இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இளையராஜா பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ஆனந்தக் கும்மி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
மனைவியை இழந்து தவிக்கும் இசைஞானிக்கு நமது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment