'ஸ்ரீஆண்டாள்' இசை ஆல்பம் வெளியிடும் கார்த்திக் ராஜா

Karthik Raja Releases An Album On

விருதுநகர்: இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் ஸ்ரீஆண்டாள் எனும் ஆல்பம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அவரை வேந்தர் ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்பு கார்த்திக் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சிறு வயதில் என் தாய் ஆண்டாளின் மகிமை குறித்து கதை மூலம் எனக்கு விளக்குவார். அதில் இருந்தே நான் ஆண்டாளின் பக்தனாகிவிட்டேன். இந்த பாடல் தொகுப்பினை என் தாயாருக்கு சமர்ப்பிக்கின்றேன்.

கோதை ஆண்டாள் குறித்து 12 பாடல் அடங்கிய இசை ஆல்பம் தயார் செய்துள்ளோம். முதலில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழக பிரபலங்கள் முன்னிலையில் இம்மாத இறுதியில் ஆல்பம் வெளியிட உள்ளோம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பாவை பாடல் பாடிய ஆண்டாளை பற்றி இந்த பாடல் தொகுப்பு வெளியிடுவது பெரிய புண்ணியம்.

பின்பு, அதே தினம் ஆண்டாள் சன்னதியில் பெரும் விழா எடுத்து ஆல்பம் வெளியிடப்படும். இதில் உள்ள 12 பாடல்களை எனது தந்தை இளையராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா, வயலின் வித்வான் கண்ணன், குமரேஷ் ஆகியோர் பாடி உள்ளனர். 6 மாத காலம் இந்த ஆல்பம் உருவாக உழைத்தோம். இசை கேட்டால் மனம் இதமாகும். இசை ஒரு கடல். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஆண்டாள் கோவில் திருப்பணிக்கே கொடுக்க உள்ளோம் என்றார்.

 

'ஃபோர்ப்ஸ்' இந்திய பிரபலங்கள் லிஸ்டில் ஹன்ஸிகா!!

Hansika Forbes List

ஃபோர்ப்ஸ் பிரபலமானவர்கள் பட்டியலில் தமிழ் நடிகை ஹன்ஸிகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்ஸிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

‘சேட்டை', ‘சிங்கம் 2', ‘வாலு', ‘பிரியாணி', ‘தீயா வேலை செய்யணும் குமாரு' ஆகிய படங்கள் அடுத்து வரவிருக்கின்றன.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலை தயாரிக்கிறது. இதற்காக 250 பேர் கொண்ட ஒரு லிஸ்டை தயாரித்துள்ளது. இளவயது பிரபலங்கள் பட்டியலின் முதற்கட்ட பரிசீலனையில் ஒருவராக ஹன்சிகா உள்ளார்.

இதன் மூலம் ஃபோர்ப்ஸின் புகழ்பெற்ற 100 பேரில் ஒருவராக ஹன்ஸிகா தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பை கேட்டதும் ஹன்சிகா ரொம்பவுமே உற்சாகமானார். சந்தோஷத்தில் அவர் கூறும்போது, என்னால் இதை நம்பவே முடியவில்லை.

இதற்காக என்னுடைய ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சக நடிக, நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

 

பிரபுவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் என்ன ஒற்றுமை?

Prabhu Abhishek Bachchan

சென்னை: இளைய திலகம் பிரபுவுக்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

இளைய திலகம் பிரபுவின் தந்தை யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட சொல்லும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று. அத்தகைய பெரிய நடிகரின் மகனாகப் பிறந்த பிரபு தனது தந்தையைப் போன்றே நடிகரானார். தான் நடிக்க வந்த புதிதில் பல படங்களில் தனது தந்தையுடன் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் தனி ஹீரோவாக நடித்ததுடன், கமல், ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்தும் நடித்துள்ளார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப பிரபுவும் நடிப்பில் சிவாஜிக்கு சளைத்தவர் அல்ல. தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டார். அவரின் கன்னக்குழி அழகு தனி அழகு தான். வயதான பிறகு அதற்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபு ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரால் சிவாஜி என்ற சிகரத்திற்கு நிகராக வர முடியவில்லை.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். பாவம் அபிகஷேக், அவரால் அவரது தந்தையைப் போன்று பெரிய நடிகராக வர முடியவில்லை. அவர் என்ன தான் நடித்தாலும் அமிதாப் போன்று வருமா என்று தான் பலர் கூறுகின்றனர். ஏற்கனவே ஒரு மலையின் நிழலில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்த அவர் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தார். அமிதாப் நடிப்பால் புகழ் பெற்றவர் என்றார் ஐஸ்வர்யா அழகால் உலகப் புகழ் பெற்றவர் ஆவார்.

