புதியவர்களே, வாருங்கள்... நான் இருக்கிறேன்! - இளையராஜா

சென்னை: புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன், என்று இளையராஜா பேசினார்.

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் 'ஒரு ஊர்ல'.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேபில் நடந்தது. பொதுவாக தான் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டுக்களுக்கு கூட போகாத இசைஞானி இளையராஜா, முற்றிலும் புதியவர்கள் உருவாக்கியுள்ள இந்தப் பட இசை விழாவுக்கு வந்திருந்தார்.

புதியவர்களே, வாருங்கள்... நான் இருக்கிறேன்! - இளையராஜா

விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் பேசுகையில், "என்னை தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். என்று சொல்வதை விட இளையராஜா அவர்களின் ரசிகன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை. அவரால் உருவாக்கப்பட்ட இயக்குநர்கள் ஏராளம்.

தமிழ் சினிமாவில் நிறைய தயாரிப்பாளர்கள் நிறைய முதலீட்டில் படங்கள் தயாரிக்கின்றனர். ஆனால் போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுப்பது என்பது யாருக்கும் புரிய வில்லை. அதற்குத்தான் தயாரிப்பாளர் சங்கம் கூடிய விரைவில் முடிவெடுக்க உள்ளது.

இளையராஜா அவர்கள், தன் பாடல்களுக்கு காப்பி ரைட் சட்டப்படி சம்பாதித்து இருந்தால் பில்கேட்ஸ் அவர்களைவிட அதிகமாக சம்பாதித்து இருப்பார்," என்றார்.

இளையராஜா பேசுகையில், "ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது.

எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. அது நூறு நாள் படமானாலும், வெள்ளி விழா படமானாலும் மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்த படம் இருந்ததில்லை.

அந்த காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு எனது பெயர் பயன்பட்டுள்ளது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம் ஏன் இசை அமைக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். அதற்கு 'நான் இசையமைத்து நீ வந்தது மாதிரி, அவனும் வந்து விட்டு போகட்டுமே. உனக்கு உண்டான இடம் உனக்கு... அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு' என்பேன்.

புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன்," என்று இளையராஜா பேசினார்.

இந்த விழாவில் கவிஞர் மூ.மேத்தா, இயக்குனர்கள் பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், ரத்தினகுமார், விஜய்மில்டன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். படத்தின் நாயகன் வெங்கடேஷ், கதாநாயகி நேஹா பட்டீல், நான்கடவுள் முரளி, பேபி சௌந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் படத்தின் தயாரிப்பாளர் வேலுச்சாமி வரவேற்றார். இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் நன்றி தெரிவித்தார்.

 

இந்தியில் கால்பதிக்க நேரம் பார்க்கும் சூர்யா- சோதனை முயற்சியாக வரும் மாற்றான் டப்பிங்!

சென்னை: இந்திப் பட உலகில் கால்பதிக்க தயாராகிறார் நடிகர் சூர்யா. அதற்கு முன் முயற்சியா தனது மாற்றான் படத்தின் இந்தி டப்பிங்கை வெளியிடுகிறார்.

பாலிவுட்டுக்கு சூர்யா ஒன்றும் புதியவரல்ல. ஏற்கெனவே ராம்கோபால் வர்மாவின் ரக்தசரித்திரா மூலம் அவர் அறிமுகமானவரே.

இந்தியில் கால்பதிக்க நேரம் பார்க்கும் சூர்யா- சோதனை முயற்சியாக வரும் மாற்றான் டப்பிங்!

ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்ததும், தனது தமிழ் -தெலுங்கு மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்வதில் குறியாக இருந்தார். புதிதாக கேரள சினிமா ரசிகர்களும் சூர்யாவுக்கு வந்தனர்.

சூர்யாவின் சிங்கம் 2 தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் சூப்பர் ஹிட்டானது.

இந்தியில் கால்பதிக்க நேரம் பார்க்கும் சூர்யா- சோதனை முயற்சியாக வரும் மாற்றான் டப்பிங்!

இப்போது மீண்டும் பாலிவுட்டை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது சூர்யாவுக்கு. காரணம், அவரது தமிழ்ப் படங்கள் பலவற்றையும் இந்தியில் ரீமேக் செய்து வெற்றி பெறுவதுதான். கஜினி, சிங்கம் போன்றவற்றின் இந்தி ரீமேக் வெற்றி குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சூர்யாவின் சிங்கம் 2, மெய்ன் ஹூன் சூர்யா - சிங்ஹம் 2 என்ற தலைப்பில் வெளியாகி, ஓரளவு நன்றாகவும் ஓடியது.

