செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்

தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டர் சிவாவை செருப்பால் அடித்ததோடு போலீசிலும் புகார் தந்துள்ளார் 'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் பெண் தயாரிப்பாளர் இந்து.

ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை' படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்

‘காதலுக்கு கண்ணில்லை' படத்தில் மீடியேட்டராக பணியாற்றியவர் சிவா. இவர், இந்துவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாராம்.

தினமும் இரவில் இந்துவை போனில் தொடர்பு கொண்டு பேசிய சிவா, இந்துவிடம் ஆபாசமாகப் பேசி, செக்ஸ் உறவுக்கு அழைத்தாராம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி இந்துவுக்கு, சிவா போனிலேயே பல நாட்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பொறுத்துப் பார்த்த இந்து அவர்கள் நேரில் அழைத்து சிவாவை கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் .இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து செருப்பால் அடித்து சிவாவை விரட்டியிருக்கிறார்.

இதுபற்றி இந்து நீலாங்கரை போலீசில் இன்று புகார் அளித்தார். அதில் சிவாவால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் என்னை தொட்டும் மானபங்கம் செய்துள்ளார். எனவே சிவா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையறிந்த மீடியேட்டர் சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு போன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துவிட்டுத் தலைமறைவாகி விட்டாராம்.

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார்.

 

வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்

சென்னை: சொத்துப் பிரச்சினையை தனது சகோதரர் இன்னும் இரண்டு நாளில் முடிக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

நடிகர் கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது.

இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை போலீசில் நடிகர் கார்த்திக் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்

அதில் அவர், ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்தில் எனக்கு எதுவும் பங்கு கிடையாது என்கிறார் எனது சகோதரர் கணேசன். மேலும் என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். மேலும் உயிலில் எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார். உடனே கார்த்திக் மீது அவரது அம்மா சுலோசனாவே ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்த சமயத்தில், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி செய்தியாளர்களுக்கு கார்த்திக் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது கூறுகையில், "போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பாட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன்," என்றார்.

 

ரித்திக் ரோஷனுக்கும், நடிகை இஷாவுக்கும் இடையே 'ல்தகா'?

மும்பை: மனைவியை பிரிந்து வாழும் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை இஷா குப்தாவுக்கும் இடையே ல்கதா சைஆ என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுவது குறித்து நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், இஷா குப்தாவும் மிகவும் நெருங்கிப் பழகுவது தான் பாலிவுட்டில் பலரது கண்ணையும் உருத்தியுள்ளது. காரணம் துபாயில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர்கள் அதன் பிறகு ஹோட்டலில் ஓரமாக உள்ள மேஜையில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டே சாப்பிட்டது தான்.

தெரியுமா, ரித்திக் ரோஷன், இஷால்ல..: பாலிவுட்டில் பரபரப்பு

இதெல்லாம் பாலிவுட்டில் ஒரு மேட்டரே இல்லை என்றாலும் ரித்திக்கும், இஷாவும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்காதது தான் பலரும் புருவத்தை உயர்த்த காரணம்.

ரித்திக்

மனைவியை பிரிந்து வாழும் ரித்திக்கிற்கு 40 வயதானாலும் மனிதர் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அதனால் அவர் வாழ்வில் மீண்டும் ஒரு காதல் வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் தான் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.

இஷா

இந்த காதல் கிசுகிசு பற்றி அறிந்த இஷா அதை மறுத்துள்ளார். நான் ரித்திக்கை டேட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2 முறை

நான் ரித்திக் ரோஷனை இதுவரை இரண்டு முறை தான் பார்த்துள்ளேன். துபாயில் கிளப் துவக்க விழாவில் ஒரு முறை பார்த்தேன், எங்கள் ஏஜென்சி அளித்த தீபாவளி பார்ட்டியில் பார்த்தேன், அவ்வளவு தான் என்றார் இஷா.

ஆசை

அனைவரையும் போன்று நானும் ரித்திக்கின் தீவிர ரசிகையாக்கும். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று இஷா கூறியுள்ளார்.

