ஆக்ஷன் வேடத்துக்காக மற்ற நடிகைகள் நடித்த படங்களை பார்க்க மாட்டேன் என்றார் ஹன்சிகா மோத்வானி. இது பற்றி ஹன்சிகா கூறியதாவது: மற்ற படங்களில் சிரித்த முகத்துடன் என்னை பார்த்திருப்பீர்கள். 'வேட்டை மன்னன்Õ படத்தில் சிம்புவுடன் முறைத்தபடிதான் நடிக்கிறேன். ஆக்ஷன் ஹீரோயினாக துப்பாக்கியும் கையுமாக வில்லன்களுடன் மோதும் பாத்திரம். இதனால் சிரிக்கக்கூடாது என்று இயக்குனர் கூறிவிட்டார். 'ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்காக மற்ற நடிகைகள் நடித்த ஆக்ஷன் படங்களை பார்ப்பீர்களா?Õ என கேட்கிறார்கள். யார் படத்தையும் பார்க்க மாட்டேன். அதைப்பார்த்தால் அந்த பாணியில் நடிக்கவே எண்ணம்போகும். என் பாணியில் எப்படி நடிக்க வருமோ அதுபோல் நடிப்பேன். கன்னட படத்தில் நடிக்க ஆசை. ஆனால் ஏற்கனவே தமிழ், தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கன்னட படம் ஏற்க முடியவில்லை. இதுதவிர 'சிங்கம் 2Õ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். 'மற்ற ஹீரோயின்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதுபோல் நீங்களும் பாலிவுட்டுக்கு போய்விடுவீர்களா?Õ என்கிறார்கள். எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை. சிறுவயதில் நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் நடிக்க ஆசைதான். ஆனால் இந்தி படங்களில் நடிக்க இப்போதைக்கு எனக்கு அவசரம் இல்லை. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Post a Comment