இந்தியில் கால்பதிக்க நேரம் பார்க்கும் சூர்யா- சோதனை முயற்சியாக வரும் மாற்றான் டப்பிங்!

இப்போது அடுத்ததாக தமிழில் தோல்வி கண்ட சூர்யாவின் மாற்றான் படத்தை இந்தியில் டப் செய்து நம்பர் 1 - ஜூத்வா - தி அன்பிரேக்கபிள் என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.

மாற்றான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து சூர்யா தன் நேரடி இந்திப் படம் குறித்து முடிவெடுக்கப் போகிறார்.

 

'வருமானம் குறைஞ்சிடுச்சோ'... தங்கக் கோயிலில் 'சொர்ணலட்சுமி'க்கு சிறப்புப் பூஜை செய்த த்ரிஷா!

வேலூர்: பட வாய்ப்பு குறைந்து, வருமானம் குறைந்துவிட்டதை நிவர்த்தி செய்ய, வேலூர் தங்க கோயிலில் உள்ள சொர்ணலட்சுமி சிலைக்கு சிறப்புப் பூஜை செய்தார் நடிகை த்ரிஷா.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ளது பிரபலமான தங்க கோவில். சமீபத்தில் உருவாகியிருந்த இந்த கோயிலுக்கு ஏகப்பட்ட விஐபி விசிட்டர்கள் பக்தர்களாக உள்ளனர்.

'வருமானம் குறைஞ்சிடுச்சோ'... தங்கக் கோயிலில் 'சொர்ணலட்சுமி'க்கு சிறப்புப் பூஜை செய்த த்ரிஷா!

இந்தக் கோயிலுக்கு நடிகை த்ரிஷா நேற்று திடீரென வந்தார். அவருடன் தாயார் உமாகிருஷ்ணன் அவரது சித்தி ஆகியோரும் வந்தனர்.

த்ரிஷாவை்க கண்டதும் வழக்கம் போல கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாமியை மறந்து, அவரை மொய்க்க ஆரம்பித்தனர்.

த்ரிஷா வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவரை வி.ஐ.பி. வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு லட்சுமி நாராயணி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

இந்தக் கோயிலை உருவாக்கியவர் 90களின் இறுதியில் இளம் சாமியாராக இருந்த சதீஷ். இப்போது நாராயணி அம்மா என அழைக்கப்படுபவர் இந்த சதீஷ் சாமியார்தான்.

கோவிலில் 70 கிலோ தங்கத்தினால் சொர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையை கோயில் நிர்வாகிகள் பரப்பி வைத்துள்ளனர்.

இந்த சொர்ண லட்சுமி சிலைக்கு நடிகை த்ரிஷாவும் தனது கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டார். தொடர்ந்து அவரது தாயார் உமாகிருஷ்ணன் அபிஷேகம் செய்தார்.

கோவில் சார்பில் த்ரிஷாவுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலை ஒரு முறை அங்குள்ள வாகனம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்பினார். அவர் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே ஓடிச் சென்று பரவசப்பட்டனர் பக்தர்கள்!

 

நடிகை காம்னா ரகசிய திருமணம் - தொழில் அதிபரை மணந்தார்

தமிழில் அறிமுகமாகி காணாமல் போய், தெலுங்கில் பிரபலமான நடிகை காம்னா ஜெத்மலானிக்கு காதலருடன் ரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஜெயம் ரவி ஜோடியாக இதயத் திருடன் படத்தில் நடித்தவர் காம்னா. பின்னர் ஜீவனுடன் மச்சக்காரன், ராகவா லாரன்சுடன் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை காம்னா ரகசிய திருமணம் - தொழில் அதிபரை மணந்தார்

தமிழில் இப்போது அவர் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.

அவரது இளமைத் தோற்றம் சற்று மங்க ஆரம்பித்ததுபோல, பட வாய்ப்புகளும் குறைந்து போயின.

நடிகை காம்னா ரகசிய திருமணம் - தொழில் அதிபரை மணந்தார்

தெலுங்கு பட உலகினர் அவரை ஓரம் கட்டுவதைப் புரிந்த காம்னா, அவசரமாக தன் காதலரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது.