 

திருட்டு விசிடி விற்பனை கடைகளில் விஷால் அதிரடி ரெய்டு! வீடியோ இணைப்பு

கோவை: திருட்டு விசிடி விற்பனை செய்யும் கடைக்கு ஆட்களுடன் போய் கத்தி, பூஜை திரைப்பட சிடிகளை பறிமுதல் செய்ததுடன், கடைக்காரர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கும் ரியல் ஹீரோயிசத்தில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஷால்.

விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் படமும் தயாரித்து வருகிறார் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும் என்பதால் அவ்வப்போது திருட்டு விசிடி கடைகளுக்கு சென்று புதிய பட சிடிகளை பறிமுதல் செய்து வருகிறார் விஷால்.

சமீபத்தில் காரைக்குடியில் ஒரு லோக்கல் கேபிள் டிவி மீதும் போலீசில் விஷால் புகார் அளித்தார். அந்த கேபிள் டிவியில் வடகறி, உன் சமையல் அறையில் ஆகிய படங்களை ஒளிபரப்பியதுதான் இதற்கு காரணம்.

தீபாவளிக்கு அவர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளி வந்துள்ள படம் பூஜை. எனவே மீண்டும் சிடி வேட்டைக்கு கிளம்பிய விஷாலின் பார்வை இம்முறை கொங்கு மண்டலம் பக்கம் போயுள்ளது. பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் திருட்டு விசிடிகளை விற்பனை செய்த கடைகளுக்குள் தனது ஆட்களுடன் நுழைந்து ஷட்டரை மூடிவிட்டு சிடிகளை பறிமுதல் செய்துள்ளார் விஷால்.

பூஜை மட்டுமின்றி, கத்தி சிடியையும் பறிமுதல் செய்துள்ளார் விஷால். பிறர் தயாரிப்பில் வெளியான படங்களை விற்பனை செய்தாலும் விஷால் விடுவதில்லையாம்.

உங்கள் வீட்டுக்குள் வந்து நகையை திருடினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா, எங்கள் படத்தை மட்டும் ஏன் திருடுகிறீர்கள் என்று சிடி விற்பனை செய்பவர்களை பார்த்து கடுமையாக திட்டி தீர்த்து வருகிறாராம் விஷால். சமீபத்தில் இதுபோன்ற ஒரு ரெய்டு வீடியோவாக எடுக்கப்பட்டு அது யூடியூப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்தால் விஷாலின் வேட்டையை பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளலாம்.

 

என்னை அறிந்தாலில் த்ரிஷா அஜீத் மனைவி, அப்போ அனுஷ்கா?

சென்னை: அனுஷ்கா தனது பள்ளிக் காலத்தில் நடந்த ஒரு தலைக் காதல் சம்பவங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவும், த்ரிஷாவும் உள்ளனர். படத்தில் த்ரிஷா அஜீத்தின் மனைவி. அப்படி என்றால் அனுஷ்கா அஜீத்துக்கு என்ன உறவு என்ற கேள்வி எழுகிறது.

படத்தில் அனுஷ்கா அஜீத்தை ஒரு தலையாக காதலிக்கிறாராம். இந்நிலையில் அனுஷ்கா தனது வாழ்வில் வந்து சென்ற ஒரு தலைக்காதல்கள் பற்றி பேசியுள்ளார்.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

பள்ளி

நான் பள்ளியில் படித்தபோது என்னை பல மாணவர்கள் ஒருதலையாக காதலித்தனர். அதில் சிலர் தங்கள் காதலை என்னிடம் தெரிவித்துள்ளனர்.

வேண்டாம்

நான் தான் அவர்களின் காதலை ஏற்கவிலல்லை. அவர்களின் காதலை நிராகரித்த பிறகு அவர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

என்னை அறிந்தால்

ஒரு தலைக்காதல்களை நிராகரித்த நான் தற்போது அஜீத்தை ஒருதலையாக காதலிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதை கேட்டவுடன் பள்ளி நினைவு வந்தது என்றார்.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

25 நாட்கள்

என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் நடக்குமாம். படத்தை டிசம்பரில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம்.

