4/12/2011 10:55:07 AM
நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார் என நடிகர் வடிவேலு பேசினார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசுகையில், ''எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும்போது வடிவேலு அழுதார். மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கூறி வடிவேலு அழுதார். இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என நா தழுதழுக்க கூறினார்.
Post a Comment