1/3/2011 10:35:53 AM
காதலை கைவிட்டு விட்டேன் என்று லட்சுமிராய் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 6 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறேன். இந்த ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், தமிழில் அஜீத், தெலுங்கில் பாலகிருஷ்ணா என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியிலும் பெரிய ஹீரோவுடன் நடித்து விடுவேன். கடந்த சில ஆண்டுகளாக நான் லட்சுமிராய் என்பதைவிட சர்ச்சை ராய் என்று தான் பெயர் எடுத்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் அதை சிலர் பெரிதாக்கி என்னை பிரச்சினைக்குரியவளாகவே சித்தரித்துவிட்டார்கள். அதனால் எனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காதல், நட்பு இவற்றை கைவிட்டு விட்டேன். இந்த ஆண்டு முதல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்.
Post a Comment