இப்படி இரண்டு பெரிய ஆட்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறார் அபி. அபி என்ன தான் நடித்தாலும் அவருக்கு இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

 

த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா எல்லாம் வேணாம், ஐஸ் தான் வேணும்: பவர் ஸ்டார்

After Superstar Powerstar Eyes Aishwarya

சென்னை: பவர் ஸ்டாருக்கு த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க விருப்பமில்லையாம் ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் அண்மையில் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டாரு தான் என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். இதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உர்ர் கிர்ர் என்று இருக்கின்றனர். இந்நிலையில் அழகு நாயகிகள் த்ரிஷா, அனுஷ்கா, சமந்தாவின் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார்.

பவர் ஸ்டாரிடம் நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க ஆர்வமில்லை. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கத் தான் விருப்பம் என்றார்.

சூப்பர் ஸ்டாரே பல ஆண்டுகளாக முயன்று இறுதியில் அமிதாப் பச்சன் மூலம் அணுகி ஐஸ்வர்யா ராயை தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். அப்படி இருக்கையில் பவர் ஸ்டார் ஆசை நிறைவேறுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

 

அலெக்ஸ் பாண்டியன்- கார்த்திக்கு இன்னொரு சிறுத்தையா அல்லது சகுனியா?'

பொங்கல் படங்களில் முதல் வெளியீடாக இன்று காலை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது கார்த்தி - அனுஷ்கா நடித்த அலெக்ஸ் பாண்டியன்.

சுராஜ் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள படம் இது.

உண்மையில் இந்தப் படம் நாளைதான் வெளியாகவிருந்தது. ஆனால் விஸ்வரூபம் தள்ளிப் போனதாலும், நல்ல தியேட்டர்கள் கிடைத்ததாலும் ஒரு நாள் முன்பாக இன்றே வெளியாகிவிட்டது.

is alex pandian another saguni
மொத்தம் 440 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது, தமிழகத்தில் மட்டும். பல தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகள் களைகட்டிவிட்டன.

பொங்கலுக்கு வரவிருக்கும் 5 படங்களில் நிச்சய வெற்றி என்று சொல்லப்பட்டு வந்த இந்த அலெக்ஸ் பாண்டியன் எப்படியிருக்கிறது?

இன்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் உட்கார முடியவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.

இன்னும் சிலர், பரவாயில்லை, பண்டிகை நாளில் ஜாலியாகப் பார்க்க சிறந்த படம் என அலெக்ஸ் பாண்டியனைக் குறிப்பிட்டுள்ளனர்.

படம் மொத்தம் 2.45 மணிநேரம் ஓடுவதால், இரண்டாம் பாதி இழுவையாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி கலவையான கருத்துகள் வந்தாலும், வசூலுக்கு குறைவில்லை. படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் பட்டையைக் கிளப்புகிறது.

அலெக்ஸ் பாண்டியன் கார்த்திக்கு இன்னொரு சிறுத்தையா? அல்லது சகுனியா.. நாளை பார்ப்போம்.. அதுவரை உங்கள் படம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதியலாமே!

 

தமிழ்ப் பாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து

Bombay Jayashree Nominated For Life Of Pi

சென்னை: லைப் ஆப் பை படத்தில் இடம்பெற்ற தாலாட்டுப் பாடலை எழுதியதற்காக தமிழ்ப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் 24-ம் தேதி இந்த 85-வது அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளன. புதுவையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ஆங்-லீ இயக்கியுள்ள 'லைப்-ஆப்-பை' திரைப்படம் 11 பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் இசையமைப்பாளர் மைக்கேல் தன்னாவின் இசையில், தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் ஆஸ்கார் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியவரும் ஜெயஸ்ரீதான் என்பது குறிப்பிடத்தக்கது.