 

சதுரங்க வேட்டை நாயகிக்கு பலமாய் சிபாரிசு செய்யும் நட்டி

ஹீரோக்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோயின்களையே அடுத்தடுத்த படங்களில் சிபாரிசு செய்வது திரையுலகில் நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் தன் பங்குக்கு ஒரு ஹீரோயினை சிபாரிசு செய்து வருகிறாராம் சதுரங்க வேட்டை மூலம் தமிழில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட நட்டி நடராஜ்.

சதுரங்க வேட்டை நாயகிக்கு பலமாய் சிபாரிசு செய்யும் நட்டி

அவர் சிபாரிசு செய்யும் நடிகை இஷாரா. சதுரங்க வேட்டையிலும் இவர்தான் நாயகி. அடுத்து பப்பாளி படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

நட்டியின் சிபாரிசுகள் நிச்சயம் வாய்ப்பாக மாறும் என்று நம்பி, சென்னையிலேயே தங்க வீடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம் இஷாரா.

நட்டியின் கைவசம் கணிசமாகப் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

தீபாவளிக்குப் பிந்தைய இந்த வாரத்தில் நான்கு சிறிய படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களுக்கு குறைந்த அளவு அரங்குகளே கிடைத்துள்ளன.

வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்கள் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.

தீபாவளி முடிந்த ஒரு வாரம் ஆன நிலையில் இந்த வெள்ளிக்கிழமையும் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.

அவை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள நெருங்கி வா முத்தமிடாதே, ஆனந்த் பாபு மகன் கஜேஷ் நடித்த கல்கண்டு, சோக்கு சுந்தரம், காதலுக்கு கண்ணில்லை ஆகிய படங்கள்.

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

இவற்றில் நெருங்கி வா முத்தமிடாதே படம் மட்டும் ஓரளவு கணிசமான அரங்குகளைப் பெற்றுள்ளது.

மற்ற படங்களுக்கு அவ்வளவாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

தீபாவளிக்கு வெளியான கத்தியும், பூஜையும் இன்னும் பெரும்பாலான அரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் அடுத்த வாரம்தான் புதுப் படங்களுக்கு ஓரளவு அரங்குகள் கிடைக்கும்.

 

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்... மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் கமல் ஹாஸன் ரசிகர்கள்

சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். அன்று சென்னை வேளச்சேரி அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து தூய்மைப் பணியைத் தொடங்குகிறார் கமல் ஹாஸன்.

"தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கவுரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார்.

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்... மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் கமல் ஹாஸன் ரசிகர்கள்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இதில், எனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பணிகள் குறித்தும், இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

300 பேருடன் ஆட்டம், அடுத்து ஃபைட்: இது தான் விஜய்யின் திட்டம்

சென்னை: விஜய் 58 படத்தில் முதலில் பிரமாண்ட செட்டில் பாடலை படமாக்குகிறார்களாம்.

விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி துவங்குகிறது. இந்த படத்திற்காக ஈ.சி.ஆர். பகுதியில் பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். அந்த செட்டில் 300 டான்ஸர்களுடன் விஜய் ஆடும் பாடலை முதலில் படமாக்குகிறார்களாம்.

300 பேருடன் ஆட்டம், அடுத்து ஃபைட்: இது தான் விஜய்யின் திட்டம்

அதன் பிறகு சண்டை காட்சியை படமாக்க உள்ளார்களாம். மொத்தம் 5 சண்டை காட்சிகள் உள்ளதாம். படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் மட்டுமே பேன்டஸியாம். மற்றபடி படம் பக்கா கமர்ஷியலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என இரண்டு ஜோடிகள். படத்தில் வரும் சுதீப்பின் கதாபாத்திரம் கில்லி பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தை விட பிரபலமாகுமாம்.

பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ் படம் இது என்பது குறிபப்பிடத்தக்கது.

 

ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

சென்னை: பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசியல் கட்சித்தலைவரின் திருமணத்திற்கு சென்ற நடிகர் சந்தானம் தனது பர்ஸை பறிகொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா நடிகர்களையும், திரைக் கலைஞர்களையும் என்னதான் வாட்டி எடுத்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் ஏராளமான நட்சத்திரங்களும், இயக்குநர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

ராமதாஸ் பேரன், பேத்தியின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. 29ஆம் தேதி மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பி.வாசு. விக்ரமன் நடிகர் சந்தானம், ஆகியோர் பங்கேற்றனர்.

