தம்பி வெட்டோத்தியை விட்ருங்க - தயாரிப்பாளர் சங்கம்

|


தங்கள் பஞ்சாயத்துக்கு மீறிய விஷயங்களே இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு லயன்பால் அசோசியேஷன் அமைப்பினர்.

கரண், அஞ்சலி, சரவணன் ஆகியோர் நடித்து, வடிவுடையான் டைரக்ஷனில், செந்தில்குமார் தயாரித்துள்ள தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படம் குமரி மாவட்ட மக்களைப் புண்படுத்தும் விதத்தில் இழிவான காட்சிகளைக் கொண்டிருப்பதாகவும், எனவே படத்தை வெளியிடக் கூடாது என்பதுதான் இந்த நோட்டீஸின் சாரம்.

இந்த படத்தை தடை செய்யவேண்டுமென்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

உடனே, தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் திரைக்கு வந்தால் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும். தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு கிரீடம் சூட்டக்கூடியதாக இருக்கும். எனவே, படத்தை தடை செய்ய கோருபவர்கள், அந்த படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, தங்கள் கருத்தை சொல்லலாம். அவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்று கூறியுள்ளார் கலைப்புலி தாணு.
 

Post a Comment