ரஜினிக்கு கிடைத்த பாராட்டு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்கு கிடைத்த பாராட்டு

2/25/2011 11:53:47 AM

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு இந்திப்படமாக உருவாகிறது. அது சம்பந்தமாக சில்க் நடித்த படக்காட்சிகளை நஸ்ருதீன் ஷாவுக்கு போட்டுக் காட்டினார்கள். ரஜினியுடன் சில்க் ஆடிய நடனக் காட்சிகள் அந்த கலெக்ஷனில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. ரஜினியின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்த நஸ்ருதீன்ஷா கைதட்டி உற்சாகமானாராம். 'நான் இதுவரை ரஜினி படங்களைப் பார்க்கவில்லை. எனக்காக 'ரோபோ' படம் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் அவரது நடிப்பு எனக்கு உதவி கரமாக இருக்கும்' என்று சொன்னதோடு, ரஜினியைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினாராம்.


Source: Dinakaran
 

Post a Comment