சந்தானம் வந்த உடன் ஏக வரவேற்பு காட்டினராம். ஆனால் மேடையில்தான் மணமக்களிடம் சந்தானத்தை அறிமுகம் செய்யாமல் விட்டு விட்டனராம்.

மேடையில் இருந்த அன்புமணி ராமதாசிடம் மட்டும் பேசிவிட்டு அவசரமாக கீழே இறங்கிவிட்டாராம் சந்தானம். அப்போது கூட்டம் சந்தானத்தை மொய்க்க அவரது பாக்கெட்டுக்குள் வைத்திருந்த பர்ஸை ஆட்டையை போட்டு விட்டனராம்

பர்ஸை எடுத்த நண்பர்களே பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.. அதில் முக்கியமான கார்டுகள் இருக்கிறது அதை மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சியும் யாரும் கொடுக்கலையாம்.

அங்கிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவின் மைக் மூலமாக அறிவிப்பு செய்தும் யாரும் கொடுக்கவில்லையாம். கிடைத்தால் கொண்டுவந்து கொடுத்திருங்க என்று சொல்லிவிட்டு போனாராம் சந்தானம்.

ஆனால் இப்போது வரைக்கும் சந்தானம் கைக்கு பர்ஸ் வந்தபாடில்லையாம்.

 

கதாநாயகனாகிறார் மெட்ராஸ் கலையரசன்

மெட்ராஸ் படம் பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் தவறாமல் கேட்ட கேள்வி, யார் இந்த கலையரசன்? என்றுதான்.

கார்த்தியின் உயிர் நண்பன் அன்புவாக வந்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்த கலையரசன், இப்போது ஹீரோவாக களமிறங்குகிறார். படத்தின் பெயர் மைலாஞ்சி.

கதாநாயகனாகிறார் மெட்ராஸ் கலையரசன்

இப்படத்தில் கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, மதுரை முத்து உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.

ரேகா மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து அமைப்பதோடு, இயக்குநராக அறிமுகமாகிறார் அஜயன்பாலா.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தங்கர்பச்சன் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

அறிமுக இயக்குநர் படத்தை 'ஆட்டயப் போட்ட' எழுத்தாள இயக்குநர்!

எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார் அந்த நபர். பெயரெல்லாம் வேண்டாம். வேறு எங்கெங்கோ வாய்ப்பு தேடினார். கோபாலபுரம் பக்கம் ஒரு ஆபீஸ் போட்டிருந்தார்.

சாலிகிராமத்தில் ஒரு இளைஞர்.. அவரும் முதல் சினிமா இயக்கும் முயற்சியில் இருந்தவர். எப்படியோ வாய்ப்புக் கிடைத்தது. வெளிநாடு வாழ் தமிழர்தான் தயாரிப்பாளர். இவர் சொன்ன கதை பிடித்ததால், உடனே சாலிகிராமத்தில் ஆபீஸ் போட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஸ்க்ரிப்ட் ஒர்க் முடிந்து ஷூட்டிங் போக வேண்டியதுதான் பாக்கி.

இந்த சூழலில் முதல் பாராவில் படித்தீர்களே, அந்த நபருக்கும், இரண்டாவது பாராவில் படித்த தயாரிப்பாளருக்கும் எப்படியோ லிங்க் உண்டாகிவிட்டது. உடனடியாக இந்த வெளிநாட்டுத் தயாரிப்பாளரை கைக்குள் போட்டுக் கொண்டார் எழுத்தாள இயக்குநர். மெல்ல மெல்ல அவரிடம் அவரது படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என அத்தனைப் பேரைப் பற்றியும் தவறாகச் சொல்லி, படத்தையே நிறுத்தும் அளவுக்கு வேலைப் பார்த்துவிட்டார்.

இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, படத்தைத் தள்ளி வைப்பதாக முதலில் சொன்ன தயாரிப்பாளர், பின்னர் படத்தையே ட்ராப் பண்ணி விட்டதாகவும், அனைவரும் வெளியேறுங்கள் என்றும் கூறிவிட்டார்.

