கிசு கிசு - வாய்ப்புகளை பறிகொடுத்த நடிகை

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ரிச்ச ஹீரோயினுக்கு லக் ஒர்க் அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... காத்திருந்து பூத்துப்போனவருக்கு வங்க படம் கைகொடுத்திருக்காம். அதுக்காக ஷூட்டிங் போன இடத்துல பனியும், குளிரும் வாட்டுதாம்... வாட்டுதாம்... பாக்க¤றதுக்கு கிளாமரா இருந்தும் சான்ஸ் வராததுக்கு காரணம் பேர் கோளாறுதான்னு ஜோசியருங்க சொல்றாங்களாம். முதல்ல பேரை பவர்புல்லா மாத்துன்னு கூட இருக்கிறவங்க அட்வைஸ் தர்றாங்களாம். நடிகையும் அதுபற்றி தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

திவ்யமான நடிகைக்கு தமிழ்ல வாய்ப்புகளே வரமாட்டேங¢குதாம். அதுக்கு காரணம், நடிகை அடிக்கடி சர்ச்சையில சிக்குறதுதானாம். அதனால நடிகை இனிமே சண்டை சச்சரவுல சிக்காம ஒதுங்கி இருக்க முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... நடிகையோட கோப குணத்தால கன்னடத்துலேயும் 2 பட வாய்ப்புகள் பறிபோயிருச்சாம்... பறிபோயிருச்சாம்...

முருக இயக்கம் தன்னோட பிரதரை ஹீரோ ஆக்குறதுல தீவிரமா இருக்காராம்... இருக்காராம்... பிரதருக்கு டான்ஸ் கிளாஸ், ஃபைட் கிளாசுக்கு எல்லாம் அனுப்புறாராம். பிரதருக்கு ஜோடியா ஹன்சியான நடிகையை நடிக்க வைக்க இயக்கம் முயற்சி பண்ணினாராம். புதுமுகத்துக்கு ஜோடியான்னு ஹன்சி எஸ் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... அதனால அஞ்சலியான நடிகையை ஒப்பந்தம் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...


 

Post a Comment