மாப்பிள்ளை பெயர் சுராஜ். பெங்களூர் தொழில் அதிபர். இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

நடிகை காம்னா ரகசிய திருமணம் - தொழில் அதிபரை மணந்தார்

பெற்றோர் சம்மதம் பெற்று இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்தத் திருமணத்துக்கு திரையுலகினரை அழைக்கவில்லை. காம்னாவுக்கு நெருங்கிய தோழிகளான இரண்டு கதாநாயகிகள் மட்டும் கலந்து கொண்டார்களாம்.

ரகசிய திருமணத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறாராம்.

 

ஒரு கோடியெல்லாம் இல்லை... கன்னடத்தில் த்ரிஷா சம்பளம் ரூ 25 லட்சம்தான்!

சென்னை: புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவுக்கு சம்பளம் ரூ 25 லட்சம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷா முதல் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் அவர், அந்தப் படத்தின் சம்பளமாக ரூ 1 கோடி வரை கேட்டுள்ளார்.

ஒரு கோடியெல்லாம் இல்லை... கன்னடத்தில் த்ரிஷா சம்பளம் ரூ 25 லட்சம்தான்!

ஆனால் கன்னடத்தில் ஒரு படத்தின் பட்ஜெட்டே அவ்வளவுதான். எனவே த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க ரூ.20 லட்சம் சம்பளம் பேசினர்.

கன்னடப் பட உலகில் தன் மார்க்கெட் மதிப்பு அதிகமாக வேண்டும் என்றால் முதல் படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனவே ரூ 25 லட்சத்துக்கு நடிக்க ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா.

ஒரு கோடியெல்லாம் இல்லை... கன்னடத்தில் த்ரிஷா சம்பளம் ரூ 25 லட்சம்தான்!

திரையுலகுக்கு வந்து பத்து ஆண்டுகளானாலும், இப்போதுதான் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.

மலையாளத்தில் இதே சம்பளத்தில் இரு ஆண்டுகளுக்கு நடிக்க த்ரிஷாவை அழைத்திருந்தார் இயக்குநர் ப்ளெஸ்ஸி. ஆனால் அப்போது சம்பளம் குறைவு என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலச்சந்தரின் தீவிர ரசிகன் நான் - ஆமீர்கான்

கே பாலச்சந்தரின் தீவிர ரசிகன் நான். அவரது ஏக் துஜே கேலியே பார்த்து வியந்திருக்கிறேன் என்று நடிகர் ஆமீர்கான் கூறினார்.

சென்னை திரைப்பட விழாவை தொடஹ்கி வைக்க இரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்தார் ஆமீர்கான்.

பின்னர் கமல்ஹாஸனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் ஆமீர். இரவு அங்கேயே தங்கினார்.

பாலச்சந்தரின் தீவிர ரசிகன் நான் - ஆமீர்கான்

காலையில் இயக்குநர் பாலசந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலசந்தரை சந்தித்து ஆசி பெற்றார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தமிழ், இந்தி பட உலகம் பற்றி கலந்துரையாடினார்கள். அதன் பிறகு பாலசந்தரிடம் விடை பெற்றுக் கொண்டு அமீர்கான் புறப்பட்டார்.

பாலசந்தரை சந்தித்தது குறித்து அமீர்கான் கூறுகையில், "இந்திய திரையுலகில் முக்கிய இடம் வகிக்கும் சாதனையாளர் பாலசந்தர். பல நட்சத்திரங்களை உருவாக்கியவர்.

இந்தியில் அவர் இயக்கிய ஏக் துஜே கேலியே படம் பார்த்து வியந்தேன். தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள அவரது தீவிர ரசிகன் நான்,'' என்றார்.

 

'தொடர்ந்து குத்தாட்டத்துக்குதான் கூப்பிடறாங்க...' - ப்ரியா மணியின் ஆதங்கம்

தொடர்ந்து குத்தாட்டம் ஆடத்தான் கூப்பிடறாங்க.. நல்ல ஹீரோயின் ரோல் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் நடிகை 'தொடர்ந்து குத்தாட்டத்துக்குதான் கூப்பிடறாங்க...' - ப்ரியா மணியின் ஆதங்கம்

சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை.

அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

'தொடர்ந்து குத்தாட்டத்துக்குதான் கூப்பிடறாங்க...' - ப்ரியா மணியின் ஆதங்கம்

தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று பிரியா மணியிடம் கேட்டபோது, "தமிழ் படங்களில் நல்ல கேரக்டர்கள் வரவில்லை. சாருலதா படத்துக்கு பிறகு என்னை திருப்திபடுத்தும் கேரக்டர்கள் எதுவும் அமையவில்லை. இதனால் நடிக்கவில்லை.

