வள்ளுவர் கோட்டம் எதிரே திரையுலகினர் உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

|

Film Industry Make Fast Near Valluvar

சென்னை: மத்திய அரசின் சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதத்துக்கு வள்ளுவர் கோட்டம் எதிரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசு ரூ.12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது

இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை ரத்து செய்யக் கோரி நடிகர், நடிகைகள் நாளை மறுநாள் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்துக்கு போலீசிடம் அனுமதி கேட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படப்பிடிப்புகளில் இருப்பவர்கள் நாளை சென்னை புறப்பட்டு வருகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் பங்கேற்கின்றனர். இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரில் பந்தல் அமைக்கப்படுகிறது. உண்ணாவிரதத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிகிறது.

 

Post a Comment