"பைஸ் லுல்லாபை" என்ற இந்த பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இசை அமைத்துள்ளார். இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தான் எழுதிய பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்‌யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, பாடல் எழுதுவது எளிதான ஒன்றுதான். ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் எழுதியுள்ளேன்," என்றார்.

 

ஆஸ்கர் விருது: புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை ஆங்கிலப் படம் 11 பிரிவுகளில் போட்டி!

Life Pi Gets 11 Oscar Nominations   

சென்னை: புதுவையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் லைப் ஆப் பை 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லைப் ஆப் பை திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ எடுத்திருந்தார். இதன் பெரும்பாலான காட்சிகளை பல மாதங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தங்கி எடுத்தார் ஆங் லீ. படத்தின் முதல் ட்ரைலரைக் கூட அவர் சென்னையில்தான் வெளியிட்டார்.

இந்தப் படம் உலகம் முழுக்க நல்ல வசூலையும் மிகச் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.

இப்போது 11 பிரிவுகளில் 85 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் பாடல் (2), சிறந்த எடிட்டிங், சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த ஒலிக் கலவை மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எடுக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனேர் படம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 7 பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது நினைவிருக்கலாம்.

பொதுவாக புதுவையில் எடுத்தால் படம் ஓடாது என்ற மூட நம்பிக்கை சில காலம் இருந்தது. இப்போதோ புதுவையில் எடுத்தால் ஆஸ்கரே வெல்லலாம் என்று மாறியிருக்கிறது!!

 

2012-ல் இந்தியாவில் ரூ 217 கோடி வசூலைக் குவித்த சோனி பிக்சர்ஸ் படங்கள்!

 

பொங்கல் படங்கள் - இதான் ஃபைனல் லிஸ்ட்!

 

அலெக்ஸ் பாண்டியனுக்குள் புகுந்த 'கடல்'!!

Alex Pandian Kadal   

சென்னை: கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தின் இடைவேளையில் மணிரத்னத்தின் 'கடல்' பட டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

கார்த்தி, அனுஷ்கா ஜோடி சேர்ந்துள்ள 'பேட் பாய்' அலெக்ஸ் பாண்டியன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயரை வைத்து மணிரத்னம் எடுத்த கடல் படத்தின் டிரெய்லர் இதுவரை வெளியிடவில்லை. கௌதம், துளசியின் முதுகுப்புறத்தை முதலில் காட்டிய மணிரத்னம் பின்னர் ஹீரோவின் 'சைட் போஸை' காட்டினார். வெகு நாட்களில் கழித்து தான் துளசியின் முகத்தைக் காட்டினார்.

தமிழக ரசிகர்களுக்கு கௌதமையும், துளசியையும் காட்டாமல் மறைத்த மணி அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ரசிகர்களுக்கு மட்டும் நேரில் அறிமுகம் செய்து வைத்தார். நடிகர்கள் விஷயத்தில் மட்டுமல்ல படம் எடுப்பதிலும் அவர் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

தனது கணவர் படித்த மக்களுக்காக படம் எடுப்பதாக ஒரு முறை சுஹாசினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் படம் மீனவர்களைப் பற்றியது என்று மணி தெரிவித்துள்ளார். ஆனால் இதுவும் படித்தவர்களுக்கு மட்டுமா என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் 2 பாடல் டீசர்களை மட்டுமே வெளியிட்ட மணி இன்று முதன்முறையாக கடல் டிரெய்லரை அலெக்ஸ் பாண்டியன் பட இடைவேளையில் வெளியிடுகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

'ப்யூட்டிஃபுல்' காட்சிகள், வசனங்கள்.... நாளுக்கு நாள் மெருகேறி வரும் பொம்மலாட்டம்!