இப்போது, திடீரென அதே தயாரிப்பாளரிடமிருந்து ஒரு பிரஸ் ரிலீஸ். அவரது பேனரில் எழுத்தாள இயக்குநர் புதுப்படம் இயக்குகிறார் என்று!

எப்படியெல்லாம் வேலை பாக்குறாங்க!

 

திருப்பூரில் திருட்டு விசிடி: நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு!

திருப்பூர்: திருப்பூரில் பூஜை படத்தின் திருட்டு விசிடியை விற்பனை செய்த கடையில் சோதனை செய்த நடிகர் விஷால் அங்கிருந்த பூஜை, கத்தி படங்களில் விசிடிகளை பறிமுதல் செய்ததோடு, அவர்களை போலீசில் ஒப்படைத்தார்.

சினிமாவில் நடித்தோமா சம்பளம் வாங்கினோமா, ரிலீஸ் முடிந்த உடன் டூர் கிளம்பினோமா என்றில்லாம் இப்போது நடிகர்களே திருட்டு விசிடி ரெய்டுக்கு கிளம்பிவிடுகின்றனர்.

திருப்பூரில் திருட்டு விசிடி:  நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு!

பார்த்திபன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தாங்களே கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடியை ஒழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தீபாவளி நாளில் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பதாக அவரது வெளியூர் ரசிகர்கள் தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில், சமீபத்தில் கோவை, திருப்பூர் உள்பட பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்ற விஷால், அங்கு கடை கடையாக ஏறி இறங்கியிருக்கிறார்.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதிகளில் சில கடைகளில் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் இருப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்ததோடு விற்பனை செய்த நபர்களை போலீஸ் வசம் ஒப்படைத்தார் விஷால்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், புதுப்படங்களில் போஸ்டர்களை போட்டே இப்போது திருட்டு விசிடி விற்பனை செய்கின்றனர் என்றார்.

விஷாலின் இந்த திடீர் ரெய்டு காரணமாக, பல ஏரியாக்களில் விற்பனைக்கு வந்திருந்த ஏராளமான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களை வியாபாரிகள் பதுக்கி விட்டார்களாம்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானபோது, சென்னையிலுள்ள பிரபலமான கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடி விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக போலீஸ் வசம் பிடித்துக் கொடுத்தார் பார்த்திபன்.

அதேபோல், காரைக்குடிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்குள்ள லோக்கல் சேனலில் புதிய படங்கள் ஒளிபரப்பாவதைக்கண்டு நடிகர் விஷால், நேரடியாக சென்று அவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஸ்கல், யாரை பார்த்து நக்கல்: வாரிசு நடிகர் மீது கடுப்பில் 'லீடர்'

சென்னை: தனது ஆயுதம் படம் பற்றி ட்விட்டரில் கலாய்த்த அந்த வாரிசு நடிகர் மீது லீடர் கடுப்பில் உள்ளாராம்.

லீடரின் ஆயுதம் படம் படாதபாடு பட்டு ஒருவழியாக ரிலீஸானது. படம் ரிலீஸான வேகத்தில் அவ்வளவு வசூல் செய்துவிட்டது, இவ்வளவு வசூல் செய்துவிட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தின் வசூல் புதிய சாதனைகள் படைக்க உள்ளது என்று கூறப்பட்டது.

இதை பார்த்த பலரும் வசூல் பற்றி கதை கட்டுவதாகக் கூறி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் ஸ்டைல் நடிகர் நடித்த படத்தின் வசூலை முந்திவிட்டதாக கூறுவதே இந்த நடிகரின் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது என்று ஆளாளுக்கு ட்வீட் செய்தார்கள். இதை பார்த்த லீடரின் ரசிகர்கள் கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட் செய்தார்கள்.

இந்த சண்டையில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனார் அந்த வாரிசு நடிகர். அவரும் லீடரின் படத்தின் வசூல் கணக்கு பொய் என்பது போல கமெண்ட்கள் போட்டுத் தாக்கினார். வாரிசு நடிகரின் இந்த செயல் பற்றி லீடருக்கு தகவல் சென்றுள்ளது.

படம் சூப்பராக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் லீடர் வாரிசு நடிகரின் செயலை பற்றி கேட்டதும் கடுப்பாகிவிட்டாராம்.

