நீச்சல் உடையில் நடிக்கவில்லை... சமந்தா

கவர்ச்சியாகவே, நீச்சல் உடையிலோ தான் நடிக்கவில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

பானா காத்தாடி, ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமந்தா.

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விரைவில் வரவிருக்கும் படமொன்றில் சமந்தா நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல் பரவியது.

நீச்சல் உடையில் நடிக்கவில்லை... சமந்தா

இதையடுத்து சமந்தாவின் இணையதள பக்கத்தில் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பினர்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சமந்தா, ‘நான் நடித்த படங்களை நீங்கள் பார்த்திருந்தால் நீச்சல் உடையில் நடித்திருப்பதாக வந்த வதந்தியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுபோல் வதந்தி பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் கோபத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது பெற்றார் சமந்தா. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நீக்கத்துக்கு எதிர்ப்பு.. நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசுவேன் - குமரிமுத்து

நீக்கத்துக்கு எதிர்ப்பு.. நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசுவேன் - குமரிமுத்து

சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து என்னை நீக்கியது செல்லாது. நான் சங்கத்தின் பொதுக்குழுவில் பங்கேற்றுப் பேசத்தான் போகிறேன் என்று நடிகர் குமரி முத்து கூறினார்.

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியதாக சங்கத்தில் இருந்து குமரிமுத்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

இதனால் வருகிற 18-ந்தேதி சென்னையில் நடக்க உள்ள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் குமரிமுத்து பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து குமரிமுத்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

13-வது விதியின் கீழ் நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு குறித்து குமரிமுத்து கூறும்போது, 18-ந்தேதி நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக் குழுவில் நான் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க அனுமதி அளித்துள்ளனர். எனவே பொதுக்குழுவில் பங்கேற்று பேசத்தான் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது," என்றார்.

 

செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு

சென்னை: அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு

படத்தை தீபாவளிக்கு வெளியிடவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

முந்தைய அஜீத் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தது இல்லை. படத்தில் நடித்துக் கொடுப்பதோடு அஜீத்தும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.

அந்தப் பாணியிலேயே 'ஆரம்பம்' படப் பாடல்களையும் விழா எதுவும் நடத்தாமலேயே நேரடியாக ஆடியோ கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

 

நான் மும்பையில, அவங்க சென்னையில... ! - ஆன்ட்ரியாவுடன் சேர்ந்தது குறித்து அனிருத்

முத்த சர்ச்சைக்குப் பிறகு ஆன்ட்ரியா என் படத்தில் பாடியது உண்மைதான். ஆனால் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை. நான் மும்பையில் இருந்தேன், அவர் சென்னையில் இருந்து பாடினார் என்று விளக்கம் அளித்துள்ளார் அனிருத்.

3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏக பரபரப்பு கிளம்பியது.

நான் மும்பையில, அவங்க சென்னையில... ! - ஆன்ட்ரியாவுடன் சேர்ந்தது குறித்து அனிருத்

இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா. இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது.

நான் மும்பையில, அவங்க சென்னையில... ! - ஆன்ட்ரியாவுடன் சேர்ந்தது குறித்து அனிருத்

இதை அனிருத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான்.

இந்தபாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன். அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை," என்றார்.

அடேங்கப்பா.. இது ரொம்பப் புதுசா இருக்கே!!

 

சகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்! - கமல் பேச்சு

சகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்! - கமல் பேச்சு

சென்னை: சகோதரர் ரஜினியால் வரமுடியவில்லை என்பதால் இந்த விழாவுக்கு நான் வந்தேன், என்னால் போக முடியாத விழாவுக்கு ரஜினி போவார், என்றார் கமல்ஹாஸன்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஜெயப்ரதா நடிக்க 1979-ஆம் ஆண்டு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இந்தத் திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது. ராஜ் டிவி இந்தப் படத்தை வெளியிடுகிறது.

