அவன் இவன்... எதிர்பாராத ரெஸ்பான்ஸ்... குஷியான புக்கிங்!!

|


ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்துக்கு முதல் ஒருவாரம் வரை திருப்தியான புக்கிங் நடந்துள்ளது. படத்தின் பெயர் அவன் இவன். இயக்குநர் பாலா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு, ரசிகர்கள் விரும்பி வந்து ஒரு படத்துக்கு காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தது அநேகமாக அவன் இவனுக்காகத்தான் இருக்கும்.

இதற்கு காரணமும் பாலாதான். படம் குறித்து அவரைத் தவிர ஊரே பேசிக் கொண்டிருக்கிறது.

விஷால், ஆர்யா, ஆர்கே என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பிரதான இடம் அளித்துள்ளாராம் பாலா.

சென்னையில் கிட்டத்தட்ட 17 திரையரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 350 திரைகளிலும் அவன் இவன் வெளியாகிறது. நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு கடந்த சில வாரங்களாகவே நல்ல பப்ளிசிட்டி. முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் அனைத்து அரங்குகளிலும் ஹவுஸ் புல். அடுத்து வரும் நாட்களுக்கும் கணிசமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாம்.

படம் நன்றாக இருப்பதாக செய்தி வெளியானால், வசூலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என சந்தோஷப்படுகிறார் கல்பாத்தி அகோரம்.
 

Post a Comment