தெலுங்கு ஹீரோவுடன் ஜோடி சேர நித்யா மேனன் மறுப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ரவி தேஜாவுடன் நடிக்க மறுத்தார் நித்யா மேனன். '180 படத்தில் நடித்தவர் நித்யா மேனன். சமீபகாலமாக இவர் அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார். மலையாள தயாரிப்பாளர்களை மதிக்கவில்லை என்று எழுந்த புகாரால் மலையாள படங்களில் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர்களுடன் அவர் நடிக்க மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெங்கடேஷுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் வெங்கடேஷ் வயதானவராக தெரிவதால் நட விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

அதேபோல் பிரபாசுடன் நடிக்க கேட்டபோது 'யார் அந்த பிரபாஸ் என்ற கேட்டாராம். அவரது இந்த போக்கு டோலிவுட் ஹீரோக்களிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதற்கிடையில் பரசுராம் இயக்க பிரபல நடிகர் ரவிதேஜாவுடன் நடிக்கும் படத்திற்காக நித்தியாவுடன் பேசினார்கள். படத்தில் எனது கேரக்டர் பிடிக்கவில்லை. நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இது இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நித்யாவின் இந்த மறுப்பு த்ரிஷாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இது பற்றி பட தயாரிப்பாளர் கூறும்போது, 'ரவிதேஜா ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடமும் பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். இதுகுறித்து விரைவில் அவரிடம் பேசுவோம் என்றார்.


 

Post a Comment