மலையாளத்தில் 'ட்ரூ ஸ்டோரி' என்ற படத்தில் நடிக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். கன்னடத்தில் அம்பரீஷா என்ற படத்திலும் நடிக்கிறேன்.

'தொடர்ந்து குத்தாட்டத்துக்குதான் கூப்பிடறாங்க...' - ப்ரியா மணியின் ஆதங்கம்

சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய இந்திப் படங்களில், குத்தாட்டம் போடவே கூப்பிடுகிறார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன். ஆனால் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் படங்களில் ஆட வாய்ப்பு கிட்டினால் ஆடுவேன். அந்தப் படங்களின் கதை எப்படியிருந்தாலும் கவலையில்லை," என்றார்.

 

ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'!

அஞ்சலி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் போய் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா என சூடான விவாதமே நடந்து வரும் வேளையில், ஆந்திர மாநில சிவன் கோயில் ஒன்றில் அஞ்சலி சாமி கும்பிட்ட தகவல் பரவியதால் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

சென்னையிலிருந்து வெளியேறி மாதக் கணக்கில் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார் அஞ்சலி.

ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'!

சென்னையிலிருந்த தன் புதிய வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதால், அதை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

அவருக்கு எதிராக சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் வெவ்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

ஆனால் இவற்றில் எதிலும் அஞ்சலி ஆஜராகவில்லை. தமிழ்ப் படங்களிலும் நடிக்க மறுத்துவிட்டார். தெலுங்கிலும் அவருக்குப் படமில்லை.

எனவே அஞ்சலி வெளிநாட்டில், ஒரு பெரும் புள்ளியுடன் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் ஆந்திராவில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் அவர் நேற்று சாமி கும்பிட்டார். அங்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகமும், தாயார் பிரமராம்பிகாவிற்கு குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டார். அஞ்சலியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

சித்தியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, நான் சாமி கும்பிட வந்தேன். இங்கு எதுவும் பேசவிரும்பவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரமாகப் பேசுவேன், என்று கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

 

செல்வராகவனின் அடுத்த பட ஹீரோ... எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல தனுஷ் இல்லை... சிம்பு!

செல்வராகவனின் அடுத்த பட ஹீரோ... எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல தனுஷ் இல்லை... சிம்பு!

இந்தப் படத்தினை வருண் மணியன் தயாரிக்கின்றார். நடிகர் சிம்புவும், இயக்குனர் செல்வராகவனும் இணைந்து இந்தத் திட்டத்தினை தேர்வு செய்துள்ளபோதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சகோதரர் தனுஷுடன் இணைந்து இவர் சில படங்களைத் தயாரித்திருந்தாலும், இப்போது முதன்முறையாக அவர் நடிகர் சிம்புவை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தின் பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைப்புகளில் தற்போது செல்வராகவன் ஈடுபட்டுள்ளார்.

முறையான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். சிம்பு தற்போது கவுதம் மேனன், பாண்டிராஜ் மற்றும் ஏற்கெனவே இழுபறியில் உள்ள வாலு படங்களை முடிக்க வேண்டியுள்ளது.

இவற்றை முடித்த பிறகு செல்வராகவன் படத்துக்கு வருகிறார்.

செல்வராகவன் படங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை முடியும் வரை எதுவும் நிச்சயமில்லை. இதற்கு முன் அறிவிக்கப்பட்ட நான்கு படங்கள் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளன. விக்ரம், தனுஷ், ராணா போன்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் படங்கள் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

 

ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!

சென்னை: கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விமல், விதார்த், பூர்ணா நடித்த ஜன்னல் ஓரம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை கருபழனியப்பன் இயக்கி இருந்தார். கே.முருகன் தயாரித்து இருந்தார்.

ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!

இந்த படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் டி.டி.ராஜா, என். செந்தில்பிரபு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜன்னல் ஓரம் பட தயாரிப்பாளர் கே.முருகன் பட செலவுக்காக ரூ.93 லட்சம் கடன் வாங்கி இருந்தார் என்றும் படம் ரிலீசுக்கு முன் திருப்பி தருவதாக உறுதி அளித்துவிட்டு பணத்தை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டு விட்டார் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!

பிரசாத் பிலிம் லேப்பில் உறுதிமொழி பத்திரம் பெற்று இருந்தோம். அதுவும் மீறப்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறினர்.

எனவே படத்தை டி.வி.யில் ஒளி பரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.