Bommalattam Serial Becomes So Cute

பொம்மலாட்டம் தொடர் தொடங்கியபோது, அயய்யோ இப்படியெல்லாமா சீரியல் போடுவாங்க என்றுதான் தோன்றியது. ஆனால் நாளுக்கு நாள் அந்தத் தொடர் தற்போது போகும் பாதையைப் பார்க்கும்போது கே.பாலச்சந்தர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது - அந்த அளவுக்கு அழுத்தமான, ஆழமான வசனங்கள், அழகான காட்சிகள் ஈர்க்க வைத்து வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பொம்மலாட்டம். ஆரம்பத்தில் இந்த தொடர் ஒளிபரப்பானபோது முகம் சுளிக்க வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், ரொமான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சீரியல் வித்தியாசமான டிராக்கில் மாறிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக கதிர் -பாரதியின் காதல் எபிசோட்.. எவ்வளவு அழகான வசனங்கள், சின்னச் சின்ன காட்சியமைப்புகள்.. பார்க்கவே படு ப்யூட்டியாக இருக்கிறது இந்தக் காட்சிகள்.

கதிர் வேடத்தில் வரும் அப்சரின் நடிப்பு படு க்யூட்... தனது அனுபவத்தை அப்படியே கொட்டி அழகாக நடித்து வருகிறார் அப்சர். அவர் பேசும் வசனங்களை ஆழமாக நேசித்து ரசி்க்க முடிகிறது. காதலை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலி தன் மீது காட்டும் பரிவு பாசம் காதலை அவர் ரசிக்கும் விதம், காதலிக்கு தேவையான அறிவுரைகளைக் கூறும்போது காட்டும் பக்குவம், பொறுப்பான பேச்சு, தெளிவான செயல்பாடுகள் .. சூப்பர்ப் அப்சர்.

பாரதி மட்டும் சும்மாவா என்ன.. தனது காதலனை எப்படியெல்லாம் தைரியமூட்ட முடியுமோ, எப்படியெல்லாம் நம்பிக்கை தர முடியுமோ.. அதையெல்லாம் செய்து இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். பண்பட்ட நடிப்பைக் கொட்டி வருகிறார். தனது நடிப்பால். பொறுப்பான ஒரு காதலி மற்றும் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண், அழகான சிரிப்பு, காதலன் மீது வைத்துள்ள பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் பாங்கு, வெட்கப் புன்னகை... சான்ஸே இல்லை பாரதி.

பொம்மலாட்டம் வர வர அழகான கவிதை போல மாறி வருகிறது.. குறிப்பாக கதிர், பாரதியின் காதல் காட்சிகள்!.

 

அனில் அம்பானி தயாரித்த ஸ்பீல்பெர்கின் 'லிங்கன்' படம் 12 பிரிவுகளில் ஆஸ்கருக்குப் போட்டி

Lincoln Leads Oscar Race With 12

மும்பை: அனில் அம்பானியின் நிறுவனம் தயாரித்த லிங்கன் படம் 12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது. பிரபல இயக்கநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய படம் இது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுப் போட்டியில் இந்தியா மற்றும் இந்திய கலைஞர்கள் தொடர்புடைய படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

புதுவையில் எடுக்கப்பட்ட ஆங் லீயின் லைப் ஆப் பை படம் 11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனம், ஸ்பீல்பெர்க்குடன் கூட்டாக தயாரித்த லிங்கன் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அனில் அம்பானி, "ஸ்டீபன் ஸ்பைல்பெர்க்குடன் இந்தப் படத்தில் பணியாற்றியதை தான் பெருமையாக கருதுகிறேன். அதிகபட்ச விருதுகளை இந்தப் படம் வெல்ல வாழ்த்துகள்," என்றார்.

ஸ்பீல்பெர்க் இதற்கு முன் 6 முறை சிறந்த இயக்குநர் விருதுக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார். இரண்டு முறை விருதினை வென்றுள்ளார்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட மற்றொரு படமான ஜீரோ டிகிரி தர்ட்டியும் இந்த முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அனுபம்கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடித்த சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படம் 8 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.