 

மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

விபச்சார வழக்கில் கைதாகி மீட்பு இல்லத்தில் தங்கியிருந்த நடிகை ஸ்வேதா பாசு தன் தாயுடன் இன்று வீடு திரும்புகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டார்.

மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

நடிக்க வாய்ப்பு குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், என்னைப்போல பல நடிகைகள் இப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியது இந்தியா முழுவதும் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள மீட்பு இல்லத்தில் 6 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்வேதாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் செசன்சு கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

மீட்பு இல்லத்தில் அவர் தங்க வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே அவரை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். மீட்பு இல்லம் அவரை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இன்று தன் தாயாருடன் வீட்டுக்குத் திரும்புகிறார் ஸ்வேதா பாசு. அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏற்கெனவே பிரபல இயக்குநர்கள் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!

சென்னை: தன் மகன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சொந்த தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். மிகப் பிரபலமான நடிகர். பல வெற்றிப் படங்கள் தந்தவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!

கார்த்திக் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார். இப்போது அவர்கள் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் எஸ்டேட், 1-வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் கடந்த திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்தனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அவரது மனுவை விசாரிப்பதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் கொடுத்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா, ஒரு புகாரை தேனழாம்பேட்டை போலீசில் நேற்று இரவு கொடுத்தார்.

அதில், "எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.

என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.

 

அபிஷேக் பச்சன் அம்மாவாக நடிக்கும் அமைச்சர் ஸ்மிருதி இராணி

டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, அபிஷேக் பச்சனின் அம்மாவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமைச்சராவதற்கு முன்பே அவர் ஒத்துக்கொண்ட படம் என்பதால் வார விடுமுறை நாட்களில் படப்பிடிப்புக்குப் வர ஒப்புதல் அளித்துள்ளாராம்.

மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பில் வார இறுதி நாட்களில் மட்டும் ஈடுபடுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிருதி ராணி.

லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதால் மத்திய அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனார் ஸ்ம்ரிதி இராணி.

அபிஷேக் பச்சன் அம்மாவாக நடிக்கும் அமைச்சர் ஸ்மிருதி இராணி

பாலிவுட் படத்தில்

இவர் அமைச்சராக பதவி ஏற்கும் முன் 'ஆல் இஸ் வெல்' என்ற பாலிவுட் படத்தில் ரிஷி கபூரின் மனைவியாகவும், அபிஷேக் பச்சனின் தாயாகவும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

பிஸியான ஸ்மிருதி இராணி

லோக்சபா தேர்தலில் பிஸியானதாலும், தேர்தலுக்கு பின் அமைச்சரானதாலும் ஸ்ம்ரிதி, படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் அலுவலக பணியில் மும்முரமாக இருக்கிறார்.

நடிக்க சம்மதம்

ஆல் இஸ் வெல் படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் நேரம் ஒதுக்குவார் என தெரிகிறது.

வார விடுமுறை நாட்களில்

மேலும், அவர் நாடாளுமன்றம் இயங்காத வார இறுதி நாட்களில் மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி தொகுப்பாளினி ரோஜா எம்.எல்.ஏ

மத்திய அமைச்சர் மீண்டும் நடிக்க வருவதைப் போல இங்கே நடிகை ரோஜா எம்.எல்.ஏ ஆன பின்னரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் பூஜை காரைக்குடியில் நேற்று நடந்தது.

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தந்த பொன்ராம் இயக்கும் அடுத்த படம் இது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக் கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. தயாரிப்பாளர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ், படத்தின் இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர்.

 

ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

கத்தி படம் முதல் வாரத்தில் ரூ 82 கோடியை வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ 100 கோடியைத் தொடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியையொட்டி கடந்த 22-ம் தேதி வெளியானது கத்தி படம்.

ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

இந்தப் டம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடியை வசூலித்ததாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் கத்தியின் வசூல் சிறப்பாக இருந்ததாகவும், இதனால் படம் வெளியான முதல் வாரம் மட்டும் ரூ 82 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீசில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசூல் தொடர்ந்தால் அடுத்த சில தினங்களில் ரூ 100 கோடியை எட்டிவிடும் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.