1/22/2011 10:58:03 AM
'திருத்தணி' படத்துக்கு 40 டிரான்ஸ்பார்மர் செட் அமைத்து சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பரத், சுனேனா, ராஜ்கிரண் நடிக்கும் படம் 'திருத்தணி'. பாஸ்கர் தயாரிக்கிறார். படத்தை இயக்கும் பேரரசு கூறியதாவது: படம் முடிந்துவிட்டது. இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி. பிரான்ஸில் இந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. பரத் இதில் ஜிம் மாஸ்டராக வருகிறார். அங்கு உடற்பயிற்சிக்கு வரும் சுனேனாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுனேனா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கும். அருந்ததி உட்பட பல்வேறு கெட்டப்களில் சுனேனா கலக்கியிருக்கிறார். ராஜ்கிரண் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். பரத்துக்கும் ராஜ்கிரணுக்குமான பிரச்னைதான் பரபரப்பான திரைக்கதை. கதையோடு சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். 40 டிரான்ஸ்பார்மர்கள் செட் அமைத்து கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுத்தோம். இந்தப் படத்துக்கு நானே இசை அமைத்திருக்கிறேன். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இவ்வாறு பேரரசு கூறினார்.
Post a Comment