை வாயிலாக சொல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. எனவே, விரைவில் சூப்பர் ஸ்டார் நலமுடன் சென்னை திரும்புவார். இவ்வாறு தனுஷ் கூறினார்.
மாஸ் படத்தில் நடிக்க விக்ரம் விருப்பம்!
6/8/2011 11:01:45 AM
எஸ்.பி கிரியேஷன்ஸ் சார்பில் பிரதீஷ், சந்தோஷ் தயாரிக்கும் படம், 'ராஜபாட்டை'. விக்ரம், தீக்ஷா சேத் ஜோடி. ஒளிப்பதிவு, மதி. இசை, யுவன் சங்கர் ராஜா. பாடல்கள், யுகபாரதி. கதை, சீனுவாசன். வசனம், பாஸ்கர் சக்தி. திரைக்கதை எழுதி சுசீந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கியது. நிருபர்களிடம் விக்ரம் கூறியதாவது: சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை' படங்களை பார்த்தேன். அவற்றிலிருந்து மாறுபட்ட கதையுடன் 'ராஜபாட்டை' உருவாகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன். 'தூள்', 'சாமி' படங்கள் மாதிரி, ஒரு மாஸ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அது 'ராஜபாட்டை'யில் நிறைவேறியுள்ளது. இதில் ஜிம் பாய் கேரக்டரில் நடிப்பதற்காக, தீவிர உடற்பயிற்சிகள் செய்தேன். காமெடி, காதல், ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சக படமாக இது உருவாகிறது. இவ்வாறு விக்ரம் கூறினார். பேட்டியின்போது, இயக்குனர் சுசீந்திரன், தீக்ஷா சேத், தம்பி ராமய்யா, அருள்தாஸ், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் மு.காசி விஸ்வநாதன், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு உடனிருந்தனர்.