சினேகா முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமணம் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. காதலில் விழுந்த அவர்கள் தங்கள் விருப்பத்தை பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்களும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
தற்போது சினேகாவும், பிரசன்னாவும் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சினேகா தனது குடும்பத்தாருடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பத்திரிக்கை வைத்து கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்வரும் நிச்சயம் வருவதாக வாக்களித்துள்ளார். அதனால் சினேகா திருமணத்தில் முதல்வரைக் காணலாம் என்று தெரிகிறது.
திருமணத்திற்கு பிறகு சினேகா விரும்பினால் நடிக்கலாம் என்று பிரசன்னா சொல்லிவிட்டார். அதனால் திருமணத்திற்கு பிறகு சினேகா நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் அவர் கையில் தான் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகா, பிரசன்னா இருவரும் முடித்துக்கொடுக்க வேண்டிய படங்கள் இன்னும் உள்ளதால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு நடித்துக் கொடுக்கவிருக்கிறார்கள்.

Post a Comment