லாரன்ஸ் வேடத்தில் உபேந்திரா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் நடித்த வேடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடிக்கிறார்.  தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை ராம நாராயணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: இது நான் இயக்கும் 125வது படம். கன்னடத்திலும் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் வெளியான 'காஞ்சனா', கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் உருவாகிறது. காஞ்சனா பிரபல நடிகையின் பெயர். அதேபோல் கல்பனாவும் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடித்த பிரபல நடிகை. இதில் உபேந்திரா ஹீரோ. சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ருதி உள்பட பலர் நடிக்கின்றனர். கன்னடத்தில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது. வெவ்வேறு மொழிப் படங்களில் பணியாற்றுவது நல்ல அனுபவம். பல ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மன் பற்றி 7ம் அறிவு படம் உருவானது. அவரது சீடர்கள் பலர் சீனாவில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் கதையை மையமாக வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு படம்தான் ஜெட்லி நடித்து தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் போதி தர்மன். அதிகபட்ச கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழில் தொய்வு இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு காட்சிகளை எடிட்டிங் செய்தேன். முதலில் 100 பிரின்ட் வெளியானது. அது இப்போது 120 ஆக அதிகரித்திருக்கிறது.


 

Post a Comment