இதற்காக கிட்டத்தட்ட 1 மாதத்துக்கும் மேல் புதுப்புது டிசைன்களில் தினமும் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது ராஜ் டிவி.

டிஜிட்டலில் மாற்றப்பட்ட பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (13.09.13) காலை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல் ஹாஸன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய டிரெய்லர் பற்றி பேசினார்கள். படத்தின் இன்னொரு நாயகன் ரஜினி வரவில்லை.

இதுகுறித்து கமல் பேசுகையில், "சகோதரர் ரஜினி இங்கு வரமுடியவில்லை. அதனால் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னால் முடியாத விழாவிற்கு அவர் செல்வார். அவருக்காக நான் செல்வேன். நினைத்தாலே இனிக்கும் படத்தில் எங்கள் இருவருக்கும் கிடைத்த அனுபவம் அற்புதமானது. யாருக்கும் கிடைக்காதது. அவையெல்லாம் இப்போது மீண்டும் வந்து போகின்றன...", என்றார்.

 

ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை படப்பிடிப்பு தொடங்கியது!

கவுதம் கார்த்தி - ப்ரியா ஆனந்த் நடிக்க ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கவுதம். இவர் நடிகர் கார்த்திக் மகன்.

தனது 2-வது படமாக கவுதம் கார்த்திக் 3 திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை படத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ‘எங்கேயும் எப்போதும்' சரவணன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்கள்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக், கதாநாயகி ப்ரியா ஆனந்த், விவேக், இயக்குநர் எஸ்.எம்.வசந்த், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இவர்களுடன் ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை படப்பிடிப்பு தொடங்கியது!

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

ஜெயசித்ரா – ராதாரவி நடிக்கும் ‘ரெங்கவிலாஸ்’: ஜெயாடிவியில் புதிய தொடர்

ஜெயசித்ரா – ராதாரவி நடிக்கும் ‘ரெங்கவிலாஸ்’: ஜெயாடிவியில் புதிய தொடர்

ஜெயா டி.வியில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் ரெங்கவிலாஸ் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

‘சின்னத்திரையில் ஒரு சினிமா' என்ற அடைமொழியுடன் தொடரும் இந்த தொடரின் கதை ஸ்ரீரங்கத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தொடரின் படப்பிடிப்பும் ஸ்ரீரங்கத்திலேயே நடைபெறுகிறது.

‘ரெங்கவிலாஸ்' என்ற பெயரில் உள்ள அந்த பிரமாண்ட வீட்டில் வாழும் கூட்டுக்குடும்பம், அவர்களின் அனுதின ஆசாபாசங்கள் தொடரின் கதைக்களம்.

ரியல் எஸ்டேட் நடத்திவரும் ஒருவருக்கு அந்த வீடு கண்ணில் பட, தகிடுதத்தம் செய்து அந்த வீட்டை அபகரிக்க முயல்கிறார். முடிவு என்னாகிறது என்பது திருப்புமுனைகளுடன் கூடிய திரைக்களம்.

சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நட்சத்திரங்கள் நடிக்கும் தொடர் என்ற பெருமை ‘ரெங்கவிலாசுக்கு' கிடைத்திருக்கிறது.

டைரக்டர் மணிபாரதி இயக்கி வரும் இந்த தொடரில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் - இது விஷ்ணுவர்தன் ஆசை

அஜீத்தை ஹாலிவுட்டில் முற்றிலும் வித்தியாசமாகக் காட்ட விரும்புவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

நடிகர் அஜீத்தை வைத்து ரஜினியின் ‘பில்லா' படத்தை ரீமேக் செய்தவர் விஷ்ணுவர்தன்.

அஜீத்தை வைத்து இரண்டாவது முறையாக ‘ஆரம்பம்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அஜீத் பற்றியும் அவருடன் பணியாற்றியது குறித்தும் விஷ்ணுவர்தன் கூறுகையில், "எனக்கு ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு மிகவும் வசதியான ஹீரோ அஜீத்தான். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது.

அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் - இது விஷ்ணுவர்தன் ஆசை

அஜீத்தை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்ட விரும்புகிறேன். அஜீத் தற்போது ரொம்பவும் பிசியாக உள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போது இந்தியிலும், ஹாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன்.

ஆரம்பத்தில் பாலிவுட்டில் கால் பதிக்கவேண்டும் என்றுதான் எண்ணினேன். பாலிவுட் செல்வதற்கு கோலிவுட் திரையுலகம் எளிதாக உதவும் என்பதற்காக இங்கு கணக்கை தொடங்கி விட்டேன். நல்ல கதை இருந்தால் போதும், பாலிவுட்டில் பெரிய ஆளாக ஆகிவிடலாம்," என்றார்.

 

ரஜினியும் நானும் பிரிந்தோம், ஜொலிக்கிறோம்.. இல்லையேல் இன்னும் ஆட்டோவில்தான் போயிருப்போம்! - கமல்

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும்.

இப்படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சினிமாஸ் கோப் மற்றும் டிடிஎஸ் ஒலிப்பதிவில் மீண்டும் வெளியாகிறது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கமல், "சகோதரர் ரஜினி இங்கு வரமுடியவில்லை. அதனால் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னால் முடியாத விழாவிற்கு அவர் செல்வார். அவருக்காக நான் செல்வேன்.

நினைத்தாலே இனிக்கும் படத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் இனிமையான நிகழ்வுகளே என்னை சுற்றி சுற்றி வருகிறது. நானும் ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நானும் ரஜினியும் இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவையே எடுத்தோம்.

ரஜினியும் நானும் பிரிந்தோம், ஜொலிக்கிறோம்.. இல்லையேல் இன்னும் ஆட்டோவில்தான் போயிருப்போம்! - கமல்

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து ஒரு நாள் வெளியே வரும்போது நான் ரஜினியிடம், ரஜினி இப்ப நாம் ஒரு சம்பளத்தை வாங்கித்தான் இருவரும் பங்கு போட்டிக்கொண்டிருக்கிறோம். இதனால் இருவரும் வளர்ச்சியடைய முடியாது. நீங்கள் தனி நட்சத்திரமாகவும், நான் தனி நட்சத்திரமாகவும் நடித்தால் தான் நாம் ஜொலிக்க முடியும் என்றேன்.

அப்போது ரஜினி, பஞ்சு அருணாசலத்திடம் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அதனால் 'பஞ்சு அருணாசலத்திடம் நான் அட்வான்ஸ் வாங்கி விட்டேனே... என்ன செய்யலாம்?' என்றார்.

நான் உடனே பஞ்சு அருணாசலத்தை சந்தித்து 'நானும், ரஜினியும் தனித்தனியே நடித்தால் உங்களுக்கு லாபம். சேர்ந்து நடித்தால் லாபம் கம்மி. அதனால் எங்கள் இருவரையும் வைத்து தனித்தனியே படம் எடுங்கள் நடிக்கிறோம்,' என்றேன்.

அப்படி பஞ்சுவின் தயாரிப்பில் நாங்கள் இருவரும் தனித்தனியாக நடித்ததுதான் ஜப்பானில் கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்கள். அப்படி அன்று நாங்கள் இருவரும் துணிந்து எடுத்த முடிவால்தான் உயரத்தில் இருக்கிறோம்.

தொடர்ந்து நானும், ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்து வந்திருந்தால் இன்று நானும், ரஜினியும் ஆட்டோவில்தான் பயணம் செய்து கொண்டிருப்போம்.

34 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்திற்காக மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து இயக்குனர் பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியரோடு நானும் இந்த மேடையில் நிற்பது ஆச்சரியமான விஷயம்.

பாலச்சந்தர்தான் நான் இயக்குநராகக் காரணம். நானும் பாலச்சந்தரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.. நடக்குமா, பார்க்கலாம்!" என்றார்.